….
….
….
கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ ஜோக்கை யாரால்
மறக்க முடியும்….?
ஆனால், திரு.ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் கேட்டிருக்கும்
கேள்வியைப் பார்த்தால் அவருக்கு “கவுண்டமணி-செந்திலின்
இன்னொரு வாழைப்பழம் எங்கே …?” ஜோக் தெரியாது
என்றே தெரிகிறது….!!!
அது நினைவிலிருந்தால் இந்த புதிய –
” இன்னொரு வாழைப்பழம் எங்கே..?”
– கேள்வியை ட்விட்டரில் கேட்பாரா…?
கவுண்டமணியின் கேள்விக்கு கிடைத்த பதில் தானே
திரு.ப.சிதம்பரத்திற்கும்….!!!
கவுண்டமணியின் இடத்தில் ப.சி. இருப்பது புரிகிறது…
ஆனால் – செந்தில் …?
——————————-
——————————-
( தமிழில் )
முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டரில்
கூறுகையில் –
“சீன துருப்புகள் பின்வாங்கியதை நான் வரவேற்கிறேன்.
அந்த படைகள் எந்த இடத்திலிருந்து பின்வாங்கியது
என்பதை யாராவது (மத்திய அரசு) சொல்வார்களா?
அதுபோல் தற்போது எந்த இடத்தில் அவை நிலை
கொண்டுள்ளார்கள் என்பதையும் சொல்ல முடியுமா?
அது போல் இந்திய படைகளும் எந்த இடத்திலிருந்து
பின்வாங்கின?.
சீன ராணுவமோ அல்லது இந்திய ராணுவமோ
ஒரு எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து இன்னொரு
எல்லைக்கு நகர்ந்தனரா..?
.
——————————————————————————————————————————————————
இந்தியாவிற்கு எதிராக, இந்த மாதிரி கேள்வி கேட்கும், மற்றும் அதை பதிவிடும் சீன கைக்கூலிகளை வன்மையாக கண்டிக்கிறோம்..
…..
…..
….. மோடி வாழ்க என்று பின்னூட்டம் இட்டு உங்கள் தேச பக்தியை நிரூபித்துக்கொள்ள வேண்டுகிறேன்.
jksmraja,
உணர்ச்சி வசப்படாமல்,
மிகைப்படுத்தி எழுதாமல்,
இடுகையில் சொல்லப்பட்டிருப்பதையொட்டி,
ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ
எப்படி வேண்டுமானாலும்
நீங்கள் கருத்து கூறலாம்.
அது தான் ரசிக்கத்தக்கதாக இருக்கும்.
இப்படி எழுதுவதை தவிர்த்து விடுங்கள்.
(உங்கள் பின்னூட்டத்திலிருந்து
சில பகுதிகளை நீக்கி விட்டேன்..)
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ராணுவத்தின் செயல்களை காட்டி விளம்பரம் தேடிக்கொள்வதோ , ராணுவத்தின் நடவடிக்கைகளை பொதுவில் விமர்சனம் செய்வதோ தவறு, நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால்.
ஆட்சியை குறை கூறினால்,
நிர்வாகத் திறமையின்மையை குறை கூறினால்,
உடனே தேசபக்தி இல்லாதவன்,
ராணுவத்தைக் குறை சொல்கிறான் என்று
பட்டம் கட்டி விடுகிறார்கள்.
இந்த மண்ணில் பிறந்த எவனும்
இந்திய ராணுவத்தைக் குறை சொல்ல மாட்டேன்.
தங்கள் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை
தியாகம் செய்ய எப்போதும் தயாராக இருப்பவர்கள்
அவர்கள்.
ராணுவத்தின் பக்கம் மடை மாற்றி, தங்கள்
குறைகளை மரைத்துக் கொள்கிறார்கள் ஆள்பவர்கள்.
இது தொடர்பான செய்திகள் தெளிவாக இல்லை என்றே நான் நினைக்கிறேன். வெள்ளப்பெருக்கு வரும் சமயம் என்பதால் கூடாரத்தைக் கலைத்திருப்பார்கள் என்றும், இருவரும் அந்த ஆறு (பள்ளத்தாக்கு?) லிருந்து ஒரு கி.மீ பின்வாங்கினார்கள் என்றும், திடீரென்று சீன வீரர்கள் அந்த இடத்தைவிட்டுப் பின்வாங்கினார்கள், இந்திய ராணுவம் கூடாரங்களைக் களைந்தது என்றும் வெவ்வேறு செய்திகள்.
