சந்நியாசி என்றால் மட்டும் விட்டு விடுமா என்ன…?

….
….

….

சந்நியாசி ஆட்சியானால் என்ன…?
ஊழலுக்கு வெள்ளை, பச்சை, காவி என்று கலரெல்லாம்
உண்டா என்ன…?

கீழே தந்திருப்பது ஒரு உத்திரப் பிரதேசத்து ஊழல் கதை…

———————————

அண்மையில், உத்திரப் பிரதேசத்தில் – சுமார் 69,000
ஆசிரியர் காலியிடங்கள் – பணிக்கு எழுத்துத்
தேர்வுகள் நடந்தன. லட்சக்கணக்கானோர் எழுதினர்.

இதில் தேர்ச்சி பெறாத ஒரு நபர், தேர்வில் கேட்கப்பட்ட
5 கேள்விகளுக்கு தேர்வுக்குழு தவறான பதிலை
தேர்ந்தெடுத்திருந்தது… தான் சரியான பதிலைத் தந்தும்,
தனக்கு மதிப்பெண் கிடைக்கவில்லை என்று புகார் கூறி,
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்…

காலியிடங்களை நிரப்ப இடைக்காலத்தடை கொடுத்த
நீதிமன்றம், விஷயத்தை தீர விசாரிக்கச் சொல்லி,
மாநில அரசுக்கு உத்திரவு போட்டதைத் தொடர்ந்து,
போலீசார் விசாரணையைத் துவங்கினர்.

முதல் 10 இடங்களில் தேர்வாகியிருந்தவர்களிடம்,
கேஷூவலாக விசாரணையைத் துவக்கிய அவர்களுக்கு
அதிர்ச்சி காத்திருந்தது.

150-க்கு 142 மதிப்பெண் வாங்கி முதலிடத்தில்
தேர்வாகியிருந்த அந்த நபருக்கு மிக சாதாரண
கேள்விகளுக்கு கூட பதில் தெரியவில்லை; இந்த நாட்டின்

ஜனாதிபதியின் பெயர் என்ன என்பது கூட ஆசிரியராக
தேர்ச்சி பெற்றிருந்த நபருக்கு தெரிந்திருக்கவில்லை;

அதிர்ச்சியடைந்த காவல் துறை தீவிரமாக விசாரணையை
துவக்கியது. முதல் கட்டத்தில் 10 பேரை கைது செய்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபர் கே.எல்.படேல் என்கிற
மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினராவார்.
அவரிடமிருந்து ரூ.22 லட்சத்துக்கும் அதிகமான பணம்
மீட்கப்பட்டுள்ளது” என்று போலீசார் கூறியுள்ளனர்…

விசாரணை தொடர்கிறது….
முடிவுகள் எங்கே போய் முடியும்…
எந்தெந்த கட்சி அரசியல்வாதிகள் எல்லாம்
சிக்குவார்கள் என்பது தெரியவில்லை…..

இது குறித்து செய்தி வெளிவந்த ஆங்கில நாளிதழ்
ஒன்றிலிருந்து சில பகுதிகள் கீழே –

———————————–

UP assistant teacher recruitment scam:
Exam topper fails to name President of India,
govt orders probe
————

The Prayagraj police arrested 10 people for allegedly accepting
bribes from aspirants who sought jobs as assistant teachers
for 69,000 posts in the UP basic education department.
When probed, one of the toppers of the exam could not even
name the President of India.

The Supreme Court on Tuesday directed the UP government
to keep 37,339 posts of assistant teachers vacant, thereby
staying the ongoing selection process of teachers in the state.

Imagine a person scoring 95 per cent marks in UP
assistant teachers’ recruitment examination and then failing
to name the President of India when asked.

This may seem unthinkable but one Dharmendra Patel,
who scored 142 out of 150 marks in the highly-competitive
exam, could not answer this basic question.

Patel’s lack of general knowledge and the greater scam
came into light after the Prayagraj police on Sunday arrested
him and 9 other people involved for allegedly accepting
bribes running into lakhs from aspirants who sought jobs as assistant

teachers during a recruitment drive for
69,000 posts in the UP basic education department.

.
——————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சந்நியாசி என்றால் மட்டும் விட்டு விடுமா என்ன…?

  1. புதியவன் சொல்கிறார்:

    ஒரு மாதம், இரு மாதம் என்று லிமிட் வைத்துக்கொண்டு விசாரித்து உடனே அந்த விசாரணையின் விவரத்தை வெளியிடவேண்டும். அரசு வேலைகளில் எல்லாம் ஊழல் நுழைந்து எத்தனையோ டிகேட்கள் ஆகிவிட்டன. இவங்கள்லாம் ஆசிரியர் வேலைக்கு வந்து மாணவர்களை முன்னேற்றி… விளங்கினதுபோலத்தான்.

    ஆசிரியர் வேலைக்கே இவ்வளவு ஊழல் இருப்பதால்தான் 5% ஆசிரியர்கள்கூட தேர்வுகளில் பாஸாவதில்லை போலிருக்கிறது. இந்த லட்சணத்துல ஆன்லைன் கற்றுக்கொடுத்தலுக்கு எதிர்ப்பு.

    உண்மையைச் சொன்னா எனக்கே சட்னு ஜனாதிபதி பேர் நினைவுக்கு வருவதில்லை. வெங்கையா நாயுடு பிரபலஸ்தர் என்பதால் நினைவுக்கு வருகிறது. தமிழக கவர்னர் பெயரும் நினைவுக்கு வருவதில்லை.

  2. புதியவன் சொல்கிறார்:

    சந்நியாசி என்றால், உலக பந்தங்களைத் துறந்தால்தான் எதுவும் விடும். பெயரில் மட்டும் சன்யாசி, பூஜ்யஸ்ரீ, குரு என்றெல்லாம் போட்டுக்கொண்டால், ஆசைகள் விட்டுவிடுமா என்ன?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.