இராவணன் இராஜ்ஜியம் ஒரு கதைப்பு….!!!

….
….

….

இலங்கை அரசின் தொல்பொருள் திணைக்கள
பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க
ஒரு அறிக்கையில் கூறுகிறார்….

( https://newuthayan.com/66274-2/ )

“இராவணன் இராஜ்ஜியம் எனக் கூறப்படுவதெல்லாம்
கற்பனைக் கதையாகும். இராவணன் வாழ்ந்தற்கான
எந்தவொரு தொல்லியல் சான்றுகளும் கிடைக்கவில்லை”

“இராவணன் சம்பந்தப்பட்ட விடயம் நம் நாட்டில்
திணிக்கப்பட்ட ஒன்றாகும். எனவே தவறானதொரு
இதிகாசத்தை சமூகமயப்படுத்த முடியாது. அதனால் தான்
இராவணன் சம்பந்தப்பட்ட விடயத்தை நிராகரிக்கிறேன்.
அதற்கு பல காரணங்களும் உள்ளன.

இராமாயணம் என்பது வீரகாவியமாகும். சினிமாப்
படங்களில் எப்படி கதாநாயகன் தனி ஒருவனாக நூறு
பேரை அடிப்பானோ, அது போன்றே இராவணனின்
தோற்றமும் காண்பிக்கப்படுகிறது. இருதரப்பிலும்
உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் இருதடவை
இராமர் யுத்தத்தை நிராகரித்தார். அனுமான் பாலம்
அமைத்து வந்தார் என்றும், இராவணனிடம் நீர்மூழ்கிக்
கப்பல்கள், போர்க்கப்பல்கள் போன்ற சாதனங்கள்
இருந்தன என்றும் இராவணன் கிரகங்களைக் கூட
பிடித்தார் எனவும் நம்பப்படுகிறது.

அவரிடம் இவ்வளவு பலம் இருந்தும், அனுமான்
பாலம் கட்டும்போதோ அல்லது வாலால் தீ மூட்டும்
போதோ, ஏன் இராவணனால் தடுக்க முடியாமல் போனது?

நாட்டிலுள்ள தொல்பொருட்கள் பலவும் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளன. இருந்தும் இராவணன்
சம்பந்தப்பட்ட எந்த ஆதாரங்களும் எமக்கு கிடைக்கவில்லை.

குறிப்பாக இராவணனின் இடங்கள் என்று சொல்லப்படும்
இடங்களில் கூட எங்களுக்கு எந்த ஆதாரமும்
கிடைக்கவில்லை.

நாட்டில் நிறைய பேர் கிணறு வெட்டுகின்றனர். விவசாயம்
செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு கூட இன்னும் எந்த
ஆதாரங்களும் கிடைக்கவில்லையே” என கூறினார்.

——————————————
பின் குறிப்பு –

திருவாளர் – தொல்பொருள் திணைக்கள
பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க –
அவர்களுக்கு சொல்ல வேண்டியவை சில இருக்கின்றன….

——–

அய்யா தொ.பொ.தி.
பணிப்பாளர் நாயகம் அவர்களே…

ஆதாரம் இல்லாத,
ஆவணங்கள் இல்லாத –
இன்னும் எவ்வளவோ அடுக்கடுக்கான விஷயங்கள்
இலங்கையில் இருக்கின்றனவே…

அவற்றைப்பற்றியெல்லாம் நீவிர் என்ன சொல்லப்போகிறீர்…?

கௌதம புத்தரின் பல் என்று ஒன்றை இலங்கை
பத்திரப்படுத்தி வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே,
அந்த பல், புத்தருடையது தான் என்பதற்கு
திருவாளர்…… திணைக்கள பணிப்பாளர் நாயகம்
எதாவது ஆவணங்கள் வைத்திருக்கிறாரா…?

