…
…
…
இந்திய அரசியல்வாதிகளிலேயே சீனாவுடன்,
சீனத் தலைமையுடன் நீண்ட நாட்களாக,
நல்ல நட்பும், நெருங்கிய தொடர்பும் வைத்திருப்பவர்
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி….
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் மோதல் வெடித்திருக்கும்
இந்த நிலையில் அவரது மனநிலை எப்படி இருக்கிறது…?
பாலுக்கும் காவல்,
பூனைக்கும் தோழன் என்பது போல்
இந்தியா/ பாஜக -வையும் விட்டுக் கொடுக்க முடியாது…
சீனாவையும் முற்றிலுமாக முறைத்துக் கொள்ளக்கூடாது…
மிகவும் கடினமான ஒரு நிலை…
திரு.ரங்கராஜ் பாண்டே-வுக்கு அளித்துள்ள
இந்த பேட்டி மூலம் டாக்டர் சு.சுவாமியை நம்மால்
எடை போட்டு விட முடியுமா… என்ன…?
clear cut reply எதையும் இந்த விஷயத்தில்
எதிர்பார்க்க முடியது தான்… ஆனால் சில கேள்விகளை
அவர் எப்படி சமாளிக்கிறார்…!!!
பார்ப்போமே…( காணொளி கீழே கடைசியில் …)
—————————————————-
முழு பேட்டியையும் பார்க்க நேரம் இல்லாதவர்களுக்கு –
(நேரம் கிடைக்கும்போது அவசியம் காணொளியை பாருங்கள்…)
– ஆல் பார்ட்டி மீடிங்க்ல பிரதமர் சொன்னதை தான்
அவரே அப்புறம் – கரெக்ட் பண்ணிட்டாரே
( அப்படியானல் இதற்கு என்ன அர்த்தம்… மீடிங்கில் பிரதமர்
தவறாகச் சொன்னார் என்றா…? )
பிரதமர் என்ன நேரிலா போய் பார்த்தார்..?
அதிகாரிகள் சொன்னதை வைத்து தானே சொல்றார்…?
– பிரதமருக்கு தவறாக செய்தி கொடுத்தவர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும்…!!!
– சைனாவும் நாமும் ஃப்ரெண்டா இருக்கணும்..
அதைத்தான் பிரதமரும் சொல்றார் – நானும் சொல்றேன்.
– சீன ஜனாதிபதியை கலந்து ஆலோசிக்காமலே
ராணுவம் (PLA ) இந்த நிலையை எடுத்திருக்கலாமா…?
-ஜின்-பிங் – ராணுவத்திற்கு (பி.எல்.ஏ.) இடையே
மோதல் இருக்கலாமா -?
இருக்கலாம்… அது விஷயமாக எனக்குத் தெரியாது.
-பாகிஸ்தான் விஷயத்தில் பண்ணிய மாதிரி
சர்ஜிகல் ஸ்டிரைக் ஏன் பண்ணவில்லை..?
இதையெல்லாம் ஆர்மி முடிவு பண்ண முடியாது…
கவர்ன்மெண்ட் தான் முடிவு பண்ணணும்…
ஆனால், பாகிஸ்தானையும், சீனாவையும்
கம்பேர் பண்ண முடியாது…
– லாஸ்ட் 6 வருஷத்துல நம்ப அண்டை நாட்டுக்காரர்கள்
எல்லார்கிட்டயும், நம்ம டிப்ளமசி தோத்துப்போச்சே…!
கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணனும்…
-கடைசியா – இப்ப இந்தியா என்ன செய்யணும்…?
மொதல்ல சைனாவுக்கு ஒரு பாடம் கத்துக்குடுக்கணும்…
எங்க எல்லையை காக்க நாங்க என்ன தியாகம்
வேண்டுமானாலும் செய்வோம்-னு அவங்களுக்கு
பண்ணிக் காட்டணும்…
அவர்களுக்கு தகுந்த பாடம் கொடுத்தபிறகு –
அவர்கள் – ஐ.நா. செக்யூரிடி கவுன்சிலில் நமக்கு
இடம் கொடுக்க சப்போர்ட் பண்ணினால் –
பாகிஸ்தானுக்கு சப்போர்ட் செய்வதை நிறுத்தினால்,
நட்பாக இருக்கலாம்.
….
…..
.
