….
….
….
….
அது பற்றிய செய்தி கீழே –
“ஆதாரம் இல்லை”..
15 வயது சிறுமி பலாத்கார வழக்கில்
திமுக மாஜி எம்எல்ஏ விடுதலை:
| Updated: Friday, July 31, 2020, 19:33 [IST]
( https://tamil.oneindia.com/news/perambalur/perambalur-former-dmk-mla-rajkumar-released-393007.html)
( https://www.hindutamil.in/news/tamilnadu/567432-dmk-ex-mla-acquitted-1.html)
பெரம்பலூர் முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமார்..
இவர் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை
எம்எல்ஏவாக இருந்தவர். பெரம்பலூரில் இவரது வீடு
உள்ளது.. இவர் வீட்டில் கேரள மாநிலம் பீர்மேடு பகுதியை
சேர்ந்த 15 வயசு சிறுமி வேலைக்கு வந்திருந்தார்..
2012-ல் வீட்டு வேலைக்காக பணியில் சேர்க்கப்பட்டார்.
ஒருநாள் அந்த சிறுமிக்கு உடம்பு சரியில்லாமல்
போய்விட்டது.. இதையடுத்து, அவரை ஒரு ஆஸ்பத்திரியில்
சிகிச்சைக்கு அனுமதித்தனர்.. பிறகு, ராஜ்குமாரின் நண்பர்
ஜெய்சங்கர் என்பவர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல்
சொன்னார்.
இதனால் பதறியடித்து கொண்டு அவர்களும் விரைந்து
வந்தனர்.. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்து
விட்டார்.. இதனால் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக
சொல்லி, பெற்றோர் பெரம்பலூர் போலீசில் புகார் தந்தனர்…
இதனிடையே சிறுமியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும்
வந்தது.. அதில் பலாத்காரம் செய்து சிறுமி வன்கொடுமை
செய்யப்பட்டது உறுதியானது.. இதையடுத்து வசமாக
சிக்கினார் ராஜ்குமார்.
பல்வேறு வழக்குகளில் அவர் கைதானார்.. இவரை தவிர
அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், பன்னீர்செல்வம் உட்பட
6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது..
இதையடுத்து – ராஜ்குமார் போலீசில் சரண் அடைந்தார்..
இது சம்பந்தமான வழக்கு பெரம்பலூர் கோர்ட்டில்
நடந்து வந்தது.. ராஜ்குமார் முன்னாள் எம்எல்ஏ என்பதால்,
ஸ்பெஷல் கோர்ட்டுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
அவ்வழக்கின் தீர்ப்பில் ராஜ்குமார், ஜெய்சங்கர் ஆகிய
இருவருக்கு 10 வருஷ ஜெயில் தண்டனையும், 42,000 ரூபாய்
அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது.
இந்த 10 வருஷ ஜெயில் தண்டனையை எதிர்த்து
முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், ஜெய்சங்கர் 2 பேரும்
சென்னை ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
இந்த தீர்ப்புதான் இன்று (31/07/2020) வழங்கப்பட்டது.
அதன்படி 2 பேருக்கும் விதிக்கப்பட்ட 10 வருடஜெயில்
தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர்கள் விடுதலை செய்ய
உத்தரவிடப்பட்டது..
அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு அடிப்படை
ஆதாரமும் இல்லை, போலீசார் சந்தேகத்துக்கு இடமின்றி
குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத் தவறிவிட்டனர்
என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
——————————————————————–
ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை….
இந்த வழக்கில் – போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில்
பலாத்காரம் செய்யப்பட்டு, சிறுமி வன்கொடுமை
செய்யப்பட்டது உறுதியாகி இருக்கிறது.
பலாத்காரத்தின் விளைவாக சிகிச்சை பலனின்றி
அந்தச்சிறுமி உயிர் இழந்திருக்கிறார்.
ஆதாரங்களின் அடிப்படையில் தானே –
சாட்சிகளின் விசாரணையின் அடிப்படையில் தானே –
முதல் கோர்ட்டில் குற்றம் உறுதி செய்யப்பட்டு
10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது…?
அந்த நீதிபதி எந்த ஆதாரமும் இல்லாமலா
10 வருட கடும் தண்டனை கொடுத்திருப்பார்….?
அதே ஆதாரம், மேல் முறையீட்டில் ஏற்கப்படாமல்
போனது எதனால்…?
மேல் நீதிமன்றத்தில் –
“அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு
அடிப்படை ஆதாரமும் இல்லை, போலீசார்
சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டுக்களை
நிரூபிக்கத் தவறிவிட்டனர்” என்று
கூறப்பட்டிருப்பதாக பத்திரிகைச் செய்தி கூறுகிறதே….