இந்த மாதிரி இரு நாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்சனை, இராணுவப் பிரச்சனைகளின்போது சம்பந்தமில்லாத மூன்றாவது நாட்டு ஊடகங்கள் (இந்த விஷயத்தில் அல் ஜசீராவாக இருக்கலாம் இல்லை சி.என்.என் ஆகவும் இருக்கலாம்) இன்னும் தெளிவாகச் சொல்லும்னு நினைக்கிறேன்.
சீனா, அவர்கள் பக்கம் எந்த இழப்பில்லை என்று சாதிப்பது போல, ஒவ்வொரு நாடும் அந்த நாட்டு மக்களின் உணர்ச்சிக்காக உண்மை நிலையை பட்டவர்த்தனமாகச் சொல்லாது என்றே நம்புகிறேன்.
KM Sir,
இங்கு எதையும் நான் உணர்ச்சி வயப்பட்டு எழுதவில்லை மேலும் நமது ராணுவத்தை குறை சொல்லியும் எழுதவில்லை. வீண் விளம்பரத்திற்காக நான் குறிப்பிட்டு எழுதி இருப்பதை போல நூற்றுக்கணக்கான வீடியோக்கள் யூடியூபில் காணக்கிடைக்கின்றன
தேசத்திற்க்காக தங்களது குடுமபத்தையும் மறந்து, எல்லையில் வீர போரிட்டு உயிர் தியாகம் செய்தவர்களை, பீகார் தேர்தலுக்காக இறந்தவர்கள் என்று கொச்சைப்படுத்துவது எந்த வகையோ?
comman-man
அரைகுறையாக விஷயத்தை புரிந்துகொண்டு
உளற வேண்டாம். இந்த மோதலுடன்
பீகாரை சம்பந்தப்படுத்தி முதலில் பேச
ஆரம்பித்தது ஆளும் கட்சி தான். வீரர்களின்
தியாகத்தை, கட்சியின் சாதனையாக
பயன்படுத்தத் துவங்கியது உங்கள் கட்சி தான்.
ஒருவர் தேசத்திற்க்காக பேசினாலே கடைசியில் அவர் பிஜேபி என்று கூவுவதை பார்த்தால் , மற்றவர்களுக்கு தேச பக்தி இருக்க முடியாது என்பதை போன்று முடிவெடுத்து விட்டார்கள் போலும் .
பரிதாபம் தான் மிஞ்சுகிறது.இதே காரணங்களுக்காக நீங்களும் தேச எல்லையை குறித்து எந்த கட்டுரையையும் எழுத முடியாது.எழுதினால் நீங்களும் பிஜேபி தான் என்று முத்திரை குத்த படுவீர்கள்
//“சீன துருப்புகள் பின்வாங்கியதை நான் வரவேற்கிறேன். அந்த படைகள் எந்த இடத்திலிருந்து பின்வாங்கியது என்பதை யாராவது (மத்திய அரசு) சொல்வார்களா?//
ஏம்பா…சீனப் படைகள் பின்வாங்கியது என்பதை நம்பறதானே. அவங்க எந்த இடத்துவரை உள்ள நுழைஞ்சாங்களோ அந்த இடத்திலிருந்துதானே பின்வாங்கியிருக்கணும்?
இவர் மந்திரியாக இருந்ததினால் எல்லா விவரமும் இவருக்குத் தெரிஞ்சிருக்கணும். இவரே அதை நமக்குச் சொல்லலாமே. ஏன் மேப்பைக்கூட அச்சடிச்சுத் தரலாமே. இந்த மாதிரி ராணுவ, எல்லை, இரு நாட்டு விஷயங்களில் செய்திகளில் தெளிவு இருக்க வாய்ப்பு குறைவு அல்லவா?
// புதியவன்,
இரு நாட்டு விஷயங்களில் செய்திகளில்
தெளிவு இருக்க வாய்ப்பு குறைவு அல்லவா? //
பிரதமராக இருக்கப்பட்டவர் கொஞ்சம்
யோசித்து, பக்குவமாகப் பேசியிருந்தால்
இத்தகைய கேள்விகளுக்கே
இடமிருந்திருக்காது அல்லவா…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
தேசப்பற்றை வெளிப்படுத்தி, ஒற்றுமையை காண்பிக்க வேண்டிய விதத்திலும், தருணத்திலும் இருக்கும் நாம், இது போன்ற நக்கலும் நையாண்டித்தனமும் வெளிப்படும் வகையில் பதிவுகளை
இட வேண்டிய அவசியம் தான் என்னவோ?
