….
….
….
குஜராத்தில், இரவில், ஊரடங்கு காலத்தில், தடையை
மீறி வெளியே ஊர் சுற்றிக்கொண்டிருந்த, மாநில அமைச்சர்
ஒருவரின் மகன் மற்றும் அவனது நண்பர்களிடம்
பெண் காவலர் ஒருவர் –
அவர்கள் தடையை மீறுவதை எதிர்த்து,
தைரியமாக பேசுவதை தற்போது
BBC செய்தித்தளம் வெளியிட்டுள்ளது.
காணொளியில், அவர் பேச்சு தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தப்பெண்ணின் துணிச்சல் பிரமிக்க வைக்கிறது.
காணொளியைப் பார்த்தால், அவர் எத்தனை ரிஸ்க்
எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது புரியும்…
மாநில அமைச்சரையே எதிர்த்துப் பேசும்
இந்தப் பெண்ணின் கதி என்ன ஆகும் …?
சமூக ஆர்வலர்களும், மீடியாக்களும் –
அவருக்கு தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை
வெளிப்படையாக கண்காணிக்க வேண்டும்.
சமூகத்தால் அவர் தொடர்ந்து கவனிக்கப்படுகிறார்
என்பது வெளிப்படையாகத் தெரிந்தால் மட்டுமே
அந்தப் பெண்ணின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.
……
……
.
——————————————————————————————————————————-
அசாத்திய துணிச்சல் பெண்.
விளைவை எதிர்கொள்ளக்கூடிய
தைரியம் அவருக்கு உண்டு
என்பது அவர் பேசும் தோரணையைப்
பார்த்தாலே தெரிகிறது.
அவருக்கு எதுவும் நடக்காது.
மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
என்பது மேலே இருப்பவர்களுக்கு
தெரிந்திருக்கும்.
இந்தக் காவலர்களைப் போல தேசபக்தி உள்ளவர்களை காண்பது மிக அரிது. (ஒரு காலத்தில் கிரண் பேடி என்பவரும் இப்படித்தான் தைரியமாக இருந்தார்)
பப்ளிக்காக அமைச்சர் குமார் கனானி மன்னிப்பு கேட்பதுதான் அமைச்சருக்குப் பெருமை சேர்க்கும்.
சூரத் காவல்துறை அதிகாரிகள், இவரின் நடவடிக்கை அநாகரீகம் என்று சொல்லியதே, அவர்களது குவாலிட்டியைக் காட்டுகிறது. இந்த மாதிரி அரசியல்வாதிகளின் பசங்களை லாக்கப்பில் உள்ளே வைத்து லாடம் கட்டினால்தான் உருப்படுவானுக.
This is the Guj.Model.
பார்த்தீங்களா… அரசும் அதிகாரிகளும், சட்டப்படி நடப்பது தவறு என்று சொல்லியிருக்காங்க. அரசின் சட்டங்கள்லாம் பொது மக்களுக்குத்தானே தவிர அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அல்ல என்று நேற்று காவல்துறை அதிகாரிகள் சொல்லியிருக்காங்க (by penalizing this officer)
யூ.ஏ.ஈ என்பது அரசரை உள்ளடக்கிய நாடு. ஜனநாயக நாடு கிடையாது. ஆனால் அங்கு ஷேக் யாராகிலும் (அதாவது அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது மிகப் பெரும் பணக்காரர்கள்) சாலையில் தவறு செய்துவிட்டால் (தவறுதலாக இன்னொரு வண்டியின்மீது இடித்துவிட்டால், அந்த இன்னொரு வண்டியை ஓட்டிக்கொண்டிருப்பவர் ஏழை இந்தியனாக இருக்கலாம்), உடனே அவர்களே வண்டியை நிறுத்தி, டிராஃபிக் போலீஸ் வந்த உடன் உண்மையைச் சொல்லி, தங்களுக்கு டிக்கெட் இருந்தால் வாங்கிக்கொள்வார்கள்.
அங்க உள்ளவங்க மாண்புமிக்கவர்களா இல்லை இந்தியாவில் இருக்கும் அதிகார வர்க்கமா?
பேரன்புமிக்க ஐயா , தங்களின் இக்கட்டுரைக்குத் தலைப்பு தவறானது. மந்திரிகுமாரன் என்பதற்கு பதிலாக மண்ணாங்கட்டி குமாரன் என்று எழுதி இருக்க வேண்டும். மனுநீதி சோழன் வாழ்ந்த காலம் எங்கே? மண்ணாங்கட்டிகள் வாழும் காலம் இங்கே!
வருக அப்பணசுவாமி.
மந்திரிகுமாரன் உங்களை
இங்கே வரவழைத்து விட்டார் பார்த்தீர்களா…?
“தர்மம் வெல்லும்” என்று
சொல்லிக்கொண்டிருக்கிறார்களே தவிர,
அதர்மத்திற்கு இருக்கும் வலு / பலம்,
தர்மத்திற்கு இல்லையே…!!!
கடைசியில் –
அந்தப் பெண்ணை தூக்கி விட்டார்களே…!
.
வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்