….
….
….
கலாம் அவர்கள் தனது முதல் தோல்வியையும்,
முதல் வெற்றியையும் எப்படி சந்திக்க நேர்ந்தது –
என்பதை – மிக அழகாக விளக்குகிறார்
இந்த காணொளியில் –
ஒரு தோல்விக்கான முழு பொறுப்பையும்
தானே ஏற்றுக் கொள்வதும் –
அதே சமயம் வெற்றி கிட்டும்போது,
அதற்கான முழு புகழையும், பலனையும் –
தன்னுடன் உழைத்தவர்களுகு
விட்டுக் கொடுப்பதும் தான் “தலைமைப் பண்பு”
– என்கிறார் என்றும் மறக்க முடியாத
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம்…
அதை தனக்கு கற்றுக்கொடுத்தவர்
டாக்டர் சதீஷ் தவான் என்பதையும்
அவர் சொல்லத் தவறவில்லை.
…..
…..
.
——————————————————————————————————————————-
அவரது புத்தகத்தில் (கலாம் அவர்கள்) இந்த நிகழ்ச்சியை விரிவாக எழுதியுள்ளார் (அக்கினிச் சிறகுகள்னு நினைவு).
கலாமின் எளிமை, உயர்ந்த குணங்கள்தான் நினைவுக்கு வருது. சதீஷ் தவானின் தலைமைப் பண்பை பிறர் அறியவேணும் என்று அவர் எண்ணியது சிறப்பு. இல்லைனா அவரது நல்ல குணம் தெரிந்திருக்காது. இதுபோல ராஜீவ் கொலை வழக்கைத் துப்புத் துலக்கிய கார்த்திகேயன் அவர்களும், ராஜீவ் காந்தியின் நல்ல குணத்தைப் பற்றி சில நிகழ்வுகள் எழுதியிருந்தார். (ஆன்’டீட்ட-மரகதம் சந்திரசேகர் வாக்கு கொடுத்துவிட்டேன், அவர் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவேன், பிரதம வேட்பாளராக இருந்தபோதும் தன்னுடைய உடையைத் துவைத்தது, அதுபற்றி குண்டுராவ் குறைபட்டுக்கொண்டிருந்தபோது, என்னுடைய உடைகளை நான் துவைப்பதுதானே முறை என்று சொன்னது, இன்னும் பல நிகழ்ச்சிகள்.
‘பெரியவர்கள் எப்போதும் பெரியவங்கதான். சிறுமைக் குணம் படைத்தவர்கள் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் சிறுமைக்குணம் உடையவர்கள்தாம்’