….
….
” கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த ”
தூக்குத் தூக்கி அந்த காலத்தில் அதன் பாமர ரஞ்சகமான
பாடல்களுக்காகவும், சிவாஜியின் நகைச்சுவை நடிப்புக்காகவும்
புகழ்பெற்ற படம். மிக நன்றாக ஓடியது.
இதன் இசையமைப்பாளர் திரு.ஜி.ராமநாதன்.
தயாரிப்பாளர் திரு. ஆர்.எம்.கிருஷ்ணசாமி.
தயாரிப்பாளரும் இசையமைப்பாளரும் சேர்ந்து சிவாஜிக்கான
பாடல்களைப் பாட டி.எம்.சௌந்தரராஜனை முடிவு செய்து
ரிஹர்சலும் நடத்தி விட்டார்கள்.
ரிக்கார்டிங் சமயத்தில் தான் இது சிவாஜிக்கு
தெரிய வந்திருக்கிறது…. சிவாஜி தனக்கு
சி.எஸ்.ஜெயராமன் குரல் தான் சரிப்படும் என்று
அதுவரை நினைத்துக்கொண்டிருக்கிறார்….
அதையே அவர்களிடமும் சொல்லி இருக்கிறார்…
ஆனால் பதிவு செய்யப்பட்ட பாடலை போட்டுக்காட்டியவுடன்,
சிவாஜி அசந்து போய், முழுமனதுடன் அதை வரவேற்று,
எதிர்காலங்களில் தனது பாடல்களுக்கு டி.எம்.எஸ்.
அவர்களையே பரிந்துரை செய்திருக்கிறார்.
இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட் …
ஆனாலும், கிட்டத்தட்ட அனைத்துமே பாமரர்களுக்கான
பாடல்கள் என்று தான் சொல்ல வேண்டும் ….
கொஞ்சம் கவித்துவமான பாடல் …
என்று இதை மட்டும் ( 🙂 ) கூறலாம்
என்று நினைக்கிறேன்.
படம் – தூக்குத் தூக்கி –
பாடல் – மருதகாசி
பாடியவர்கள் -டி.எம்.எஸ்.,எம்.எஸ்.ராஜேஸ்வரி
இசை – ஜி.ராமநாதன்
…..
…..
‘.
—————————————————————————————————————————————