அன்பும் நேசமும் ஒற்றுமையும் மலரட்டும்… அமைதியும், மகிழ்ச்சியும் திரும்பட்டும் …

….
….

….

….

நீண்ட நாட்களாக, இந்திய மக்கள் அனைவரிடத்தும்
தொண்டையில் சிக்கிய முள்ளாக உறுத்திக்கொண்டிருந்த
இருந்த ஒரு துன்பத்திற்கு ஒருவழியாக ஒரு முடிவு
வந்திருக்கிறது.

மிகச்சிலருக்கு மட்டும் கொஞ்சம் ஏமாற்றம் இருந்தாலும் –
பெரிய சிக்கல் ஒன்றுக்கு தீர்வு காணப்பட்டு,
ஒருவழியாக பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்பட்டது
பொதுவாக இந்த நாட்டு மக்கள் அனைவருக்குமே-
– அவர் எந்தப்பிரிவினராக இருந்தாலும் –
ஒரு பெரிய நிம்மதியை தந்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி,
அயோத்தியில் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில்,
ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

விரைவில் இதே போல், இஸ்லாமியருக்கென்று
ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், அவர்கள் விருப்பம் போல்
தொழுகைக்குரிய இடமும் கட்டப்படும் என்று
எதிர்பார்ப்போம்.

இனியாவது, மதத்திற்கும் – அரசியலுக்கும் உள்ள
தொடர்புகள் நீங்கி மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு
சகோதரர்களாக வாழ இது வழி வகுக்க வேண்டும்.


இந்தியா பண்பாட்டில் செழித்த நாடு…
இங்கு அனைத்து மதங்களுக்கும்,
அத்தனை வித வழிபாட்டு முறைகளுக்கும் இடம் உண்டு.
எத்தனை மதங்கள் இருந்தாலும்,
எவ்வளவோ வழிபாட்டு முறைகள் இருந்தாலும் –

ஆறுகள் அனைத்தும் இறுதியில் கடலையே சென்று
சேர்வதைப்போல, யார் எந்தப்பெயரில் அழைத்தாலும்,
எப்படி வழிபட்டாலும் – அவை அனைத்தும்

இறுதியில் அந்த ஒருவரையே சென்று சேர்கின்றன.
அனைத்தையும் படைத்தவர் ஒருவரே…
அவரை எப்படி அழைத்தாலென்ன…?
எப்படி வணங்கினால் தான் என்ன…?

இறைவன் படைத்த அத்தனை உயிர்களிலும்
அந்த இறைவன் இருக்கிறான்…

அந்த உண்மையை உணர்ந்துகொண்டால்
பிறகு இங்கு மத-துவேஷத்திற்கு இடமே இல்லை.

இந்த நாட்டு மக்களிடையே ஒற்றுமையும், அமைதியும்,
நல்லிணக்கமும், சந்தோஷமும் தான் முக்கியம்.
அதற்காக யாரும், எந்தவித தியாகத்தையும் செய்யலாம்.

மதங்களை ஆன்மிகப் பெரியவர்களிடம் விட்டு விடுவோம்.

மதங்களைக் கடந்து –
மனிதத்தை நம்மிடையே வளர்ப்போம்.

இந்த நாட்டு மக்கள் அனைவரும் –
எல்லா வளமும், அமைதியும், வளர்ச்சியும் பெற
அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்.

.
——————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to அன்பும் நேசமும் ஒற்றுமையும் மலரட்டும்… அமைதியும், மகிழ்ச்சியும் திரும்பட்டும் …

 1. Tamilmani சொல்கிறார்:

  After the pandemic ends and things become normal i hope the temple will be built in Ayodhya.
  My first pilgrimage after the pandemic will be of course to the Sri ram temple at Ayodhya.
  For people like us both Ayodhya and Ajmeer are equal. I request the railway minister Piyush goel
  to introduce a direct train from ayodhya to ajmeer to show the world that we are secular and
  not psuedo secular like some critics of the present govt.

 2. Ezhil சொல்கிறார்:

  கா.மை. சார், கண்டிப்பாக இது சரியான தீர்ப்பு அல்ல என்பது எனது கருத்து. ஒன்று உரியவரிடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லை இரண்டு பேருக்கும் வேண்டாம் பொதுவாக மருத்துவமனையாகவோ, பள்ளிக்கூடமாகவோ அல்லது அரசு அலுவலகமாகவோ கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது தான் (எனக்கு) சரியாகப்படுகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   எழில்,

   இந்தப் பிரசினையை இதற்கு மேலும்
   இழுத்தடித்துக் கொண்டு போவதில்
   அர்த்தம் இல்லை;
   போதுமே – இன்னும் எத்தனை
   வருடங்களுக்குத்தான்
   இதை பேசிக்கொண்டே
   இருக்கப்போகிறோம்.

   எல்லாருக்கும் திருப்தியாக
   ஒரு தீர்ப்பு யாரால் கொடுக்க முடியும் ?

   இழுத்தடிக்க இழுத்தடிக்க –
   இரண்டு தரப்பிலும் உள்ள
   தீவிரவாதிகளுக்குத் தான்
   கொண்டாட்டம்.

   உள்ள நிலையை ஏற்றுக்கொண்டு
   இனிமேலாவது நல்லுறவை வளர்க்க
   முயற்சிப்போம்.

   எனவே, நாம் மேலே நகர்வது தான்
   அனைவருக்கும் நல்லது.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Ezhil சொல்கிறார்:

    புரிந்துகொண்டேன் சார். நீதி என்று விலைக்கு வாங்கப்படும் என்று. இதன் வெற்றி பதவிக்காக வெறிபிடித்து அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு மேலும் ஊக்கம் கொடுப்பதுபோல் ஆகிவிடும் என்றே அஞ்சுகிறேன். நிச்சயம் மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் (இருந்தால்) அத்வானி அவர்கள் மனம் வருந்தியிருக்க வேண்டும், காரணகர்த்தாவையே வெளியே தள்ளிவிட்டதால்.

    இந்த தீர்ப்பை இஸ்லாமியர்கள் நீங்கள் கூறும் பார்வையில் தான் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று நம்பி ஒரு இந்துவாக நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  கா மை சார் சொல்வது

  பெரிய சிக்கல் ஒன்றுக்கு தீர்வு காணப்பட்டு,
  ஒருவழியாக பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்பட்டது .

  பொதுவாக இந்த நாட்டு மக்கள் அனைவருக்குமே-
  – அவர் எந்தப்பிரிவினராக இருந்தாலும் –
  ஒரு பெரிய நிம்மதியை தந்திருக்கிறது.

  என் பயம் என்ன என்றால் –
  இப்போது அடுத்த பிரச்சினை கிளப்பப்படும் .
  மக்கள் யோசிக்க விடாமல் வேறு ஒன்று உருவாக்கப்படும் .
  திரு எழில் சொல்வதை போல் நடக்க வாய்ப்பு உள்ளது .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மெய்ப்பொருள்,

   நீங்கள் சொல்வதை நானும் உணர்ந்தே
   இருக்கிறேன். நம்மைப்போல் இன்னும்
   நிறைய பேரும் கூட…

   “உரலுக்கு வாழ்க்கைப்பட்டு விட்டு,
   உலக்கைக்கு பயந்தால் ஆகுமா…? ”

   வாழ்க்கைப்படும் முன் யோசித்திருக்க
   வேண்டிய விஷயம் அது… இப்போது –
   வருவதை எதிர்கொள்வதைத் தவிர
   வேறு என்ன வழி …?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.