பேசும் படம்…காலம்… தொடர்ச்சி – (பகுதி-17) நினைக்கத் தெரிந்த மனமே…

….
….

….

….

…..

1952-53-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான
தமிழ்ப்படங்களில் நல்ல படங்கள் என்று சொல்லக்கூடிய
பெரும்பாலான படங்களை நான் பார்த்திருக்கிறேன் என்று
சொல்லலாம்.

வடக்கே இருந்தபோதும் சரி, தெற்கே, சூலூர், பங்களூர்,
பாண்டிச்சேரி, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில்
இருந்தபோதும் சரி –

நல்ல படங்கள் எதுவாக இருந்தாலும், பழையதாக
இருந்தாலும் கூட, தேடிச்சென்று பார்த்து விடுவேன்…
ஊர் புதிது, பழக்கமில்லை என்றாலும் கூட,
விசாரித்துக்கொண்டு தியேட்டர்களை தேடிச்செல்வேன்.
அப்போதெல்லாம் – படங்கள் பார்ப்பதிலும், நாவல்கள்
வாசிப்பதிலும் மிகுந்த ஆர்வம் எனக்கு. (இப்போதும் தான்…!!!)

நான் பார்த்த சில நல்ல படங்களைப்பற்றி எழுதும்போது,
கொஞ்சம் விவரமாகவே எழுதலாமென்று நினைத்திருக்கிறேன்.

1952-ல் – அபூர்வ்மாக எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்து
வெளியான ஒரு சமூகப்படம் அந்தமான் கைதி.
ஜி.கோவிந்தராஜுலு நாயுடு அவர்கள் இசையமைத்த படம்.

முதலில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,
டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடக கம்பெனிக்காக உருவாக்கித்
தந்த நாடகம் “அந்தமான் கைதி”. இந்திய சுதந்திரப்
போராட்டத்தையும், நாட்டின் பிரிவினையையும் பின்னணியாக
கொண்ட கதை. TKS சகோதரர்களின் நாடகமாக இது பெறும்
வெற்றியை பெற்றது… பின்னர் திரைப்படமாகவும் வெற்றி
பெற்றது.

இந்தப் படத்தின் கதை, வசனம் ஆகியவற்றோடு ஒன்று தவிர,
மற்ற அனைத்துப் பாடல்களையும் எழுதி இருந்தார்
கு.சா.கிருஷ்ணமூர்த்தி.

ஒரே ஒரு பாரதியின் பாடல் மட்டும் படத்தில் இடம் பெற்றது.
அதுவும் எனக்கு மிகவும் பிடித்த –

“காணி நிலம் வேண்டும்-பராசக்தி… ”

அதுவும் சி.எஸ்.ஜெயராமனும், எம்.எல்.வசந்தகுமாரியும்
இணைந்து பாடியது…

…..

…..

இப்போது விலைவாசி உயர்வைப்பற்றி பேசிக்கொள்கிறோமே –
1952-ல் ஒரு அஞ்சு ரூபாய்க்கு இருந்த மதிப்பை பாருங்கள்….

இந்தப்பாடலை பாடியவர் டி.ஏ.ரத்தினம் அவர்கள்.
திரையில் தோன்றுவது – சி.கே.சரஸ்வதி…(படத்தில்
எம்.ஜி.ஆரின் சகோதரி…)

அஞ்சு ரூபா நோட்டை கொஞ்சம் முன்னே மாத்தினேன்…

….

….

இந்த இடுகையில் இன்னும் கொஞ்சம் படங்களையும் சேர்க்க
எண்ணினேன். ஆனால், வேறு அவசர வேலையொன்று வந்து
விட்டது. எனவே, மீதியை – அடுத்த பகுதியில் பார்ப்போம்….

.
——————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.