அடுத்த 10 மாதங்களுக்குள் முதல்வர் ஆகப்போகிறவரிடம் போய், இதையெல்லாம் கேட்கலாமா…?

….
….

3 முறை திமுக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
4-வது முறை சீட் மறுக்கப்பட்டதால், கட்சியை விட்டு
விலகி, சுயேச்சையாக போட்டியிட்டு, தோற்று,
பிறகு பாஜக-வில் சேர்ந்தார்.

பாஜக-வில் எதிர்பார்க்கப்பட்ட பதவி கிடைக்காததால்,
இப்போது மீண்டும் திமுக-வில் ஐக்கியமாகிறார்.

கொரோனா-வாவது மண்ணாங்கட்டியாவது.
தனது கூட்டத்துடன் ஐக்கியமாகிறவரை திமுக தலைவர்
வரவேற்க வேண்டாமா…?

வரவேற்கிறாரே –

திமுகவிலிருந்து பிரிந்து சென்று இப்போது மீண்டும்
திமுகவில் ஐக்கியமாகும் வேதாரண்யம் வேதரத்தினம்
மற்றும் அவரது கூட்டத்தினரை – மன்னிக்கவும்
ஆதரவாளர்களை –

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
வரவேற்றுப் பேசி மகிழும் காணொளி நிகழ்ச்சி கீழே –

……
திமுக தலைவர் பத்திரமாக, ஏ.சி.அறைக்குள் அமர்ந்து
கணிணி மூலம் தன் கூட்டத்தைப் பார்த்து மகிழும் காட்சி –
—–

……

திமுக-வினர் கும்பலாக முண்டியடித்துக் கொண்டு,
தலைவருக்கு தங்கள் முகம் காமிரா மூலம் தெரிய
வேண்டுமே என்கிற கவலையுடன் முட்டி
மோதிக்கொண்டு நிற்கும் காட்சி கீழே –

( இவர்களில் யாராவது ஒருவருக்கு கொரோனா
இருந்தாலும் கூட – மற்றவர்களின் கதி…..?????? )
—–

…….

கொரொனா காலம் என்பதால் தடையுத்தரவுகள்
அமலில் உள்ள காலம்.

– கல்யாணம், சாவு – தவிர வேறேந்த நிகழ்ச்சிகளுக்கும்
அனுமதி கிடையாது என்று அரசு உத்தரவு.

– அனைவரும் முகக்கவசம் அணிந்து தான் வீட்டை விட்டு
வெளியே வரவேண்டும் என்று அரசு உத்தரவு.

– 5 பேருக்கு மேல் எங்கும் கூடக்கூடாது என்பது
அரசு உத்தரவு.

– அடுத்த நபருடன் குறைந்த் பட்சம் 5 அடி இடைவெளி
விட்டு தான் இருக்க வேண்டும் என்பது அரசு விதி.

– இந்த ஆதரவாளர்களின் இணைப்பு கூட்டத்தில் குறைந்த
பட்சம் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை 2-வது
புகைப்படத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்…
காமிரா எல்லைக்கு வெளியேயும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

– அவர்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் –
ஆகியவற்றை கடைபிடிப்பவர்கள் எத்தனை பேர் என்றும்
புகைப்படத்தில் பார்க்கலாம்…

– என்ன சார் … ஸ்டாலின் தானே இந்த கூட்டத்தை
நடத்துகிறார்… அந்த உடன்பிறப்புகளுக்கு கொரோனா
உத்திரவுகளை கடைபிடிக்க அறிவுரை சொல்ல மாட்டாரா…
என்று கேட்கிறீர்களா…?

தனக்கு ஏறிக்கொண்டே இருக்கும் டிமாண்டை –
பாப்புலாரிடியை – நினத்து மகிழ்ந்துகொண்டிருக்கும்
அவரிடம் போய் இதையெல்லாம் நினைவுறுத்தலாமா…?

மேலும், அடுத்த 10 மாதங்களில்
( ஒருவேளை, வாய்ப்பிருந்தால் –
அதற்கும் முன்னதாகவே கூட)
தமிழ்நாட்டின் முதல்வர் ஆகப்போகிறவருக்கு இந்த
தடையுத்தரவுகள் எல்லாம் பொருந்துமா…?

.
——————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to அடுத்த 10 மாதங்களுக்குள் முதல்வர் ஆகப்போகிறவரிடம் போய், இதையெல்லாம் கேட்கலாமா…?

