ஜெயலலிதா மற்றும் சோ பற்றி – ரஜினி

….
….


….

சில நிமிடங்களுக்கு முன், எதேச்சையாக –

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களைப்பற்றியும்,
துக்ளக் ஆசிரியர் சோ அவர்களைப்பற்றியும்,
ரஜினிகாந்த் அவர்கள் பேசிய காணொளி
ஒன்றை பார்க்க நேரிட்டது.

1996-ல் ஜெயலலிதா மிகவும் மனம் வருந்தும்படி
தான் பேசியதாகவும், நடந்துகொண்டதாகவும் –
அவருடைய தேர்தல் தோல்விக்கு தானும் ஒரு
காரணமாக இருந்ததாகவும் வெளிப்படையாகச் சொல்கிறார்.

ஜெயலலிதா மனம் வருந்தும்படி தான் பேசியதை
வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் ரஜினி அதே சமயத்தில்
– தான் பேசியது தவறு என்றும் சொல்லவில்லை;
அதற்காக மன்னிப்பும் கேட்கவில்லை;

அவர் வருத்தப்படும்படி நான் நடந்துகொண்டேன் என்கிறார்…

அன்றைய சூழ்நிலையில் அப்படிப் பேசியது
அவசியமாக இருந்தது என்பது அவரது மன ஓட்டமாக
இருந்திருக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில், இப்படியெல்லாம்
வெளிப்படையாக உண்மைகளைப் பேசுபவர்களை
பொதுவாழ்வில் காண்பது அரிதாகவே இருக்கிறது.

ரஜினியின் ஒளிவுமறைவற்ற பேச்சு – மன நிறைவைத் தருகிறது.

…………………………

…………………………

.
——————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.