….
….
….
தாம்பரத்திற்கு அருகே, நெடுஞ்சாலையில்,
சாராய பாட்டில்களை ஏற்றிச்செல்லும் லாரி ஒன்று,
நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து நேர்கிறது.
போக்குவரத்து பாதிக்கப்படலாமா…?
எனவே பொறுப்பான “குடி”மக்கள்,
“உடையாத பாட்டில்”களை எல்லாம் பத்திரமாக
அப்புறப்படுத்தி, சாலையை சரி செய்கிறார்கள்…!!!
…..
வாய்ப்பு கிடைத்தால் – is there any exemption … ?
ஆற்றோடு போகும் வெள்ளம் – அம்மா குடி, அய்யா குடி… 🙂 🙂
……..
……..
.
————————————————————————————————————————————–
அடுத்தவர் பணத்தைத் திருடுவா னானாகில்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
(முதல் வரி என்னுடையது).
ஆனால் கேட்பாரின்றிக் கிடக்கும் பொருளை சட்டை செய்யாமல் செல்வதற்கு ஆண்மை வேண்டும். அது அனேகமாக பெரும்பாலானவர்களிடம் கிடையாது. அதனால்தான், ஒரு கலவரம் போன்று ஏதேனும் வருமாகில் உடனே கடைகளில் புகுந்து பொருட்களை அள்ளிச் செல்லும் குணம் வருகிறது. இது எல்லா நாடுகளிலும் (அரபு தேசங்கள் உட்பட) உண்டு. எதற்காக ‘அரபு தேசங்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறேன் என்றால், அந்த மக்களைப் பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் இருந்தது, ஆனால் அங்கும் இதுபோல பொருட்களைக் கொள்ளையடிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்.