….
….

Mohammed Rafi and
Naushad
….
இதற்கு முந்தைய பதிவில்,
கவிஞர் வாலி சொல்லியிருந்த –
3 இஸ்லாமியர்கள் சேர்ந்து உருவாக்கிய,
மனதை உருக்கும் –
சிவனைக் குறித்த – பக்திப்பாடல் இது தான்….
………………………………………………………………………
( மார்ச், 2017-ல் வெளியான பழைய
-என் விருப்பம்-7 பதிவிலிருந்து – )
………….
பாய்ஜூ பாவரா (baiju bawara ), 1952-ஆம் ஆண்டு வெளிவந்து
100 வாரங்களுக்கு மேல் ஓடிய ஒரு ஹிந்தி திரைப்படம்.
பாரத்பூஷன், மீனாகுமாரி நடித்தது.
பேரரசர் அக்பரின் காலத்தில் நடந்ததாகச்
சொல்லப்படும் ஒரு கதையை அடிப்படையாக கொண்டது.
“ஓ துனியா கே ரக்வாலே” –
இந்த உலகை ரட்சிக்கும் பகவானே –
என்று ஆண்டவனை வேண்டி பாடப்பட்ட பாடல்.
மனதைப் பிழியும்…குரல், இசை, ராகம்…!
சாஸ்த்ரீய ஹிந்துஸ்தானி இசையின் அடிப்படையில் –
அமைந்த இந்த பாடலை
எழுதியவர் ஷகீல் பதாயுனி,
இசையமைத்தவர் நௌஷாத்,
பாடியவர் மொஹம்மத் ரஃபி
– ஆக மூன்று பேரும் இஸ்லாமியர்கள்…. ஆனால்,
பாடல் இந்துக் கடவுளான சிவனைக் குறித்தது….!
இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?
திரைப்படத்தில் வரும் பாடல் காட்சியே கிடைத்தது…
இருந்தாலும், ரஃபி அவர்கள் நேரில் பாடுவதை நண்பர்களுக்கு
காட்ட வேண்டுமென்று நினைத்தேன்…
படம் வெளிவந்து 25-30 ஆண்டுகளுக்கு பிறகு, பம்பாயில்,
இசையமைப்பாளர் நௌஷாத் அவர்களும், ரஃபியும் சேர்ந்து
நிகழ்த்திய ஒரு live orchestra பதிவை கீழே தந்திருக்கிறேன்…
மொஹம்மது ரஃபி எவ்வளவு உணர்வுபூர்வமாக
இந்தப் பாடலை மேடையில் பாடுகிறார் என்பதை
நம்மால் உணர முடிகிறது.
அந்தக் காலத்தில், அவரை புகழின் உச்சிக்கே
கொண்டு சென்றன இந்தப் பாடலும் கீழே தந்திருக்கும்
இன்னொரு பாடலும்..
பாடல்களுக்காகவே 100 வாரங்கள் (நாட்கள் அல்ல வாரங்கள்…!!! )
ஓடியது பாய்ஜூ பாவாரா.
…..
…..
-அதே படத்தில் –
இதே – 3 இஸ்லாமியர்களின் கூட்டணியில் உருவான
இன்னொரு அற்புதமான மனதை உருக்கும் பக்திப் பாடல் …
“ஹரி ஓம்”
……….
………..
இந்தப் பாடல்களை இயற்றிய, இசையமைத்த, பாடிய –
ஷகீல் பதாயுனி, நௌஷாத் மற்றும் மொஹம்மது ரஃபி,
ஆகியோருக்கு இருந்த
புரிதலும்,
பக்குவமும் –
நமது ஏ.ஆர். ரெஹ்மான் அவர்களுக்கு இல்லாமல் போனது
நமது துரதிருஷ்டமே.
இசைக்கு ஏது மொழியும், இனமும், மதமும்…?
.
————————————————————————————————————————————
இரண்டுமே அருமையான இடுகை. சென்ற இடுகையில் நான் சொல்ல நினைத்ததை இந்த இடுகையில் சொல்லி முடித்திருக்கிறீர்கள். செய்யும் தொழிலே தெய்வம். திரைப்படத்தின் பாடல்களுக்கோ இல்லை வசனங்களுக்கோ, எழுதியவர்கள் ஆசாபாசங்கள் பொறுப்பாக முடியாது. அந்தக் கதையும், பாத்திரங்களின் எண்ணவோட்டங்களே காரணமாக இருக்க முடியும்.
பெரியார், தன்னிடம் கோவில் குங்குமம்/விபூதி கொடுத்தவரிடம் எழுந்து நின்று மரியாதையாக கையில் வாங்கிக்கொண்ட மேன்மை என் நினைவுக்கு வருகிறது. அதே சமயம், இளையராஜா, தான் பெரியாரின் கொள்கைகளை விரும்பாததால் மனம் ஒன்றி படத்திற்கு இசையமைப்பதோ பாடல் புனைவதோ முடியாத காரியம் என்று சொல்லி அந்தப் படத்திற்கு இசையமைக்க மறுத்துவிட்டார். (ஆனால் காமராஜ், பாரதியார் படங்களுக்கு இசையமைத்து சிறப்புச் செய்திருப்பார்). Professionals தங்களுடைய பெர்சனல் விருப்பு வெறுப்புகளை தொழிலுக்குள் நுழைக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம்.
நவுஷத் அலி இந்தப் பாடல் பற்றி பேசுகிறார் .
இந்தியில் இருந்து மொழிபெயர்ப்பு :
இந்த பஜன் இன்றும் பலர் பக்தியாய் கேட்கின்றனர் .
எழுதியது முகம்மது ஷகீல் , பாடியது முகம்மது ரபி
இசை நான் நவுஷத் அமைத்தது .
இது கிருஷ்ண பஜனை என்பதால் ரெகார்டிங் போது
அனைவரும் குளித்து சுத்த பத்தமாக வந்தனர் .
இது சிவனுக்கு பிடித்த ராகம் – மல்கான்ஸ்
ரெகார்டிங் முடிந்த போது பக்தியில் திளைத்து
ஆவேசம் மாதிரி இருந்தது .
பி கு -தெற்கே இந்த ராகம் இந்தோளம் என சொல்கிறோம் .
.
நன்றி நண்ப மெய்ப்பொருள்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்