பிறந்தநாள் கொண்டாடும் வைரமுத்துவுக்கு – காசு கொடுக்காமலே கிடைத்திருப்பவை…..!!!


திருவாளர் வைரமுத்துவை, பிறந்த நாளையொட்டி,
காசு வாங்கியோ, வாங்காமலோ –

வானளாவப் புகழ்ந்து பாராட்டி எழுதியது
தமிழ் இந்து வலைத்தளம்.

அந்தப் பாராட்டில் ஒரு துளி –

கவிஞராகவே முத்திரை குத்திக் கொள்ள
வேண்டுமென்பதற்காக
பல தியாகங்களைச் செய்தாராம் வைரமுத்து அவர்கள்….!!!
—————————————————-

பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் படித்தால், ஓர் பேராசிரியர்
வேலைக்கு உத்தரவாதம் உண்டு. அதையும் தவிர்த்தார்.

தலைமைச் செயலகத்தில் பணியில் சேர்ந்தால் ஓய்வுபெறும்
வயதில் உயரதிகாரியாக இருந்திருக்கலாம்.
பாட்டெழுதுவதற்காக அதையும் விட்டு விலகினார்.

தீவிர இலக்கியவாதிகளும்கூட இன்று பணத்துக்காக மட்டுமே
வசனம் எழுதுகிறேன் என்கிறார்கள்.

( ‘நட்பு’ உள்ளிட்ட ஒருசில படங்களுக்கு வைரமுத்துவும்
கதை வசனம் எழுதியிருக்கிறார்…. )

என்றாலும், பல லட்சம் கிடைக்கும் வசனகர்த்தா
வாய்ப்பைத் தவிர்த்துப் – (…??? )
– பாடலாசிரியராகவே தனது பயணத்தை அமைத்துக்கொண்டவர்.

தனக்குள் இருக்கும் கவிஞனைக் காப்பாற்றிக்கொள்ள மட்டுமல்ல,
அந்த அடையாளத்தை நிலைநாட்டவும் அவர் விரும்பியதன்
விளைவு அது.

————————————————————-

அந்த தமிழ் இந்து வலைத்தளத்தின் கட்டுரைக்கு
பதிலெழுச்சியாக அவருக்கு பெண்களின் தரப்பிலிருந்து
சில சாபங்களும் கிடைத்துள்ளன…

எழுத்தாளர் பெருந்தேவி –
————————————————————

சில வாரங்களுக்குமுன் பத்திரிகையாளர் ஜி.கிருபா, பல
வருடங்களாக நடைபெறும் வைரமுத்துவின் பாலியல்
அத்துமீறல் லீலைகள் பற்றிய தொகுப்பை ஒரு நேர்மையான,
தேர்ந்த கட்டுரையாளராக எழுதியிருந்தார்.

https://silverscreenindia.com/…/vairamuthus-accusers-on-th…/

அதைத் தமிழில் மொழிபெயர்த்துப் பிரசுரிக்கும் துப்பு இங்கே
இருக்கும் ஒரு பத்திரிகைக்கு, நாளிதழுக்கு இல்லை.
ஆனால் தி இந்து தமிழ்த் திசை ‘கவிஞருக்கு’ பிறந்தநாள்
ஸ்பெஷல் போட்டுக் கொண்டாடுகிறது. வெட்கம்!

இத்தகைய பாராட்டத்தக்க, வியக்கத்தக்க, பெருமைப்படத்தக்க
ஊடக ‘நிகழ்வுகள்’ தமிழ்ச் சூழலில் மாத்திரமே நடக்கும்.
தமிழ் இலக்கியவாதிகளால் மாத்திரமே சற்றும்
கூச்சமில்லாமல் பாலியல் அத்துமீறல் புகாருக்கு
உள்ளானவர்களை வெளிப்படையாக அங்கீகரித்து நீட்டி
முழக்கமுடியும்.

பெண்ணியத்தை விடுங்கள், பாலியல் அத்துமீறல் என்பது
அடிப்படை மனித உரிமையைப் பாதிக்கும் வகையிலும்
மோசமான விஷயம்.

அதைப் பற்றிய ஒரு சின்ன மன உறுத்தல்கூட இங்கே
எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப்படும் ஜீவிகளுக்கு
இருப்பதில்லை. இங்கே பால் பாகுபாட்டுக்கோ பாலியல்
வன்முறைக்கோ எதிராக எந்த நீதியும் நியாயமும்
சாத்தியமேயில்லை.

