ரிஷிகேஷில் டாக்டர் அப்துல் கலாம் – சுவாமி சிவானந்தா அவர்களிடம் நேரடியாகப் பெற்ற கீதோபதேசம்….

….
….


(டாக்டர் கலாம் அவர்களுக்கு வீணை வாசிக்கவும் தெரியும்…)

….

நேற்று மதியம் ரிஷிகேஷ் பற்றி காணொளியுடன் கூடிய
ஒரு விவரமான இடுகை எழுதி இருந்தேன்.

டாக்டர் கலாம் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு,
இரவு டாக்டர் கலாம் பற்றிய ஒன்றும் கூட.

இது இரண்டும் முடிந்த பிறகு ஒரு ஆச்சரியம் நடந்தது.
நள்ளிரவு எனக்கு இன்னொரு அருமையான காணொளி
காணக் கிடைத்தது.

முதல் இரண்டு இடுகைகளையும் ( ரிஷிகேஷ்+டாக்டர் கலாம் )
தொடர்பு படுத்தியதாக அந்த வீடியோ இருந்தது தான்
அந்த ஆச்சரியம்…

சென்னை, காட்டாங்குளத்தூர், சிவானந்தா ஆதரவற்றோர்
இல்லத்தில், அங்கு தங்கியிருக்கும் பள்ளிச்சிறுவர்கள்,
பெரியவர்கள், ஆசிரியர்கள், அங்கே பணிபுரிபவர்கள், ஆகியோர்
அடங்கிய ஒரு கூட்டத்தில் தமிழில் பேசுகிறார் டாக்டர் கலாம்.

சின்ன வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்குக்கூட புரிகிற
மாதிரி மிகவும் எளிமையாகப் பேசுகிறார்…

1950-களில் தான் ரிஷிகேஷ் சென்ற அனுபவத்தையும், அங்கே
நேரடியாக சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்களை
சந்தித்ததையும், அவரிடம் கீதோபதேசம் பெற்றதையும்
விவரமாகச் சொல்கிறார்..

“இடும்பைக்கு இடும்பை கொடு” என்று அவர் கொடுத்த
அறிவுரைக்குப் பின், அந்த சந்திப்பு தனது பிற்கால
வாழ்க்கையையே முற்றிலும் மாற்றி விட்டது என்றும்
சொல்கிறார்…

அபூர்வமாக – முதல் இரண்டு இடுகைகளின் தொடர்ச்சியாக
எனக்கு கிடைத்த அந்த காணொளியை இங்கே
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் இரட்டிப்பு
மகிழ்ச்சி அடைகிறேன்.

…..

…..

.
————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ரிஷிகேஷில் டாக்டர் அப்துல் கலாம் – சுவாமி சிவானந்தா அவர்களிடம் நேரடியாகப் பெற்ற கீதோபதேசம்….

 1. paiya சொல்கிறார்:

  super message and nice explanation even lay man can understand from Dr.Kalam. Good collection and thanks for posting.

 2. புதியவன் சொல்கிறார்:

  அருமையான இடுகை. நானே 4ம் வகுப்பில் உட்கார்ந்து கேட்பதைப் போல இருந்தது. எங்க டீச்சர் எங்களுக்கு கிளாஸ் எடுக்கற மாதிரி இருந்தது. பருந்து, தன் குஞ்சுகளுக்கு இரையை வாயில் சுவைத்து அதிலிருந்து எடுத்து குஞ்சின் வாயில் போடுவதுபோன்ற நேர்த்தி. கலாம்…. பெரிய மனிதன் நீ. உன்னைக் கண்டுபிடித்து ஜனாதிபதி பதவியில் அமர்த்தினாரே ..அவர் இந்த தேசத்துக்குச் செய்த நன்றிக்கடன் அது. அவருக்கு அப்போது தெரிந்திருக்காது இந்த தேசத்தின் ஆன்மா உன்னுள் உறைந்திருப்பது…. இரண்டாவது தடவையும் இந்திய ஜனாதிபதி பதவியில் அமரும் வாய்ப்பு உனக்குக் கிடைக்காதது, எங்களின் பெரும் இழப்பு. உன் இடத்தில் ‘கட் அவுட்’ ஜனாதிபதியை வைத்தவர்களை இந்த தேசம் எப்போதும் மன்னிக்காது. இவ்வளவு செய்த இறைவன் உன்னை இன்னும் பத்து இருபது வருடங்கள் வாழவிட்டிருந்தால், லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் மனதில் நல் விதைகளை விதைக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கும். எங்கள் மனதில் எப்போதும் ‘வாழ்க நீ எம்மான்’.

 3. புவியரசு சொல்கிறார்:

  முற்றிலும் உண்மை.
  கலாம் அவர்களை விடச் சிறந்த வேறு யாரும்
  ஜனாதிபதி பதவியில் இதுவரை அமர்ந்ததில்லை;

  அவர் அடுத்து தொடர முடியாதபடி செய்தவர்கள்
  பாவிகள். சுயநலமிகள்.
  கலாம் சார் இன்று பிஸிகலாக இல்லாவிட்டாலும்
  டெக்னாலஜி அவரை இப்போதும் வாழவைத்துக்
  கொண்டிருக்கிறது. இந்த இடுகை ஒன்றே போதும்
  அதற்கு சாட்சி.
  கே.எம்.சார் – அண்மையில் வெளிவந்த மிகச்சிறந்த,
  பயனுள்ள இடுகை இது. நன்றி.

