….
….
….
யூ-ட்யூப் சேனல்கள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டே
இருக்கின்றன. போட்டி அதிகமாகி விட்டது.
அரசியலை மட்டும் நம்பி இயங்கும் ஒரு யூ-ட்யூப் சேனலின்
பாப்புலாரிடியை தக்கவைத்துக் கொள்வது சிரமமாகி விட்டது….
எனவே ரங்கராஜ் பாண்டே அவர்கள் தனது சேனலின்
பாப்புலாரிடியை தக்கவைத்துக் கொள்ள புதிது புதிதாக
“கதை”களை உருவாக்கி ரிலீஸ் செய்துகொண்டே இருக்கிறார்.
அதற்கு தேவைப்படும் “ரீல்”களை தயாரித்து அளிக்க
அவர் வசம் திரு “கோலாகல ஸ்ரீநிவாஸ்” போன்ற
“ரீல்” தயாரிப்பாளர்கள் சில பேர் ஏற்கெனவே இருக்கிறார்கள்…!
அவர்களைப் பொருத்தவரையில், நிஜம் இருக்கிறதோ இல்லையோ –
கதை சுவாரஸ்யமாக இருந்தால் போதும்.
பாண்டே’ஜி-க்கு இப்போது லேடஸ்டாக ஒரு தயாரிப்பாளர்
கிடைத்திருக்கிறார் மேஜர் மதன் குமார் …. புதிய “ரீல்” ரெடி….
தலைப்பே அதி விருவிருப்பு –
“சீனாவை சிதறடிக்க விடுதலை புலிகள்..! |
இந்தியாவின் புதிய ஆட்டம்….!”
என்ன நண்பர்களே “ரீல்” காணத்தயாரா…. ?
……
……
“ரீல்” தயாரிக்க ரிடையர்டு ராணுவ அதிகாரி என்கிற
ஒரு தகுதி மட்டும் போதுமா…?
தயாரிப்பாளரும் சரி இல்லை –
(அடேயப்பா எத்தனை “வந்து”… கள் )
திரைக்கதையமைப்பும் சரி இல்லை;
இதற்கு “கோலாகல”மே பெட்டர்….!!!
ரங்கராஜ் பாண்டே ஏதோ பெரியதாக
வெடிக்கப்போகிறாரென்று நினைத்தால் –
விருவிருப்பு – தலைப்போடு சரி.
“சீனாவை சிதறடிக்க விடுதலை புலிகள்..! |
இந்தியாவின் புதிய ஆட்டம்….!”
-இந்த தலைப்பிற்கான விஷயம் எதாவது
வீடியோவில் இருக்கிறதா…?
பாண்டேஜி ஒரு திறமையான ஜர்னலிஸ்ட்.
ஆனால், வரவர அவர் தொடர்ந்து -தெரிந்தே
ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.
அவரது அண்மைக்கால வீடியோக்கள்
எல்லாம் இதே போல் தான் இருக்கின்றன.
20-30 நிமிடங்களை இந்த மாதிரி வீடியோக்களை
பார்த்து வீணடிப்பதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.
இதே போல் தலைப்பை மட்டும்
கவர்ச்சிகரமாக “தயாரித்து” விட்டு –
உள்ளே சரக்கு எதுவும் இல்லாமல் தொடர்ந்து
கொடுத்துக்கொண்டிருந்தால்,
பாண்டேஜி’யின் நம்பகத்தன்மை போய் விடும் –
கூட்டம் குறைந்து விடும் –
என்பதை அவர் உணர வேண்டும்.
sorry Pandey’ji – இது இன்னொரு ஃப்ளாப் ஷோ…
better luck next time.
.
