….
….
…
….
சென்ற வருடம் –
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து,
பங்களூருக்குப் பக்கத்தில் எஜிபுரா
என்கிற இடத்தில் நிறுவுவதற்காக
ஒரு பிரம்மாண்டமான பெருமாள் சிலை,
முழுவதுமாக செதுக்கப்படாத நிலையில்,
– சாலைவழியே எடுத்துச் செல்லப்பட்டது
நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். பல
மாதங்களுக்கு அது நாளும் பேசப்பட்டு வந்தது.
அதன் பிரம்மாண்டம் காரணமாக,
பல இடங்களில் அதன் பயணம் தடைப்பட்டு,
ஒவ்வொரு தடவையும் அது
பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும்
செய்தியாக்கப்பட்டது.
நான் கூட நினைத்தேன்.
பெருமாள் இவர்களைப் படுத்துகிறாரா அல்லது
இவர்கள் தான் பெருமாளை படுத்துகின்றனரா என்று….!
இறுதியாக அது பங்களூரு சென்றடைந்தது வரை
செய்தியைப் படித்திருந்தேன்….
நேற்று (12/07/20 ) நியூஸ்-18 தமிழ் செய்தி தளத்தில்
பரபரப்பாக, பல புகைப்படங்களுடன் ஒரு செய்தி வந்தது.
அந்த “பெருமாள்’ சிலை நிறுவப்பட்டு விட்டதாகக்கூறி,
அது தொடர்பான கீழ்க்கண்ட புகைப்படங்களையும்
வெளியிட்டது நியூஸ்-18 தமிழ் செய்தித்தளம்.
…………….
…
….
………………
நான் கூட நினைத்தேன்… இவ்வளவு பரபரப்பையும்,
மக்களிடையே ஆர்வத்தையும் கிளப்பிச் சென்ற அந்த
சிலையை நிறுவுவது குறித்து முன்கூட்டியே
எந்தவித செய்தியோ, விளம்பரங்களோ வெளியிடாமல்
சம்பந்தப்பட்ட அமைப்புதிடீரென்று, அதுவும்
கொரோனா தடையுத்தரவுகள் இருக்கும் காலத்தில்
நிறுவி இருக்கிறதே என்று…
வெகு அமர்க்களமாக, பெரும் அளவில் மக்கள் பங்கேற்புடன்
நடைபெற்றிருக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி ஏன் இப்படி
நடந்தது என்று நினைத்தேன்…
இரவில் பங்களூரில் இருக்கும் நண்பர் ஒருவருடன்
தொலைபேசியில் உரையாடும்போது, அவரிடம்
இதைப்பற்றி பேசினேன்.
அதற்கு அந்த நண்பர், இல்லை – அப்படி இருக்க வாய்ப்பே
இல்லை; அந்த சிலையின் முழுவடிவம் இன்னும்
தயாராகவில்லை; இந்த செய்தி உண்மையாக இருக்க
வாய்ப்பில்லை என்றார். நானும் சரி நாளைக்காலையில்
cross-check செய்து பார்ப்போம் என்று நினைத்தேன்.
இன்று காலை, வேறு எந்த மீடியாவிலும் இந்த செய்தி
வரவில்லை. நியூஸ்-18 தமிழ் செய்தித்தளத்தை
பார்த்தபோது; அந்த செய்தியையே தளத்திலிருந்து
அவர்கள் நீக்கி விட்டார்கள் (deleted)
பதிலுக்கு இந்த செய்தி அங்கே இருந்தது –
…..
———–
…..
புகைப்படங்கள் “போலி” என்று கூறி வெகு சகஜமாக விஷயத்தை
முடித்து விட்டது நியூஸ்-18. எவ்வளவு பேரிடம்
இந்த செய்தி பரபரப்பை கிளப்பி இருக்கும்….?
என்னவோ, யாரோ-எங்கோ
செய்தியும், புகைப்படமும் போட்டது போல்
இங்கே தகவல் மாதிரி அதை தெரிவிக்கிறார்கள்.
இவர்களே தானே, இவர்களது செய்தித்தளத்தில் தானே
அந்த போலிச் செய்தியை பிரசுரம் செய்தார்கள்…?
ஆமாம் … படங்கள் போலியா.. அல்லது
அவற்றைப் பற்றிய செய்தி போலியா..?
படங்கள் எப்படி போலியாகும்…?
