ராஜா… வைரமுத்து – இது என்ன போட்டி… ???

….
….

….

கீழே ஒரு சின்னக் காணொளி –
வம்புக்கு பொருத்தமாக –
யாரோ அழகாக எடிட் செய்து தந்திருக்கிறார்கள்…

இளையராஜா, வைரமுத்து ஆகியோர் ஒருவரையொருவர்
மறைமுகமாகத் தாக்கிக்கொள்ளும் காட்சி…

….


….

காணொளியில் – இரண்டு பேரின் ஈகோவும்
மோதுவது போலத் தெரிந்தாலும் கூட,

ராஜா சின்சியராக கண்ணதாசனையும், விஸ்வநாதனையும்
நினைத்து, அவர்களைப் புகழ்ந்து பாராட்டுவதில் தான்
முக்கியத்துவம் காட்டுகிறார். அவர் வார்த்தையில்
உண்மை இருக்கிறது.

– என்ன இருந்தாலும்,
ராஜா எளிமையானவர், உண்மையானவர்,
நேர்மையானவர், திறந்த பொதுவாழ்வுக்கானவர்…

ராஜா தன்னை மெல்லிசை மன்னரை விட உயர்ந்தவர்
என்று என்றும், எங்கும், எப்போதும் சொன்னதில்லை;
மாறாக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவரை
பாராட்டிக்கொண்டே தான் இருக்கிறார்.

மெல்லிசை மன்னரை விட உயர்வாக தன்னை
மெல்லிசை சக்கரவர்த்தி என்று போட்டுக் கொண்டதில்லை.

ஆனால், வைரமுத்து, கண்ணதாசனுக்கு கவியரசு பட்டம்
இருந்தபோதே, போட்டிக்கு, தன்னை கவிப் பேரரசு என்று
அழைத்துக் கொண்டவர்.

மேலும் ராஜாவுக்கு, மேலே சொல்லப்பட்டிருக்கும்
குணாதிசயங்களில் ஒன்று கூட மற்றவருக்கு கிடையாது…

நீண்ட காலமாக இருவருக்கும் மனஸ்தாபம் என்றும்,
இருவரும் சேர்ந்து பணியாற்றுவது இல்லை என்றும்
நமக்குத் தெரியும்.

ஆனால், இவர்களுக்குள் – என்ன காரணமாக
இந்த மனத்தாங்கல் வந்தது என்று நான் எங்கும்
படித்ததாக நினைவில்லை.

நண்பர்கள் யாருக்காவது தெரிந்திருந்தால் –
சொல்லுங்களேன்.

.
———————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ராஜா… வைரமுத்து – இது என்ன போட்டி… ???

 1. புதியவன் சொல்கிறார்:

  உண்மையிலேயே எம்.எஸ்.வி சிறந்த இசையமைப்பாளர், சிறந்த மனிதர். இளையராஜா, எம்.எஸ்.வி மறைந்தபோது அவர் குடும்பத்திற்காக தானாகவே முன்வந்து இசை நிகழ்ச்சி நடத்தினார். இளையராஜா எப்போதுமே எம்.எஸ்.வியிடம் மரியாதை கொண்டவர். திரையுலகில் கூர்ந்து அவதானித்திருந்தால், ஒரு இசையமைப்பாளர், அதற்கு முந்தைய இசையமைப்பாளரிடம் கீ போர்ட், வயலின் அல்லது ஏதாவது இசைக்கருவியை வாசிக்கும் குழுவில் பணியாற்றியிருப்பார்.

  இளையராஜாவின் சிறப்பு நாம் எல்லோரும் அறிந்ததுதான். சாதியைப் பயன்படுத்தியோ, அரசியல் செய்தோ அவர் எப்போதும் தொழில் நடத்தியவர் அல்லர். வைரமுத்து-பாரதிராஜா-சீமான் – விவேக் போன்ற பலர், ‘சாதி’ என்ற காரணத்திற்காக ஒருவரை ஒருவர் உயர்த்திப் பேசுவர், நீங்கள் கவனித்திருக்கலாம்.

  இளையராஜா, பி.சுசீலாவைப் புகழ்ந்ததிலும் உள்ளார்ந்த பாராட்டும் மனம்தான் இருக்கிறது. அவரும் பி.சுசீலாவை உபயோகித்திருந்தாலும், எம்.எஸ்.வி ஸ்கூலைத் தாண்டி புதுமையான இசையமைப்பாளராக தலையெடுக்க முயன்றார். (டிரெடிஷனலான பல்லவியை விட்டு, இளையராஜா பாடல்கள் பல்லவிகள் முற்றிலும் வேறுவகையாக இருக்கும். வாலி, இதன் காரணத்தைப் புரிந்துகொண்டார்). அதனால்தான் தன் ட்ரெண்டாக புதுக்குரலை உபயோகித்தார் (எஸ் பி பாலு, எஸ் ஜானகி காம்பினேஷன், மற்றும் பல புதுக் குரல். முதல் மரியாதையில்கூட மலேஷியாவை சிவாஜி குரலுக்கு உபயோகித்திருப்பார். ஜானகியையும் ‘கிழவி/ குழந்தை’ குரல் பாடல்களுக்கும் உபயோகித்திருப்பார். இன்னொன்று, எல்லோரும் மனிதர்கள்தாம். அவர்களுடைய ஈகோ டச் பண்ணப்பட்டால், அதற்காக வாய்ப்பளிப்பது குறையும், ஆனால் அதனால் மரியாதை குறையாது.