————————————————————————————————————————————–
புதிய ரீல் என்பதைவிட, சப்ஸ்டென்ஸ் இல்லாமல் வெறும்ன பேசிக்கிட்டே போகிறார். என் நேரம் வீணானதுதான் மிச்சம். இதுல முக்கியமான பாயிண்ட் என்ன? இலங்கையின் நிம்மதியைக் குலைக்க (அவங்க சீனா சார்பு எடுப்பதால்) விடுதலைப்புலிகளைத் துளிர்க்க விட இந்தியா முயலும் என்பதுதான். இது கொக்கு தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிப்பது போன்றது. இந்தியா என்ன செய்திருக்கவேண்டும்? விடுதலைப்புலிகள் விஷயத்தில் தலையிடாமல் அவங்களை இலங்கைக்கு பெரிய தலைவலியாக வைத்திருந்திருக்கவேண்டும். அதற்கு பிரபாகரனை முடக்கி இன்னொருவரை அந்த இடத்திற்குக் கொண்டுவந்திருக்கவேண்டும். இதுதான் பிரிட்டிஷ் ஸ்ட்ராடஜி. ஆனால் இந்தியா முழுவதுமாக இலங்கைக்கு உதவியதால், நமக்குத்தான் பாதிப்பு. இப்போ வி.பு என்று சொல்லிக்கொள்ள அங்கே ஆட்களே கிடையாது. அப்படி யாரையும் திரட்டவும் முடியாது. வி.புலிப் பிரச்சனை, தமிழர் உரிமை எல்லாம் போயே போயிந்தி.
இதுக்கும், நம்ம ஊர் அல்லக்கை அரசியல்வாதிகள் ‘இலங்கைத் தமிழர்கள்’, ‘தொப்புள்கொடி’ என்றெல்லாம் ஜல்லியடிப்பதற்கும் சம்பந்தம் இல்லை. நமக்கு இந்தியா மட்டும்தான் முக்கியம். இலங்கைத் தமிழர்கள் பாடு, அவங்களேதான் பார்த்துக்கணும். அவங்க வேறு நாடு. பிரிவினைவாதக் குழுக்களை எப்படி உபயோகப்படுத்தி இன்னொரு நாட்டுக்குத் தொந்தரவு கொடுத்து தங்கள் வழிக்கு வரவைப்பது, அல்லது முன்னேற்றத்தைத் தடுப்பது என்று சிந்திப்பதுதான் ராஜநீதி. கூடங்குளம் அணு உலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் திட்டம் என்று பலவற்றை யோசித்துப் பார்த்தால் எப்படி வெளிநாட்டுப் பணம் இதில் பாய்ச்சப்பட்டு கலவரங்கள் போராட்டங்கள் உண்டாக்கப்பட்டன என்பது புரியும்.
KM Sir,
பாண்டே, பிஜேபி paid ரோலில் உள்ள you tuber. ஆகையால், அவருக்கு
பார்வையாளர்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு உண்டான சம்பளம் மாதா மாதம் தங்கு தடை இல்லாமல் கிடைத்து விடும். அவருடைய எல்லா வீடியோ யும் பிஜேபி யையோ அல்லது பிஜேபி கண்ட்ரோலில் உள்ள ரஜினியையோ ப்ரோமோட் பண்ணுவதாகவே இருக்கும். இந்த விடீயோவின் நோக்கம் தமிழ் நாட்டில், தமிழ் தேசியம் பேசும் இளைஞர்களை பிஜேபியின் பக்கம் ஈர்பதற்க்காகவே தவிர நீங்கள் குறிப்பிட்டிருப்பதை போல ” இது இன்னொரு ஃப்ளாப் ஷோ…அல்ல. மிகவும் சாமர்த்தியமாக திட்டமிட்டு வெளி இடப்படும் வீடியோ.
புதியவன் ஐயா,
உங்கள் பார்வையில் கூடங்குளம் அணு உலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் திட்டம் எல்லாம் தமிழ் நாட்டிற்கு மிகவும் பயன் உள்ள திட்டங்கள். அப்படித்தானே ? இதை அப்படியே maintain பண்ணிக்கொண்டே இருங்கள். அப்போது தான் பிஜேபி தமிழ் நாட்டில் மண்ணை கௌவிக்கொண்டே இருக்கும்.