 1. natchander சொல்கிறார்:

  D M K MLAS ARE THE WORST AFFECTED SO FAR,,,,,
  SIX TO SEVEN OF THEM M ARE KORANNA INFECTED,,, !!
  SURE,, !!
  YOU FIND MORE CASES IN D M K ,,,,SOON,,
  REGARDING STALIN,,,,
  HE HAS NO C M FACE !!
  SIMPLE !!!! BRO !!

 2. புவியரசு சொல்கிறார்:

  வேதாரண்யம் சின்ன ஊர் தானே ?
  உள்ளூர் போலீஸ் இதை எப்படி கவனிக்காமல் விட்டது ?
  இவர்கள் அத்தனை பேர் மேலும்
  கொரோனா தடையுத்தரவை மீறியதற்காக
  வழக்கு பதிய வேண்டும்.

  “அவர்” உட்பட. மற்றதையெல்லாம் அவர் முதல்வர்
  ஆகும்போது பார்த்துக் கொள்ளலாம்.

 3. புவியரசு சொல்கிறார்:

  ஆதாரத்திற்கு, இந்த புகைப்படங்கள்
  இரண்டுமே போதுமானது.

 4. Ramnath சொல்கிறார்:

  He is proving himself once again
  as Immatured. I don’t think he is
  capable of Administering a State like
  Tamil Nadu. Maximum he can
  aspire for Puducherry.

  • Raghavendra சொல்கிறார்:

   எங்கள் புதுச்சேரியை “அந்நியர்”
   ஆட்சி செய்ய அனுமதிக்க மாட்டோம்.
   எங்கள் மண்ணின் மைந்தர்களான
   நாராயணசாமியோ அல்லது
   ரங்கசாமியோ தான் இங்கே
   முதல்வர் நாற்காலியில்
   அமர முடியும்.

 5. tamilmani சொல்கிறார்:

  அடுத்தது இவர்தான் என்று தெளிவாக சொல்ல முடியவில்லை.
  காரணம் ஆட்டக்களம் இப்போது வேறு. ஆட்ட காரர்கள்
  அதிகம் . 30 சதவீதம் ஓட்டுக்கள் வாங்குபவர் எவரோ அவர் வெல்ல
  வாய்ப்பு அதிகம் . அதுவும் மக்கள் கோரனோவுக்கு பிறகு
  வெறுப்படைந்து இருக்கிறார்கள் . ஆக்கபூர்வமான ஆலோசனைகள்
  சொல்லாமல் மத்திய . மாநில அரசுகளை குறை கூறி கொண்டிருந்தால்
  ஒன்றும் நடக்காது. ஒரு வேளை எடப்பாடி இடத்தில இவர் இருந்திருந்தால்
  கொரோனா இன்னும் மோசமாக இருந்திருக்கும். ஒரே வருத்தம்
  தாம் பதவியில் இருந்து இருந்தால் நன்கு கல்லா கட்டி இருக்கலாம் என்பதே.
  அதிமுக. திமுக இரண்டு ஊழல் கட்சிகளும் வேண்டாம் என்று மக்கள்
  முடிவெடுத்தால் அதை விட நன்மை தமிழ்நாட்டுக்கு வேறேதும் இல்லை.

  • புதியவன் சொல்கிறார்:

   இப்போது உள்ள நிலையில், வாக்குகள் நிறைய பிரியும். அது அதிமுகவின் வாக்கு சதவிகிதத்தை கடுமையாக பாதிக்கும். நான் எப்போதும் சொல்வது போல, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் 2 சதவிகித வாக்குகள் அதிமுகவுக்குக் கிடைக்கும், அதிமுகவின் 18 சதவிகித வாக்குகள்-பொதுமக்களுடையதும் சேர்ந்து, நிச்சயம் அதிமுகவை விட்டு விலகும். கனவிலும் அவர்கள் பாஜகவுடன் சேரக்கூடாது. ‘இந்து’ வாக்கு வங்கி என்பது இன்னும் உருவாகலை(வெளிப்படையா). மனதளவில் உள்ள ‘இந்து’ வாக்கு வங்கி நிச்சயம் பாஜகவுக்குக் கிடைக்காது.

