திருமதி கனிமொழி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டுமென்று கூறுகிறாரா….?

….
….

….

பத்திரிகைச் செய்தி ஒன்றின் சில பகுதிகளை கீழே
பதிப்பித்திருக்கிறேன்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மீண்டும் திறக்க வேண்டும்
என்பது திமுக-வின் புதிய நிலைப்பாடா…?

கட்சியின் முக்கிய தலைவர்கள் யாரும் எதுவும் கருத்து
சொல்லாமல், ஒரு பஞ்சாயத்து தலைவரை விட்டு முதல்வருக்கு
பெட்டிஷன் கொடுக்க வைத்திருப்பதன் பின்னணி என்ன…?

தூத்துக்குடி திமுக எம்.பி. திருமதி கனிமொழியின்
புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறார்களே…
அவரும் ஆலையைத் திறக்க வேண்டும்
என்று கோரிக்கை வைக்கிறாரா…?

திமுக தலைமை இந்த கோரிக்கையை ஆதரிக்கிறதா –
இல்லையா…? அதன் அதிகாரபூர்வமான நிலையைத்
ஏன் இன்னமும் தெரிவிக்கவில்லை…?

திரு.வைகோ-வும், கம்யூனிஸ்ட் மற்றும் இதர கூட்டணி
கட்சிகளும் இந்த கோரிக்கையுடன் உடன்படுகிறார்களா…?

———————————————————————————
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க
திமுக சார்பில் மனு –
Jul 17, 2020

…..

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மக்களுக்கு தீங்கு
விளைவிப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்
தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்
எதிர்பார்த்தபடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு
லட்சக்கணக்கானோர் நேரடியாகவோ அல்லது
மறைமுகமாகவோ வேலையை இழந்தனர். மேலும்
அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக வேறு தொழில்
இன்றி தவித்து வருகின்றனர்.

தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க
வலியுறுத்தி அப்பகுதி மக்கள் குரல் கொடுக்கத் தொடங்கி
உள்ள நிலையில் திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற
தலைவர் அன்புராஜ், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும்
திறக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
மேலும், இது குறித்து தமிழக முதல்வர் அவர்களுக்கு
கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்
திமுக ஊராட்சி மன்ற தலைவர் அன்புராஜ்
தெரிவித்திருப்பதாவது, ”எங்கள் கிராம மக்கள்
தொழிற்சாலைக்கு சென்று வேலை செய்தால் மட்டுமே
வாழ்க்கை நடத்த முடியும் என்ற நிலை உள்ளது.
வேலை இல்லாமல் அன்றாட உணவிற்கே கஷ்டப்பட்டு
வருகிறோம். கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனம்
கொடுத்த கல்வி உதவி தொகையை வைத்து
பெரும்பாலும் தங்கள் குழந்தைகளையும் படிக்க வைத்தோம்
என்றும் ஸ்டெர்லைட் திறந்தால் மட்டுமே வேலை கிடைத்து
வாழ முடியும். எங்கள் குழந்தைகளையும் படிக்க
வைக்க முடியும். எங்கள் கிராமத்தில் வாழும் சிலர்
மட்டுமே மாநிலத்தின் வளர்ச்சியை விரும்பாத சில
அமைப்புகளின் தூண்டுதலின் பேரில் போராட்டத்தில்
கலந்து கொண்டனர். எங்களுக்கு மீண்டும் நிரந்தரமாக
வேலை கிடைக்க ஸ்டெர்லைட் நிறுவனத்தை திறக்க
வேண்டும். மாண்புமிகு முதல்வர் அவர்கள் எங்கள் மீது
கருணை கொண்டு எங்கள் வாழ்விற்கு வழி காட்டுங்கள்.”
என இராஜகோவில் திமுக கட்சியை சேர்ந்த ஊராட்சி
மன்றத் தலைவரான அன்புராஜ் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக திமுக எம்பி கனிமொழி
உட்பட திமுக தலைவர்கள் பலரும் கடுமையாக
போராடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.avatarnews.in/dmk-wants-to-open-sterlite-a-petition-request-given-to-collector-and-cm-what-is-their-plan-and-how-it-happened-suddenly/

.
—————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to திருமதி கனிமொழி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டுமென்று கூறுகிறாரா….?

  1. புதியவன் சொல்கிறார்:

    ஸ்டெர்லைட் ஆலையால் மிகவும் பலனடைந்தது திமுக. தூத்துக்குடி திமுக மாவட்டச் செயலாளர் குடும்பம் ஏகப்பட்ட காண்டிராக்டுகளை எடுத்து பலனடைந்தது. பிறகு எந்த காரணத்தாலோ திமுக குடும்பம், வைகோ குடும்பம் என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி, பிறகு துப்பாக்கிச்சூடு வரை விஷயம் சென்றது. அந்த துப்பாக்கிச்சூடு காரணமாக பலனடைந்தது திமுக.

    இப்போதும் தூத்துக்குடி ஆலையைத் திறக்கச் சொல்லி மனு கொடுத்து, திறந்த பிறகு தேர்தல் சமயத்தில் மூடுவதற்காக போராடுகிறோம் என்ற சாக்கில் கலவரத்தைத் தூண்டிவிட திமுக முயலும். அதற்கான திட்டம்தான் இது என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள்.

    மக்கள் வேலை இல்லாமல் (அந்த கிராமத்து மக்கள்) கஷ்டப்படுகிறார்கள் என்ற பில்டப்பை நம்பக்கூடாது. அதைப்பற்றி அரசு கவலைப்படக்கூடாது. காசு வாங்கி, ஆலையைத் திறக்கணும் என்று சொல்லி, பிறகு தேர்தல் லாபத்துக்காக கலவரம் உண்டாக்க நினைக்கும் திமுகவின் சதியை அதிமுக அரசு முறியடிக்கவேண்டும்.

  2. Gopi சொல்கிறார்:

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.