சீனர்களை வீரத்தை தான் நாம் உயர்த்தி பிடிக்கிறோம்?
comman-man,
உங்களைப் போன்ற ஜால்ராக்களிடமிருந்தும்,
கட்சி வெறியர்களிடமிருந்தும் தேசப்பற்றை
கற்க வேண்டிய அவசியத்தில் நானில்லை.
நாட்டின் விடுதலைக்காக சுதந்திரப்போராட்டத்தில்
ஈடுபட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் நான்.
உங்கள் கூட்டம் அப்போது வெள்ளையனுக்கு
வால் பிடித்துக் கொண்டிருந்தது என்பதே
உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எதிரிகளுடனான போரைக்கூட,
சுயநலத்திற்காக, கட்சியின் நலத்திற்காக
பயன்படுத்த முயற்சிசெய்யும் சுயநலக்
கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு சுயமாக
எதையும் சிந்திக்கும் திறன் காணாமல்
போய் விடுகிறது.
40 ஆண்டுகள் இந்த நாட்டின் ராணுவத்தின்
ஒரு பகுதியாக பணியாற்றியவன் நான்.
நமது ராணுவத்தை குறை சொல்வேனா… ?
இந்த இடுகையில், சீனத்தை உயர்த்தியோ,
நமது ராணுவத்தை குறை சொல்லியோ
எந்த இடத்தில் எழுதப்பட்டிருக்கிறது ?
நிர்வாகத்தை, ஆட்சியின் குறைகளை
சுட்டிக்காட்டினால், அது தேசவிரோத
செயல்களாகி விடுமா…?
எதை எழுத வேண்டும்,
எப்படி எழுத வேண்டும் என்பதை
ஜால்ராக்களிடமிருந்து தெரிந்து கொள்ள
வேண்டிய அவசியத்தில் நானில்லை.
நியாயமாக, கருத்துகளை முன்வைத்து
விவாதிப்பவர்களுக்குத் தான் இந்த தளம்.
தங்கள் கட்சியை வளர்க்க மற்றவர்களை
தேச விரோதிகளாக சித்தரிக்க
முயற்சிப்பவர்களுக்கு இங்கே இடமில்லை;
உங்கள் குற்றச்சாட்டுகளை உடனடியாக
திரும்பப்பெறுங்கள். இல்லையேல்
உங்கள் பின்னூட்டங்களுக்கு இனி இங்கே
இடமிருக்காது என்பதை அறியவும்.
அய்யா,
உங்கள் தேச பற்றை மெச்சுகிறேன். அதற்காக குறிப்பிட்ட கட்சியின் மீது கொண்ட வெறுப்புணர்ச்சியை காண்பிப்பதற்காக எல்லோரும் , தங்களை அறியாமலேயே,எதிரி நாடுகளுக்குகாக நாம் நம்மை அறியாமலேயே வக்காலத்து கொண்டிருக்கிறோம்.
இறந்த ராணுவ வீரர்களை பீகார் தேர்தலுக்காக இறந்தவர்கள் என்பதை எந்த விதத்திலும் தேச பற்று என்று ஏற்று கொள்ள முடியவில்லை. இறந்த வீரர்களின் ஆன்மாவும்,குடுமபதர்களும் இந்த விரோதிகளை மன்னிக்க முடியாது.ஒருவர் தேசத்திற்க்காக பேசினாலே கடைசியில் அவர் பிஜேபி என்று கூவுவதை பார்த்தால் , மற்றவர்களுக்கு தேச பக்தி இருக்க முடியாது என்பதை போன்று முடிவெடுத்து விட்டார்கள் போலும் .
பரிதாபம் தான் மிஞ்சுகிறது.இதே காரணங்களுக்காக நீங்களும் தேச எல்லையை குறித்து எந்த கட்டுரையையும் எழுத முடியாது.எழுதினால் நீங்களும் பிஜேபி தான் என்று முத்திரை குத்த படுவீர்கள்
இந்த ஏமாற்று வேலையெல்லாம்
என்னிடம் வேண்டாம்.
உளறல்களுக்கு ஒரு எல்லை உண்டு.