 4. PK சொல்கிறார்:

  Amazing speech… so simple and powerful. Thank you very much for sharing!

 5. புதியவன் சொல்கிறார்:

  சில நாட்கள் முன்பு ஒன்றைப் படித்தேன். அதை இங்கு பதிவிட நினைக்கிறேன். ஆங்கிலத்திலேயே அதனைப் பதிவிடும்போது அதன் உண்மைத்தன்மை அப்படியே இருக்கும் என்பதால் ஆங்கிலத்திலேயே எழுதுகிறேன். அந்தப் படத்தை இங்கு எப்படிச் சேர்ப்பது என்று தெரியவில்லை (சந்திப்பின்போது எடுத்த படம்).

  It was the first visit of an elevated saint (Shankaracharya) to Rashtrapathi Bhavan.

  Since the then President, Dr Kalam wanted to give due honor to the saint, he called me (I was comptroller in the President’s house) to his office and asked me the traditional protocol.

  I told him, “I will receive the saint in the gate and bring him inside”
  After a few minutes of deep thinking, he asked me, “what will happen if I receive him?”

  I said, “Sir, you will honor the Saint and make his position more important than the President”
  He smiled. He didn’t say anything.

  Then once inside the office, I briefed him, “Sir I will bring him here, put his seat (asan) on this sofa and will request him to sit and the President will continue sitting on his usual sofa chair”

  He again asked me, “What will happen if I make him sit on my sofa seat?”
  I said once again, “Sir. You will honor the Saint and make his position more important than the President”
  He smiled once again and didn’t give me any more instructions.

  After thirty minutes, when the Saint was to reach the Rashtrapati Bhavan, a few seconds before his arrival, to my surprise, I saw Dr Kalam, standing behind me at the gate. I immediately stood behind the President.

  He was there to receive the Saint with garland and flowers. We received the Saint, walked through the corridors and straight entered into President’s office.

  When I was spreading the Saint’s seat (tiger skin asan) on the visitor’s sofa, as we had discussed, he directed me to put the same on his own sofa chair.

  I was shocked by this simple, humble and great gesture.

  He was President Kalam.

  We offered fruits and flower basket to the saint.

  After the mulakat (meeting) I asked him the reason behind doing this. He smiled and said, “I wanted the sofa seat of the President of India to be blessed by the saint’s spiritual power so that whoever sits here later also gets the Saint’s belessings”

  I admired these words of my Spiritual Guru President Kalam and said “Sir, you are not only a scientist but you are yourself a saint in disguise too”

  As usual he gave his meaningful smile.

  Lt. Co. Ashok Kini H, SM, VSM
  Former Comptroller to The Former President Bharat Ratna Dr APJ Abdul Kalam

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   இது அற்புதமான ஒரு தகவல்.
   நான் படித்ததில்லை;
   சரியான இடத்தில் இதை சொல்லி இருக்கிறீர்கள்.

   நீங்கள் சொல்லும் புகைப்படத்தை எனக்கு
   மெயிலில் – kavirimainthan@gmail.com
   அனுப்பி விடுங்கள். நான் அதை இடுகையின்
   அடியிலேயே – பின்சேர்க்கை என்று சொல்லி
   சேர்த்து விடுகிறேன்.

   இத்தகைய தகவல்கள் அவசியம் வாசக
   நண்பர்களுக்கு போய்ச்சேர வேண்டும்.
   அதற்கு இது உதவும்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    //I saw Dr Kalam, standing behind me at the gate.// – இந்த வரியைப் பாருங்கள். தனக்கு (ஜனாதிபதிக்கு) உதவியாளர் இந்த அசோக் கினி. சாதாரண அரசியல்வாதி என்ன செய்திருப்பான்? ஓடிப்போய் முன்னால் நின்றிருப்பான் (Even though he wants to show respect, even in that place, he will think, I am in bigger position than my staff).

    லெஃப்டி. அசோக் அவர்கள் மறுத்து அவரது கருத்துக்களைக் கூறும்போது, சாதாரணமா நாம எப்படி ரியாக்ட் பண்ணுவோம்? உனக்கொண்ணும் தெரியாது, நான் சொல்வதைச் செய் என்றுதான் சொல்லுவோம். ஆனால் கலாம் அவர்கள் மறுமொழி எதுவும் கூறாமல் அமைதியாக இருக்கிறார்.

    இந்த மாதிரி சின்னச் சின்ன செயல்களில், தன் இயல்பாக வளர்த்துக்கொண்ட நற் குணம், நிச்சயம் நடிப்பாலோ செயற்கைத் தனத்தாலோ வரவே வராது. எப்படிப்பட்ட வளர்ப்பு, எப்படி வளர்த்துக்கொண்ட குணம்.

    என்னதான் மற்றவர்கள் எழுத்தில் வடித்தாலும் நீங்கள் பகிர்ந்துள்ள காணொளி என் மனதைக் கவர்ந்தது.

    (அனுப்பிவிட்டேன்)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.