“மேக்கப்” கவிஞர் வைரமுத்து – அவர்களுக்கு காணிக்கை..(1)

….
….

….

ஒரு பொதுவிழாவில் –
ஏதோ- இளையராஜா அவர்களுக்கும்,
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கும் ஆகாது; ஒருவரை
ஒருவருக்கு சுத்தமாகப் பிடிக்காது என்பது போல் –

எதிரில் இளையராஜா அவர்களை வைத்துக்கொண்டு –

“இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர்
எம்.எஸ்.விஸ்வநாதன் தான் உலகிலேயே சிறந்த
இசையமைப்பாளர், அவரைப்போல் வேறு எவரும்
வந்துவிட முடியாது”

-என்று இளையராஜா-வை அவமானப்படுத்துவதாக
நினைத்துக்கொண்டு ஏளனமாகப் பேசினார் வெறும் கல்
என்றும் கண்ணாடிக்கல் என்றும் பலரால் “அன்போடு”
அழைக்கப்படும் திருவாளர் வைரமுத்து அவர்கள்….

இளையராஜாவையோ, எம்.எஸ்.வியையோ அறிந்தவர்கள்
அனைவருக்கும் தெரியும் அவர்கள் இருவரும் எந்த அளவிற்கு
ஒருவரை ஒருவர் நேசித்தார்கள் என்பது.

போட்டி என்று ஒன்று இருந்தால் தானே யார் உயர்ந்தவர்
என்கிற கேள்வியே வரும்…?

இளையராஜா பல நிகழ்ச்சிகளில் –
மீண்டும் மீண்டும், பலமுறை கூறி இருக்கிறார் –

எம்.எஸ்.வி. தன்னுடைய
நாடி நரம்புகளிலெல்லாம் வசித்துக் கொண்டிருக்கிறார்
என்றும் அவர் போட்ட பிச்சை தான் தன் இசை வாழ்வின்
துவக்கமே என்றும்;

– அவர் இது குறித்து பல பொதுவிழாக்களில்
எந்தவித காம்ப்ளெக்சும் இல்லாமல் -மிகப்பெருமையாகவும்
உள்ளன்போடும், நிஜமான உணர்வுடனும் கூறி இருக்கிறார்….

இங்கு திருவாளர் வைரமுத்து அவர்களைப்பற்றி
ஒரு வார்த்தை அவசியம் கூறியாக வேண்டும்.

பொதுவாக, தொழில்முறை நடிகர்கள் தான் –
முக்கியமாக பெண் கலைஞர்கள் தான் –
தங்களது இமேஜை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்
என்பதற்காக, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது
“மேக்கப்”போடு (ஒப்பனை) வருவார்கள்.

பேச்சாளர்கள், கவிஞர்கள் யாரும் பொதுவாக,
மேக்கப்போடு மேடைக்கு வருவதில்லை; ஆனால்
எப்போதும் “மேக்கப்”போடேயே மேடைக்கு வருபவர்
திருவாளர் வைரமுத்து மட்டும் தானாக இருக்கும்…

இவரது மேக்கப் உணர்வுக்கு நான் நேரடியாக பார்த்த
ஒரு பழைய காட்சியும் சாட்சியாக இருக்கும்.

சில வருடங்களுக்கு முன், சென்னை நுங்கம்பாக்கம்
வள்ளுவர் கோட்டத்தில், ஒரு நாள் காலையில் 10 மணி
முதல் 1 மணி வரை நான் இருக்க நேர்ந்தது…
அந்த நேரத்தில் அங்கே கூட்டம் இருக்காது. மொத்த
வளாகத்திலுமாக 10 பேர் கூட தேற மாட்டார்கள்.

திடீரென்று 3 கார்கள் வளாகத்துள்ளேயே வந்தன.
(அப்போது திமுக ஆட்சியில் இருந்தது; கலைஞர் -முதல்வர்; )

திருவாளர் வைரமுத்து, ஒரு ஸ்டில் போட்டோகிராபர்,
அவரது உதவியாளர், ஒரு மேக்கப்(ஒப்பனை) கலைஞர்,
இன்னும் 3-4 உதவியாட்கள் என்று ஒரு டீம் வந்தது.
அடுத்த சுமார் 2 மணி நேரங்களுக்கு, அங்கே பல பின்னணிகளில்
வைரமுத்து அவர்கள் பலவித தோற்றங்களில் “போஸ்” கொடுக்க,
உட்கார்வது, சிரிப்பது, ஸ்டைலாக நிற்பது, நடப்பது போல் பாவனை,
இடையிடையே மேக்கப் டச்சிங், உடை மாற்றல் உட்பட
நிகழ்ந்தன. நிறைய, 60-70 -வது இருக்கும். ஸ்டில் புகைப்படங்கள்
எடுக்கப்பட்டன.

