சீன நிறுவனங்களிலிருந்து நன்கொடை பெறுவது சரியா – தவறா…?

….
….

….

சீன நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவதாக பாஜக
மீது குற்றம் சாட்டி, அபிஷேக் மனு சிங்வி சில தகவல்களை
வெளியிட்டுள்ளார்….

https://www.hindutamil.in/news/india/561621-prime-minister-narendra-%20%20modi-has-soft-spot-for-china-says-congress.html

இந்து தமிழ் செய்தித்தளத்தில் வெளியாகியுள்ள
செய்தியிலிருந்து சில பகுதிகள் –

————————–

சீன நிறுவனங்கள், மற்றும் சீனாவினால் நிதி முதலீடு
செய்யப்பட்ட இந்திய நிறுவனங்கள் பிஎம் கேர்சுக்கு
உதவி அளித்துள்ளன.

ஹாவேய் ரூ.7 கோடி,
ஷியோமி ரூ.15 கோடி,
ஓப்போ ரூ. 1 கோடி பிஎம் கேர்சுக்கு நன்கொடை அளித்துள்ளன.
ரூ.100 கோடி பிஎம் கேர்சுக்கு நன்கொடை அளித்த பேடிஎம்
நிறுவனத்தில் 38% சீன முதலீடு உள்ளது.

அதே போல் சீன சமூக வலைத்தள நிறுவனமான
டிக் டாக் ரூ.30 கோடி பிஎம் கேர்சுக்கு நிதியளித்துள்ளது.
என்றார் சிங்வி.

பிஎம் கேர்ஸ் எப்படி இயங்குகிறது,
யார் கட்டுப்படுத்துகிறார்கள்? ஒருவருக்கும் தெரியாது.
அந்த நன்கொடை எதற்குப் பயன்படுத்தப் படுகிறது?
தெரியாது. சிஏஜி உட்பட எந்த ஒரு பொது அதிகாரம்
படைத்த அமைப்பும் அதனை தணிக்கை செய்ய முடியாது.
பொது அதிகரத்தின் கீழ் வரும் அமைப்பேயல்ல அது
என்று பிரதமர் அலுவலகம் கூறுகிறது…..

இவ்வாறு போகிறது சிங்வியின் குற்றச்சாட்டு….

—————————-

காங்கிரஸ், பாஜக இரண்டு தரப்புமே சில நாட்களாக
இது போன்ற குற்றச்சாட்டுகளை மாறி மாறி கூறி
வருகின்றன. இரண்டு தரப்புமே அரசியல் லாபங்கள்
கருதியே…இதைச் செய்கின்றன என்பது வெளிப்படை.

நாம் இங்கே ஒரு கேள்வியை விவாதத்திற்கு
எடுத்துக் கொள்கிறோம்…

பி.எம்.கேர்ஸ் -க்கு சீன நிறுவனங்கள் அளிக்கும்
நன்கொடைகளை ஏற்றுக் கொள்வது சரியா… தவறா…?

-அதுவும் டிக் டோக் போன்ற நிறுவனங்களிடமிருந்து…?

– முக்கியமாக கொரோனா காலத்திற்கு பின்பான,
எல்லைத் தகறார்களுக்கு உட்பட்ட இந்தக் காலத்தில்…?

-கருத்து தெரிவிக்க விரும்பும் நண்பர்கள்
பின்னூட்டங்கள் மூலம் அவற்றை தெரிவிக்கலாம்.

.
————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to சீன நிறுவனங்களிலிருந்து நன்கொடை பெறுவது சரியா – தவறா…?

 1. புவியரசு சொல்கிறார்:

  அரசு இன்னமும் டிக்-டோக் -கை
  தடைசெய்யாமல் இருப்பதற்கு
  இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமோ ?

 2. jksmraja சொல்கிறார்:

  என்ன சார் இது. வேண்டும் என்றே அப்பாவி மாதிரி கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். சீன அரசாங்கம் வேறு, சீன படை வேறு, சீன நிறுவனங்கள் வேறு. சீன படை தான் எல்லையில் பிரச்சனை செய்கிறேதே தவிர சீன அரசாங்கமோ சீன நிறுவனங்களோ இல்லை. ஆகையால் தாராளமாக சீன நிறுவனங்களில் இருந்து நன்கொடை பெறலாம். சீன அரசாங்கத்தோடு நல்லுறவிலும் இருக்கலாம். எதிர்க்கட்சி நன்கொடை பெற்றால்தான் தேச துரோகிகள், சீன கைக்கூலிகள் ஆவார்கள். இல்லேங்களா புதியவன் சார்.

