சாதித்தார் ஸ்டாலின் – தமிழகத்தில் பாஜகவுக்கு முதல் எம்.எல்.ஏ-வை உருவாக்கித் தந்தார் ….!!!

….
….


….

பாஜகவால் தமிழகத்தில் தனியாகவும் முடியாமல்,
கூட்டணி வைத்தும் முடியாமல்,
சட்டமன்றத்திற்குள் நுழைய ஒரு எம்.எல்.ஏ.கூட
கிடைக்காமல் தவித்த நிலையில் –

சல்லிசாக ரெடிமேட் எம்.எல்.ஏ. ஒருவரை
பாஜகவுக்கு தாரை வார்த்து, தமிழக சட்டமன்றத்தில்
முதல் பாஜக எம்.எல்.ஏ. உருவாக வழிசெய்து தந்து
சாதனை படைத்திருக்கிறார் திமுக தலைவர்
தளபதி ஸ்டாலின் அவர்கள்.

மறைந்த சென்னை மேற்கு மாவட்ட செயலாளர்
அன்பழகனின் இடத்திற்கு – தகுதியுடைய
கு.க.செல்வத்தை விட்டு விட்டு,

திருதிராஷ்டிரனை புத்திர பாசம் கட்டிப்போட்டதுபோல்,
தன் மகன் உதயநிதியின் பாசப்பிடிக்கு கட்டுப்பட்டு,

உதயநிதியின் நண்பர் “புரட்சிப்புயல்” “சே-குவாரா
(வீடியோ நினைவிருக்கிறதா… 🙂 ) சிற்றரசுவை நியமித்ததன்
மூலம் ஆயிரம்விளக்கு எம்.எல்.ஏ., கு.க.செல்வம் இன்று
பாஜக தலைவர் நட்டாவை டெல்லிக்கு சென்று சந்தித்து
ஒப்பந்தம் போட வழி செய்திருக்கிறார் தளபதி.

தானாக கட்சியிலிருந்து வெளியேறாமல்,
முடிந்தால் கட்சி தன்னை வெளியேற்றட்டும் என்று
சவால் விட்டு, பாஜக சொல்லிக்கொடுக்கும் வசனங்களை
சரியாகச் சொல்லும் கு.க.செல்வத்தின் வெளியேற்றம்
ஏற்படுத்தக்கூடும் எதிர்கால விளைவுகள்…?

வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில், சீட்டு கிடைக்க
வாய்ப்பில்லை என்கிற நிலையில் இருக்கும்
sitting M.L.A.s செல்வதற்கு தயாராக இருக்கும் ஒரு
fertile land – செழித்த சமவெளியை அடையாளம்
காட்டுகிறார் கு.க.செ…

நடப்பு சட்டமன்றத்தின் காலம் முடியும் முன்னரே,
அதாவது ஏப்ரலுக்குள்ளாகவே, பாஜகவுக்கு இன்னும் சில
ரெடிமேட் எம்.எல்.ஏ.க்கள் கிடைக்கக்கூடும் …
அதற்கு கு.க.செ. வழிகாட்டியாக இருப்பார்…

…..

( இவ்வளவு விசுவாசமானவரை, புத்திரனுக்கு
கட்டுப்பட்டு அநியாயமாக தாரை வார்த்து விட்டாரே ஸ்டாலின்..)

………………

பணத்திற்கு பணம்… இடத்திற்கு இடம்…!!!

உதயநிதியின் கடைக்கண் பார்வை தங்களுக்கு கிட்ட
வாய்ப்பில்லை என்று நினைக்கும் மற்ற திமுக
முக்கியஸ்தர்களுக்கும் இது ஒரு சிக்னல்.

அதிமுகவுக்கு சென்றால், சீட் கிடைப்பதில் பிரச்சினை
இருக்கும். பாஜகவுக்கு சென்றால் சுலபமாக சீட் கிடைக்கும்.
எதாவது ஒரு வகையிலான கூட்டணிக்கு பாஜக தலைமை
வழி செய்து விடும் என்கிற நம்பிக்கையும் கைகொடுக்கும்….