அந்தப்படங்கள் எப்போதோ எங்கேயோ நடந்த நிகழ்ச்சிக்கானவை.
அதைப்பற்றி இவர்கள் வெளியிட்ட செய்தி தானே “போலி” …?
இவ்வளவு பெரிய செய்தி நிறுவனம், உறுதி செய்யப்படாத
ஒரு செய்தியை எப்படி வெளியிட்டது…?
ஒரு செய்தி நிறுவனத்தின் அடிப்படையே அதன்
“நம்பகத்தன்மை” தானே…? இப்படி பொறுப்பற்ற விதத்தில்
அவர்கள் செயல்பட்டால், மக்களுக்கு அந்த நிறுவனம்
வெளியிடும் செய்திகளின் மீதோ, நடத்தும் விவாதங்களின்
மீதோ எப்படி நம்பிக்கை வரும்….?
தவறான செய்தி, போலி செய்தி எப்படி, எங்கிருந்து
அதற்கு கிடைத்தது… விசாரித்தார்களா…?
வெளியே அந்த விவரங்களை தெரிவிப்பார்களா…?
அதை verify செய்யாமல் எப்படி வெளியிட்டார்கள்…?
குறைந்த பட்சம் தவறாக செய்தி வெளியிட்டதற்கு
வாசகர்களிடம் மன்னிப்பாவது கோரினார்களா…?
தன்னுடைய நிருபர்கள் அனுப்பி இருந்தால், அப்படியே
வெளியிடலாம். ஆனால், பிற இடங்களிலிருந்து வந்தால்,
cross-check செய்து வெளியிட வேண்டிய கடமை
அதற்கில்லையா..? அதுவும் கொரோனா தடையுத்திரவுகள்
அமலில் இருக்கும்போது இத்தகைய பெரிய நிகழ்ச்சிகள்
நடக்குமா என்று செய்தி நிறுவனத்தில் இருக்கும்
பொறுப்பானவர்கள் யோசிக்க வேண்டாமா…?
நாளையே – நியூஸ்-18-தமிழ் தொலைக்காட்சி சேனலை
திமுக- வுக்காக, மு.க.ஸ்டாலின் விலைக்கு வாங்கி விட்டார்
என்று யாராவது இவர்களுக்கு செய்தி அனுப்பினால் அதை
அப்படியே வெளியிட்டு விடுவார்களா…?
மறுநாள் – நேற்றுவெளியானது “போலிச் செய்தி” என்று
இன்னொரு செய்தி வெளியிட்டு விஷயத்தை
முடித்து விடுவார்களா…?
.
——————————————————————————————————————————————
என்னவோ நியூஸ்18 எப்போதும் உண்மைச் செய்திகளையே வெளியிடுவதைப் போலவும், தவறுதலா இந்தச் செய்தியை வாட்சப்பிலிருந்து தயார் செய்து வெளியிட்டதைப்போலவும் நினைக்கறீங்களே.
தொலைக்காட்சி சேனல்கள் 20%க்கும்மேல் உண்மைச் செய்திகளை வெளியிடுவதில்லை. பார்க்கின்ற நாம்தான், இதில் எத்தனை தூரம் உண்மை இருக்கும், இந்தச் செய்தியை இவன் வெளியிடுவதனால் இவனுக்கு என்ன லாபம் என்றெல்லாம் யோசித்து பிறகு செய்திகளின் உண்மைத்தன்மையைத் தீர்மானிக்கணும்.
வாட்சப்பில் ஏகப்பட்ட போலிச் செய்திகள் வருகின்றன. ஏதாவது ஒரு மகானுபாவன் அந்த போலிச் செய்தியையே உண்மை என்று நம்பி தொலைக்காட்சியில் வெளியிட்டிருப்பான்.
// நியூஸ்-18-தமிழ் தொலைக்காட்சி சேனலை
திமுக- வுக்காக, மு.க.ஸ்டாலின் விலைக்கு வாங்கி விட்டார்
என்று யாராவது இவர்களுக்கு செய்தி அனுப்பினால் அதை
அப்படியே வெளியிட்டு விடுவார்களா…? //
சார், ஏற்கெனவே நியூஸ்-18 சேனல்
திமுகவுடையது தான் என்று ஒரு செய்தி
ஓடிக்கொண்டிருக்கிறதே;
அப்ப அது உண்மை இல்லையா என்ன 🙂
இதை விட்டு விட்டீர்களே 🙂
நியூஸ்-7 தமிழ் மட்டும் என்ன வாழ்ந்தது….?
