திருவாளர்கள் வைகோ, கி.வீரமணி – இரண்டு பேரில் யார் பெரிய ….

….
….

….

இப்போதெல்லாம் நிறைய மீம்ஸ்களை பார்க்க முடிகிறது.
வலைத்தளத்தில் போடுகிற மாதிரி அவை இல்லையென்பதால்,
பார்த்து ரசிப்பதோடு சரி….

ஆனால் இன்று ஒன்றை பார்த்தேன்.
அவசியம் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டாக வேண்டும்
என்று தோன்றியது. அதனால் – இது.

முன்பொரு சமயம் “கில்லாடி” என்று ஒரு படம் வந்தது.
அதன் பிறகு ” இரண்டு கில்லாடிகள் ” என்று….
அதன் பிறகு அவற்றிற்கு போட்டியாக
கில்லாடிக்கு கில்லாடி என்று….

உண்மையில் கில்லாடி என்கிற சொல்
“கிலாடி” என்கிற ஹிந்தி சொல்லிலிருந்து வந்திருக்க வேண்டும்.
ஹிந்தியில் கிலாடி என்றால் விளையாட்டுக்காரன்
என்று பொருள்…

ஆனால் தமிழில் இதற்கு வேறு அர்த்தம்…!!!

இந்த காணொளியில், இரண்டு கில்லாடிகள் –
இதில் யார் கில்லாடிக்கு கில்லாடி என்று
தீர்மானிக்க முடியவில்லை;
மிகக்கடுமையான போட்டி… 🙂 🙂

பாருங்களேன்… முடிந்தால் நீங்களே சொல்லுங்களேன் –
யாருக்கு பட்டம் கொடுக்கலாம்…?

( வீடியோவின் முற்பகுதியை விட, பிற்பகுதி இன்னும் பிரமாதம்…
மதிமாறன் தோன்றும் —“இலையில் சாப்பிடுகிறவன் etc. etc.”
பின்னர் அவரே இலையில் சாப்பிடும் காட்சி இன்னமும்
பிரணமாதம்… !!!

– இவர்களுக்கெல்லாம் வீடியோ டெக்னாலஜி வந்து விட்டது;
பதிவுசெய்யும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன என்று
தெரியும்போதே இந்த அளவிற்கு பேசுகிறார்கள் என்றால் –
இந்த மாதிரி டெக்னாலஜி எல்லாம் இல்லாத “அந்த” காலத்தில்
எவ்வளவெல்லாம் பேசியிருப்பார்கள்… என்னவெல்லாம்
பேசியிருப்பார்கள்… 🙂 🙂 )

அய்யோ (இவர்களுக்கு இல்லாத …) கடவுளே…!!!

….

….

.
—————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to திருவாளர்கள் வைகோ, கி.வீரமணி – இரண்டு பேரில் யார் பெரிய ….

 1. Gopi சொல்கிறார்:

  வீரமணி அவர்களின் பேச்சைகேட்டு,
  வைகோ அவர்கள் நாணிச் சிரிக்கிறாரே
  ஆஹா சூப்பர் சீன் சார்.

  ஏ ஒன் இடுகை.

 2. புதியவன் சொல்கிறார்:

  நான் யாருன்னு உனக்குத் தெரியும். நீ யாருன்னு இந்த ஊருக்கே தெரியும் என்ற திரைப்பட காமெடி காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

  அரசியல்வாதியாவதற்கு முதல் தகுதியே வெட்கம், தன்மானம், சூடு, சுரணை இவற்றையெல்லாம் சுரண்டிப்போட்டுவிட்டுத்தான் வரணும் போலிருக்கு. வைகோ இந்தப் பாடத்தை கருணாநிதியிடம் கற்றுக்கொள்ளாமலா இருந்திருப்பார்? இந்த அல்லக்கை வீரமணியும்தான். பாவம்…பெரியார் இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பாரோ.

  வைகோ கவலைப்பட்ட மாதிரி, ஈழ தமிழர் பிரச்சனை, எப்போதுமே தமிழக அரசியலில் பெரிய விஷயமாக வாக்காளர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டதில்லை. அகதியா இங்க வந்து ‘அகதிகள் முகாமில்’ இருப்பவர்களுக்கு இந்த மாதிரி வாய்ச்சொல் வீரர்களைக்கொண்ட எந்தக் கட்சியுமே, அந்த அகதிகளை மனிதர்களாக நினைத்து எந்த வசதியும் செய்துதந்ததில்லை. இதுல வாய்தான் ரொம்பக் கிழிகிறது இவங்களுக்கு.

 3. bandhu சொல்கிறார்:

  அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

 4. natchander சொல்கிறார்:

  VEERANANI HAD THOROUGHLY REMOVED THE OFFICIAL WEBSITE OF VIDHUTHALAI !!!
  NOWADAYS !!!!
  VEERAMANI AND HIS GROUP ARE GRADUALLY UNDERSTANDING,, THAT THEY CAN NEVER BLUFF ABOUT ,, RAMASAMY NAICKER IYYAH ,,,
  HEREAFTERWARDS,,,,
  SIMPLE !!!! BRO !!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   natchander ,

   நீங்கள் இப்படியெல்லாம்
   பின்னூட்டங்கள் எழுதுவது
   ரசிக்கத்தக்கதாகவோ,
   ஏற்கத்தக்கதாகவோ, இல்லை.

   உங்கள் பின்னூட்டங்களை
   இன்னும் கொஞ்சம் கருத்துள்ளதாக,
   சுவாரஸ்யமிக்கதாக ஆக்கிக்கொள்ள
   முயற்சி செய்யுங்கள். தமிழில்
   எழுதவும் முயற்சி செய்யுங்கள்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. Gopi சொல்கிறார்:

  அய்யா நட்டு அவர்களே,

  இன்னமும் கொஞ்சம் நாகரிகமாக
  எழுதக்கூடாதா ?
  தமிழில் எழுதினால் குறைந்து போய் விடுவீரா ?
  ஏன் இவ்வளவு அலட்சியம் ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s