ஒரு அபூர்வமான கே.வி.எம் – எம்.எஸ்.வி…சந்திப்பு – “மன்னவன் வந்தானடி” உருவான விதம்….….

நேற்று, இளையராஜாவுக்கும், அவரது சீனியர்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.க்கும் இருந்த நெருக்கத்தை,
அன்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததை தொடர்ந்து –

அதே போல் எம்.எஸ்.வி. அவர்களுக்கும், அவரது
சீனியர் கே.வி.மஹாதேவன் அவர்களுக்குமிடையே இருந்த அன்பு,
பிணைப்பைப் பற்றியும் எனக்கு நினைப்பு வந்தது…

அதைக்குறித்த ஒரு வீடியோவை முன்பு பார்த்த ஞாபகம்
இருந்தது…. தேடியெடுத்து கீழே தந்திருக்கிறேன்….

“திருவருட்செல்வர்” ஏ.பி.நாகராஜன் வழங்கிய –
சிவாஜியின் master-piece திரைப்படம்.

சிவாஜியின் அற்புதமான நடிப்புக்காக மட்டுமன்றி,

திரையிசைத்திலகம் கே.வி.மஹாதேவன் அவர்களின்
அருமையான பாடல்களுக்காகவும் புகழ்பெற்ற படம்.

இந்தப்படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒரு அல்வாத்துண்டு.

அபூர்வமாகக் கிடைத்த இந்த காணொளியில்,
கே.வி.மஹாதேவன் அவர்களிடம், எம்.எஸ்.விஸ்வநாதன்
“மன்னவன் வந்தானடி” பாடல் குறித்த தனது வியப்பையும்
பாராட்டையும் பகிர்ந்து கொள்கிறார்…

காணொளியில் கூட இருந்து விளக்குபவர்,
கே.வி.எம். அவர்களின் உதவியாளர் புகழேந்தி …

———–

நடன இயக்குனர் P S கோபாலகிருஷ்ணன் அவர்கள்
இப் பாடலின் காட்சியமைப்பில் வரும் நடனத்தை
இயக்கியதோடு மாத்திரமல்லாது, பாடலில் வரும்
நடன ஜதிகளைப் பாடியுமுள்ளார். இப் பாடலுக்குக்
கடம் (Ghatam) வாசித்தவர் கடம் வித்வான் விநாயக்ராம்
விக்கு விநாயகம்) அவர்கள்.

கடைசிச் சரணத்தில், ஸ்வர அட்சரங்களாக வரும்படி
வரிகளின் முடிவில் ஒற்றை எழுத்துகளை வைத்துக்
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதியிருப்பார்;

விரைவினில் நீ.. நீ
மணமலர் தா..தா
திருமார்பா..பா
தாமதமா..மா
மயிலெனைக் கா..கா

நிதபமக.. நிதபமக..

ச.. சதமது தரவா
ரி.. ரிகமபதநிச
க.. கருணையின் தலைவா
ம.. மதிமிகு முதல்வா
ப.. பரம் பொருள் இறைவா
த.. தனிமையில் வரவா
நி.. நிறையருள் பெறவா

எப்பேற்பட்ட கலைஞர்கள்…!!!

மன்னவன் வந்தானடி –
ராகம் – கல்யாணி…
பாடியவர் – பி.சுசீலா
இயற்றியவர் – கவிஞர் கண்ணதாசன்
இசையமைத்தவர் – கே.வி.மஹாதேவன்

….
எவ்வளவு முயன்றும் காணொளியை இங்கு
கொண்டு வந்து பதிய முடியவில்லை. காண விரும்பும்
நண்பர்கள் தயவு செய்து கட்டத்தில் உள்ள –
facebook -ல் காட்டு என்கிற இடத்தில் சுட்டவும்….
——-

………………………………….

கூடவே இதே படத்தின், இன்னொரு காட்சியையும்
நினைவுபடுத்தாமல் –
இந்த இடுகையை முடிக்க எனக்கு மனம் வரவில்லை ….

….

….

.
———————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஒரு அபூர்வமான கே.வி.எம் – எம்.எஸ்.வி…சந்திப்பு – “மன்னவன் வந்தானடி” உருவான விதம்….

 1. புதியவன் சொல்கிறார்:

  “கண்ணதாசன் தான்…இந்த க்ரெடிட் அவனுக்குத்தான் போகும்’ – யார் சொல்றா? திரையிசைத் திலகம் கேவி மஹாதேவன் அவர்கள். தவளைகள்தான் தங்களைப் பற்றி ‘க்ர்ர்ரிக்’, ‘க்ர்ர்ரிக்’ என்று கத்திக்கொண்டிருக்க வேண்டும். திறமைசாலிகளை அவர்கூட பணி புரிந்த ஜாம்பவான்கள் பாராட்டுவார்கள் என்பதற்கு உதாரணம் இந்தப் பேட்டியும் பாடலும். மிக்க நன்றி பகிர்வுக்கு. பத்மினியின் நடிப்பும் அருமை.

  வாலி அவர்களும் சில பாடல்களில் பிச்சு உதறியிருப்பார். (கண்ணதாசன், இசையமைப்பாளர்களிடம், இந்த மாதிரி வரியை வாலி போட்டிருக்காரானு செக் பண்ணிக்கோங்க என்றும் சொல்லியிருக்கார். அதேபோல, வாலியைக் கூப்பிட்டு ரொம்ப நல்லா எழுதியிருக்க, நான் எழுதினதா என்ற சந்தேகமே வந்துவிட்டது என்று சொல்லி அவருக்கு ‘பாட்டில்’ பரிசளித்திருக்கார்).

