….
….
என்ன ஆயிற்று டாக்டர் சு.சுவாமிக்கு….?
துணிந்து விட்டாரா…?
டாக்டர் சுவாமி தொடர்ந்து பாஜக தலைமையை விமரிசிக்க
துவங்கி விட்டார்.
முதலில், உத்தராகாண்ட் பாஜக அரசு கேதார்நாத், பத்ரிநாத்
உட்பட 51 கோவில்களை தன் வசப்படுத்தியதை எதிர்த்து,
உ.காண்ட் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
தொடர்ந்தார்.
அதற்கு பதிலளித்த பாஜக அரசு, சு.சுவாமி தன் அரசியல்
லாபத்திற்காகவும், சொந்த நோக்கங்களுக்காகவுமே
எதிர்த்து வழக்கு போட்டிருக்கிறார் என்று நீதிமன்றத்தில்
வாதம் செய்தது.
இதற்கு பதிலாக டாக்டர் சுவாமி இன்று ட்விட்டரில்
பாஜகவினர் தன்னை எதிர்ப்பதற்காக,
கிறிஸ்தவ மிஷனரிகளிடமிருந்து கூட
பண உதவியைப் பெற்றுள்ளனர் என்று தாக்குகிறார்….
மோடிஜியின் வலது கரமான அமீத்ஜிக்கு சம்பந்தமில்லாமலா
இதெல்லாம் நிகழ்கின்றன என்று வினவுகிறார்….
இது தொடர்பான தலைப்புச் செய்திகள், ட்வீட்டுகள்,
அவரது ஆதரவாளர்கள் சிலரின் பதில்கள் கீழே –
—————-
சு.சுவாமி வழக்கு –
—
…
உத்தராகண்ட் பதில் வாதம் –
—
…
சு.சுவாமி தாக்குதல் –
…
…
————————————————–
அடுத்து இந்தியா-சீனா எல்லைத் தகறாரில், தேசிய பாதுகாப்பு
ஆலோசகர் அஜீத் தோவல் பேச்சு வார்த்தை நடத்தி, சீன
துருப்புகளை பின் வாங்கச் செய்ததைப்பற்றி குறிப்பிடும்போது,
அறிவுகெட்டத்தனமாக, மீடியாக்களும் சில அதிகாரிகளும்
இதற்கு அளவிற்கு மிஞ்சிய முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
18 முறை பிரதமர் மோடிஜியும், சீன ஜனாதிபதி ஜிங்பிங்கும்
சந்தித்து பேசி நடக்காததையா தோவல் பேச்சு வார்த்தை
சாதித்து விடப்போகிறது என்று சவால் விடுகிறார்.
அது தொடர்பான ட்வீட்டும் அதற்கான பதில்களும் கீழே –
….
…
.
————————————————————————————————————————————————-
KM Sir,
போட்டோ ஷூட்டும், வீடியோ ஷூட்டும் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. அது மிக பெரிய காமெடியாக மாரி நிற்கிறது. அந்த காமெடியில் இருந்து திசை திருப்புவதற்கு, இவரை மேலிடம் பயன் படுத்துகிறது.
அமித்ஷா விற்கு தெரியாமலா நடக்கும் என்பவர், ஏன் நரேந்திர மோடிக்கு தெரியாமலா நடக்கும் என்று கேள்வி எழுப்பாததின் மூலம் நரேந்திர மோடியை புனிதர் ஆக்குகிறார்.
பிஜேபியின் அறிக்கைகள், நடவடிக்கைகள் எல்லாம் கருணாநிதியின் பார்முலாவுடன் நூறு சதவிகிதம் ஒத்து போகும். கருணாநிதி எல்லோரையும் ஊழல்வாதி என்பார் – தான் செய்த ஊழலை மறைக்கவும் மக்கள் மனதில் இருந்து நீர்த்து போக செய்வதற்காகவும். அதே மாதிரி பிஜேபி எல்லாரையும் கிறிஸ்துவ மிஷனரிகளிடம் இருந்து பணம் வாங்குகிறார்கள் என்பார்கள். காரணம் தான் வாங்குவது வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக. இதே மாதிரி எதிர்க்கட்சி மீது அவர்களின் குற்றசாட்டுகளை கவனியுங்கள் உண்மை புரியும்
சுப்ரமணியன் சுவாமி கேட்கிறார்
18 தடவை பிரதமரும், சீன ஜனாதிபதியும் பேச்சு
வார்த்தை நடத்திய பின் தான் இப்போதைய
கால்வான் மோதல் நடந்திருக்கிறது. ஆஃப்டரால்
அஜித் தோவல் பேசினால் சகல பிரச்சினைகளும்
தீர்ந்து விடுமா என்று. இந்த நிலை எத்தனை
நாட்களுக்கு நீடிக்கும் என்று ஆளும் கட்சி எம்.பி.
கேட்கிறார். ஆனால் யாரும் வாய் திறந்து
அவருக்கு பதில் சொல்வதில்லை;
சு.சுவாமியுடன் வம்பு வைத்துக்கொள்ள பாஜக
தலைவர்கள் பயப்படுகிறார்களா ?
காங்கிரஸ் மட்டுமல்ல; பாஜக தலைவர்களின்
பல ரகசியங்களும் சு.சுவாமிக்கு தெரியும்.
வம்பு வைத்துக்கொண்டால், அம்பலப்படுத்தி
விடுவார்; அதான் பல்லைக்கடித்துக்கொண்டே
வேறு வழியின்றி மௌனம் சாதிக்கிறார்கள்.