திமுக தொண்டர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் ஒன்றுமே தோன்றாதா…?


ஒரு காணொளி பார்த்தேன்.
முதலில் நீங்களும் பார்த்து விடுங்கள்… பிறகு பேசுவோம்.

” செய்ய மாட்டேனென்று –
சொன்னதையெல்லாம் செய்வோம்..”

…………

…………

இந்த காணொளியில் வரும் காட்சிகள் எல்லாம்
பல்வேறு சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்டவர்களால்
உண்மையிலேயே பேசப்பட்டவை தான்.
ரொம்ப நாட்கள் முந்தியெல்லாம் அல்ல – எல்லாமே
கடந்த 5-6 வருடங்களுக்குள் சொல்லப்பட்டவை தான்.

அவர்கள் முதலில் சொன்னதற்கும் –
பின்னால் செய்தவற்றிற்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா…?

சாதாரண பொது மக்களைப்பற்றி அவர்கள் எப்படி
வேண்டுமானாலும்
நினைத்துக் கொள்ளட்டும்… பரவாயில்லை;

ஆனால் – அவர்களுக்காக உயிரைக்கொடுத்து, உழைக்கும்
திமுகவின் அடிமட்டத் தொண்டர்களைப்பற்றி
அவர்கள் என்ன நினைக்கிறார்கள்…?
எப்படி ஏமாற்றினாலும் எதுவும் நினைத்துக் கொள்ள
மாட்டார்கள்; வெறும் ஜால்ரா’க்கள் என்றா…?

அவர்கள் நினைப்பது ஒரு பக்கமிருக்கட்டும்.
அந்த அடிமட்ட திமுக தொண்டர்களுக்கு இவையெல்லாம்
பற்றி எதுவுமே தெரியாதா…? நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு
தானே இருக்கிறார்கள்…?

தலைமைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…
அவர்கள் எஜமானர்கள்; நாங்கள் அடிமைகள்.

தேர்தல் வரும்போதெல்லாம் உதயசூரியனை
ஜெயிக்க வைக்க உயிரைக்கொடுத்து உழைப்பது மட்டும் தான்
எங்கள் கடமை; எங்கள் வேலை – என்று அவர்கள்
நினைக்கிறார்களா…?

இவர்கள் எல்லாம் இந்த ஏமாற்று பரம்பரைக்கு
“நேர்த்து” விடப்பட்டவர்களா…?

அவர்களால் ஏன் சிந்திக்க முடியவில்லை …?
ஏன் அவர்கள் இப்படிப்பட்ட தலைமைக்கு அடிமையாக
இருக்க வேண்டும்…? சுயமரியாதைக் கட்சியினருக்கு
முதலில் சுயமரியாதை இருக்க வேண்டாமா… ?

இப்படிப்பட்ட, தொண்டர்களையே ஏமாற்றும் தலைமையை
அவர்கள் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்…? அதுவும் இன்னும்
எத்தனை நாட்களுக்கு…? தங்கள் வாழ்நாள் முழுவதுமா…?

.
———————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to திமுக தொண்டர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் ஒன்றுமே தோன்றாதா…?

 1. புவியரசு சொல்கிறார்:

  திமுக உயர் மட்டத்தை நினைத்தால் கோபம் வரும். ஆனால்
  கீழ்மட்டத் தொண்டர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
  பிறந்ததிலிருந்தே, தந்தை காலத்திலிருந்தே குடும்பம்
  முழுவதும் திமுகவாக இருப்பவர்களை எனக்குத் தெரியும்.
  அவர்களை நினைத்தால் பாவமாகத் தான் இருக்கிறது.
  கட்சிக்கு விசுவாசமாக இருக்க நினைத்து, தலைமையிடம்
  ஏமாந்து போகிறார்களே.

 2. Raghavendra சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  அவர்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள் ?
  அவர்களை வேறு எந்த கட்சியில் சேரச்சொல்கிறீர்கள் ?
  அவர்கள் இத்தனைக் காலமாக எதிரிகளாக நினைத்துச்
  செயல்பட்ட அதிமுக வுடனா ?
  பாஜகவுடனா ? இல்லை பாமகவுடனா ?
  திமுக தொண்டர்களின் mindset வித்தியாசமானது.
  திமுக தலைவர்கள் சுலபமாக மற்ற கட்சிகளுடன்
  சேர்ந்து ஒன்றிணைந்து விடுவார்கள். கூடிக் குலவுவார்கள்.
  ஆனால், அடிமட்ட திமுக தொண்டனால்
  இப்படியெல்லாம் கட்சி மாற முடியாது.
  இது அவர்களின் இயற்கை குணம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ராகவேந்திரா,

   நான் அவர்களை வேறு எந்தக் கட்சியிலும்
   சேர வேண்டுமென்று எக்காலத்திலும்
   சொல்லவே மாட்டேன். எதற்காக அவர்கள்
   வேறேந்த கட்சியிலும் சேர வேண்டும்… ?

   அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு
   வெளியே வாருங்கள்.
   எந்தக் கட்சியும் உங்களுக்கு வேண்டாம்.
   சுதந்திரமாக இருங்கள்… என்று தான் –
   நான் சொல்வேன்.

   எதற்காக எந்தவொரு கட்சிக்கும்,
   அதன் தலைமைக்கும் அடிமையாக
   இருக்க வேண்டும்…?

   சாதாரண பொது மக்கள் யாரும்
   எந்த கட்சியிலும் இருக்க வேண்டியதே இல்லை.

   இன்றைய தினம் நம் நாட்டில்
   கட்சி அரசியல் என்பது வியாபாரிகளுக்கானது.
   பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கானது.
   அவர்கள் கொள்ளையடிக்க, நாம் ஏன் துணை
   நிற்க வேண்டும்..? அவர்களுக்காக நாம் ஏன்
   வக்காலத்து வாங்க வேண்டும் ..?

   தேர்தல் வரும் சமயத்தில் மட்டும் எந்த
   கட்சிக்கு ஓட்டு போடுவது என்பதை
   தீர்மானித்துக் கொண்டால் போதுமே…!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. புதியவன் சொல்கிறார்:

  ரொம்ப நல்லா compile பண்ணியிருக்காங்க. பாராட்டணும்.

  தொண்டர்களைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. அவர்கள் அடிமைக் கூட்டம். எஜமான் என்ன சொன்னாலும் தலையாட்டும் கூட்டம் அது.

 4. jksmraja சொல்கிறார்:

  கட்சி தலைமை, வாரிசு அரசியலை பொறுத்தவரை, பிஜேபி மற்றும் கம்யூனிஸ்ட் மற்ற கட்சிகளை விட மாறுபட்டது. காரணம் கண்ட்ரோல் வேறு எங்கோ இருப்பதனால். அடிமை தனத்தை பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி மட்டும் மாறுபட்டது. சீமானின் சிலசெய்கைகள் கட்சியினராலே விமரிசிக்கப்பட்டு அவர் மாற்றம் அடைந்து இருக்கிறார்.

  கை தட்டுவது, விளக்கு பிடிப்பது ஒரு பலனும் தராது என்று ஒரே ஒரு தொண்டன் சொன்னதாக கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அவர்கள் ஒன்பது கிரகமும் நேர் கோட்டில் வருகிறது என்று விளக்கம் கொடுப்பார்கள். PM Care நிதி ஏன் தணிக்கைக்கு உட்படுத்த கூடாது என்று கேட்டால், அது அயோக்கியத்தனம் என்று பதில் அளிப்பதற்கு பதிலாக அதை தனியாக அப்புறம் பார்ப்போம் என்றுதான் பதில் வரும். ஆக எல்லா கட்சி தொண்டனும் அடிமையே.

 5. jksmraja சொல்கிறார்:

  திமுக தொண்டனாவது தலையை மட்டும் ஆட்டிவிட்டு போவான். நாம் தலைவன் சொல்வதற்கு தலையையும் ஆட்டிவிட்டு, புதுப்புது அர்த்தங்களையும் கொடுப்போம்.

 6. kvicky சொல்கிறார்:

  இதில் எனக்கு ஒரு மாற்று கருத்து இருக்கு. ஆளுமை இல்லாத திமுக மற்றும் அதிமுக கட்சியில இப்போ யாரும் சுயநலம் இல்லாத விசுவாசியா இருக்க மாதிரி தெரியல. ஆதாயம் எதிர் பாக்காம கட்சிக்கு முட்டு குடுக்கறவன் வேணும்னா சமூக ஊடகங்கள்ல சண்ட பிடிக்கறவனா இருக்கலாம். அந்தந்த லெவெல்ல ஆதாயமோ பதவியோ இல்லாம கட்சிக்கோ கொள்கைக்கோ யாரும் கொடி பிடிக்கறாங்கனு யாரும் நினைக்கிறீங்களா?

 7. Jksmraja சொல்கிறார்:

  திரு kvickyஅவர்களே

  யாரும் இல்லை.

  ஆரம்ப காலத்தில் தன் எண்ணவோட்டங்களை எழுதுவதற்காக ப்ளாக்குகள் பலரால் ஆரம்பிக்கப்பட்டது. 2014 இல் பிரசாந்த் கிஷோர் பிஜேபி க்காக வேலை செய்ய ஆரம்பித்த பின், பலருக்கு பணம் கொடுத்து கெடுத்து விட்டான். இப்பொழுது பலருக்கு ப்ளாக்கில் எழுதுவது பணம் கொழிக்கும் தொழில். அதே மாதிரி கமெண்ட் போடுவதும் பலருக்கு பணம் கொழிக்கும் தொழில்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.