…..
…..
…..
……
நான் முதன் முதலில் பானிபூரி சாப்பிட ஆரம்பித்தது –
வடக்கே வளர்ந்தபோது, 7-8 வயது இருக்கும்போதே.
அப்போது – ஒரு அணாவிற்கு 4 பானி பூரி கிடைக்கும்.
அப்போதெல்லாம் வடக்கே மட்டும் தான் பானி பூரி
வழக்கத்தில் இருந்து வந்தது. ஆனால் இப்போது
தோசா, வடா வடக்கே அறிமுகமாகி விட்டது போல்,
பானி பூரியும் அகில இந்திய அளவில்
அறிமுகமாகி விட்டது. தமிழ்நாட்டில் இன்று பானி பூரி
கிடைக்காத ஊரே இல்லை.
கொரானா பயம் காரணமாக கடந்த 4 மாதங்களாக
மக்கள் பானி பூரியை தவிர்த்து வந்தனர்…
அவர்கள் கவலையைப் போக்கும் ஒரு செய்தி …
கொரோனா பயமின்றி பானிபூரி சாப்பிட, குஜராத் மாநிலம்
ஆமதாபாத்தை சேர்ந்த பாரத்பாய் விகாபாய் பிரஜாபதி,
என்கிற ஒரு இளைஞர் ஒரு ‘பானி பூரி ஏடிஎம்’மை
தயாரித்திருக்கிறார்.
இந்த மிஷினில், ரூ.20 நோட்டை உள்ளே செலுத்தினால்,
கன்வேயர் பெல்டில், பூரியுடன் பானி, உருளைக்கிழங்கு
சேர்த்த கலவை, ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது.
மெதுவே வருகிறது….இதனை அப்படியே எடுத்து சாப்பிடலாம்.
கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்கள் பயமின்றி
பானி பூரி சாப்பிடவும் இந்த ஏடிஎம் வழி செய்கிறது.
நம்ம ஊருக்கு எப்போது வருமோ தெரியாது.
எந்தவித மார்க்கெட்டிங் முயற்சிகளும் இன்றியே –
இவையெல்லாம் வேகமாக விற்கக்கூடிய விஷயம் என்பதால்,
விரைவில் இங்கும் விற்பனைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கலாம்.
இப்போதைக்கு வீடியோவிலாவது பார்த்து மகிழ்வோமே…!!!
…….
…….
.
—————————————————————————————————————————————————-
//கொரோனா பயம் காரணமாக// – அப்படி இருக்க வாய்ப்பில்லை. அதைக் கொண்டுவரும் தெருவோர வியாபாரிகள், சுகாதாரமின்மை போன்றவற்றால்தான் அதன் வியாபாரம் படுத்தது.
இது காம்ப்ளிகேஷன் இல்லாத ஆட்டமேடட் மெஷிந்தான். ஆனால் preparation, பானிபூரி வைக்கப்படும் இடத்தைத் தொடுபவர்கள் (கன்ஸ்யூமர்ஸ்) என்று ஏகப்பட்ட இடத்தில் வைரஸ் பரவும். இந்த மெஷின் கொரோனாவுக்கான மாற்று இல்லை. இரண்டு வேளை அல்லது மூன்று வேளைகளில் ரெப்ளெனிஷ் பண்ணியாச்சுன்னா, ஒரு மேன்பவருக்கு அங்கு வேலை இல்லை. அதுதான் விஷயம். இது sustainableஆ என்பதில் எனக்குச் சந்தேகம் உண்டு. It requires considerable investment and maintenance charges.
நான் இரு கையாலும் பூந்தியிலிருந்து லட்டு உருட்டுவதை (ஆயிரக் கணக்கில். சின்ன ஸ்டூலில் உட்கார்ந்துகொண்டு இந்த வேலையைச் செய்வார்கள். என் மனதில் பாவம் இவர்கள் என்று தோன்றும். அதிலும் தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே) பார்த்திருக்கிறேன். பூந்தியிலிருந்து ஆட்டமேட்டிக்கா லட்டு உருட்டுவதையும் காணொளியில் பார்த்திருக்கிறேன். (திருப்பதில அவ்வளவு qty என்பதால் அதற்கு மெனெக்கெடுவதில்லை. அதனால்தான் சப்பட்டை வட்டமாக லட்டு வரும்)