——————————————————-

இது திருமதி சின்மயி தனது முகநூல் மூலம்
-கொடுக்கும் சாபம் ….

——————————

Chinmayi Sripada
13 ஜூலை, பிற்பகல் 9:02 ·

நான் file பண்ணுன sexual harassment case against
Mr Vairamuthu – உங்களால நம்ப முடியலையா?
பரவாயில்ல. எப்படி react பண்ணனும்னு புரியலையா,
ஒரு accusation (13 actually) மட்டுமே வெச்சு ஒருத்தர
குற்றவாளின்னு எப்படி சொல்வதுன்னு குழப்பமா இருக்கா?
நியாயம் தான்.

பாலியல் குற்றங்களை முன்வைக்கும்போது எவனும்
பாராட்டு விழா நடத்த போறது இல்ல. இந்த குற்றச்சட்ட
முனைவெச்சதுனால நான் gain பண்ணது எதுவும் இல்ல.

ஏனோ பாலியல் குற்றத்துல மட்டும் குற்றவாளிக்குதான்
இந்த விஷயத்துல மட்டும் benefit of doubt. குற்றம்
சாட்டுனவங்கள இழிவுபடுத்தும் சமுதாயம்.

கவிஞர் வைரமுத்து அவர்களின் சிபாரிசால் எனக்கு
பாடல் வாய்ப்புகளோ வேலை வாய்ப்புகளோ வந்ததில்லை.

இத்தனைக்கும் அவரோட position use பண்ணி
எப்பப்பாத்தாலும் அவரோட சொந்த கவிதைகள், அல்லது
புத்தக வெளியீட்டு விழாவுல பாட சம்பளம் குடுக்காம
பாட வெச்சது தான் கண்ட பலன்.

2 வருடங்கள்ல எந்த ஒரு journalist-ஆவது
ரங்கராஜ் பாண்டே என்ன தொகைச்ச்சு எடுத்து, அழவிட்டு
அனுப்புன மாதிரி எவராச்சும் கவிஞரை கேள்வி கேட்டுரவீங்களா?

திரு பாண்டே அவர்களுக்கு பயங்கர பெருமை வேற
என்ன அழவிட்டுடடேன்னு. இதுல
என்ன interview பண்ணும்போது

நான் பதில் சொல்லும்போது
correct a போன்ல எதையோ பாத்துட்டே இருந்தாரு.
நான் சொன்னதை கவனிக்ககூட இல்ல.

அப்ப அனுபவம் பத்தலை. அந்த மாதிரி behave
பண்ணுனா அந்த interviewல இருக்ககுருடாதுன்னு
தெரியல. சொல்லிகுடுக்க யாருமில்ல.

பாண்டே அவர்களுக்கு அது ஒரு பெரிய்ய advantage.
ஆனால் பாண்டே போன்ற journalists எப்படி பிஹேவ்
பண்ணுவாங்கன்ற experience கடைச்சது. அந்த experience
தேவையான்றது மற்றொரு கேள்வி. ஆனா இந்தக்
கேள்விக்கான பதில் எங்கிட்ட இல்ல.

“தாயே உன் கண்ணுல இருக்கற உண்மையை இந்த
தமிழகம் பார்க்கும் தாயே”ன்னாரு. இந்த மண்ணாங்கட்டி
நாட்ல உண்மைன்னு தட்டுல பதிச்சு காட்டுனா கூட
கண்ணமூட்டுகிட்டு போற மூட வர்க்கம்.

இத்தனை நாள்ல, இந்த பெரிய்ய முற்பொற்க்கு
தமிழ்நாட்டுல ஒருத்தருக்கும், எந்த press meet-லயும்
அவரை கேள்வி கேட்க வக்கில்லை. MeToo பத்தி
கேள்விகள் வேண்டாம்னு அவர் சொல்வாராம்,
இவங்களும் சரிங்க எசமான்னு சொன்னபடி கேட்டுப்பாங்களாம்.