அது பற்றி காணொளி ஒன்றும்
கிடைக்கவில்லையா…?
கிடைத்தால் நண்பர்கள் யாராவது
அதையும் போடுங்களேன்.
தமிழ் செய்தி சேனல்கள் விவாதம் என்கிற
பெயரில் படுத்தும் பாடு வரவர சகிக்கமுடியவில்லை;
இந்தப் பூனைகளுக்கு அவசியம் யாராவது
மணி கட்ட வேண்டும்.
விவாதம் என்கிற பெயரில்
விஷத்தை கக்குகிறார்கள்.
வெறுப்பை பரப்புகிறார்கள்.
ஒவ்வொரு செய்தி சேனல்களின் பின்னாலும்
இருப்பவர்களைப்பற்றிய விவரங்கள்
தெரிந்தவர்கள், ஆதாரங்களோடு இங்கே
கூறலாம்.
அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்.
.
news 18 channel ஓனர் திரு முகேஷ் அம்பானி
பணத்தட்டுப்பாடு எதுவும் இருப்பதாக தெரியவில்லை .
புதிய தலைமுறை – திரு பச்சமுத்து என்ற பாரிவேந்தர் .
நியூஸ் 7 ஓனர் தாது மணல் திரு வைகுண்டராஜன் .
தந்தி TV, ஓனர் திரு சிவந்தி ஆதித்தன் .
சன் நியூஸ் – மாறன் ப்ரதர்ஸ்
கலைஞர் நியூஸ் – திருமதி ராஜாத்தி அம்மாள் குடும்பம் .
திருமணத்திற்கு முந்திய பெயர் – தர்மாம்பாள்
மேற்சொன்ன அனைத்திலும் விவாதங்கள் நடக்கின்றன .
கீழே உள்ள டிவி களில் விவாதம் கிடையாது
பாலிமெர் திரு கல்யாணசுந்தரம் நடத்துகிறார் –
மெகா டிவி – காங்கிரஸ் திரு பாலு ; வசந்த் டிவி – திரு வசந்தகுமார் MP
நண்ப மெய்ப்பொருள்,
உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.
நியூஸ்-18 – தமிழ் சேனலின் நிர்வாகத்திற்கும்
அம்பானிக்கும் எந்தவித தொடர்பும் இருப்பதாக
தெரியவில்லை; திமுக தலைமையுடன்
இதன் நிர்வாகம் நெருக்கமாக இருப்பதாகவே
செய்திகள் கிடைக்கின்றன.
மற்றவைகளில் –
பாலிமர் மட்டுமே பாரபட்சமில்லாமல்,
அரசியல் சார்பு எதுவுமில்லாமல் –
அனைத்து தரப்பு செய்திகளையும்
தருகிறது என்று நான் கருதுகிறேன்.
அதன் உரிமையாளர் கல்யாணசுந்தரம்
அவர்களின் பின்னணி பற்றி எதாவது
சொல்ல முடியுமா…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
திரு P V கல்யாணசுந்தரம் தி மு க வில் இருந்தவர் .
கருணாநிதிக்கு நெருக்கமானவர் . ஸ்டாலின் ஆதரவாளர் .
தி மு க அமைப்பு செயலாளராக இருந்தவர் .
இப்போது ஆர் எஸ் பாரதி அந்த பொறுப்பில் !
கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் நீக்கப் பட்டவர் .
வேறொன்றும் இல்லை – மு க இருக்கும்போதே ஸ்டாலின்
தலைமை ஏற்க வேண்டும் என்று சொன்னதால் .
லா படித்தவர் . முனிசிபல் கவுன்சிலர் ஆக இருந்தவர் .
கேபிள் டிவி நடத்தியவர் . நடுவில் கனிமொழி
சிறை சென்ற போது கலைஞர் டிவி இயக்குனர் ஆனார் .
டாடா கம்யூனிகேஷன் (பழைய V S N L ) இயக்குனராக
சில காலம் இருந்தார் .
நிறைய தகவல்கள்…
நன்றி நண்ப மெய்ப்பொருள்.
இத்தனை திமுக பின்னணி
இருந்தும் இப்படி அரசியல்
சார்பில்லாமலே பாலிமர் டிவியை
நடத்தி வருவது ஆச்சரியம்
அளிக்கிறது.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்