….
….
….
1953-ல் அகில இந்திய அளவில் திரையுலகில், ஒரு பெரும்
புரட்சியை உருவாக்கினார் திருமதி பானுமதி ராமகிருஷ்ணா.
பானுமதியின் கைபிடித்த காதல் கணவர் (திரைப்பட
துணை இயக்குநராகப் பணிபுரிந்து வந்த) பி.எஸ்.
ராமகிருஷ்ணா ராவ்..
இவர்கள் இருவருமாக இணைந்து “பரணி ஸ்டுடியோஸ்”
என்கிற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும்,
ஸ்டுடியோவையும் சென்னையில் நிறுவினார்கள்.
பானுமதி திரையுலகில் ஒரு பெரும் புரட்சியை உண்டுபண்ண
அவரது கணவர் ராமகிருஷ்ணாவும் துணை நின்றார்.
– இந்தியாவில் முதன் முதல் இரட்டை வேடம் ஏற்று நடித்த
கதாநாயகி என்கிற பெருமையையும்,
– முதன் முதலில் 3 மொழிகளில் ஒரு படத்தை டைரக்ட்
செய்த பெண்மணி என்கிற பெருமையையும்,
– ஒரே சமயத்தில். ஒரே பெயரில், அகில இந்திய அளவில் –
மூன்று மொழிகளில் (தமிழ், தெலுங்கு, ஹிந்தி ) ஒரு படம்
தயாரித்து-
– அதை ஒரே நாளில் – ஆகஸ்ட் 28,1953 அன்று –
100 ப்ரிண்டுகளுக்கு மேல் எடுக்கப்பட்டு இந்தியா முழுவதும்
திரையிட்ட பெருமையையும் –
– அப்போது 28 வயதே நிரம்பப்பெற்ற பானுமதி பெற்றார்….!!!
“சண்டிராணி” படத்தின் 3 மொழிகளிலும்,
பானுமதி கதாநாயகியாக இரட்டை வேடங்களில் நடிக்க,
என்.டி.ராமாராவ் கதாநாயகனாக நடித்தார்.
என்.டி.ஆர். வடக்கே அறிமுகமாகி இருக்கவில்லை;
ஆனால், பானுமதி ஏற்கெனவே, ஜெமினியின் “மங்களா”
ஹிந்தி திரைபடத்தின் மூலம் வடக்கே ஓரளவு புகழ்
பெற்றிருந்தார்….
இந்தப் படத்திற்கு -3 மொழிகளுக்குமாக- இசையமைத்து
சாதனை புரிந்தவர்கள் இசையமைப்பாளர்கள்
சி.ஆர்.சுப்புராமனும் அவரது சீடரான எம்.எஸ்.விஸ்வநாதனும் …
படத்தின் எடிட்டிங், திரைக்கதை அமைப்பு, மற்றும்
தயாரிப்பாளர் பொறுப்பை ஏற்றவர் – பானுமதியின் கணவர்
பி.எஸ்.ராமகிருஷ்ணா ராவ்..
இந்தப்படத்தில் வரும் ஒரு பாடல் – 3 மொழிகளிலுமே
பெரும்புகழ் பெற்றது…(இதற்கு இசையமைத்தவர் எம்.எஸ்.வி.)..
அந்த 3 பாடல்களையும் கீழே பதிகிறேன் –
இந்த பாடல்களை இயற்றியவர்கள் –
தமிழ் – கே.டி.சந்தானம்
தெலுங்கு – சமுத்ரலா ராகவாச்சார்யா
ஹிந்தி – விஸ்வாமித்ர அடில்
—————————————————————-
முதலில் தமிழில்-
“வான் மீதிலே இன்பத்தேன் மாரி பெய்யுதே” –
கண்டசாலா – பானுமதி
………
———————————————
அடுத்து ஹிந்தியில் –
TALAT MAHMOOD and P BHANUMATI in Hindi chandi rani …
“chanda tale muskuraye jawaniya “-
………….
…………..
தெலுங்கில் –
………..
“Oo Taraka” –
கண்டசாலா- பானுமதி
…
————
இந்தப் பாடலுக்கு நான் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு
வேறு ஒரு காரணமும் இருக்கிறது.
இசையமைப்பாளர் இளையராஜா, எம்.எஸ்.வி. அவர்களுடன்
சேர்ந்து ஒரு படத்திற்காவது இசையமைக்க வேண்டும் என்று
பேரார்வம் கொண்டிருந்தார். எம்.எஸ்.வியும் அதில் ஈடுபாடு
காட்டினார்…. விளைவாக “மெல்லத் திறந்தது கதவு” என்கிற
படத்திற்கு இவர்கள் இருவருமே சேர்ந்து இசையமைத்தனர்.
அந்த மெ.தி.கனவு படத்தில் வரும் “வா வெண்ணிலா” என்கிற
ஒரு பாடலும் வேறு ஒரு காரணத்திற்காக புகழ்பெற்றது.
அதென்ன காரணம்…?
எம்.எஸ்.வி. அவர்கள் மூலமே அதைக் கேட்போமே –
…..
…..
இளையராஜா ஆசைப்பட்டதன் பேரில்,
சண்டிராணி’ க்காக தான் போட்ட
“வான்மீதிலே இன்பத்தேன்மாரி”
பாடலின் தொடர்ச்சியாக எம்.எஸ்.வி. போட்டுக்கொடுத்த
அடுத்த ட்யூன் தான் – “வா வெண்ணிலா” …!!!
இவ்வளவெல்லாம் பேசிவிட்டு, அந்த “வா வெண்ணிலா”
பாடலை கேட்காமல் போகலாமா…?
………….
“வா வெண்ணிலா” – மெல்லத் திறந்தது கனவு….
……….
……….
.
——————————————————————————————————-
சார், இந்த தலைப்பில் நீங்கள் எழுதும்
கட்டுரைகள் பழைய பாடல்களை
சுவாரஸ்யமான விதத்தில் அறிமுகப்படுத்துகின்றன.
இன்றைய தினம் பலருக்கு இவையெல்லாம்
அறிமுகம் இல்லாததால் தான் வேறு வழி
இல்லாமல் இன்றைய வேகம், சத்தம் நிறைந்த
அர்த்தமில்லாத பாடல்கள பொறுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
இது ஒரு சைக்கிள் ; வட்டம்; இந்த வேகமும்
சத்தமும் அலுத்துப்போய் மக்கள் மீண்டும்
மெலடியின் பக்கம் வருவார்கள் என்பது என்
நம்பிக்கை.
நீங்கள் காட்டும் ஒவ்வொரு பாடலும்
அதன் பின்னணி தெரிந்தபிறகு இன்னமும்
அருமையாக இருக்கிறது. இந்த தலைப்பிற்கு
இன்னமும் இடம் ஒதுக்கி வாரத்திற்கு
இரண்டு மூன்று தடவையாவது எழுதுங்களேன்.
நிறைய பாடல்களை அறிமுகப்படுத்துங்களேன்.
நன்றி