….
….
….
உலகம் முழுவதுமே கவலையில் ஆழ்ந்திருக்கிறது.
கொரோனா சாவுகள் ஏற்படாத நாடுகளே இல்லையோ
என்று எண்ணும் அளவிற்கு, நெருப்பு போல் வேகமாக
பரவிக்கொண்டிருக்கிறது இந்த தொற்று…
ஆனால், தமிழகத்தில் மட்டும் –
அத்தனை மக்களும் – அச்சத்திலும்,
கவலையிலும், துன்பத்திலும், மனவேதனையிலும்
ஆழ்ந்திருக்கும்போது –
– கரு கருவென மீசைக்கும், தலைக்கும் அடர்த்தியான
கருப்பால் டை அடித்து (அல்லது ‘விக்’ வைத்து ) –
– வழவழவென்று முகச்சவரம் செய்துகொண்டு,
பள பள மேக்கப் தோற்றத்துடன் –
– வெள்ளை வெளேறென்று மடிப்பு கலையாத
சலவை வேட்டி சட்டையுடன் –
– சமயங்களில் –
அறைக்குள்ளேயே கருப்புக் கண்ணாடியுடன் –
– 24 மணி நேரமும் ஏ.சி. அறையிலேயே
வாசம் செய்துகொண்டு –
– அன்றாடம் தன் திருமுகமும், தோற்றமும்
தொலைக்காட்சிகளில் வரவேண்டுமென்று
– தினம் ஒரு அறிக்கை, தினம் ஒரு காணொளி
தானே எடுத்து, மீடியாக்களுக்கு அனுப்பி வைத்து,
– கவலையில் ஆழ்ந்திருக்கும் மக்களை
மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி, கலவரப்படுத்தி –
– வெறுப்பூட்டும் செய்திகளை
நாள்தோறும் உருவாக்கி, அதை தீவிரமாக பரப்பி
– அல்லும் பகலும் 24 மணிநேரமும் –
“அந்த நாற்காலி”
எப்போது காலியாகும்…?
தான் “அந்த நாற்காலி”யில்
அமரப்போகும்
சுபமுகூர்த்த வேளை எது….?
என்கிற சுயநலச்சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்கும்
ஒருவரை –
தமிழகத்தைத் தவிர –
உலகில் வேறு எங்காவது காண முடியுமா…?
………..
…………..
……………
பின் குறிப்பு –
——————–
இது இன்று latest ஆக வெளிவந்திருக்கும்
அறிக்கையிலிருந்து –
“தமிழக மக்கள் எதிர்பார்ப்பது ஆட்சி மாற்றத்தை!
அதனை நிறைவேற்றிட வேண்டும் என்பதில்
தி.மு.கழகம் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறது.
கழகத்திற்கு மக்கள் அளிக்கும் மகத்தான வெற்றியை,
தலைவர் கலைஞருக்குக் காணிக்கையாக்கிடுவோம்!”
—————
இந்த நேரத்தில் இத்தகைய அறிக்கைகளையும்
புகைப்படங்களையும் பார்த்தாலே – குமட்டுகிறது…
இருக்கிற கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் –
தொலைந்து போகிறது.
மக்களின் துன்பமும் வேதனையும் உணராமல் –
இந்த மனிதர் ஏன் இப்படி இருக்கிறார்….?
இவருக்கு வேறு நினைப்பே வராதா…?
.
——————————————————————————————————————————-
சார், உண்மையில் நீங்கள் இன்னும்
ஏன் இவரைப்பற்றி எழுதவில்லை
என்கிற ஆதங்கத்தில் நான் இருந்தேன்.
தான், தன் குடும்பம், தன் வாரிசுகள்,
தன் தந்தை தேடிவைத்திருக்கும் கட்சியின்
சொத்துகள், “அந்த நாற்காலி” –
இவையே இவரது லட்சியம், குறிக்கோள்
எல்லாமே. 24 மணி நேரமும் அதைப்பற்றிய
சிந்தனை தான். அதற்கான உழைப்பு தான்.
“அந்த நாற்காலி” யில் இருப்பவர்களை
காலி பண்ண வைக்கவும்,
தான் அங்கே அமரவும்,
இவர் எதை வேண்டுமானாலும் செய்வார்;
செய்யத் தயாராகவும் இருப்பார்.
பாஜக இவரது பலவீனத்தை
பயன்படுத்திக்கொள்ளுமோ என்று கூடத்
தோன்றுகிறது.
டை அடிப்பதன் மூலமும்,
கருப்புக்கண்ணாடி மூலமும், அரசியலில்
ஒருவர் இமேஜை க்ரியேட் பண்ணிக்கொள்ள
முடியுமா ?
பைத்தியக்காரத்தனம்.
ஹா ஹா ஹா ஹா.
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் சின்னத் தனத்தைப்
பார்த்துப் பார்த்துச் சிரிப்பு வருது.
காலம்போன காலத்துல டோப்பா வச்சிக்கிட்டா அடுத்த எம்.ஜி.ஆர் என்று கனவு காண்பவரை என்ன செய்வது?
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்குத் துடித்துக்கிட்டிருக்காங்க என்று அவரும் தினமும் புலம்பித் தள்ளுகிறார். ஆளும் கட்சி என்னன்னா..இதைக் கண்டுகொள்ளாமல் செய்வதைச் செய்துகொண்டே இருக்கிறார்கள்.
இவரை நினைக்கும்போதெல்லாம் எனக்கு ஒளரங்கசீப்தான் நினைவுக்கு வருவார். சும்மா 50 ஆண்டுகள் தலைமையில் இருந்து அடுத்தவருக்கு வாய்ப்பு கொடுக்காமல், பசங்களைத் தன் பக்கத்தில் அண்டவிடாமல், தான் இறக்கும்போது, தனக்கு அடுத்ததாக அரியணைக்கு வந்தவருக்கு 70 வயது என்ற நிலையை ஏற்படுத்தியதுதான் ஒளரங்கசீப்பின் வரலாறு.
Sir., The only other person who waits more than our hero is Prince of England and Wales.
Raghuraman
Atleast Prince of Wales has got a chance
and likelyhood possibility.
But for Our HERO ?
Kindly do not insult Prince Charles by comparing him
to this person . Here what we witness is a very low
grade human expression of greediness.