திருவாளர் வைரமுத்துவின் ஒப்புதல் வாக்குமூலம்…!!!

….
….

….

திருவாளர் வைரமுத்து சொல்கிறார் –
37 புதிய இசையமைப்பாளர்களை
நான் உருவாக்கினேன்…. !!!

எதற்காக….?

காணொளியைப் பாருங்கள் தெரியும் –

….

….

—————————————————————————————————————–

35-ஆண்டுகளுக்கு முன் (1985) வெளிவந்தது இது –
நம்ப முடிகிறதா…?

இளையராஜா அவர்கள் முதல் முதலாக,

தானே எழுதி,

தானே இசையமைத்த பாடல் –

பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
—–
படம் – இதயக் கோயில்
——

தான் எழுதிய இந்த முதல் பாடலை
தன் மனைவிக்கு dedicate செய்தார் ராஜா…

……

…….

ராஜா முதன் முதலில் எழுதிய பாடலின் வரிகள் –
இந்த எளிமையை
கவிஞர் வைரமுத்துவிடம் என்றாவது பார்க்க முடிந்ததா ?

……….

இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்

இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்
இசையை மலராய் நானும் சூட்டுவேன்

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது


இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்

இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்

காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏறினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது

இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே

இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்

.
————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to திருவாளர் வைரமுத்துவின் ஒப்புதல் வாக்குமூலம்…!!!

 1. bandhu சொல்கிறார்:

  என்னுடைய பார்வையில் வைரமுத்து ஒரு overrated பாடலாசிரியர். நிறைய ஆடம்பரமான வார்த்தை பிரயோகம். அதை கணீரென்று பெரிய விஷயமாக பேசும் திறமை. பாடல்களில் என்னவோ இருப்பது போல தோன்றினாலும், அதிலிருப்பது பெரும்பாலும் எதுகை மோனை வார்த்தைகளும், மெட்டுக்குள் அடங்கும் பாடல்களுமே அதிகமானவை. நல்ல பாடல்களும் உள்ளன. ஆனால் பெரும்பான்மையானவை கேட்டவுடன் மறந்து போகும் தன்மை.

  நீங்கள் சுட்டிய பாடலில் உள்ள எளிமை இவர் பாடலில் இல்லை. நா முத்துக்குமார் பாடல்களில் உள்ள ஆழமான கருத்து இவர் பாடலில் அதிகம் இருப்பதாக தெரியவில்லை (கன்னத்தில் முத்தமிட்டால் படப்பாடல் விதிவிலக்கு).
  கவியரசர் கண்ணதாசன் என்பதால் தனக்கு கவிப்பேரரசு என்று பட்டம் சூட்டிக்கொள்வது, 37 இசை அமைப்பாளர்களை உருவாக்கினேன் என்பதெல்லாம் வெறும் தற்பெருமை! பெண்கள் விஷயத்தில் எப்படிப்பட்டவர் என்று தெரிய சின்மயி சொன்னதற்கு எ ஆர் ரஹமானின் சகோதரி ஆதரவாக சொன்னதே போதும்.
  இளையராஜா vs வைரமுத்து என்பதெல்லாம் இவரே ஊதிப்பெருக்கிய சர்ச்சை. இளையராஜா இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதிலிருந்தே இதனால் யாருக்கு பாதிப்பு என்று தெளிவாக தெரிகிறது!

 2. புவியரசு சொல்கிறார்:

  இலக்கணம் படித்த வைரமுத்துவிடம்
  இல்லாத எளிமையும், ஆழமான, கதைக்கு
  பொருத்தமான கருத்துகளும் இளையராஜாவின்
  முதல் பாடலிலேயே தெரிகின்றன.

  37 இசையமைப்பாளர்களை உருவாக்கி
  வைரமுத்து இளையராஜாவை அழிக்க
  முயன்றிருக்கிறார். ஆனால், தன் சொந்தத் திறன்
  ஒன்றினாலேயே ராஜா இன்று வரை புகழோடு
  நிற்கிறார்.

 3. Gopi சொல்கிறார்:

  ராஜா சார் செய்வதை, 37 இசையமைப்பாளர்களை
  வைத்துக்கொண்டு செய்ய முயற்சித்தும்
  வை-யால் முடியவில்லை.
  ஆனால், வைரமுத்து செய்வதை வெகு சுலபமாக
  அழகாக, எளிமையாக ராஜா சார் எப்போதோ
  செய்து காட்டி விட்டார்.
  வைரமுத்து வெறும் தகர டப்பா.
  குரல் வளத்தாலும், பேச்சுத்திறமையாலும்,
  கலைஞரை காக்கா பிடித்தும் தன்னை
  வளர்த்துக் கொண்டார்.
  ராஜா சாருடன் வைரமுத்துவை ஒப்பிடுவதே
  அசிங்கம்.

 4. புதியவன் சொல்கிறார்:

  அடடா… பாடலாசிரியர்களால் இசையமைப்பாளர்களை உருவாக்க முடியுமா? என்னே ஆச்சர்யம்…. எவ்வளவு திறமை இந்த வயிர முத்துவுக்கு. காக்காய் பிடித்து வாழ்க்கை ஓட்டிய வயிரமுத்துவுக்கு எவ்வளவு தலைக்கனம்… ஆனானப்பட்ட ரஜினியிடமே, தன்னுடைய பாடல்களை ஒரு படத்தில் உபயோகிக்காததனால், அந்தப் படம் பப்படம் என்று கெட்ட எண்ணத்தோடு விஷத்தைக் கக்கியவர்தானே இந்த வயிரமுத்து.

  வித்தியா கர்வம் என்பது வேறு. தலைக்கனம் என்பது வேறு. கருணாநிதியின் புற்றில் இருந்ததால் இந்தப் பல்லிக்கு திறமையானவர்களை மிரட்டிப் பார்க்கும் வாய்ப்பு, பத்திரிகைகளின் ஆதரவு எல்லாம் இருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இப்போதும் அப்போதிருந்த தொடர்பினால் வளர்த்துக்கொண்ட விகடனில்தானே இவ்வாறு வாந்தியெடுக்க முனைத்திருக்கிறார் இந்த வயிரமுத்து.

  வானத்தின் புகழ், அதனைப் பார்த்துக் குரைக்கும் நாய்களால் குறைவுபடுவதுண்டோ? இளையராஜாவின் பின்னணி என்ன என்று பார்க்கணும். அந்தப் பின்னணியிலிருந்து, ஞானம், அதனைப் பிரகாசிக்க வைக்கும் தன் கடும் உழைப்பு இவற்றால் வாழ்க்கையில் வெகுவாக முன்னேறியவர் இளையராஜா அவர்கள். அவரைப் போன்ற திறமைசாலிகள் அபூர்வமாகத்தான் தோன்றுவார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.