  கண்ணதாசன் குழந்தை மனம். என்னைப் பாராட்டு, நான் தருகிற மோதிரத்தை மற்றவர்கள் முன்னால் கூட்டத்தில் நீங்கள் எனக்குப் போடுங்கள், நான் எழுதின புத்தகம் ஆயிரம் காப்பிகளை வாங்குங்கள், நான் பேசப் பணம் கொடுங்கள் என்ற தகிடு தத்தங்கள் தெரியாதவர், அதனால் அரசியலில் வெற்றிபெற முடியாதவர்.

  சிவாஜியின் திறமையை நான் சொல்லவேணும்னு அவசியமில்லை. என்னுடைய எண்ணம் என்னவென்றால், அவர், ரஜினியைப் போல, தன் உடலை ப்ராபர் ஆக மெயிண்டெயின் செய்திருக்கவேண்டும். அப்போதான் என்னதான் நடிப்பில் காட்டினாலும், பாத்திரத்துக்கு justice செய்ததுபோல இருந்திருக்கும். அது மிகப் பெரும் குறை.

 2. புதியவன் சொல்கிறார்:

  இன்னொரு பாயிண்ட். இந்த மாதிரி பல படங்கள் தந்த ஏபி நாகராஜன் அவர்கள், அநாயசமாக செட்டுக்கு செலவழித்திருப்பார். அந்த மாதிரி இன்வால்வ்மெண்ட், காட்சி நன்றாக வரணும் என்று மெனெக்கெடுவது… இந்த மாதிரி இயக்குநர்கள், தயாரிப்பாளர்களும் பாராட்டப்படணும். அதனால்தான் காலத்தை வெல்லும் படங்கள் தர முடிந்தது.

 3. புதியவன் சொல்கிறார்:

  Sorry to write more on this subject. ஒரு பாடல் திரைக்கு வருவதற்கு பெரிய உழைப்பும் கூட்டு முயற்சியும், பணமும், கற்பனைத் திறனும் தேவைப்படுகிறது. இவை எதுவுமே இல்லாமல் இசையை மட்டுமே மூலதனமாகக் கொண்ட பாடல்களும் ஹிட் ஆகியிருக்கின்றன. சினிமாவில் பணத்தைப் போட்டால்தான் பிரம்மாண்டத்தைக் காண்பிக்க முடியும் என்பதற்கு இந்தப் பாடல் உதாரணம்.

  இசை சூப்பர். பாடல் வரிகள் சூப்பர். மிக அழகாகப் பாடிய பி.சுசீலா அவர்கள். நடன மாந்தர்களும் பத்மினி அவர்களது சூப்பர் திறமையும். செட்டுக்காக செலவழித்த ஏகப்பட்ட பணம் (நடனம் ஆரம்பிக்கும்போது நாடக மேடைபோல் இருப்பது, சிவாஜி/அரசர் உலாவும் நந்தவன மண்டபமாக உருவாகிறது. அங்கு 7 நடனப் பெண்மணிகள் உருவம். அந்த மண்டபத்தையே கீழே தாங்கிக்கொண்டிருக்கும் சிலா ரூபங்கள் (இது சிலச் சில விநாடிகளே வருகின்றன, ஆனால் இதனைக் கற்பனை செய்து நிறைய பணம் செலவழித்து உருவாக்கியிருக்கிறார்கள்). காட்சிக்குப் பொருத்தமான பாடல். இவை எல்லாம் சேரும்போது அந்தக் காட்சி காலத்தை வென்றுவிடுகிறது. வெறும் காட்சி அவுட்லைனில் ஆரம்பித்து, இயக்குநர் எதிர்பார்க்கும் டியூன், பாடல் வரிகள், பிறகு நடன மாஸ்டர், செட் தயாரிப்பாளர்கள் கொண்டு தன் கற்பனைக்கு உயிர் கொடுப்பது, அதை உயிரோட்டமாக்கும் நடிகர்கள்… இதில் யாரை அதிகமாகப் பாராட்டுவது? ஏ.பி. நாகராஜன் அவர்களே வந்து சொன்னால்தான் உண்டு. அவர் கற்பனைக்கு உயிரூட்டியது யார், அல்லது அவரது கற்பனையை மிஞ்சி எல்லாம் நடந்ததா என்று.

 4. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I think, once Viswanathan Ramamurthy pair was very famous. Where is Ramamurthi now?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   கோபாலகிருஷ்ணன்,

   ராமமூர்த்தி அவர்கள் 2013-ல்,
   91 வயதில் காலமாகி விட்டார்.

   .

   காவிரிமைந்தன்

 5. Raghuraman சொல்கிறார்:

  Sir.,

  You can also watch Padmini interview about this song. She talked more freely about many things including this song.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரகுராமன்,

   பத்மினி அவர்களின் பேட்டியை இங்கு
   பதிவிடலாமென்று தான் நினைத்தேன்.

   ஆனால், மிகவும் நீண்டதாக
   இருப்பதால், வாசக நண்பர்களுக்கு ஆர்வம்
   இருக்காது என்று தோன்றியது.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.