  • புதியவன் சொல்கிறார்:

   சோனியா, ராகுல் தலைமையில் இருக்கும் தங்களது சொந்த டிரஸ்டுக்கு இன்னொரு அரசாங்கத்தின் பணத்தைப் பெற்று, அதற்கு ஈடாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதுதான் தவறு. சீன அரசு கொடுத்த (வெளியில் தெரிந்த) 3 லட்சம் டாலர்கள் லஞ்சப் பணம்தான்.

   இங்கு இந்திய நாட்டில் லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள், இந்திய அரசின் பி.எம்.கேர் (அதை ஏன் வெளிப்படையாக்கவில்லை என்பதையெல்லாம் பிறகு பார்ப்போம். அது மோடி அவர்களின் சொந்தக் கணக்கிற்குப் போகிறதா என்பதையெல்லாம், இந்த ராஜீவ் ஃபவுண்டேஷன்போல, வெளிக்கொணர்ந்த பிறகுதான் பேச முடியும்)க்கு நன்கொடை அளிப்பதை தவறு என்று சொல்லமுடியாது.

   நாளை நமக்கும் சவுதிக்கும் ராஜீய ரீதியான தகராறு என்றால், நம்ம ஜேகேஎஸெம் ராஜா அவர்கள், இந்திய முஸ்லீம்கள் அனைவரும் புனித யாத்திரைக்குச் செல்லக்கூடாது என்று சொல்லுவார் போல இருக்கு. நமக்கு எதிராக மலேஷிய அரசாங்கம் நடந்து, அதற்குப் பின்னரும் மலேஷியாவிலிருந்து இஸ்லாமிய மாநாட்டுக்கு மலேஷிய முஸ்லீம்கள் வரவழைக்கப்பட்டார்களே. அது வேறு இது வேறு. நேரடியாக அந்நிய அரசாங்கத்திடமிருந்து லஞ்சம் வாங்கி தங்கள் சொந்த டிரஸ்டில் போட்டுக்கொண்டு, அரசு ஒப்பந்தம் மேற்கொள்வதுதான் தவறு.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    /(அதை ஏன் வெளிப்படையாக்கவில்லை
    என்பதையெல்லாம் பிறகு பார்ப்போம். //

    ஏன் பிறகு பார்க்க வேண்டும்…?
    இங்கேயே அதையும் விவாதிக்க
    வேண்டியது தானே…?

    நான் ஏற்கெனவே உங்களிடம்
    கேட்ட கேள்வி இது… நீங்கள்
    இதைத்தவிர்த்து நழுவப் பார்க்கிறீர்கள்.

    நான் மீண்டும் கேட்கிறேன் –

    பி.எம்.கேர்ஸ் நிதியை வெளிப்படையாக
    வைப்பதில் பாஜகவுக்கு என்ன சங்கடம்…?

    பிரதமர் தலைவராக இருக்கும் ஒரு
    நிதியை, CAG தணிக்கைக்கு உட்படுத்துவதில்
    ஏன் தயக்கம்…?

    நீங்கள் வெளிப்படையாக இந்த
    கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு
    மற்ற விளக்கங்களுக்குப் போகலாமே..

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

     எனக்கு காரணம் பிடிபடவில்லை. அதனால் அதைப்பற்றி எழுதவில்லை. அதைப்பற்றித் தெரிந்த பிறகுநிச்சயம் எழுதுவேன். நானென்ன கண்ணை மூடிக்கொண்டு பாஜக எதிர்ப்பு, ஆதரவு நிலை எடுக்கிறேனா என்ன?

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      “காரணம் பிடிபடவில்லை” என்பது
      உங்களுக்கு ஒரு சாக்கு.

      எனக்கு புரியும் காரணம் – என்னை விட
      புத்திசாலியான உங்களுக்கு புரியாதா என்ன…?

      உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள
      உங்கள் மனம் மறுக்கிறது… அவ்வளவே.

      எந்தக் காரணமாக இருந்தாலும் அது ஒரு
      தவறான முடிவு என்பதை நீங்கள் ஏற்க வேண்டும்.