வேண்டுமானால், உங்களுக்கென்று
ஒரு தளத்தை உருவாக்கிக்கொண்டு
அங்கே எதை வேண்டுமானாலும்
எழுதிக் கொள்ளுங்கள்.
நான் சொன்னதை நீங்கள்
கண்டுகொள்ளவில்லை;
நான் எழுதுவதை தேச விரோதம்
என்று நீங்கள் சொன்னதை இன்னமும்
திரும்பப்பெறவில்லை;
உடனடியாக நீங்கள் சொன்னதை
வாபஸ் பெறுகிறேன் என்று
வெளிப்படையாகச் சொல்லாவிட்டால்,
இனி உங்களுக்கு இந்த தளத்தில்
இடம் கிடையாது என்பதை அறியவும்.
.
கா.மை. சார்… இந்த மாதிரி பின்னூட்டங்களை கண்டுகொள்ளாமல் கடந்துசெல்லணும். எதையும் கேள்வி கேட்கவேண்டும். இதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. நேற்று ஜெ.எஃப்.கே என்ற படத்தை யதேச்சையாகப் பார்த்தேன். கென்னெடி மரணம் பற்றிய ஜல்லியடிப்பு என்பதால் 45 நிமிடங்கள் பார்த்துவிட்டு, இன்னும் 2 1/2 மணி நேரமா என்று நினைத்து ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்து கடைசி 1/2 மணி நேர கோர்ட் சீன் பார்த்தேன். அதில் சொன்ன பாயிண்டுகள் எல்லாம் முழுவதும் நினைவில் இல்லை. ஆனால் பார்த்த போது, நீங்கள் எழுதும் இடுகைகள்தான் என் நினைவுக்கு வந்தன. அதில் சொல்கிறார், நீங்கள் நடைபெறும் அரசுக்கு ஆதரவாக இருப்பது தேசப்பற்று அல்ல, அதைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஆதரவாக இருப்பதுதான் தேசப்பற்று, தேசத்தின் ஆன்மா ஆள்பவர்களிடமோ இல்லை, ஆயுதச் சந்தை வியாபாரிகளிடமோ (இந்தியாவைப் பொருத்த வரையில் பிஸினெஸ் டைகூன்ஸ்) இல்லை, தனி ஒருவனின் முழுமையான சுதந்திரத்திலும், தேசம் எதனை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ, அது நீர்த்துப் போகாமல் பாடுபடுபவர்களிடம்தான் இருக்கிறது…இதுபோல வாதங்களில் அவர் கென்னெடியின் மரணத்தை ‘அவர் மறைந்துவிட்டார்..புதிய அரசு வந்துவிட்டது, இனி எதற்கு பழையதை கிளறணும்’ என்று அசிரத்தையாக இருக்கும் போக்கைச் சாடிப் பேசுவார்.
நீங்கள் எதற்காக எழுதியிருக்கிறீர்கள் என்பதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.
புதியவன்.
சரியான கருத்துகளை இங்கு எடுத்துக்கூறி இருக்கிறீர்கள் …
———–
நீங்கள் நடைபெறும் அரசுக்கு ஆதரவாக
இருப்பது தேசப்பற்று அல்ல,
அதைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஆதரவாக
இருப்பதுதான் தேசப்பற்று,
தேசத்தின் ஆன்மா ஆள்பவர்களிடமோ
இல்லை, ஆயுதச் சந்தை வியாபாரிகளிடமோ
(இந்தியாவைப் பொருத்த வரையில் பிஸினெஸ்
டைகூன்ஸ்) இல்லை,
தனி ஒருவனின் முழுமையான சுதந்திரத்திலும்,
தேசம் எதனை அடிப்படையாக வைத்து
கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ, அது நீர்த்துப்
போகாமல் பாடுபடுபவர்களிடம்தான் இருக்கிறது…
—————
உங்களது இந்த பின்னூட்டத்திற்கு
மிக்க நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கே.எம்.சார் : இந்த மாதிரி ஆசாமிகளுக்கெல்லாம்
விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தால், உங்கள் நேரம்
தான் வீணாகும். கட் பண்ணி விட்டு போய்க்கொண்டே
இருங்கள்.
எந்த கேள்விகளுக்கும் தலைவரிடமிருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை. ஆனால் புதியவன் சார், பிரதமரை குறை கூறாமல் ப.சி யை தாக்கியிருக்கிறார். கொஞ்சம் மனசாட்சியோடு பேசியிருக்கிறார் என்பதால் அதுவே பரவாயில்லை.