….
….
( பாராளுமன்றத்தில் அன்று இப்படி கொந்தளித்தவர் –
இன்று இப்படி கெஞ்சுவதன் காரணம்…..???
“ஆரியக் கூத்தாடினாலும்… தாண்டவக்கோனே… 🙂 🙂 )
——————————————————————————————————————————
திரு.டி.ஆர்.பாலு பிரதமருக்கு இன்று எழுதியிருக்கும்
கடிதத்தை செய்தித்தளம் ஒன்று –
—–
சேது சமுத்திர திட்டத்தைப் புதுப்பித்தால் –
பாஜகவுடன் திமுக கூட்டணி?
——
-என்கிற கொட்டையெழுத்து தலையங்கத்தில் பிரசுரித்து
உள்ளது… முழு கடிதமும் கீழே –
——————-
செய்தித்தளம் இதைப் பார்க்கும் கோணம் திமுக,
பாஜகவோடு நெருங்கி வருகிறது என்பதே…
அதன் தலைப்பும், இறுதியும் அதைத்தான் சொல்கின்றன.
இறுதிப்பகுதி –
—-
மோடி இந்தக் கடிதத்துக்கு என்ன முடிவெடுக்கப் போகிறார்
என்பதைப் பொறுத்து திமுக-பாஜக கூட்டணி அமைந்தாலும்
ஆச்சரியமில்லை என்பதையே இந்தக் கடிதத்தின் கடைசி பத்தி
வார்த்தைகள் எடுத்துக் காட்டுகின்றன….!!!
——————-
ஆனால் –
கடிதத்தில், இந்திய வெளியுறவு கொள்கையைப் பற்றியும்,
பாதுகாப்பு கொள்கைகளைப் பற்றியும் விலாவாரியாக
பாலு அவர்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் ….
ஆர்வம் சேது சமுத்திரம் வரவேண்டும் என்பதிலா,
அல்லது ஏற்கெனவே பாதியில் நிற்கும் காண்டிராக்டை
மீண்டும் பிடித்துக்கொண்டு, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள
வேண்டும் என்கிற பாலிசியா…? என்கிற பலத்த சந்தேகம்
எழுகின்றதே…!!!
இந்த தருணத்தில் நமக்கு நினைவிற்கு வருவது
கலைஞர் கருணாநிதியின் பராசக்தி
படத்தின் இந்தப் பாடல் வரிகள் தான்….
” ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக் கோனே,
காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே.
பிணத்தை கட்டி அழுதாலும் தாண்டவக்கோனே,
பணப் பெட்டி மீது கண் வையடா தாண்டவக்கோனே..
முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக் கோனே,
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே.. …” 🙂 🙂
——————————————————————————–
இனி செய்தி அப்படியே கீழே –
————–
சேது சமுத்திர திட்டத்தைப் புதுப்பித்தால் –
பாஜகவுடன் திமுக கூட்டணி?
சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற
வேண்டுமென முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக
நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி ஆர் பாலு பிரதமர்
மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில் இன்று ஜூலை
10 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்…
“தமிழக மக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த
சேதுசமுத்திர திட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட
வேண்டியதின் அவசியம் குறித்து திமுக தலைவர்
ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இக்கடிதத்தை
எழுதுகிறேன்.
அண்மையில் ஆக்கிரமிப்பு மனோபாவம் கொண்ட நமது
அண்டை நாடான சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் திராவிட
முன்னேற்றக் கழகம் மத்திய அரசுடன் உறுதியாக நின்றது.
நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுகவின்
ஆதரவை தெள்ளத்தெளிவாக எங்கள் தலைவர்
எடுத்துரைத்தார்.
சீனாவின் மூலம் தென் எல்லைக்கும் ஆபத்து
லடாக் எல்லையில் அண்மையில் சீன படைகளின்
அத்துமீறிய மோதலைத் தொடர்ந்து இந்தியாவின்
வடமேற்கில் பஞ்சாபிலிருந்து வடகிழக்கில் அருணாசலப்
பிரதேசம் வரை உள்ள நீண்ட நெடிய எல்லை
மட்டுமல்லாமல் இந்தியாவின் தென் பகுதி எல்லையான
தமிழக கடலோர எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்புக்கு
பெரும் அச்சுறுத்தல் உருவாகும் நிலை உள்ளது என்பதை
நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கும்
இலங்கைக்கும் இடையிலான சேது சமுத்திரக் கடல்
பகுதியில் தேசப் பாதுகாப்புக்கு எதிரான அச்சுறுத்தல்
அதிகம் உள்ளது என்பதை இந்திய அரசு உணர வேண்டும்…!!!
