அடுத்த வாரிசு குறித்து – நக்கீரனே கேட்கும்போது நிஜமில்லாமலா இருக்கும்…?

….கனிமொழி V/s உதயநிதி…!!!

நக்கீரன் செய்தித்தளத்தில் ஒரு விசேஷ செய்திக் கட்டுரை –

அதன் தலைப்பு –

“கனிமொழியின் வளர்ச்சியைத் தடுக்கக்
களமிறக்கப்பட்டாரா உதயநிதி?”

அதிலிருந்து கொஞ்சம் –

சாத்தான்குளம் காவல்துறையின் கொடூர தாக்குதலில்
நடந்துள்ள இரட்டைக் கொலை சம்பவம் மனசாட்சி உள்ள
மனிதர்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்தது.
காவல்துறையின் அராஜகத்தைக் கண்டித்தும், ஜெயராஜ்
குடும்பத்துக்கு நீதி கேட்டும் உடனடியாகக் களத்தில்
குதித்தது தி.மு.க.!

தூத்துக்குடி எம்.பி. என்கிற முறையில் சாத்தான் குளம்
பிரச்சனைனையைக் கையிலெடுத்த கனிமொழி,
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கேட்டு, களத்தில்
இறங்கினார். தமிழக காவல்துறை தலைவர் திரிபாதியைச்
சந்தித்து முறையிட்டார். மத்திய உள்துறை அமைசகம்
வரை பிரச்சனையை எடுத்துச் சென்றார் கனிமொழி.

ஜெயராஜ் குடும்பத்தினரைச் சந்தித்து நிதி உதவியை
வழங்கியதோடு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு
வந்தார் கனிமொழி.

அவர் சென்று வந்த மறுநாள் திடீரென சாத்தான்குளம்
புறப்பட்டு சென்ற தி.மு.க. இளைஞரணிச் செயலாளர்
உதயநிதி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்துப்
பேசினார். அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க. எப்போதும்
இருக்கும் என உறுதி கொடுத்துவிட்டு திரும்பினார்.

’’தி.மு.க.-வில் ஸ்டாலினுக்கு பிறகு கனிமொழியின்
செயல்பாடுகள்தான் தமிழக அரசியலில் பேசப்படுகிறது.

அவரின் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள்
உன்னிப்பாகக் கவனிக்கின்றன. மக்கள் நலன் சார்ந்து
அவர் வைக்கும் கோரிக்கைகளுக்கும் மரியாதை
கிடைக்கிறது.

தூத்துக்குடி எம்.பி. என்கிற முறையில் மாவட்டத்தின்
அனைத்து மக்கள் பிரச்சனைகளுக்கும் குரல்
கொடுக்கிறார், முதல் ஆளாகக் களத்தில் நிற்கிறார்.
அதே ரீதியில்தான் சாத்தான்குளம் இரட்டைக் கொலை
சம்பத்திலும் காவல்துறைக்கு எதிராகவும்; தமிழக
அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறார். இது,
தென் மாவட்டங்களில் தி.மு.க.-வுக்கு நற்பெயரை
கொடுத்துள்ளது.

கனிமொழியின் செயல்பாடுகள் பரபரப்பாகவும்
ஊடகங்கள் மத்தியில் எதிரொலித்தன.

இவைகள் தி.மு.க.-வில் உள்ள சிலருக்கு அலர்ஜியை
ஏற்படுத்தியிருக்கிறது. உடனே கனிமொழியின்
வேகத்துக்குத் தடை விதிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

….

உதயநிதியை வைத்து அதனை நிறைவேற்ற அவரை
களத்தில் இறக்கினர். அதன்படி அமைந்ததுதான்
உதயநிதியின் சாத்தான்குளம் பயணம்.

—————————————————————

( – நக்கீரனும் திமுக குடும்பத்தைச் சேர்ந்தது
என்பது தெரிந்ததே… நக்கீரனே கேள்வி கேட்டால்,
குடும்பத்துக்குள்ளேயோ -யாரோ கேள்வி எழுப்புவது
போலத்தானே அர்த்தம்…?