சட்ட விதிகள் தெரிந்து தானே,
சட்டத்தின் அடிப்படையில் தானே,
இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் தானே
முதல் கோர்ட்டில் தண்டனை விதிக்கப்பட்டது…?
இருக்கின்ற அடிப்படை சட்டங்கள்
அதே எவிடென்ஸ் ஆக்ட்,
அதே இண்டியன் பீனல் கோடு,
அதே கிரிமினல் ப்ரொசீஜர் கோடு தானே…?
ஒரு நீதிமன்றத்தில் செல்லுபடியாகும்
ஆதாரங்கள் இன்னொரு நீதிமன்றத்தில்
செல்லுபடி ஆகாமல் போனதற்கு –
யார் காரணம்…?
எது காரணம்…?
நமது சட்டத்தில் ஏன் இத்தனை ஓட்டைகள்…?
கற்பழிப்புக் குற்றவாளி – சாட்சி வைத்துக்கொண்டு
அதைச் செய்வான் என்று நமது சட்டங்கள்
எதிர்பார்க்கின்றனவா…?
யாருடைய கவனக்குறைவால்
ஒரு கற்பழிப்பு-கொலைக் குற்றவாளி
சுலபமாக அப்பீலில் தப்பித்து
சுதந்திரமாக வெளியே நடமாட முடிகிறது…?
கட்சி ஆதரவும், அரசியல் செல்வாக்கும்,
பண பலமும் இருந்தால், கற்பழிப்புக் கயவர்கள் எல்லாம்
நாட்டில் சுதந்திரமாக திரியலாமா…?
நாளை மீண்டும் ஒரு கற்பழிப்பாளர் எம்.எல்.ஏ. ஆவதையோ,
அவர் கட்சி ஜெயித்தால் மந்திரியாக ஆவதையோ –
எந்த சட்டமாவது தடுக்கிறதா…?
ஒரு ஏழைத்தொழிலாளியான அந்த தந்தைக்கு,
அந்த சிறுமியைப் பெற்ற தாய்க்கு –
என்ன நீதி, என்ன நியாயம் கிடைத்திருக்கிறது….?
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு அவரால்
செல்ல முடியுமா…?
அங்கே இந்த வழக்கு முடிவடையும் வரையில்,
அவர் முதலில் இருப்பாரா…?
இந்த மாதிரி செய்திகளைப் பார்க்கும்போது –
மனம் மிகவும் வேதனை அடைகிறது…
நமது சமூகம் இந்த மாதிரி நிலைகளை
மாற்ற என்ன செய்யப்போகிறது…?
.
—————————————————————————————————————————-
//போலீசார் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத் தவறிவிட்டனர்//
//நாளை மீண்டும் ஒரு கற்பழிப்பாளர் எம்.எல்.ஏ. ஆவதையோ, அவர் கட்சி ஜெயித்தால் மந்திரியாக ஆவதையோ – எந்த சட்டமாவது தடுக்கிறதா…?//
திமுகவினர் மீது இல்லாத வழக்கு கிடையாது. பிறர் சொத்தை அபகரிப்பது, கொலை, கொள்ளை, சொந்த கட்சிக்காரனையே-அவர் மந்திரியாக இருந்தவர் என்றாலும் கொல்வது, கட்சியில் தன் வாய்ப்புக்குத் தடையாக இருப்பவரை கொலை செய்வது, பெரிய பெரிய ஊழல் செய்வது, அடியாட்கள், இவைகள்தாம் அவர்கள் மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி (அப்புறம் செயல்) போன்ற பதவிகளுக்கு வருவதற்கு அடிப்படைத் தகுதி. இந்த விதிகளில் வராத சில எக்ஸெப்ஷன்ஸ் இருக்கலாம். ராஜ்ஜியசபா எம்.பி ஆக இருந்த திருச்சி சிவா மற்றும் இன்னொருவரின் புகைப்படங்கள் வந்து சந்தி சிரித்ததெல்லாம் தெரியும்.
சட்டத்தின் பார்வையில் குற்றமற்றவர் என்று சொல்லிவிட்டால் அதற்கு அப்பீலே கிடையாது என்பது என் அபிப்ராயம். ஏன் இப்படி நடக்கிறது என்று நொந்துகொள்ள ஆரம்பித்தால் அதற்கு முடிவே கிடையாது. ஏழைக்கு மேலே அப்பீல் செய்ய வாய்ப்பில்லையே என்பது வருத்தம்தான். இதுதான் திமுக சொல்லும் சமூக நீதி போலும். பணம் இல்லாதவனுக்கு அப்பீலுக்கு வாய்ப்பில்லாமல் இருந்துவிடவேண்டியதுதான் போலிருக்கிறது.