      பிரதமரின் தலைமையில், முற்றிலும் ஆளும் கட்சி
      சேர்ந்த அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டு,
      அரசாங்கத்தின் அனைத்து அமைப்புகளிடமிருந்தும்
      நிதி பெறும் ஒரு கட்டமைப்புக்கு, CAG தணிக்கை
      கூடாது என்று சொல்வது நிச்சயம் தவறான,
      ஒரு செயலே.
      இதற்கு எங்கிருந்தெல்லாம் நிதி வருகிறது என்றோ,
      இதிலிருந்து யார் யாருக்கெல்லாம் நிதி போகிறது
      என்றோ, பொதுமக்கள் தெரிந்துகொள்வதை
      அவர்கள் ஏன் தடை செய்கிறார்கள்…?

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  இந்தியாவில் வெளிநாட்டு பணம் பெற FCRA என்ற கட்டுப்பாடு
  உள்ளது . வெளிநாட்டு பணம் பெறும் தொண்டு நிறுவனங்கள்
  இதன் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும் . தனியாக வாங்கி கணக்கு
  துவங்கி வந்த பணம் எதில் செலவு செய்யப்பட்டது என்ற
  கணக்கை ஆண்டு தோறும் அளிக்க வேண்டும் .

  கணக்கு தணிக்கை செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் .
  அப்புறம் ஆரம்பித்து குறைந்தது மூன்று ஆண்டுகள்
  நடந்திருக்க வேண்டும் .

  PM Cares FCRA சட்டத்தின் கீழ் வருகிறதா ?
  வந்தால் கணக்கு கொடுக்க வேண்டி இருக்கும் .

 4. Surya சொல்கிறார்:

  As per the info available online, PM Cares has an exemption from FCRA 🙂

 5. Surya சொல்கிறார்:

  Good timing for this article. Looks like Centre finally able to ban several of Chinese apps including TikTok!

 6. புதியவன் சொல்கிறார்:

  போர் என்று வந்தால், மக்கள் மனதில் மாற்றம் ஏற்படுமே ஒழிய, அரசாங்கம் எதையும் தடை செய்ய முடியாது என்றே நினைக்கிறேன், அதற்கு சரியான மாற்று இருந்தால் ஒழிய. இங்கு கம்யூனிச அரசாங்கம் நடக்கவில்லை. சீனாவில், இதனை உபயோகப்படுத்தினால் தண்டனைக்குரிய குற்றம் என்றால் ஒரு பயலும் செய்ய மாட்டார்கள். இந்தியாவில், அப்படிச் சொன்னால், சொன்னதற்காகவே பலர் செய்வார்கள், ஊரடங்கின்போது ஊர்வலம் போய் வேடிக்கை பார்த்த கூட்டம் போல.

  அரசாங்கம் அதனைத் தடை செய்ய முடியுமென்றால், ஆண்டொன்றிர்ர்குப் பலகோடி ரூபாய்களை குத்கா, சிகரெட் உபயோகிக்கக்கூடாது என்று அறிவுரை சொல்ல செலவழிப்பவர்கள், ஒரே உத்தரவில் இரண்டையும் இந்தியாவில் விற்பது தேசத்துரோகக் குற்றம் என்று சட்டம் போட எவ்வளவு நாட்கள் ஆகும்?

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  .
  59 வித சீன செயலிகளுக்கு (Apps)
  மத்திய அரசு நேற்றிரவு தடை ஆணை
  பிறப்பித்திருக்கிறது.

  மிகவும் வரவேற்கத்தகுந்த முடிவு இது.
  மோடிஜி அரசின் இந்த முடிவை
  முழு மனதோடு வரவேற்று
  பாராட்டுவோம்.

  இந்த செயலிகள் இல்லையென்றால்
  யார் குடியும் மூழ்கி விடாது.
  எனவே, மக்கள் இதனை மகிழ்ச்சியோடு
  வரவேற்க வேண்டும்.

  இந்த தடையின் அடிப்படை நோக்கத்தினை
  புரிந்துகொண்டு, மக்கள் கொஞ்சம்
  கொஞ்சமாக தாமாகவே சீன தயாரிப்புகளை
  நம்பி இருப்பதை தவிர்க்க வேண்டும்.
  கொஞ்சம் கூடுதல்
  விலையாக இருந்தாலும் கூட,
  கொஞ்சம் தரம் குறைவாக இருந்தாலும் கூட
  இந்திய தயாரிப்புகளையே வாங்கும்
  பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

  சீனப் பொருட்களுக்கு மாற்று கண்டுபிடிக்க
  இந்திய உற்பத்தியாளர்களும்,
  விற்பனையாளர்களும் முழுமுயற்சியோடு
  ஈடுபட வேண்டும்.

  முயன்றால், நம்மாலும் முடியுமென்று
  நம்ப வேண்டும்.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.