….
….
(அந்தக்கால இஸ்தாம்புல் – கான்ஸ்டான்டினோபில்….)
….
4-5 வருடங்களுக்கு முன்னர், துருக்கி, இஸ்தாம்புல்
(பழைய கான்ஸ்டாண்டினோபிள் ) பற்றிய
விவரங்கள் கொஞ்சம் படித்தேன். அற்புதமான சரித்திரப்
பின்னணியைக் கொண்ட இஸ்தாம்புல்-க்கு ஒரு முறை
சென்று வரவேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது.
புராதனத்தின் மிச்சமும், நவீனமும் கலந்த
ஒரு அபூர்வ நகரம் இஸ்தாம்புல்.
அதன் பின் இஸ்தாம்புல் பின்னணியில் எடுக்கப்பட்ட
ஒரு ஆங்கிலப்படம், அந்த ஆவலை மேலும் தூண்டியது.
ஆனால், எப்படியோ அந்த பயணம் தள்ளிக்கொண்டே போனது.
இப்போது கொரொனா சூழ்நில …வயது வேறு….
இனி துருக்கி சுற்றுப்பயணம் சாத்தியமில்லை என்றே
தோன்றுகிறது.
சரி … அதன் சரித்திரத்தையாவது விவரமாகப் படிப்போம் என்று
பல லிங்க்குகளை சேகரித்து வருகிறேன். கொஞ்சம் நிதானமாக
நேரம் கிடைக்கும்போது முழுவதுமாகப் படித்து விட்டு,
இங்கே தளத்தில் கூட அதைப்பற்றி எழுத வேண்டுமென்று
நினைத்திருக்கிறேன்.
அதற்குள்ளாக – இன்று மாலை(வெள்ளிக்கிழமை)
WION ஆங்கில செய்தித்தளத்தில்
HAGIA SOPHIA – மியூசியம் மசூதியாக மாற்றப்பட்டு,
86 வருடங்களுப்பின் இன்று மீண்டும் தொழுகை
துவங்கியது என்று செய்தி பார்த்தேன். அந்த செய்தி வீடியோவே
நன்றாக இருக்கிறது. அதைக் கீழே தருகிறேன்.
இருந்தாலும், HAGIA SOPHIA-வின் சரித்திரப் பின்னணியை
விவரமாகச் சொல்லும் வேறு ஒரு காணொளியும் இருந்தால்
தேவலையென்று தோன்றியது… வலைத்தளத்தில் தேடியெடுத்து,
அதையும் கீழே தந்திருக்கிறேன்.
பாருங்கள் – சுவாரஸ்யமாக இருக்கும்…
சரித்திரமே எப்போதும் சுவாரஸ்யம் நிறைந்தது தான்.
…………
இது HAGIA SOPHIA-வின் சரித்திரப் பின்னணியைச்
சொல்லும் காணொளி –
Hagia Sophia: Through the ages-
…………
…………
Muslim prayers in Hagia Sophia for first time in 86 years
WION news –
…………
…………
.
————————————————————————————————————————————–
1500 வருடப் பழையது என்கிற பெருமை.
எவ்வளவு பிரம்மாண்டமான,
கலைச்செழிப்புடன் கூடிய கட்டிடம்.
உலகம் முழுவதுமிருந்து துருக்கிக்கு
டூரிஸ்டுகளை கவர்ந்திழுக்க
இதுவும் ஒரு முக்கிய காரணம்.
நீங்கள் சொல்வது போல் சரித்திரம்
மிகவும் சுவாரஸ்யமானது தான்.
I could understand the timing you have chosen to publish both the news and videos.of Isthanbul .
The timing is very brilliant and excellent. Kudos to you. To my vague memory this city of Ithanbull
was shown in one of James Bond film series. Sean connery acted as Bond..
Thank you Gopalakrishnan … 🙂 🙂
.
-with all best wishes,
Kavirimainthan