காரணம் சீனா இலங்கையுடன் வேகமாக நெருக்கத்தை
ஏற்படுத்திக் கொண்டுவருவது இந்திய பாதுகாப்பு நலனுக்கு
என்றைக்குமே உகந்ததல்ல. அண்மைக்காலங்களில்
சீன அரசு தமிழக எல்லையில் இருந்து 30 கிலோமீட்டர்
தொலைவில் உள்ள இலங்கைத் தீவில் பெரிய அளவில்
முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் அமைத்திட
முதலீடுகள் செய்து வருகிறது.
2010 முதல் இலங்கையில் அதி முக்கியத்துவம் கொண்ட
பல்வேறு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க சீன நாடு
நம்மையெல்லாம் திகைக்க வைக்கும் அளவுக்கு 7948
மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ள
விவரங்கள் அனைத்தும் தங்கள் பார்வைக்குக் கொண்டு
வரப்பட்டு இருக்கும் என்று நம்புகிறோம்.
நேபாளம் போல இலங்கை
2010 ஆம் ஆண்டில் புதிய துறைமுகம் ஒன்றை அமைக்க
1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியதுடன்
மிகப்பெரிய துறைமுகத்தையும் சீன நிறுவனங்கள் மூலம்
இலங்கை பிரதமர் ராஜபக்ஷேவின் தொகுதியான ஹம்பன்
தோட்டாவில் நிர்மாணித்துக் கொடுத்தது சீனா. கடனைத்
திரும்பத் தர இயலாமல் போனதால் இந்த துறைமுகத்தை
2017 ஆம் ஆண்டு சீனா தனக்கு சொந்தமாக்கிக் கொண்டுவிட்டது.
இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவுக்கு எதிராகவும் சீனாவுக்கு
ஆரவாரமான நிலையை நேபாளம் எடுத்ததுபோல இலங்கையும்
எடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று சுட்டிக்
காட்டியிருக்கும் டி.ஆர்.பாலு மேலும் தன் கடிதத்தில்,
“மேலும் தென் சீனக் கடல் பகுதியில் ராணுவ வலிமையை
மேம்படுத்தும் சீனாவின் ஆதிக்க முயற்சிகளுக்கு எதிராக
ஆசியான் அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து
குரல் எழுப்பியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு
இந்தியாவும் தனது தேசிய பாதுகாப்புக் கொள்கையில்
சூயஸ் பகுதி தொடங்கி தெற்கு சீன கடல் வரை நீண்டுள்ள
கடல் பரப்பை உள்ளடக்கிய அம்சங்களை மேற்கொள்ள
வேண்டும். காரணம் தென் தமிழக கடல் பகுதி தான்
தெற்கு சீன கடலுக்கும் சூயஸுக்கும் இடையே நடுநாயகமாக
இருக்கும் கடல் பரப்பாகும்.
மத்திய அரசு ஏற்கனவே அந்தமான் தீவில் உள்ள நமது
முப்படைகளை வலிமைப்படுத்தும் நடவடிக்கைகளை
முன்னுரிமை முனைப்புடன் மேற்கொண்டு உள்ளது
வரவேற்கத்தக்கது.
அது போலவே தென் தமிழக கடல் பகுதி குறிப்பாக
சேதுசமுத்திர கடல் பகுதி புவியியல் ரீதியாகவும் சர்வதேச
கப்பல் போக்குவரத்து முக்கியத்தும் காரணமாகவும் நமது
முழு கட்டுப்பாட்டில் இருப்பது இன்றியமையாதது.
கலைஞர்-வாஜ்பாய் கனவுத் திட்டம்
இந்தக் கோணத்திலிருந்து பார்க்கும்போது தடைப்பட்டு
முடங்கிக் கிடக்கும் சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட
வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது தெளிவாகும்.