ஆனா நான் என்ன பேசுனாலும் பாடுனாலும்,
“கேஸ் என்ன ஆச்சு?”ன்னு என்ன மட்டும் கேட்டு
உயிரை எடுக்க வேண்டியது. Airport வாசல்ல வந்து
நிக்க வேண்டியது. அனால் அதுவும் சகிச்சுக்கிட்டேன்.
பொறுத்துகிட்டேன்

BUT

“அவரோட படுத்துட்டு இப்போ பேசுறே”,
“நீ பொய் சொல்ற”,
“நீ பாஜக கைக்கூலி ஜாதி வெறிபிடிச்ச்சு
பொய் சொல்ற” ன்னு நாக்கூசாம சொல்லுற அத்தனை
நபர்களுக்கும், உண்மை தெரிந்தும் கவிஞருக்கு
துணைபோகும் அத்துனைபேருக்கும் நான் விரும்புவது,
வேண்டுவது
ஒன்றே – என் அனுபவங்கள், மற்றும்
முன்வந்து சொன்ன 12 பெண்களின் அனுபவங்கள்
மொத்தமும் உங்களுக்கு சேரட்டும் என்று வேண்டுகிறேன்.

இத்தனை நாள் உங்களுக்கு புரிதல் வந்துருக்கும்.
awareness create பண்ணிகிட்டே இருந்தா ஒரு நாள்
மாற்றம் வரும்னு
நினைக்கிறது ஒரு பக்கம்.
ஆனால் எருது நோவு காக்கைக்கு அறியாது.
காய்ச்சலும் நோயும் தனக்கு வந்தாதான் தெரியும்’னு
சொல்லிருக்காங்க.

அனுபவிங்க. அனுபவிச்ச தான் புரியும்.
(நீங்க செருப்பை எடுத்து அடிக்கக்கூயூடியவரா இருந்தா,
உங்களுக்கு நானே வீரர்/வீராங்கனை விருது தர்றேன்.
ஆனா எல்லோராலையும் இந்த சூழல்ல ஒரே மாதிரி
behave / react பண்ண முடியாது. இது புரியலைன்னா
புரிஞ்சுக்கோங்க.)

எங்கள் அனுபவங்கள் என்றால் – பாலியல் துன்புறுத்தல்
அனுபவிக்கணும்னு சொல்லல. என்னதான் எனக்கு
கோவம் இருந்தாலும், அது மட்டும் யாரும்
அனுபவிக்ககூடாது.

நான் சொல்றது நீங்களும் ஒரு பெரிய்ய அரசியல்வாதி
கிட்ட மாட்டி, கஷ்டப்பட்டு, அவதிபட்டு, நியாயம்
கடைக்காம நீங்க உண்மையை சொன்னாலும்
“பொய் சொல்ற”ன்னு சொல்லும் இதே சமுதாயத்தை
நீங்களும் அனுபவிக்கணும்னு வேண்டுகிறேன்.

பாலியல் துன்புறுத்தல்களை பற்றி வெளிவந்து சொல்லும்
எந்த ஆண் பெண், மாற்றுப்பாலின மக்களுக்கு
மனதுநோகும்படி torture பண்ற அத்துனைபேரையும்

ஒரு கண்ணகி வந்து எரிச்சு சாம்பலாகட்டும் )

—————————————————————–

இறுதியாக, “காசு கொடுத்து புகழ் வாங்கும் வைரமுத்து ….”
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியதிலிருந்து –

————————————–

“ஹிந்து தமிழ்- நாயும் நாணும் பிழைப்பு -”

-வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு
அப்பால் சென்று நான் சுட்டிக்காட்ட விரும்புவது
ஒன்று உண்டு.

தமிழ் இந்து தமிழிலக்கியத்தின் தலைமகன் என இந்த
மிகைச்சொற்கூட்டியை முன்வைக்கிறது என்றால்
நவீனத் தமிழிலக்கியம் பற்றிய அதன் புரிதல் என்ன?

அது முன்வைக்கும் மதிப்பீடு என்ன?
வேறெந்த படைப்பாளியைப் பற்றி இவ்வண்ணம்
ஒரு கட்டுரை இவ்விதழால் வெளியிடப்பட்டுள்ளது?

இக்கட்டுரை ஏன் எழுதப்பட்டது என புரிய பெரிய
அறிவுப்புலமேதும் தேவையில்லை.
ஒன்று, இது இன்று வைரமுத்து சற்றும் மனம்தளராமல்

செய்துகொண்டிருக்கும் ஞானபீட முயற்சிக்கான
படிகளில் ஒன்று. இதன்பொருட்டு அவர் முதலீடு
செய்ய தயாராக இருக்கிறார். தி ஹிந்து போன்ற
வெளியீடுகள் இன்று பிஸ்கட்டுக்கு வாலாட்டும் நாய்கள்.