மகன் உதயநிதிக்கு கட்சிப்பதவி கொடுத்து உயர்த்தியது,
திமுகவின் வளர்ச்சிக்கு உதவுகிறதோ இல்லையோ –

பாஜகவின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவுகிறது என்று தான்
சொல்ல வேண்டும்.

எடப்பாடியார் அதிருஷ்டசாலி…கொடுத்து வைத்தவர் –
யார் யாரோ அவருக்கு உதவுகிறார்கள் ….!!!

.
———————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to சாதித்தார் ஸ்டாலின் – தமிழகத்தில் பாஜகவுக்கு முதல் எம்.எல்.ஏ-வை உருவாக்கித் தந்தார் ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  உங்கள் கருத்து தவறு என்றுதான் நான் நினைக்கிறேன். குக செல்வம், அதிகபட்சம் இன்னொரு வேதாரண்யம் ஆளா இருக்க முடியும். அவருக்கென்று செல்வாக்கு இருக்க வாய்ப்பில்லை. எல்லாம் திமுக தொண்டர்கள்தாம் (+ பொறுப்பில் இருப்பவர்கள்). அவங்களுக்கு நோட்டைக் காண்பித்தால், எதிர்கால வாய்ப்புகளைக் காண்பித்தால் எங்கயும் போகமாட்டார்கள்.

  அடுத்தவன் தோப்பிலிருந்து ஓரிரு வயதான மரங்களைக் களவாடி நாமும் ஒரு தோப்பை உருவாக்க முடியாது. இந்த மாதிரி செயல்கள் பாஜகவை தமிழகத்தில் வளர்க்க உதவாது என்று நான் நினைக்கிறேன். ஆனானப்பட்ட திருநாவுக்கரசரே பாஜகவுக்கு அதிகமாக 10 வாக்குகள் வாங்கித்தர முடியவில்லையே.

  திமுகவை மிரட்டி காங்கிரஸ் சீட் வாங்கினார்கள் என்பது தெரிந்தபிறகு அந்த 64ல் எத்தனைபேர் வெற்றி பெற்றார்கள் என்று யோசிங்க. அதிமுக, பாஜகவை சேர்த்துக்கொள்வது எந்த விதத்திலும் உதவாது. ஆனா, பாராளுமன்றத் தேர்தல்னு வரும்போது பாஜகவுக்கு ஒரு வாக்கு வங்கி இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

  //மகன் உதயநிதிக்கு கட்சிப்பதவி கொடுத்து உயர்த்தியது,// – ஸ்டாலினுக்கு என்று ஒரு முகம் (இப்போவும் அது பெரிய அளவுல இல்லை. மீம்ஸ் போடும்படியாகத்தான் இருக்கு) 40 வருடங்களுக்கு மேல் ஆலமரத்தின் கீழே இருந்து, பிறகு வந்தது. உதயநிதிக்கெல்லாம் அரசியலில் இடம் இருக்கும்னு நான் நினைக்கலை. ஆனால் இதன் பயன் பாஜகவுக்குப் போய்ச் சேராது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   இந்த விஷயத்தை நான் அணுகும் கோணம் வேறு.
   நீங்கள் பார்க்கும் பார்வை வேறு –

   திமுக-வுக்கு தேர்தல் நேரத்தில் ஏற்படக்கூடிய
   சங்கடங்களையும், குழப்பங்களையும் பற்றி
   நான் கூறுகிறேன்…

   பாஜக-வுக்கு இதனால் என்ன லாபம் என்கிற
   கோணத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள். ?
   பெரிய லாபம் எதுவும் இருக்காது என்று
   முடிக்கிறீர்கள்…. !!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. natchander சொல்கிறார்:

  THIS KU KA SELAVAM HAD BEHAVED MOST INDECENTLY,,WITH ARROGANCE WHEN HE HAD PHYSICALLY TRIED TO REMOVE THE RESPECTED SPEAKER THIRU DHSNAPAUL ,,
  IN THE ASSEMBLY,,,,,,SOME YEARS BEFORE,
  KU KA SELVAM
  V P DURAISAMY
  ARE ALL LIABILITIES FOR BJP,,,,,,, TTHAMIZHISAI KNEW THE D MK MENS,, STANDARD,,,
  SO SHE NEVER ATTEMPTED,, SUCH TACTICS,,,!! TO DRAG DMK GOONDAS !!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s