தேச பாதுகாப்பு அச்சத்தின் அடிப்படையில் தான் சேது
சமுத்திரத் திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய பாதுகாப்புத்துறை
அமைச்சகம் ஏற்கனவே வழங்கியது. தமிழக மக்களின் 150
ஆண்டுகால கனவான சேது சமுத்திரத் திட்டம் நனவாகும்
என்ற நம்பிக்கையோடு, 15 ஆண்டுகளுக்கு முன்னால்
2005ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன்
சிங் அவர்கள் மதுரையில் அடிக்கல் நாட்டினார். தொடக்க
விழாவில் எங்கள் நினைவில் வாழும் தலைவர் கலைஞர்
முன்னிலை வகிக்க, திருமதி சோனியா காந்தி அவர்கள்
பங்கேற்றார்.
பணிகள் சிறப்பாக முன்னேறிக் கொண்டிருந்த நிலையில்
தேச நலனுக்கும் செழிப்புக்கும் எதிரான சில சக்திகள்
திட்டமிட்டு சதி செய்து மதரீதியான யதார்த்தத்திற்கு
ஒவ்வாத வாதங்களை முன்வைத்து இத்திட்டத்தை
முடங்கிப் போகச் செய்து விட்டனர்.
சேது சமுத்திரத் திட்டம் இந்த நாட்டின் மாபெரும்
தலைவர்களான அண்ணா, காமராஜர், கலைஞர், வாஜ்பாய்
ஆகியோரின் கனவு திட்டம். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற
சேதுசமுத்திர திட்ட விழாவிற்கு அரசு அழைப்பு விடுத்த
நேரத்தில் இது எனது திட்டம் விரைந்து நிறைவேற
வாழ்த்துக்கள் என்று வாஜ்பாய் கூறியதை இன்று தங்களுக்கு
நினைவுபடுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் டி.ஆர்.பாலு.
தமிழக மக்கள் மனதில் மோடி நீங்கா இடம் பிடிக்க…
மேலும், “பிரதமர் அவர்களே தாங்கள் இந்துமதக்
கொள்கைகளை பெருமிதத்துடன் பின்பற்றி வருபவர் என்பது
நாடறிந்த ஒன்றாகும்.
மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள் மக்கள் குழப்பம்
தீர்ந்து செயல்பட கூறிய அறிவுரையை இந்த நேரத்தில்
மேற்கோள் காட்ட விரும்புகிறேன். ‘இறைவனே ஆத்திகர்
அவரே நாத்திகர். அவரே நல்லவர் அவரே தீயவர்.
அவரே உண்மை அவரே உண்மை ஏற்றவர். மேலும்
அவர் எல்லா நிலையையும் கடந்தவர். உண்மைகளை
அறிந்து கொண்டால் எல்லாக் குழப்பங்களும் தீர்ந்து விடும்’.
இதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் பாதுகாப்பு கருதி
தமிழர்களின் 150 ஆண்டு கால சேது சமுத்திரத் திட்டத்தை
2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளுக்கு முன்னதாக
நிறைவேற்றி தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை
இந்திய பிரதமர் மோடி அவர்கள் பிடிக்க வேண்டுமென
திமுக சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்”
-என்று கடிதத்தை அரசியல், சென்டிமென்ட் ரீதியாக
முடித்துள்ளார் டி.ஆர்.பாலு.
மோடி இந்தக் கடிதத்துக்கு என்ன முடிவெடுக்கப் போகிறார்
என்பதைப் பொறுத்து –
– திமுக-பாஜக கூட்டணி அமைந்தாலும்
ஆச்சரியமில்லை என்பதையே இந்தக் கடிதத்தின் கடைசி
பத்தி வார்த்தைகள் எடுத்துக் காட்டுகின்றன….!!!
.
————————————————————————————————————————————————-
சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு
கிடைக்கக்கூடிய பயன்கள் குறித்துப்
பேசிவந்த காலம் போய், இப்போது சீனத்திடமிருந்து
பாதுகாப்பது பற்றி பேச ஆரம்பித்தாகி விட்டது.