  வையிறமுத்து – சின்னப்பயல் எப்போதும் சின்னப்பயல்தான். (இதற்குக் காரணம் உண்டு. பாரதிராஜா மிகவும் சீனியர். ஆனால் வய்யிரமுத்து ‘தாதா சாகேப்’ அவார்டுக்கு ‘நானே முன்மொழிகிறேன்’ என்று ஆணவமாக அறிக்கை விட்டிருந்தார். ஆணவம், அகங்காரம், சொந்த வாழ்க்கையில் ஒழுக்கமின்மை, அரசியல் அல்லக்கை போன்ற பெருமைகள் பெற்றவர் வயிரமுத்து. வாலி நான்கு தலைமுறை இசையமைப்பாளர்களிடம் தொழில் செய்திருக்கிறார். திரையுலகில் எந்தப் பெண்களும் எம்.எஸ்.வி, வாலி, கண்ணதாசன், இளையராஜா மேல் பாலியல் குற்றங்கள் சுமத்தியதில்லை. வய்யிரமுத்துவுக்குத்தான் அந்தப் பெருமை முழுவதாகச் சேர்ந்திருக்கிறது. நாளைக்கே இன்னொரு இசையமைப்பாளர் தயவில் தன் வண்டி ஓடப்போகிறது என்று நினைத்தால், ‘ஏ ஆர் ரஹ்மான் இசை காதை இரும்புக் குச்சியால் சுரண்டுவதைப் போல இருந்தது. இந்த இசையமைப்பாளர், தமிழர்களின் காதுகளை மெல்ல வருடிக்கொடுக்கும் இசையை உண்டாக்கும் வித்தையை அறிந்திருக்கிறார்’ என்று பேசவும் தயங்கமாட்டார்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   நீங்கள் சொல்வது முற்றிலும் சரி …

   MSV அவர்கள் மறைந்தபோது, இளையராஜா
   முற்றிலும் மெல்லிசை மன்னர் இசையமைத்த
   பாடல்களைக் கொண்டதாக ஒரு இசைநிகழ்ச்சி
   நடத்தினார். அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.

   அந்த நிகழ்ச்சியை நான் கூட,
   (2000 ரூபாய் என்று நினைக்கிறேன்..) கொடுத்து
   டிக்கெட் பெற்றுக்கொண்டு பார்த்தேன். அந்த
   நிகழ்ச்சியை பற்றி நான் இந்த தளத்தில்
   எழுதியிருந்ததை இப்போது தேடிக்கண்டுபிடித்து
   எழுதியிருந்ததிலிருந்து ஒரு பகுதியை
   கீழே தருகிறேன்….

   ———–

   -நிகழ்ச்சியின் இறுதியில் முதல் வரிசையில்
   அமர வைக்கப்பட்டிருந்தமெல்லிசை மன்னர்
   MSV அவர்களின் குடும்பத்தினரை
   மேடைக்கு அழைத்து வரச்செய்தார் ராஜா.

   பிறகு சிறிய குரலில், இந்த நிகழ்ச்சியின் மூலம்
   கிடைத்த தொகையை MSV அண்ணா அவர்களின்
   குடும்பத்திற்கு அளிக்கிறோம். இதனை
   தன் கையால் அளிக்குமாறு ரஜினியை
   கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

   மீண்டும் மேடை ஏறிய ரஜினி ராஜாவிடமிருந்து
   பெற்றுக் கொண்ட காசோலையை
   ஒருக்கணம் பார்த்தார். தொகையைப்
   பார்த்ததாலோ என்னவோ, ஆச்சரியத்துடனும்,
   சந்தோஷத்துடனும், ராஜாவின் கன்னத்தை தன்
   இரு கரங்களாலும் தடவி வாழ்த்தி,
   நெஞ்சாற அணைத்துக் கொண்டார்.
   ( கடைசி வரை ராஜா தொகை எவ்வளவு
   என்று சொல்லவே இல்லை )

   பின்னர் ரஜினி அந்த காசோலையை
   MSV மகளிடம் கொடுத்தார்.
   கண்ணீர் மல்க அதைப்பெற்றுக் கொண்ட
   அவர், ராஜாவிற்கும் மற்ற அனைவருக்கும்
   தன் குடும்பத்தினரின் சார்பில் நன்றி
   தெரிவித்தார்.

   இங்கு ஒன்றை அவசியம் சொல்ல வேண்டும்.

