….
….
….
….
இயக்குநர் ஸ்ரீதரின் படம் – மீண்ட சொர்கம்.
இசை, நடனம், நடிப்பு, இயக்கம் என்று
சகல விதங்களிலும் சிறப்பாக இருந்தது இந்தப்படம்.
குறிப்பாக, ஒளிப்பதிவாளர் வின்செண்டின் கைவண்ணம்
பிரமாதம்… இங்கு ஒளிபரப்பாகும் பாடலின்போது,
பத்மினி நடனமாடிக் கொண்டே – ஓடிக்கொண்டே –
இருப்பார். அவரை துரத்திக்கொண்டே காமிராவும்
செல்லும்… அற்புதமான காமிரா கோணங்கள்…!
படம் வர்த்தக ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் கூட,
மிகச்சிறந்த, தரமான படம் என்று அந்தக் காலத்திலேயே
விமரிசிக்கப்பட்டது.
“கலையே என் வாழ்க்கையின் நிலை மாற்றினாய் –
நீ இல்லையேல் நானில்லையே….’
படம் – மீண்ட சொர்கம்
பாடல் – கவிஞர் கண்ணதாசன்
ராகம் -பாகஸ்ரீ
பாடியவர்கள் – ஏ.எம்.ராஜா, பி.சுசீலா
இசை – டி.சலபதி ராவ்
…….
…….
இது கூடுதல் போனஸ் –
ஏ.எம்.ராஜா, பி.சுசீலா –
“துயிலாத பெண்ணொன்று கண்டேன் …”
….
….
———————————————————————————————————————————————
கிட்டத்தட்ட இதுபோன்ற காட்சியமைப்பை (நடனத்துடன் காமிரா செல்வது) ஸ்ரீதரின் இன்னொரு படமான தென் நிலவில் வரும் ‘காலையும் நீயே மாலையும் நீயே’ பாடலிலும் காணலாம்.
atpu555,
நீங்கள் சொல்வது மிகவும் சரி. ஸ்ரீதருக்கு
வித்தியாசமான காமிரா கோணங்களில்
ஆர்வம் அதிகம்.
அவருக்கு ஏற்றார்போல் கிடைத்தார்
வின்செண்ட். இவர்களின் காம்பினேஷனில்
வெளிவந்த பல படங்களில் இந்த
அற்புதத்தைப் பார்க்கலாம்.
படம் தோற்றாலும் கூட இந்த காமிரா
கோணங்கள் நிச்சயம் பாராட்டப்படும்.
நல்ல ரசிகர்கள் தான் நல்ல படைப்புகளை
உருவாக்க முடியும். ஸ்ரீதரும், வின்செண்டும்
இதற்கு எடுத்துக்காட்டு.
இப்போது கூட தமிழ்த் திரையுலகில்
சிறந்த ஓளிப்பதிவாளர்களுக்கு
பஞ்சமே இல்லை; ஆனால் அதை
ரசித்துச் செயல்படுத்தும்
இயக்குநர்களின் எண்ணிக்கை தான்
குறைவு.
.
– வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்