“fire & forget” – ஏவுகணை பரிசோதனை ….

….
….


….


….

அண்மையில் ஒடிஷாவில் உள்ள பாலஷோர் கடற்கரையில்
நடந்த ஒரு ராக்கெட் ஏவும் பரிசோதனை காணொளி கீழே –

இந்த வீடியோ நேற்று தான் பாதுகாப்பு அமைச்சகத்தால்
வெளியிடப்பட்டது.

எதிரிகளின் “டாங்க்”கை அழிக்க பயன்படுத்தப்படும்
ஏவுகணை இது. இதனை எதிரிகளின் படை இருக்கும் இடத்தை
நோக்கிச் செலுத்தினால் இதன் முனையில் பொருத்தப்பட்டிருக்கும்,
லேசரின் மூலம், எதிரி டாங்க் இருக்கும் இடத்தை துல்லியமாக
கண்டுபிடித்து அழித்து விடும்… 10 கி.மீ. தூரம் வரை பயணிக்கும்.
ஏவப்பட்ட சில நொடிகளிலேயே டார்கெட்டை அடைந்து விடும்.
தரையிலிருந்து குறைந்த உயரத்தில்,
சுமார் 30-40 அடி உயரத்திலேயே பயணிக்கும்.

நான் முன்பு பணியில் இருந்தபோது இந்த இடத்திற்கு
சென்றிருக்கிறேன். அப்போது நடந்த, இதற்கு முந்தைய
துவக்க கால வர்ஷனின் பரிசோதனையை நேரில்
பார்த்திருக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமான அனுபவம்.
அப்போது அதில் லேசர் பொருத்தப்படவில்லை;
குத்து மதிப்பாகத்தான் செலுத்த முடியும்.

இந்த “பாலஷோர்” கடற்கரையை, ராணுவம், ராக்கெட்
பரிசோதனைகளுக்கு தேர்ந்தெடுக்க முக்கியமான காரணம்
இருக்கிறது.

அதிகாலையில், 2-3 கி.மீ. தொலைவிற்கு அலைகள்
உள்வாங்கி இருக்கும். அப்போது அங்கே போய் “ஹிட்” பண்ண
வேண்டிய “டார்கெட்”டை நிறுத்தி விட்டு வந்து விடுவார்கள்.
காலை 9 மணிக்கு மேல் அலைகள் நம் காலைத் தொடும்
அளவிற்கு 2-3 கி.மீ. முன்னேறி வந்து விடும்.

பிறகு பரிசோதனைகள் நடக்கும். கடற்கரையிலிருந்து
“fire” செய்வார்கள். டார்கெட் தண்ணீருக்கு உள்ளே 2-3 கி.மீ.
தொலைவிற்கு அப்பால் இருக்கும் என்பதால், ஆள் நடமாட்டம்
எதுவும் அங்கே இருக்காது. ஆட்கள் நடமாட்டம் பற்றிய
கவலைகள் இல்லாமல் பரிசோதனைகள் நடத்தலாம்.

மாலை 4 மணிக்கு மேல், அலைகள் மீண்டும் உள்வாங்க
ஆரம்பித்து விடும். அப்போது ராணுவத்தினர், உள்ளே
ஜீப்பில் சென்று, “ஹிட்” செய்யப்பட்ட “டார்கெட்”டை
கொண்டு வந்து பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள்….

பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையில் நாம் இன்னும்
பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் மிக அதிகம் இருக்கிறது
என்றாலும் கூட –

ஒரு இந்தியனாக –
இந்த வளர்ச்சி எனக்கு பெருமையாக இருக்கிறது.

நாம் எல்லாருமே பெருமைப்பட வேண்டிய விஷயம் இது.

…….

……..

.
——————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to “fire & forget” – ஏவுகணை பரிசோதனை ….

  1. தமிழன் சொல்கிறார்:

    Accuracy need not be a main criteria in the initial stages. ie instead of 1-5 mtrs accuracy, even if we can develop 10-20 mtrs accuracy (or more), it would be okay. If we develop on our own and if it costs say 50 rs, the same would cost 100 rs or more if we import. இதுல நிறைய நுண்ணரசியல் இருக்கிறது. என் கடையிலிருந்து வாங்கும் பருப்பு வகைகளை நீங்க வீட்டுல உபயோகப்படுத்தினாத்தான் எனக்கு மேலும் மேலும் வியாபாரம் நடக்கும். சும்மா ஸ்டாக்குல வச்சா எனக்கு உபயோகம் இல்லை. இதுனாலதான் ஒவ்வொரு நாடும், ஒரு cycle of events போல, நம்மைச் சுற்றியுள்ள நாடுகளிடம் நாம் நட்புடன் இருப்பதை விரும்புவதில்லை. Today USA is not keen to resolve our problems with China, but they would stand to gain. போருக்கான தளவாடங்களை நாம் உற்பத்தி செய்யும்போது, நமக்கு பகைவர்களும் குறைவார்கள்.

    நம்ம இரயில்கள், வெளிநாடுகளை ஒப்பிடும்போது, கச்சடா என்பதுதான் உண்மை. ஆனாலும் அவை நாம் தயார் செய்பவை. நம்ம ஊர் பேருந்துகளும் அதே லட்சணம்தான். (ஆனால் லாங் செர்விங் என்பதையும் மறுப்பதற்கில்லை). குவாலிட்டி பொருட்கள் தயாரிப்பதில் நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.