….
….
….
ஜூலை 14 – எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின்
நினைவு நாள் என்று நினைவூட்டியது இன்று நான் பார்த்த
திரு.பசுபதி அவர்களின் வலைத்தளம்.
மறந்தால் தானே நினைக்க…? என்று கேட்கிறது
என் மனம். உண்மை தானே…? (என் கட்டுரைத் தொடர்
ஒன்றின் தலைப்பை பார்த்திருப்பீர்கள் -“நினைக்கத் தெரிந்த
மனமே… உனக்கு மறக்கத் தெரியாதா…? )
என்னைப் பொருத்தவரை, 13-14 வயதிலிருந்தே,
எம்.எஸ்.வி. ரத்தத்தோடும், உணர்வோடும்
ஊறிப்போனவர்…..
இந்த உணர்வு எனக்கு மட்டுமா சொந்தம்…?
நடுத்தர வயதைக்கடந்த அத்தனை பேருக்கும் தானே…?
என் இளமைக்காலம் முழுவதும் அவரது
பாடல்களுடனேயே வளர்ந்தது….எப்போது டேப்’களில்
பதிவு செய்யும் வழக்கம் துவங்கியதோ,
அப்போது துவங்கியது என் வசந்த காலம்.
70-களில் என் முதல் டேப் ரிக்கார்டரை 950 ரூபாய்
கொடுத்து வாங்கினேன். திருச்சியில், சிங்காரத்தோப்பு
கடையில், லிஸ்டைக் கொடுத்தால் போதும்….
அத்தனை பாடல்களையும் தேடியெடுத்து,
பதிவு செய்து கொடுத்து விடுவார் என் கடைக்கார நண்பர்.
அதன் பின்னர் வடக்கே நான் பணி மாற்றத்தில் சென்று
வசித்த காலங்களில் எல்லாம்
எம்.எஸ்.வி. தான் எனக்கு நெருங்கிய நண்பர்…!!!
லீவில் ஊருக்கு வரும்போதெல்லாம், புதிதாக நிறைய
பதிவு செய்துக்கொண்டு போவேன்.
பிறகு – “எனக்கென்ன குறைச்சல்… நானொரு ராஜா…!!!”
எம்.எஸ்.வி.யைப்பற்றி நான் இந்த தளத்தில் நிறைய
எழுதி இருக்கிறேன். இன்னமும் நிறைய எழுதுவேன்.
இன்றைய தினம், கல்கி வார இதழில், வெளிவந்த
ஒரு கட்டுரையை (கல்கி இதழுக்கும், திரு.பசுபதி
அவர்களுக்கும் – நன்றியுடன்) கீழே பதிப்பிக்கிறேன்…
கூடவே ஒரு அழகிய பாடலுடன் …..
…………
…
………
………
………
.
—————————————————————————————————————————————