முதலில் நான் கொஞ்சம் திகைத்தாலும், பின்னர் ஓரளவு
புரிந்து கொண்டேன்… அவர் கூட வந்தவர்களில் செக்யூரிடி
போல் தோற்றமளித்த ஒருவரிடம் லேசாக வினவினேன்.
“இங்கே ஏன் இவ்வளவு ஸ்டில் புகைப்படங்கள் எடுக்கிறார்கள்…?
வைரமுத்து சார் எதாவது திரைப்படத்தில் நடிக்கப்போகிறாரா ..?”
என்று…

அவர் சொன்னார்… “இல்லை சார். அவர் நிறைய புகைப்படங்களை
தயாரித்து வைத்துக் கொள்கிறார். எப்போதாவது அவரது
கட்டுரைகள், பேட்டிகள் – தின, வார இதழ்களில் வெளியாகும்போது,
அவற்றில் வித்தியாசமாகப் போடுவதற்காக இவரே எடுக்கும்
புகைப்படங்களை கொடுத்து விடுவார் “… என்று.

– அவ்வளவு விளம்பர ஆசை…!!! முன் தயாரிப்பு…!!!

உடையில், தோற்றத்துக்கு, முகத்துக்கு, மீசைக்கு, தலைக்கு –
ஒப்பனை செய்துகொண்டால் கூட பரவாயில்லை;

பேசும் வார்த்தைகளிலும் மேக்கப் போட்டே பேசுவது
வேறு விஷயம்; எப்போதுமே பூடகமாகவும், செயற்கையான
அலங்கார வார்த்தைகளுடனும் பேசுவது இவரது வாடிக்கை.
மூளையில் உற்பத்தியாகி, நேரடியாக உதடுகளுக்கு
வந்துவிடும் போலும்….இதயத்திற்கும் அதற்கும் சம்பந்தமே
இருக்காது.

இவர் பேச்சை கேட்கும்போதெல்லாம் எனக்கு யோசனைகள்
வரும்; இவர் வீட்டில் தன் மனைவி, பிள்ளைகளிடம் கூட
இப்படித்தான் மேக்கப் போட்ட வார்த்தைகளை
பேசுவாரா…? இயல்பாகப் பேச மாட்டாரா…? என்று.

– உங்களில் – யாராவது அவர் சாதாரணமாக,
அலங்காரம் இல்லாமல், நம்மைப்போல் எல்லாம் பேசி
என்றாவது பார்த்திருக்கிறீர்களா…?

மனதிற்குள்ளே இருப்பதை அப்படியே, வெள்ளந்தியாக
வெளியே கொட்டிவிடும் பழக்கம் உடைய இளையராஜா,
எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசன்
ஆகியோருடன் இவரை ஒப்பிட்டுப்பார்க்கவே
வெறுப்பாக இருக்கிறது.

நம் தலையெழுத்து; தமிழ்நாட்டில் ஒரு வெறும் கல்லை –
வைரக்கல்லாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்;
தனக்குள்ள அரசியல் பின்புலத்தையும், பிரபலங்களுடன்
தனக்கு உள்ள நட்பையும், தன் பிறவி சாமர்த்தியத்தையும்,
தந்திரங்களையும் வைத்துக்கொண்டு இந்த வெறும்கல்
அவ்வப்போது, மற்றவர் மீது விஷத்தை கக்கி விட்டுப்
போகிறது.

