தொலை -நுண்ணுணர்வு – சாத்தியமா….? கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – (5)

….
….

….

பார்த்து, பேசி நீண்ட நாட்களாயிற்றே என்று நண்பர்
அல்லது உறவினர் யாரைப்பற்றியாவது நினைப்போம்.
வெகு சீக்கிரத்திலேயே அவர் நம்மை, நேரிலோ,
தொலைபேசி மூலமே தொடர்பு கொள்வார். அடடா
உங்களைப்பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் –
கரெக்டாக பேசி விட்டீர்களே என்று அவர்களிடமே
அதிசயிப்போம். எனக்கு மட்டுமல்ல, உங்களில் பலருக்கும்
இந்த அனுபவம் பல தடவை ஏற்பட்டிருக்கும்.

இது எப்படி நிகழ்கிறது….?

நமது எண்ணங்களை, நினைப்புகளை எங்கேயாவது
தொலை தூரத்தில் இருக்கும் நமக்கு வேண்டியவர்களுக்கு,
தெரிந்தவர்களுக்கு – அவர்களிடம் பேசாமலே
தெரிவிக்கக்கூடிய வழிமுறை எதாவது இருக்கிறதா…?

உண்மையான ஞானிகள், துறவிகள் சிலரிடம் இத்தகைய
சக்தி இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். சிலர் நேரிலும்
அனுபவப்பட்டிருக்கிறார்கள்…. தங்களை நாடி வரும்
பக்தர்களை, பார்த்த மாத்திரத்திலேயே அவர்களது
பிரச்சினைகளை உணர்ந்து, அவர்கள் கேட்காமலே
அதற்குரிய வழிமுறைகளை சொல்வதை/ ஆறுதலளிப்பதை
கேள்விப்பட்டிருக்கிறோம். நம் துயரம், நாம் சொல்லாமலே
இவருக்கு எப்படித்தெரிந்தது என்று அவர்கள் வியந்து
போயிருக்கிறார்கள்.

இப்படி தொலை நுண்ணுணர்வு என்று ஒரு சக்தி இருப்பது
உண்மையா…?

நேரில் ஒருவரைப் பார்த்து, அவர்கள் கண்களை ஊடுருவி,
அவர்கள் சிந்தனைகளை, செயல்களை – கட்டுப்படுத்தக்கூடிய
மெஸ்மரிசம், ஹிப்னாடிசம் – ஆகிய வழிமுறைகள்
உண்மை என்று விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக்
கொள்ளப்பட்டிருக்கிறது….

நேரில் மற்றோருவரின் சிந்தனைகளில், மூளையில் –
தங்கள் எண்ணத்தை செலுத்தி,
அவர்களை அதுபோல் செயல்பட வைக்கப்பட முடியுமானால்,
தொலைதூரத்தில் உள்ளவர்களிடமும் இதே சக்தியை
பயன்படுத்த முடியும் என்கிற நம்பிக்கை உருவாகிறது.

இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஞானிகளால்
ஏற்றுக்கொள்ளப்பட்ட, பயன்படுத்தப்பட்ட முறை தான் இது
என்றாலும் கூட –

அறிவுலகம், முக்கியமாக மேற்கத்திய சிந்தனைகள்
இதுபற்றி என்ன சொல்கின்றன…?

இதுபற்றி சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசித்தேன்….

ருடோல்ஃப் ஸ்டெய்னர் – என்கிற ஜெர்மனிய தத்துவ மேதை
Anthroposophy -என்கிற தத்துவத்தை உருவகப்படுத்தி
இருக்கிறார். தியோசாபிகல் சொசைடியை இதன் ஒன்றுவிட்ட
உடன்பிறப்பு என்று கூட சொல்லலாம்….

நமது ஆன்மிகச் சிந்தனைகளுக்கு வெகு அருகாமையில்
அவரது தத்துவம் செல்வதை பின்வரும் இடுகைப்பகுதியில்
பார்க்கலாம் –

……………….

Anthroposophy is a path of knowledge, to guide the spiritual
in the human being to the spiritual in the universe….
Anthroposophists are those who experience, as an essential
need of life, certain questions on the nature of the human being
and the universe, just as one experiences hunger and thirst.

He regarded his research reports as being important aids to
others seeking to enter into spiritual experience. He
suggested that a combination of spiritual exercises (for
example, concentrating on an object such as a seed), moral
development (control of thought, feelings and will
combined with openness, tolerance and flexibility) and
familiarity with other spiritual researchers’ results would
best further an individual’s spiritual development.

He consistently emphasised that any inner, spiritual practice
should be undertaken in such a way as not to interfere with one’s

responsibilities in outer life. He distinguished between
what he considered were true and false paths of spiritual
investigation.

In anthroposophy, artistic expression is also treated as a
potentially valuable bridge between spiritual and material reality.

Prerequisites to and stages of inner development –

A person seeking inner development must first of all make the
attempt to give up certain formerly held inclinations. Then,
new inclinations must be acquired by constantly holding the
thought of such inclinations, virtues or characteristics
in one’s mind.