10-ஆம் நூற்றாண்டில், சோழ அரசன் ராஜேந்திரன்
இலங்கையின் மீது படையெடுத்து அதன் சில பகுதிகளை
கைப்பற்றியதற்கான சான்றுகள் எதையாவது
பார்த்திருக்கிறாரா…? அல்லது சான்றுகள் இல்லை
என்பதால் அதை மறுக்கிறாரா…?

இலங்கையின் பெரும்பான்மைக் குடியினரான
சிங்களர்களின் மூதாதையர்கள் யார் என்பதையோ,

அவர்கள் எங்கிருந்து இலங்கைக்கு வந்து குடியேறினர்
என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் எதையாவது
திருவாளர்….தொல்பொருள் திணைக்கள
பணிப்பாளர் நாயகம் – வைத்திருக்கிறாரா…?

இலங்கையில் முதல் சிங்களவர் எப்போது உதயமானார் …?
சிங்களர்கள் எந்தெந்த இனத்தின் கலப்படம்
என்பதற்கான சான்றுகள் எதையாவது வைத்திருக்கிறாரா…?

முதல் சிங்களர் வருவதற்கு முன், இலங்கையில்
இருந்தவர்கள் யார்… எந்த இனம், அவர்களது சரித்திரம்
என்ன என்பதற்கு ஆவணங்கள் எதாவது வைத்திருக்கிறாரா ?

அவ்வளவு தூரம் போவானேன்…
குறைந்த பட்சம் –
திருவாளர் தொ.பொ.தி.பணிப்பாளர் நாயகம் –
தனது தாத்தாவின் தாத்தா யார் என்பதை அறிவாரா…?
அதற்கான ஆவணங்கள் எதையாவது வைத்திருக்கிறாரா…?

கிணறு தோண்டும் இடங்கள் எதிலாவது இவற்றிற்கான
ஆவணங்கள் எதாவது கிடைக்குமா….?

கி.மு 5-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர்,
இலங்கையின் சரித்திரம் என்ன …
அங்கே இருந்தவர்கள் யார்…?
அரசாட்சி புரிந்தவர் யார் – என்பதற்கான ஆவணங்கள்
எதையாவது திருவாளர் தொ.பொ.தி.பணிப்பாளர் நாயகம் –
வைத்திருக்கிறாரா…?

இராவணனின் இராஜ்ஜியமான இலங்கையின்
காலம் எது என்பதை தோராயமாகவாவது, திருவாளர் தொ.பொ.தி.
பணிப்பாளர் நாயகம் – அறிவாரா…?

– மேற்கண்ட கேள்விகள் எதாவது சிலவற்றிற்காவது விடையை
அறிந்து கொண்ட பின்னர் திருவாளர் தொ.பொ.தி.
பணிப்பாளர் நாயகம் – இராவணனின் இராஜ்ஜியம் குறித்து
பேசினால், பொருத்தமானதாக இருக்கும்….!!!

– அல்லவா…?????

.
———————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to இராவணன் இராஜ்ஜியம் ஒரு கதைப்பு….!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    இந்தத் ‘திணைக்கள’த்தின் திசை நாயகர் என்ன சொல்கிறாரோ… ஆனால் இலங்கை அரசில், ‘இராமாயண தடத்தின் வழி’ என்று சுற்றுலாத்தலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு சுற்றுலாக்கள் நடைபெற்றுவருகின்றன. அசோகவனம், ஹனுமான் கால் என்றெல்லாம் பல சுற்றுலாத் தளங்களின் படங்களைப் பார்த்திருக்கிறேன்.

    நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளின்படி, திசை நாயகர் (அதுதான் திஸ்ஸ நாயக்கா என்ற பெயராக மருவியிருக்கிறது), முன்னோர் கலிங்கர்கள் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். அசோகரின் பெண் இலங்கைக்குச் சென்றபிறகுதான் புத்தமதம் அங்கு தோன்ற ஆரம்பித்தது. இப்போதும் அங்கிருக்கும் போதி மரம், புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் கிளையிலிருந்து உருவாக்கப்பட்டது. புத்தகயாவில் இருக்கும் போதிமரம், ஒரிஜினல் இல்லை என்று சொல்வார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.