//அப்போது தான் பிஜேபி தமிழ் நாட்டில் மண்ணை கௌவிக்கொண்டே// – பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிடும் என்ற ஐடியா போல எழுதுகிறீர்களே. இந்தத் திட்டங்களை யார் கொண்டுவந்தது, யார் ஆதரித்தது, அப்போது யார் மத்திய அரசில் இருந்தது…. ஏன் இரு நாட்களுக்கு முன்பு யார், அதை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று மனு கொடுத்தது ? இவை எல்லாவற்றிர்க்கும் காரணகர்த்தா ஸ்டாலின், திமுக, கருணாநிதி, காங்கிரஸ். கொண்டுவந்தவன் நல்லவன், சம்பந்தமில்லாத பாஜக இதன் காரணமாக தமிழ்நாட்டில் மண்ணைக் கவ்வணும். நல்லா இருக்கு நீங்க எழுதறது. இதையே மெயிண்டெயின் செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் கருத்துக்குப் பின் இருக்கும் காரணம் எல்லோருக்கும் புரியும்.
பாண்டே – பாஜகவின் payrollல இருக்கறாராம். ஆனா குணசேகரன் மற்றும் நியூஸ்18 சேனல்களில் உள்ளவர் திமுக payrollல் இல்லையாம்.
பகுத்தறிவாளர்கள் என்று சொல்லி கொண்டு, இந்த மண்ணில் பெருன்பான்மை சமுதாயத்தின் மத சடங்குகளை கிண்டல் செய்பவர்கள் இருக்கும் வரை இங்கு பிஜேபி வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது .இவர்களை போன்ற பகுத்தறிவாளர்களை கண்டிக்கும் வீரத்தை பெற்றுத்தந்தவர்கள் பிஜேபியினரே. அதற்கு முன், இது போன்ற ஈன செயல்களை வேடிக்கை பார்த்தவர்களே அதிகம்.இன்று இந்த ஈன கூட்டத்தை எல்லோரும் கேள்வி கேட்க முடிகின்றது. இதற்க்கு காரணம் பிஜேபி தான்.இந்த ஈன பிறவிகளே தங்களது அருவருக்கத்தக்க செயல்களின் மூலம் மக்களை மேலும் மேலும் கோப படவைத்து மக்களை சிறுது சிறிதாக பிஜேபியை நோக்கி நகர்த்துவார்கள்
புதியவன் ஐயா
கூடங்குளம் அணு உலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் திட்டம் போன்ற தமிழ் நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தும் திட்டங்களை கொண்டு வந்த அயோக்கியர்கள் காங்கிரஸ் இல்லை என்றோ திமுக இல்லை என்றோ நான் எங்குமே சொல்லவில்லையே. அவர்கள் எந்த அளவிற்கு அயோக்கியர்களோ அதே அளவிற்கு இப்போது ஆதரிப்பவர்களும் அயோக்கியர்களே.
நான் எங்குமே குணசேகரன் நேர்மையாளர் நடுநிலையாளர் என்று குறிப்பிடவில்லையே. நீங்களாகவே கற்பனை பண்ணிக்கொள்கிறீர்களே
According to my count, Madan kumar used 207 times this ,Vandhu* word. But definitely it
is more than that since I might missed some count. As you said rightly, this 21.40 mts is totally
waste of time..
R.Gopalakrishnan,
உங்கள் பொறுமையான முயற்சிக்கு
எனது பாராட்டுகள்.
என் கருத்தை உறுதிசெய்ததற்கு
நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
சாமானியன் ஐயா
இந்த இடுக்கைக்கும் உங்கள் கருத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ?
அய்யா,
எனது கருத்து, கீழே குறிப்பிட்டுள்ள உங்கள் கனவிற்கான விளக்கம் மட்டுமே.
“இதை அப்படியே maintain பண்ணிக்கொண்டே இருங்கள். அப்போது தான் பிஜேபி தமிழ் நாட்டில் மண்ணை கௌவிக்கொண்டே இருக்கும்.”