   இந்த நிகழ்ச்சியின் மூலம் சேரும் தொகை
   MSV அவர்களின் குடும்பத்திற்கு கொடுக்கப்படும்
   என்று முன்னதாகவே இளையராஜா அவர்கள்
   அறிவித்திருந்தால், அவரைப்பற்றி
   யாரும் குறை பேசவே சந்தர்ப்பம் வந்திருக்காது.

   திரு ஞாநி, பக்குவம் சிறிதும் இல்லாமல்
   அவசரப்பட்டு –
   இளையராஜா, இந்த நிகழ்ச்சியின் மூலம்
   MSV பெயரை பயன்படுத்தி –
   தனக்கு, தனது மனைவி பெயரிலான
   ட்ரஸ்டுக்கு – பணம் பண்ணப் போவதாக
   அவசரப்பட்டு எழுதினார்.

   ஆனால் – MSV அவர்களின் குடும்பத்திற்கு
   நிதியுதவி தேவைப்படுகிறது என்று விளம்பரம்
   செய்ய ராஜாவிற்கு மனம் வரவில்லை
   என்று தோன்றுகிறது. அதனால் தானோ
   என்னவோ, எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது
   என்பதைக்கூட வெளியில் அறிவிக்கவில்லை.
   ரஜினி பார்த்து வியந்ததோடு சரி.

   ———————-

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    ///இந்த நிகழ்ச்சியின் மூலம் சேரும் தொகை MSV அவர்களின் குடும்பத்திற்கு கொடுக்கப்படும் என்று முன்னதாகவே இளையராஜா அவர்கள் அறிவித்திருந்தால்,//
    இதற்கு நான் இரு காரணங்கள் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். ஒன்று, பச்சாதாபத்தினால் எந்தக் கூட்டமும், வரவும் வரக்கூடாது என்று இளையராஜா அவர்கள் நினைத்திருக்கலாம். இரண்டு, தானே எடுத்துச் செய்து, தன்னுடைய நிகழ்ச்சியை ரசிக்க மக்கள் கூடுவார்கள், அப்போதுதான் தன் முயற்சியால் இதனைச் செய்தமாதிரி இருக்கும் என்றும் அவர் நினைத்திருக்கலாம். என்ன நினைத்திருந்தாலும், இளையராஜா செய்தது பெரிய மரியாதை என்றுதான் நான் நினைக்கிறேன். (தாசில்தார் வீட்டு நாய் இறந்தால் வரும் கூட்டம், தாசில்தார் இறந்தால் வராது என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட திரையுலகில், எதிர்பார்ப்புகள் இல்லாமல் இளையராஜா செய்த நல்ல செயல் இது. தன்னால் எம்.எஸ்.வியின் தொழில் பாதிக்கப்பட்டது என்றும் இளையராஜா ஆரம்பகாலங்களில் வருத்தப்பட்டிருக்கிறார். அப்போதே, இவ்வளவு பெரிய ஜாம்பவான் எம்.எஸ்.வியை விட்டுவிட்டு அற்ற குளத்து அறுநீர்ப்பரவை போல வந்தவர்கள், நாளை தன்னிடமிருந்தும் ஓடத் தயங்கமாட்டார்கள் என்ற ஞானம் இளையராஜாவுக்கு வந்திருக்கிறது).

    எப்போதுமே கள்ளிச்செடியின் அருகில் ரோஜாச் செடி மலர்ந்திருந்தால், ரோஜாச் செடியின் அழகு இன்னும் விஸ்தாரமாகத் தெரிவது போல, கெட்ட எண்ணம் நிரம்பிய வய்யிரமுத்துவையும், மக்கள் விரும்பும் இசைக்குச் சொந்தக்காரரான இளையராஜாவையும் ஒருங்கே ஒரு காணொளியில் போடும்போது, இளையராஜா இன்னும் வீரியமாகத் தெரிகிறார். பண்ணைப்புரம் என்ற கிராமத்திலிருந்து கிளம்பி, இப்படிப்பட்ட சாதனைகளை இளையராஜா புரிந்தது வியப்பிற்குரியது.

 2. bandhu சொல்கிறார்:

  //இவ்வளவு பெரிய ஜாம்பவான் எம்.எஸ்.வியை விட்டுவிட்டு அற்ற குளத்து அறுநீர்ப்பரவை போல வந்தவர்கள், நாளை தன்னிடமிருந்தும் ஓடத் தயங்கமாட்டார்கள் என்ற ஞானம் இளையராஜாவுக்கு வந்திருக்கிறது//
  பற்பல ஹிட் கொடுத்த msv அவர்களை விட்டு ஸ்ரீதர் வந்தபோது, இளையராஜா இசையமைக்க மறுத்ததாக படித்திருக்கிறேன். இளையராஜா அவர்களையும் வைரமுத்துவையும் ஒப்பிடுவதே தவறு. இளையராஜா வைரம். வைரமுத்து வெறும் கண்ணாடிக்கல்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.