உதயநிதியின் பயணம் அவசரமாக
திட்டமிடப்பட்டது என்று தெரிகிறது.
அவர் E-PASS கூட வாங்காமலே தூத்துக்குடி
சென்றார் என்று தமிழக அரசு தகவல்கள் சொல்கின்றன…

என்ன – உதயநிதி தனியே செல்லாமல்,
தன்னுடன் தன் மகன் இன்பநிதியையும் அழைத்துச்
சென்றிருக்கலாம்…

இன்பநிதிக்கும் ஒரு அனுபவம்
கிடைத்ததோடு திமுகவின் (உதயநிதிக்கு)அடுத்த வாரிசை
அறிமுகப்படுத்தியதாகவும் இருக்கும்….!!!
இன்றில்லா விட்டாலும், எதிர்காலத்தில்,
அதுவும் நடக்க வேண்டிய ஒரு சடங்கு தானே…? )

.
————————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to அடுத்த வாரிசு குறித்து – நக்கீரனே கேட்கும்போது நிஜமில்லாமலா இருக்கும்…?

 1. புதியவன் சொல்கிறார்:

  தன் சமூக வாக்குகளுக்காகவே கனிமொழி அவர்கள் சென்றிருந்தாலும், இப்படி சில நிகழ்வுகளுக்காவது செல்கிறாரே, அது பாராட்டக்கூடியதுதான். உதயநிதியை அனுப்பியது ஒரு bad taste என்றே நினைக்கிறேன்.

  எப்போதும் ‘விதி’ எங்கேயோ இருந்துகொண்டு நகைத்துக்கொண்டிருக்கும். ஆனமட்டும் முதல் மனைவி(?)யின் முக முத்துவை ப்ரொமோட் செய்தார் கருணாநிதி. பிறகு இரண்டாவது மனைவியின் இரண்டாவது பையன் திமுக பொறுப்புக்கு வரவேண்டியதாகப் போயிற்று (மூத்த மகன் அழகிரியின் வாய்ப்பு போயிற்று). இனிமேல், ஸ்டாலின் குடும்பம்தான் திமுகவில் ஆதிக்கம் செய்ய நினைக்கும். மற்றவர்களுக்கு பெப்பேதான்.

  ஸ்டாலின் ரொம்ப வருடங்கள் இருந்தால், உதயநிதிக்கு கட்சி வசப்படலாம். இல்லையென்றால் கனிமொழியிடம் செல்லுமா என்பது தெரியலை.

  இன்பநிதிக்கு காலம் என்ன வைத்திருக்கிறதோ…. யாருக்குத் தெரியும்?

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  என்ன – உதயநிதி தனியே செல்லாமல்,
  தன்னுடன் தன் மகன் இன்பநிதியையும் அழைத்துச்
  சென்றிருக்கலாம்…

 3. tamilmani சொல்கிறார்:

  தூத்துக்குடி எம் பி என்ற அடிப்படையில் கனிமொழி சென்றார்.
  ஆனால் உதயநிதி சென்னையிலிருந்து இந்த கொரோனா காலத்தில்
  சென்றது ,வாரிசு அரசியலின் தாக்கம் திமுகவில் ஆரம்பித்து விட்டது
  என்றே காட்டுகிறது. அடுத்த ஆட்சி தங்களுக்குத்தான் என்கிற மனோபாவம் திமுகவுக்கு . அழகிரி ஓய்ந்து விட்ட நிலையில் கனி மொழி , உதயநிதி போட்டி ஆரம்பம். இது இன்பநிதி ,ஆதித்யா வரை தொடர்ந்தாலும் ஆச்சர்யமில்லை . கடைசி வரை தொண்டன் இவர்களுக்கு தொண்டன்தான். ஆனால் அதிமுகவில்
  சாதாரண தொண்டர்களாக இருந்தவர்கள் இப்போது அமைச்சர்கள். இதுதான் அதிமுகவுக்கும் , திமுகவுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் .

 4. natchander சொல்கிறார்:

  UDHAYANIDHI AND HIS PSRENTS ARE DESPARATE !!!!
  THEY WANT TO PROJECT THIS SLEEPY LAZY,, GUY !!!
  RECENTLY TWO G FAMOUS RRAJAS SUPPORTER S ,, HAD FOUGHT WITH UDHAYANIDHIS SUPPORTERS OPENLY !! NIW KANIS SUPPORTERS OPPOSE STALINS SON !!
  ALL THE D MK DT SECREATRIES ARE NOT HAPPY WITH UDHAYANIDHI !!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.