இளையராஜா மீது – இவர் காட்டிய வெறுப்பும்,
பொது மேடையில் அதை வெளிப்படுத்திய விதமும்,
எனக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தின;

இவரை கடுமையாகத் தாக்கி இங்கே விமரிசனம் செய்வது
பெரிய விஷயமில்லை;

ஆனால், இவர் எவ்வளவு
சின்னத்தனமானவர் என்பதை –

இவர் இழிவுபடுத்த முனையும் மற்றவர்கள்
எவ்வளவு பெரியவர்கள் என்பதை விளக்குவதன் மூலம்,

இன்னமும் வெறுங்கல்லை வைரக்கல்லாக நினைத்துக்
கொண்டிருக்கும் சிலருக்கு புரியவைக்கலாமென்று
நினைக்கிறேன். நமது தளத்தின் தரத்தையும் அது
குறைக்காமல் இருக்கும்.

அதன் விளைவாக –
இளையராஜா, எம்.எஸ்.வி., கே.வி.எம்., கண்ணதாசன்
ஆகியோரின் பெருந்தன்மையை, பரந்த மனப்பான்மையை,
விட்டுக்கொடுக்கும் செயல்களை, புகழை – வெளிப்படுத்தும்
சில வீடியோக்களை தேடியெடுத்திருக்கிறேன்…

நண்பர்களின் பார்வைக்காக -அவ்வப்போது,
தொடர்ந்து வரிசையாக அவற்றை வெளியிட
உத்தேசித்திருக்கிறேன்.

நான் இவற்றைத் தேடியெடுத்து இங்கே பதிவிட
முக்கிய காரணமாக அமைந்தவர் திருவாளர் வைரமுத்து
என்பதால், அவருக்கே இவற்றை காணிக்கையாக்குகிறேன்.

அத்தகைய காணொளிகளில் முதலாவது இது –

…..

…..

.
———————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to “மேக்கப்” கவிஞர் வைரமுத்து – அவர்களுக்கு காணிக்கை..(1)

 1. atpu555 சொல்கிறார்:

  நீங்கள் கூறுபவை எல்லாமே சரியாக இருந்தாலும் வைரமுத்து அவர்களின் கவிதைகளை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   atpu555,

   வைரமுத்து அவர்களின் கவிதைகளைப்பற்றி
   நான் இங்கே விமரிசிக்கவில்லை;

   அதுவும் விமரிசனத்திற்கு உரியது தான்
   என்றாலும் கூட, நான் அதைப்பற்றி
   இங்கே பேசவில்லை;

   ஒரு பொது மனிதராக, மற்றவர்களுடன்
   அவர் எப்படி நடந்துகொள்கிறார்,
   எவ்வளவு சுயநலத்துடன் எந்த இடத்திலும்
   தன்னை எப்படி முன் நிறுத்திக்கொள்கிறார்,
   எந்தெந்த விதங்களில் பெருந்தன்மையின்றி,
   தன் வயதுக்கும், நிலைக்கும் பொருந்தாமல்,
   அற்பத்தனமாக நடந்து கொள்கிறார்
   என்பதெல்லாம் தான் இங்கே
   விமரிசிக்கப்படுகிறது…

   நான் அவர் சம்பந்தப்பட்ட பல
   விழாக்களுக்கு நேரே போயிருக்கிறேன்.
   மிக நெருக்கமாக அவரை
   கவனித்திருக்கிறேன்… மிகவும்
   செயற்கையான மனிதர்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. bandhu சொல்கிறார்:

  அருமையான வீடியோ! பகிர்ந்ததற்கு நன்றி சார். வைரமுத்துவினால் நடந்த ஒரே நல்ல நிகழ்வாக நீங்கள் பகிர்ந்து கொள்வதை இதை நினைக்கிறேன்.

 3. Tamilmani சொல்கிறார்:

  வைரமுத்து கடந்த திமுக ஆட்சி காலத்தில் சக்தி வாய்ந்த
  power center ஆக இருந்தார், கருணாநிதியை அணுக வைரமுத்துவை
  சந்தித்தால் போதும் . காரியங்கள் சுலபமாக நடந்தன.
  இதை வைத்து கொண்டே இளம் பெண்கள் பலருக்கு தூண்டில்
  போட்டு me too சர்ச்சைகளில் சிக்கினார். இந்திரன் தோட்டத்து
  முந்திரி , ரகசிய ராத்திரி புஸ்தகமே போன்ற சொற்கள் உண்மையான
  கவியரசு கண்ணதாசன் பாடல்களில் இடம் பெறாது. ஆக , நீங்கள் சொல்வது போல அவரது கவிதைகளும் விமர்சனத்திற்கு உரியதே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.