….
….
…
இது அதற்குப் பிறகு –
….
இது அதற்குப் பிறகு –
…
….
இது அதற்குப் பிறகு -பெரியாரை பிடித்தபோது –
…..
இது கம்பன் கழகத்தில் – ராமனை பிடித்தபோது –
….
….
இது – எல்லா அனுபவங்களுக்குப் பிறகு பேரறிஞராக மாறிய பிறகு –
….
…..
இனி ….?
தமிழக பாஜகவில் 10 உதவித்தலைவர்களுக்கான இடங்களில்
இதுவரை 9 -க்கு தான் பெயர்களை அறிவித்திருக்கிறார்கள்.
இந்த செய்தி இன்னும்
பழ.கரு. காதுகளுக்குப் போய்ச்சேரவில்லையா… 🙂 🙂
—————-
ஆனால் – அங்கே இப்படிப் பேசுபவரை
சேர்த்துக்கொள்வார்களா – என்கிறீர்களா…?
அதற்கென்ன –
“சைவமும்” இந்து மதத்தின் ஒரு அங்கம் தானே…?
ஆதிசங்கரர் சொன்ன “ஷண்மதத்”தில் – சேர்த்தி தானே…
என்று பேசி இன்னொரு வீடியோ –
வெளியிட்டு விட்டால் போயிற்று… !!!
பேரறிஞர் கருப்பையாவுக்கு தெரியாததா…?
– புதியதா….?
அல்லது பழக்கமில்லாததா…? 🙂 🙂
.
———————————————————————————————————————————————————-
அருமை.
A LEARNED MAN PAZHA KARUPPIAH !!
HE WOULD HAVE SWITCHED OVER,, TO MANY PARTIES !!
NO DOUBT !!
BUT JOINING IN B J P !!
MAY BE IMPOSSIBLE FOR HIM !!!!
SURE BRO !!!
இவரால் கட்சிக்கு ஆதாயம் இருக்கும் என்றால் சேர்த்துக்கொள்ளப் போகிறார்கள். பிஜேபி அப்படி இமேஜ் பார்த்து சேர்த்துக்கொள்ளாமல் போகுமா என்ன!
யாருக்கும் வெட்கம் இல்லை!
அய்யா கருப்பையாவுக்கு தகுதிக்கொன்றும்
குறைச்சல் இல்லை; வெள்ளையும் சள்ளையுமாக
எப்போதும் காட்சியளிப்பார்; நல்ல தூய தமிழ்
சரளமாக வரும். நம்பகத்தன்மை என்றால்
கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடியவர்.
அதனாலென்ன ? அரசியலுக்கு
அது தானே முதல் தகுதி. பாஜகவில் அவருக்கு
ஏற்ற ஒரு இடம் கிடைக்குமென்றால்
பாஜகவில் வெகு சீக்கிரம் அவரைப் பார்க்கலாம்.
“பாரத் மாதா கீ ஜெய்” என்கிற அவரது
குரலையும் கேட்கலாம்.
பழ கருப்பையா அருமையான பேச்சாளர். பாவம்… அதை வைத்து வியாபாரம் செய்ததால் நாஞ்சில் சம்பத் போல வை.கோபாலசாமி போல மதிப்பிழந்தவர்.
ஆனாலும் திராவிடீயச் சிந்தனை உள்ள பழ.கருப்பையா பாஜகவில் சேரமாட்டார் என்றே நினைக்கிறேன். (முன்னால திமுகவுல சேர்ந்ததற்கு, அவர் தயாரித்த படம் கருணாநிதி டிவிலயோ இல்லை சன் டிவிலயோ வாங்கிக்கணும் என்பதற்காக போனார் என்றார்கள். அதுனால, இந்த நாக்கு வியாபாரிகளை நம்பமுடியாது)
புதியவன்,
// ஆனாலும் திராவிடீயச் சிந்தனை உள்ள பழ.கருப்பையா //
புதியவன், மேலே (கம்பன் கழகம் )
கருப்பு-வெள்ளை புகைப்படத்தின்
கீழே இருப்பதை கவனித்து விட்டு மீண்டும்
உறுதி படுத்துங்கள் பார்ப்போம்….. 🙂 🙂
( ராமன் தான் இந்தியப் பண்பாட்டின் முகவரி
என்று பழ.கருப்பையா கூறினார்.)
-நான் பலமுறை அவரை
ஆசிரியர் சோ அவர்களின் மேடையில்
பேசுவதைப் பார்த்து விட்டு
ஏமாந்தவன்… 🙂 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நீங்க கேட்கிற கேள்வி என்னைச் சிரிக்க வைக்கிறது. கருணாநிதி, வை கோபாலசாமி இவர்கள் வழியில் பழ கருப்பையா போனாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லைதான். இவர் நாஞ்சில் சம்பத்தோடு போட்டியிடத் தகுந்தவரா இல்லை வை கோபாலசாமியோடயா என்று யோசிக்கிறேன்.
இந்தக் கூட்டத்தின் ஆடியன்ஸுக்கு ஏற்றவாறு பேசுகிறார் பழ.கருப்பையா. இதேபோல காசை வீசினால், பாஜக மேடையிலும் பேசக்கூடியவர்தான் பழ கருப்பையா.