….
….
ரிஷிகேஷ் பயணம் பற்றிய…
ஒரு அழகிய காணொளி கீழே …..!!!
ஏற்கெனவே ரிஷிகேஷ் சென்று வந்தவர்களுக்கு
வர்ணனை -உதவி தேவையில்லை.
ஆனால், இதுவரை போகாதவர்களுக்கு ஒரு வர்ணனை –
விவரம் இருந்தால் தேவலை. இந்த வீடியோவில்
ஹிந்தியில் வர்ணிக்கப்படுகிறது. ஹிந்தி தெரியாதவர்களுக்காக
நான் கீழே தமிழிலேயே செல்கின்ற இடங்களைப்பற்றி
அதே order-ல் கீழே சொல்லி விடுகிறேன்.
வீடியோவில், அந்த அந்த இடங்கள் வரும்போது,
இங்கே refer செய்து கொள்ளுங்கள்…
————————
முதலில் ஹரித்வார் காட்சிகள் கொஞ்சம். பிறகு –
ஹரித்வாரிலிருந்து, ரிஷிகேஸ்-க்கு ஆட்டோவில்
பயணிக்கிறார்கள்.
ரிஷிகேஸுக்கு உள்ளே நுழையும் முன் வழியிலேயே
முதலில் பார்ப்பது திரிவேணி காட். மிக மிக அழகான
இடம்… மாலையும் இரவும் சந்திக்கும் நேரத்தில் –
அஸ்தமன சமயத்தில் இங்கே கங்கைக்கு நிறைய
பாடல்களுடன், “ஆர்த்தி” எடுக்கப்படுகிறது.
கங்கை தான் மூன்றாகப் பிரிந்து, பின்னர் மீண்டும் சேர்கிறது..
ஆனால், யமுனை, சரஸ்வதியுடன் சேருவதாக
(வழக்கம்போல் …) பாவித்துக் கொள்கிறார்கள்….!!!
ஆழமில்லாத இடத்தில், மிகவும் பாதுகாப்பாக
கங்கையில் குளிக்க வேண்டுமென்றால், இது அதற்கான
மிகச்சிறந்த இடம்.
பிறகு கடைத்தெரு…
தொடர்ந்து வருவது “லக்ஷ்மண் ஜூலா”
ஏற்கெனவே நாம் ஹரித்வாரிலிருந்து வரும்போதே,
கங்கையைத் தாண்டி இன்னொரு பக்கத்தில் தான்
இருக்கிறோம். இப்போது மீண்டும்
கங்கையை லக்ஷ்மண் ஜூலா பாலம் மூலமாக
கடந்து இக்கரைக்கு வருகிறோம்.
எதிரே பார்ப்பது கைலாஷ் நிகேதன் மந்திர் என்கிற
கோவில்… இதன் மாடியிலிருந்து கங்கையை நோக்கினால்,
அற்புதமான காட்சிகளைப் பார்க்கலாம்.
இங்கேயும் கங்கையின், இந்தக்கரையில்,
மாலையில், ஆரத்தி வைபவம் நடக்கிறது.
இதனை நடத்தி வைப்பவர்கள் புகழ்பெற்ற “கீதா பவன்”
ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ஆசிரமம்
யோகா கற்றுக் கொடுப்பதற்கு உலகப்புகழ் பெற்றது.
கீதா பவன் ஆசிரமத்தில், ராமாயணம் மற்றும்
மஹாபாரத நிகழ்ச்சிகளை சித்தரிக்கும் அற்புதமான
வண்ணச்சிலைகளின் கண்காட்சி ஒன்று இருக்கிறது.
அவசியம் காண வேண்டிய ஒன்று. இங்கு இன்னும்
சில புராதன, சிறிய சிறிய கோவில்களும்,
மகரிஷி சிவானந்த சரஸ்வதியின் ஆசிரமும் இருக்கின்றன.
கீதா பவன் ஆசிரமத்தின் சார்பில் –
ஆண்டுதோறும் இங்கே ஒரு International Yoga Festival
நடைபெறுவது உண்டு. இதன் எதிரே உள்ள இடத்தில்
தான் கங்கை நதியில், முன்பு ஒரு பெரிய சிவன் சிலை
பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. பின்னால், 2013-ல்
உத்தராஞ்சலில், கேதார்நாத் அருகே ஏரி உடைந்ததால்
ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்தில் அது
அடித்துச் செல்லப்பட்டு விட்டது.
….
….
….
….
இதற்கு அருகே இருப்பது “ராம் ஜூலா”
இங்கேயிருந்து மீண்டும் கங்கையை கடந்து அந்தப்பக்கம்
செல்லலாம்.
இவ்வளவு விவரங்கள் போதுமானவையே..
காணொளியை காண்போமே –
…………..
…………..
.
———————————————————————————————————————————————–
Super super video and commentary. It is a feast to eyes & years.