   ஆனால் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி சேர அதிக வாய்ப்பு. அதனால் அதிமுகவுக்கு நிச்சயம் எந்தத் தொகுதியிலும் 20-22%க்கு மேல் வாக்குகள் வராது. இஸ்லாமியர் வாக்குகள், கிறிஸ்துவ வாக்குகள் மிகப் பெரும்பான்மை திமுகவுக்கு மட்டும்தான் போகும். திமுக 140 இடங்களுக்கு மேல் வெல்லும் என்பது என் அனுமானம். அந்தத் தேர்தலுக்குப் பிறகு திமுக படிப்படியாக முழுவதுமாக செல்வாக்கு இழக்கும் என்றும் நான் நினைக்கிறேன். அந்தத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவுக்கு ஒரு சரியான தலைமை உருவாகும்னும் தோணுது. ரஜினி (தேர்தலுக்கு வருவாரா? நான் எப்போ வருவேன் என்பது யாருக்குமே தெரியாது..ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வராமல் ஒதுங்கிடுவேன் என்று சொல்வாரா?), கமல், சீமான் ஆகியோர் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார்கள். திமுக தனித்து நின்றாலே வெற்றி பெரும். அவர்கள் தேவையில்லாமல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் உதிரிக் கட்சிகளைத் தூக்கிச் சுமக்கவேண்டிய அவசியம் இல்லை. (ஆனால் காங்கிரஸை அவர்கள் சுமந்தாகவேண்டிய கட்டாயம்). இப்படித்தான் நான் இன்று தேர்தல் களத்தைப் பார்க்கிறேன்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    புதியவன்,

    ஆக அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
    தான் என்கிற முடிவுக்கு நீங்களும் வந்து
    விட்டீர்கள் என்று சொல்லுங்கள்… 🙂 🙂

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   அதிமுக முதல்வரே அதை நோக்கி காய் நகர்த்தும்போது நாம் என்ன செய்வது? உமியைக் கொண்டுவந்து என்னிடம் உள்ள அரிசியில் கலந்து ஊதி ஊதி தின்ன வரவேண்டாம், முதலில் உன்னிடம் 10 அரிசியாவது இருக்கான்னு தனியாக தேர்தலில் நின்று காட்டு, என்று சொல்லும் துணிபு வரவில்லையே. வெளியில் இருக்கும் எனக்குத் தெரிந்தது, அதிகாரத்தில் இருக்கும் அவருக்குத் தெரியவில்லையே. தன் தொண்டர்கள் மீது தனக்கே மரியாதை இல்லை என்றால், அதிமுகவின் தொண்டர்களைப் புரிந்துகொள்ள இயலவில்லை என்றால், அந்தக் கட்சியை நம்புவது எப்படி? எம்.ஜி.ஆர். மத்திய அரசுக்கு ஓரளவு கட்டுப்பட்டார். (ஆனாலும், தன் இயலாத காலத்திலும், ஜெ.வை கத்திப்பாரா விழாவுக்கு அழைக்கக்கூடாது என்று ராஜீவை கட்டாயப்படுத்தி வென்றுவிட்டார். ஆனால் வி.பு விஷயத்தில் ரொம்பவுமே துணிபைக் காட்ட முடியவில்லை). ஆனால், ஜெ. நிஜமான அயர்ன் லேடி என்று சொல்லத் தகுதியானவர். பிரதமராக இருந்தாலும், தன் கட்சி என்று வரும்போது அதற்கு உண்மையாக இருந்தவர் அவர். அவர் பயந்தது ஒன்றே ஒன்றுக்குத்தான். மக்களின் அதிருப்திக்கு மட்டும்தான் பயந்து, அதற்கேற்றவாறு முடிவுகளை எடுத்தவர், முடிவுகளை மாற்றிக்கொண்டவர். எந்த அரசியல் கட்சித் தலைவரையும் பார்த்து அவர் பயந்ததில்லை.

   பாஜக தனியாக நின்றால் தமிழகத்தில் 1000-2000க்கு மேல் எங்கேயும் வாக்குகள் வாங்க முடியாது. கலவரங்கள் (மத) வந்த இடங்களில்தான் அவர்களால் வாக்குகள் வாங்க முடியும், ஆனால் பொதுமக்கள் வாக்கு அவர்களுக்கு இப்போதைக்குக் கிடைக்காது (நாடாளுமன்றத் தேர்தல் தவிர)

   அதற்காக ஸ்டாலினுக்கு கேபபிலிட்டி இருக்கு என்று நான் எங்குமே சொல்லவில்லை. வாய்ப்பு வந்தபோதெல்லாம் அவர் ஒன்றுமே செய்ததில்லை (அகில இந்திய ராகுல் மாதிரி. மற்றவர் வெளிச்சத்தில் மின்னும் பூச்சி). செய்தது அனேகமாக எல்லாமே தவறு (என்று நான் சொல்லலை. அவரே ஒத்துக்கொண்டதுபோல அதற்கு எதிராகத்தான் போராடியிருக்கிறார், ஆட்சியில் அதிகாரத்தில் இல்லாதபோது)