They must be so incorporated into one’s being that a person
becomes enabled to alter his soul by his own will-power.
This must be tried as objectively as a chemical might be tested
in an experiment.

A person who has never endeavored to change his soul,
who has never made the initial decision to develop the
qualities of endurance, steadfastness and calm logical thinking,

or a person who has such decisions but has given up
because he did not succeed in a week, a month,
a year or a decade, will never conclude anything inwardly
about these truths.
———–

நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களுக்கு இந்தக் கலை
கைவரக்கூடுமா…?

இந்த சிந்தனைகளைப்பற்றி நாளைய தினம்,
அடுத்த பகுதியில் இன்னும் தொடர இருக்கிறேன்.

இடையில், இவற்றைப்பற்றி எல்லாம் எதாவது
சொல்ல வேண்டுமென்று நினைக்கும் நண்பர்கள்
பின்னூட்டம் மூலம் தெரிவிக்கலாம்…அவையும்
விவாதத்திற்கு பயன்படும்.

.
—————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to தொலை -நுண்ணுணர்வு – சாத்தியமா….? கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – (5)

 1. புவியரசு சொல்கிறார்:

  கொஞ்சம் வித்தியாசமான, ஆழமான விஷயம்.
  ஆன்மிகம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் கூட,
  சுவாரஸ்யமாக விவரிக்கிறீர்கள்.
  மேலும் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

 2. புதியவன் சொல்கிறார்:

  படித்தவற்றில் இரண்டைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
  1. தொலைதூரத்தில் இருக்கும் நெருங்கிய உறவினரைப் பார்ப்பது, அவர் நேரில்/கனவில் ஏதோ சொல்வது, மறுநாள், இந்த கனவோ/நனவோ நிகழ்ந்த சில நிமிடங்களில் வந்தவர் மறைந்திருந்த செய்தி வருவது – போன்ற நிகழ்ந்த சம்பவங்களை புத்தகங்களில் படித்திருக்கிறேன்.
  2. நாங்க 20களில் இருந்தபோது (3-4 நண்பர்கள்) எங்கள் ஆபீஸுக்கு வந்த ஒரு ஆந்திரா ஜோசியர் (நரிக்குறவங்க மாதிரி டிரெஸ்), எங்களிடம் தனித்தனியாக, பூ, பழம் இது போல நினைத்துக்கொள்ளச் சொல்லி டக் என்று அதனை எங்களிடம் சொல்லியது, நாங்க, ‘இவர் என்ன படித்திருக்கிறார், அவர் எவ்வளவு படித்திருக்கிறார்/மேலும் என்ன என்ன படிப்பார்’ என்றெல்லாம் கேட்டதற்கு சட் சட் என்று பதில் சொன்னார். ஜோசியர் என்றவுடன் வயதானவரை நினைக்காதீர்கள், 20 வயசு மாடு மேய்ப்பவர் போல்தான் தோன்றினார். அப்புறம் வசியம் பரிகாரம் சொல்லவா என்றதும்தான் நாங்கள் கொஞ்சம் பணம் கொடுத்து கழற்றிவிட்டுவிட்டோம்.

  இதைவிட ஆச்சர்யமாக, அமெரிக்காவில், நம் ஆன்மீகவாதி-யோகா சம்பந்தப்பட்டது, ஒருவரை டெஸ்ட் செய்ய (80களில்?) இரண்டு சயண்டிஸ்ட் நண்பர்கள் அவர் வீட்டிற்கு வருகிறார்கள். அதில் ஒருவர், தான் வரும்போது டேப் ரிகார்டரைக் கொண்டுவர மறந்துவிட்டேன் என்று சொல்ல, படுத்திருந்த யோகி, கண்ணை மூடிக்கொண்டு, மாடியிலா, அறையில் எங்கு என்றெல்லாம் கேட்டு, பிறகு சட் என்று தன் பாக்கெட்டிலிருந்து அவருடைய ரெகார்டரை எடுத்துக் கொடுக்கிறார். அந்த சயண்டிஸ்ட், இதற்கான அறிவியல் எது என்று ஆராய்வதற்குப் பதில், இது பில்லிசூனிய வித்தைபோல் இருக்கிறதே என்று அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டாராம். நான் சொன்ன சம்பவத்தின் கண்டெண்ட் சரி, ஆனால் விளக்கத்தில் தவறு இருக்கலாம். அந்த யோகி தன் புத்தகத்தில் எழுதியிருந்தது, ஒவ்வொரு யோகச் செயலுக்கும் பின்னணியில் அறிவியல் உண்டு. அந்த அறிவியலைப் புரிந்துகொள்ளணும் என்று எழுதியிருந்தார்.

  புட்டபர்த்தி சாய்பாபா அதுபோல மோதிரம், கடிகாரம் போன்றவற்றை வரவழைத்துத் தந்ததெல்லாம் நீங்கள் படித்திருப்பீர்கள். (இந்த சப்ஜெக்டில் நிறைய எழுதலாம்)

 3. Pingback: தொலை -நுண்ணுணர்வு – சாத்தியமா….? கொஞ்சம் கொஞ்சமாக… யோசிக்க – (5) — வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் | Mon

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.