கயவர் கூட்டமும் -கந்த சஷ்டி கவசமும் …

…….
…….

…….

கந்த சஷ்டி கவசத்தின் பின்னணியை,
முக்கியத்துவத்தை,
சரியான நேரத்தில்,
மிக அழகாக, மிகத்தெளிவாக –
விளக்குகிறார் சுகி சிவம் அவர்கள்…

கயவர் கூட்டம் உளறுவதைக் கண்டு யாரும்
குழம்பத் தேவையில்லை. இப்படி எவ்வளவோ பேர்கள்
இதற்கு முன் வந்திருக்கிறார்கள்.
காலம் கொடுத்த அடியில் கண்மண் தெரியாமல்
ஓடி மறைந்திருக்கிறார்கள்.

அநாமதேயமாக வலைத்தளத்தில், யூ-ட்யூபில்
பேசியவர்கள் எல்லாரும் இப்போது முன்-ஜாமீன் கேட்டு
நீதிமன்றத்திற்கு ஓட வேண்டிய அவசியத்தில்
இருக்கிறார்கள்.

நம்மைப் பொருத்த வரை,
இந்த விமரிசனம் தளத்தைப் பொருத்த வரையில்,
நாம் அனைத்து மதத்தினரையும், அவர்களது
பண்பாட்டினையும், வழிபாட்டு முறைகளையும்
மதிக்கிறோம்.

இறைவனின் முன் அனைவரும் சமமே.

மதங்களோ, வழிபாட்டு முறைகளோ,
வெவ்வேறாக இருந்தாலும் –
இறுதியில் –
ஆறுகள் அனைத்தும் கடலையே சேருவது போல
எல்லாம் அந்த ஒரு இறைவனையே அடைகின்றன –
என்கிற கோட்பாட்டில் அசைக்க முடியாத
நம்பிக்கை உடையவர்கள் நாம்.

சுகி.சிவம் அவர்களின் விளக்க உரை கீழே –

…….

…….

சூலமங்கலம் சகோதரிகளின் கந்தசஷ்டி கவசம் பாடல் –
……….

…….

.
———————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to கயவர் கூட்டமும் -கந்த சஷ்டி கவசமும் …

 1. புவியரசு சொல்கிறார்:

  இந்த நேரத்திற்கு இந்த இடுகை
  மிக மிக அவசியமானது சார்.

 2. Gopi சொல்கிறார்:

  இந்த கயவர் கூட்டத்தின் பலம்
  தி.க., திமுக தானே ?

 3. M.Subramanian சொல்கிறார்:

  சமூக ஒற்றுமைக்கெதிரான ஒரு
  கலவர கும்பல் இது.
  திமிர் எடுத்துப்போய் வேண்டுமென்றே
  கடவுள், மத நம்பிக்கை உள்ளவர்களை
  சீண்டுகின்றனர்.
  தமிழக அரசு உடனடியாக
  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  வாக்கு இழப்பை நினைத்து நேரடியாக வர
  தைரியமில்லாத திமுக இவர்களின்
  பின்னால் ஒளிந்துகொண்டு ஆதரவு தருகிறது.

 4. Raghavendra சொல்கிறார்:

  அடுத்தவரின் மத நம்பிக்கையை
  இழிவுபடுத்த எந்த சட்டமும் யாருக்கும்
  உரிமை வழங்கவில்லை.
  இன்று இந்து மதத்தை மட்டும்
  தொட்டவர்கள், நாளை மற்ற
  மதங்களையும் தொடவே செய்வார்கள்.
  இவர்களுக்கு இது வேடிக்கை.திமிர்.
  ஆபாசம் பிடித்த கயவர்கள்.
  என்ன செய்ய முடியும் என்று
  ஒட்டுமொத்தமாக நம்பிக்கையாளர்களுக்கு
  அவர்கள் விடும் சவால்.
  இந்த கயவர் கூட்டத்தின் மீது
  கடுமையான நடவடிக்கைகள்
  எடுக்கப்பட வேண்டும்.

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  .
  தி.க.வோ, திமுகவோ, மற்றவர்களோ
  யாராக இருந்தாலும் சரி –
  மற்றவர்களின் மத நம்பிக்கையை
  அவமதிக்கும் இது நிச்சயமாக
  ஒரு கயவர் கூட்டம் தான் –
  இவர்கள் சமூக விரோதிகள் தான்
  நான் எத்தனை முறை வேண்டுமானாலும்
  சொல்வேன்.

  இவர்களை திமுக ஆதரிக்கவில்லை
  யென்றால் வெளிப்படையாக
  முன் வந்து எதிர்க்காதது ஏன்…?

  தினமும் ஒரு அறிக்கை விடுக்கும்
  திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின்
  இதுவரை இந்த போக்கிரித்தனத்தை
  கண்டித்து ஒரு அறிக்கை கூட
  வெளியிடாதது ஏன்…?

  இவர்கள் எல்லா மதத்திற்கும்
  எதிரானவர்கள் என்பதில் எனக்கேதும்
  ஐயமில்லை.
  பொறுக்கிகள்…. போக்கிரிகள்…
  அரசாங்கம் இவர்கள் மீது
  உடனடியாக கடுமையான நடவடிக்கை
  எடுக்க வேண்டும். இவர்கள் சம்பந்தப்பட்ட
  அந்த இணையதளத்தை முடக்க
  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இந்த தளத்தின் சார்பாக தமிழக அரசுக்கு
  விடப்படும் வேண்டுகோள் இது.

  • tamilmani சொல்கிறார்:

   திமுக தலைவர்கள் ரமலான் அன்று தொப்பி போட்டு கொண்டு
   முஸ்லீம் தலைவர்களுடன் நோன்பு கஞ்சி குடிப்பார்கள் .
   கிறிஸ்துமஸ் அன்று பேராயர்களுடன் கேக் பரிமாறி வாழ்த்துகளை பரிமாறி கொள்வார்கள்.
   ஆனால் இந்து பண்டிகைகள் அவர்களுக்கு
   ஒரு பொருட்டில்லை . அவர்கள் தொலைக்காட்சிகளில் விநாயகர் சதுர்த்தி திரைப்படம் என்று சொல்ல மாட்டார்கள். விடுமுறை நாள் திரைப்படம் என்றுதான் சொல்வார்கள். அவர்களின் பகுத்தறிவு இந்துக்களுக்கு எதிராகத்தான் வெளிப்படும். தலைவரின் மனைவி கோயில் கோயிலாக செல்வார்.ஆனால் தலைவர் நெற்றியில் இட்ட குங்குமத்தை அழிப்பார் .
   சிறுபான்மையின வோட்டுகளுக்காக இந்த நாடகம்.

 6. natchander சொல்கிறார்:

  Muruga Saranam. Kkandha Saranam
  Shanmuga Saranam

 7. Gopi சொல்கிறார்:

  கயவர் கூட்டம் மாட்டியது;

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.