….
….
….
ஒரு சந்தேகம் வரலாம்…
வரலாம் என்ன – அவசியம் வரும்…!!!
அறிவாளி’க்கும் – புத்திசாலி’க்கும் என்ன வித்தியாசம்…?
சரி பதிலுக்கு இன்னொரு கேள்வி …
கூரிய புத்தி உடையவர் – கெட்டிக்காரர் …
இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம்…?
அதற்கும் மாற்றாக இன்னொரு கேள்வி –
intelligent – shrewd – இரண்டிற்கும் என்ன வித்தியாசம்…?
தமிழக முதல்வர்களாக இருந்த செல்வி ஜெயலலிதா,
கலைஞர் கருணாநிதி ஆகிய இரண்டு பேரிடமும்
பணியாற்றிய அனுபவமுள்ள ஓய்வுபெற்ற IPS அதிகாரி
திரு.கலியமூர்த்தி – ஒரு தொலைக்காட்சி பேட்டியில்
கூறுவதை முதலில் பார்த்து விடுவோமே…!!!
——————————
——————————-
நெகடிவ் குணங்கள் இல்லாத அரசியல்வாதிகள்
யார் இருக்கிறார்கள்…?
கலியமூர்த்தி, காவல்துறையில் பொறுப்பான பணியை
வகித்தவர்… இன்னமும் பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்..
எனவே, ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரைப் பற்றி
நெகடிவ்’வாக எதையும் சொல்ல விரும்ப மாட்டார்.
எனவே, அவரால் சொல்ல முடிந்த பாசிடிவ்’வான
விஷயங்களை மட்டும் சொல்லி இருக்கிறார்.
ஜெ., கே., ஆகிய இருவருக்குமே பொதுவான குணங்களை
சொல்ல வேண்டுமென்றால் –
இருவருமே புத்திசாலிகள்.
வெவ்வேறு காலகட்டத்தில் மக்களின் அபிமானத்தை
பெற்றிருந்தவர்கள்.
அவ்வளவே …
மற்றபடி, இருவருமே முற்றிலும் வித்தியாசமான கேரக்டர்கள்.
ஜெ. –
அசாத்திய துணிச்சல் நிரம்பியவர்.
தன் கோபத்தையோ, ஆத்திரத்தையோ – அடக்கிக் கொள்ள
தெரியாதவர் / முடியாதவர்.
வெளிப்படையாகவே பதில் வினை ஆற்றக்கூடியவர்.
ஆனால் கே. –
அதி சாமர்த்தியசாலி…
தந்திரம் மிகுந்தவர்…
தன் எதிரிகளை நேரடியாக முறைத்துக்கொள்ளவோ,
பகைத்துக் கொள்ளவோ மாட்டார்…
ஆனால் “செயலில்” காட்டி விடுவார்.
மற்றபடி இரண்டு பேரையும் ஒப்பிட வேண்டுமானால்,
தனியாக பெரிய இடுகை போட வேண்டியிருக்கும்….
எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும்…
இப்போதைக்கு கலியமூர்த்தி அவர்களின்
கருத்தோடு நிறுத்துக் கொள்வோமே….!!!
.
——————————————————————————————————————————
பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர் அல்லனவற்றைப் பேசமாட்டார், ஒரு சார்பாகவும் பேசுவது கடினம் (அப்போ இவர் இந்தக் கட்சி சார்பானவர் என்ற தோற்றம் வந்துவிடும்).
ஆனால் அவர் சொன்ன நிகழ்ச்சிகளைக் கேட்டாலே, யார் மீது நமக்கு மரியாதை வரும் என்பது எல்லோருக்கும் புரியும்.
.
🙂 🙂
.