லேடஸ்ட் காரணத்தைக் கூறியாவது
காண்டிராக்டை புதுப்பிக்க முயற்சி நடக்கிறது.
பிழைக்கத் தெரிந்தவர்கள்.
நீங்கள் போட்ட பாட்டு பிரமாதம்;
“முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக் கோனே,
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே”
It may no longer be a surprise if that alliance
happens as BJP is even more hungry for power
than any other in this Nation..
பாராளுமன்றம், எந்த விதமான அரசு காண்டிராக்டுகளும் அரசியல்வாதிகளுக்கோ இல்லை அவர்களது ரத்த சம்பந்தம் உள்ளவர்களுக்கோ, பங்குபெறும் தகுதி இருந்தும், அளிக்கப்படாது என்று சட்டம் இயற்றினால், தங்கள் உடல் பொருள் ஆவி இவற்றையெல்லாம் அர்ப்பணித்து நாட்டுக்குத் தொண்டாற்றும் சாராய முதலாளிகள்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று தங்கள் பழைய தொழிலான பழையபேப்பர் பொறுக்கும் தொழிலுக்குப் போய்விடமாட்டார்களா? ஆனால் நம் அரசு என்ன செய்கிறது, ஒவ்வொரு எம்.பிக்கும் இன்ன இன்ன சலுகை என்று எடுத்த எடுப்பிலேயே லஞ்சம் போன்று சம்பாதிக்கும் வழியைக் காட்டுகிறது.
நாட்டுமேல் திமுகவுக்குத்தான் எவ்வளவு அக்கறை. அதனால்தானே 28,000 கோடி ரூபாய்களை அந்நிய தேசத்தில் இன்வெஸ்ட் செய்தது. அதுமட்டுமல்லாமல் தங்கள் பிஸினெஸ் ஏரியாவை துபாய், மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை, மால்டீவ்ஸ் என்று அகலப்படுத்திக்கொண்டிருக்கிறது.
இந்தியா என்ற நாட்டின் பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்த போது
go back Modi என்று கருப்பு கொடியும் பலூன்களும் பறக்க விட்டது பிஜேபி
மற்றும் மோடி அவர்களுக்கு தெரியாதா? இப்போது மத்தியில்
2024 வரை மோடிதான் பிரதமர் . சேது சமுத்திர
திட்டத்தை அவரை விட்டால் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்த பிறகு
பாலு கெஞ்சுவதன் ரஹஸ்யம் அடித்தது பாதிதான் ,அடிக்க வேண்டியது
இன்னும் நிறைய இருக்கிறது என்பதே . நாட்டின் பாதுகாப்பின் மீது
அக்கறை உள்ளவர்கள்தான் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கிய போது caa வுக்கு எதிராக டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மோடி ஒன்றும் பப்பு” அல்ல . திமுகவினரை பற்றி எல்லாமும் தெரியும்,எலி எதுக்கு எட்டு முழ வேட்டி கட்டுது என்று . கோரோனோ நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது .இந்த வேளையில் இவருக்கு சேது சமுத்திர திட்டம் வேண்டுமாம். சாராயம், கப்பல் இவற்றில் சம்பாதித்தது , வெளிநாடுகளில் முதலீடு செய்தது போதும். கொஞ்சம் பணத்தை ஏழைகளுக்கு விட்டுவையுங்கள் .
.
“இந்த திட்டம் நிறைவேற எனக்கு சொந்தமான கப்பல்களை தூர் வாரும் பணிக்காக தூருடன் நான் வார நினைக்கும் பணத்துக்காக இந்த கோரிக்கை என்று குறுகிய மனம் படைத்த சிறு மதியாளர்கள் சுட்டிக்காட்டுவார்கள் என்பதனால், (கொஞ்சம் மூச்சு விட்டுக்கிறேன்), இந்த திட்டம் நிறைவேறினால், அந்த கப்பல்களை அரசுடமை ஆக்க ஒப்புக்கொள்கிறேன்..” என்று அவர் சொல்லியிருந்தால் நம்பலாம்!
Unless a true selfless strong leader with a lofty vision
takes the reins of power to snatch the looted wealth from all
the political bandits, people like Baaaalus will continue to
flourish under the guise of building the Nation.