 6. புதியவன் சொல்கிறார்:

  அதிமுக அரசு, ரஜினி ஈ பாஸ் வாங்கினாரா என்று ஆராய்வதில் பிஸி. உதயநிதி எந்த பாஸ் வாங்காமல் ஊர் சுற்றியது பற்றி அமைச்சர் சொல்லியும் அதைப்பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஸ்டாலினின் ஒரே கவலை, எப்படி முதலமைச்சர் ஆவது, மக்கள் எடப்பாடியாரை வீட்டுக்கு அனுப்பத் துடித்துக் கொண்டிருக்கின்றனர் என்று நான்கு வருடங்களுக்கு மேலாகச் சொல்லியும் ஒன்றும் நடைபெறவில்லை, எதையாவது செய்து முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துவிடவேண்டும் என்ற ஆசையில் எதைச் செய்யவும் தயாராக இருக்கிறார். அவருக்குள்ள ஒரே கஷ்டம், அவருடைய பையன் சின்னவன். அதனால் நாளை ராஜபக்‌ஷே அதிபராக வந்தால் அவரைச் சந்திக்க கனிமொழி இல்லைனா டி.ஆர் பாலுவை விட்டால் ஆள் கிடையாது. கனிமொழியை முதன்மைப் படுத்த முதன்மைப்படுத்த உதயநிதி பின்னுக்குப் போவார். ஆனால் உதயநிதிக்கு அரசியலில் எங்கு இடம் இருக்கப்போகிறது?

  இதில் கட்சிக்காரருக்குக் கொரோனா என்றால் இவருக்கு என்ன வந்தது? அன்பழகன் போனால் குக செல்வத்தை மேலே கொண்டுவர முடியும். இருக்கிறவன் போனால், தன் ஆளை மேலே கொண்டுவரலாம் என்றே ஸ்டாலின் யோசிக்கிறார்.

  பழம் தின்று கொட்டை போட்ட ஆர்.எம்.வீரப்பன், அதிக அளவு எம்.எல்.ஏ ஆதரவுத் தளம் வைத்திருந்தும் காலம் ஜெ.வை முன்னிலைப்படுத்தியது. திமுகவில் என்ன நடக்கும் என்பதை ஆவலுடன் காண நினைக்கிறேன். என் மனதில், கனிமொழி பெரிய லெவலுக்கு வருவார் என்றுதான் தோன்றுகிறது, அவருக்கு மட்டும்தான் அங்கு கேபபிலிட்டி (கருணாநிதியின் கேபபிலிட்டி..உடனே கனிமொழியைப் பற்றி பெரிதாக எண்ணவேண்டாம்) இருக்கு என்பது என் அபிப்ராயம் (திமுக தொண்டர்களின் ஆதரவு பெறக்கூடிய, மற்றும் அப்பாவி பொதுஜனங்களின்)

 7. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  திமுக , அண்ணா திமுக இரன்டு கட்சிகள்தான் தமிழ்நாட்டில்
  உள்ளன . மற்ற கட்சிகள் திரைப்படத்தில் வரும்
  எக்ஸ்ட்ரா போல் வந்து விட்டு போகிறார்கள் .
  காங்கிரஸ் , பா ஜ க , கம்யூனிஸ்ட் போன்ற
  தேசிய கட்சிகளும் விதிவிலக்கு அல்ல .

  மாற்றாக வந்த மதிமுக , பாமக , தேமுதிக போன்றவை
  எதிர்பார்த்த அளவில் வரவில்லை .

  காங்கிரஸ் ஊழல் கட்சி என்று என்னதான் சொன்னாலும்
  தமிழ்நாட்டில் ஒரு நல்லெண்ணமே நிலவுகிறது .
  நேரு நல்லவர் , இந்திரா அம்மா நாட்டிற்கு நல்லதே
  செய்தார் – ராஜீவ் பாவம் நம்ம ஊரு வந்து இறந்தார்
  என்றெல்லாம் இருக்கிறது .

  தமிழ்நாட்டில் பா ஜ க மேல் பெரும்பாலும்
  கோபமே இருக்கிறது .
  பா ஜ க செய்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான் !
  பெரியாரை பரப்பியது .
  பெரியார் உயிரோடு இருந்த காலத்தில் கூட
  இவ்வளவு பேர் படித்ததில்லை .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.