———————————————————-

ஆனால் இதெல்லாம்
“பேரரசருக்கு” கொஞ்சமாவது உறுத்தும் என்று
வாசக நண்பர்கள் யாராவது நினைத்தால்
ஏமாந்து போவீர்கள் …

-அவருக்கு யாரெல்லாம் துணை நிற்கிறார்கள்
என்று அவரே சொல்கிறார் பாருங்கள்…

——–

——–

.
———————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to பிறந்தநாள் கொண்டாடும் வைரமுத்துவுக்கு – காசு கொடுக்காமலே கிடைத்திருப்பவை…..!!!

 1. Surya சொல்கிறார்:

  Varamuthu tweet’s ending should have been.. “… இத்தனைபேர் துணையிருக்க எனக்கேது வெட்கம் மானம் சூடு சொரணை”

 2. புதியவன் சொல்கிறார்:

  //கவிஞராகவே முத்திரை குத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காக
  பல தியாகங்களைச் செய்தாராம் வைரமுத்து அவர்கள்// – வயிரமுத்து என்ன தியாகம் செய்தார்னு எனக்குத் தெரியலை. ஆனால் ஹிந்து பத்திரிகை, வெட்கம், சூடு, சுரணை, மானம் என்ற எல்லாவற்றையும் தியாகம் செய்திருக்கிறது என்பது நிச்சயம். காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் பத்திரிகைகளில் வரவழைக்கலாம் என்ற நிலைதான் தமிழகத்தில் எப்போதும் உண்டே.

 3. புதியவன் சொல்கிறார்:

  கட்டுரையாசிரியர் கொடுத்த/வாங்கிய காசுக்கு இன்னும் நன்றாகவே கற்பனையை ஓட்டியிருக்கலாம்.

  ஆங்கிலத்திலும் அபார புலமை மிக்க வய்யிரமுத்து, தமிழ் மொழி வாழணுமே என்ற எண்ணத்தால், ஆங்கிலத்தில் எழுதாமல், அடுத்த ஷேக்ஸ்பியர் ஆகும் வாய்ப்பை தியாகம் செய்தவர்.
  பிறந்தபோதே, அண்ணா கூப்பிட்டு தன் கட்சியில் சேரச்சொல்லியும், தமிழ் அழிந்துவிடப்போகிறதே என்று நினைத்து தமிழ்ப்பட பாடலாசிரியராக இருந்தார். அப்படி இன்றி கட்சியில் சேர்ந்திருந்தால் 30 வருடங்களில் பிரதமராகும் வாய்ப்பையும் பெற்றிருப்பார்.
  இந்து பத்திரிகையின் ஆங்கிலப் பதிப்பில் செய்தியாளராக ஆகும் வாய்ப்பை, வய்யிரமுத்து மறுதலித்தார். அப்போதே அந்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டிருந்தால் இப்போது ஹிந்து பத்திரிகையின் உரிமையாளராகவும் ஆகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கும்.

  இது எப்படி இருக்கு?

 4. Raghavendra சொல்கிறார்:

  //இந்து பத்திரிகையின் ஆங்கிலப் பதிப்பில்
  செய்தியாளராக ஆகும் வாய்ப்பை, வய்யிரமுத்து
  மறுதலித்தார். அப்போதே அந்த வாய்ப்பைப்
  பற்றிக்கொண்டிருந்தால் இப்போது ஹிந்து
  பத்திரிகையின் உரிமையாளராகவும் ஆகும்
  வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கும்.

  இது எப்படி இருக்கு?//

  என்ன சார் அடிமடியிலேயே
  கையை வைக்கறீங்களே.
  அப்புறம் மவுண்ட் ரோடு
  மஹாவிஷ்ணு எங்கே போவார் ?

  சினிமாவுக்கு பாட்டெழுதவா ? 🙂

 5. Kayal சொல்கிறார்:

  எனகென்னவோ இவரையும் இவர் மகனையும் மதிக்கவே பிடிக்காது.பிறரை அழித்து தான் வாழ கூடாது

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.