———————————————————————————————————————————–
KM Sir,
சீனாக்காரன் இந்தியாவிற்குள் ஊடுருவிவிட்டான், இருபது ராணுவ வீரர்களை கொன்றுவிட்டான் என்று மீடியாவுக்கு கசியவிடப்பட்ட செய்தியை அறிந்து, சீனா பொருள்களை தவிர்ப்போம் என்று நாட்டின் மீது உள்ள பாசத்தால் பொங்கோ பொங்கு என்று பொங்கியவர்கள் முகத்தின் மீது, நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அனைத்து கட்சி கூட்டத்தில், சீனாக்காரன் நமது எல்லையில் ஊடுருவவில்லை என்று சொல்லி, டன் கணக்கில் கரியை நன்றாக பூசிவிட்டார். இவர்கள் எல்லாம் அந்த கரியை எல்லார் முகத்தில் இருந்து துடைப்பதற்கு ஏவிவிடப்பட்டவர்கள்.
நடப்பது எல்லாமே நாடகம். பிஜேபி காரர்கள் விவாத நிகழ்ச்சிகளில் இந்திய ராணுவம் என்பதை தவிர்த்து பீகார் படையணி என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன?
சீனா பொருள்களை தவிர்க்க வேண்டும் என்றால் உணவு பொருள்களை சுட்டு தின்று விட்டு நிர்வாணமாக அலைய வேண்டியதுதான். அந்த அளவிற்கு, எல்லா மூலப்பொருள் முதல் முழுமையாக முடிக்கப்பட்ட பொருள்வரை சீனாவின் பொருட்களின் ஆதிக்கம் நிறைந்து இருக்கிறது.
மேலும் நமது பிரதமர் சீனா பொருள்களின் மீது ஒரு போதும் கை வைக்கமாட்டார். காரணம் மார்வாடிகளின் வளர்ச்சி சீனா பொருள்களை நம்பித்தான் உள்ளது. சீனா பொருள்களின் மீது கை வைப்பது மார்வாடிகளின் மீது கை வைப்பதற்கு சமம்.
நம்மளை மாதிரியான ஆட்கள் இவர்கள் நாடகத்தை உண்மை என்று நம்பி சீனா பொருள்களை புறக்கணிப்போம் என்று கிறுக்கன் மாதிரி கத்திக்கொண்டு அலையவேண்டியதுதான்
அய்யா உங்களுக்கு இவ்வளவு பதற்றம் ஏனோ ?
//உணவு பொருள்களை சுட்டு தின்று விட்டு நிர்வாணமாக அலைய வேண்டியதுதான்.// – நீங்கள் சொல்வதைப் பார்த்தால் 90களுக்கு முன்பு நாம் எல்லாம் நிர்வாணமாக, உணவுக்கே வழியில்லாமல் காட்டுவாசிகள் போல அலைந்துகொண்டிருந்தோம் என்று ஆகிறதே.
மார்வாரிகள் வியாபாரிகள். அவர்கள் எதை வேண்டுமானாலும் விற்பார்கள். சீனா இல்லைனா வேற பொருட்கள். வியாபாரிகள் இதனால் எந்த பாதிப்பும் அடையமாட்டார்கள். உணவுத் தொழில், ஆடை, மற்ற பொருட்களை வைத்துப் பெரும் வியாபாரம் பார்ப்பவர்களும் உள்ளனர். மார்வாரிகள், சீனப் பொருட்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்று யார் உங்களுக்குச் சொன்னார்?
camman-man
பீகார் தேர்தல் வெற்றிக்காக இருபது ராணுவ வீரர்களை பலிகொடுத்த அயோக்கியர்களின் மீது உள்ள கோபம் எனது பின்னூட்டம்.. அயோக்கியர்களின் முகமூடி கிழிந்துவிடுமோ என்ற பதத்தட்டின் வெளிப்பாடு உங்கள் பின்னூட்டம்
அய்யா உங்கள் பதட்டத்தின் காரணம் நன்றாகவே புரிகிறது.
இது போன்ற சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சிக்கு பெயர் கிடைப்பதை நம்மால் தடுக்க இயலாது. நான் பல விவாத மேடைகளை கவனித்து இருக்கிறேன்,அதில் பங்கு பெறுபவர்கள், ஆளும் கட்சிக்கு பெயர் கிடைத்து விட கூடாது என்பதற்காக, கடைசியில் அவர்கள் நமது எதிரி நாடுகளான சீனா வையும், பாகிஸ்தானையும் புகழ்ந்து, கடைசியில் இந்த தேசத்திற்கு எதிரானவர்கள் போன்ற பிம்பத்துடன், பரிதாபமாக காட்சியளிப்பார்கள். இது போன்ற நிலைகளில் மற்றவர்களும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க முடியாத நிலையையும் கண்டிருக்கிறேன்.
பிஜேபி வெற்றி பெருவது இவ்வாறான எதிரிகள் சறுக்கும் இடங்களில்தான் .. கடைசியில் நாம் தான் விட்டில் பூச்சிகள் போன்று பரிதாப நிலையை அடைவோம்.
சீனாவிற்கு பாடம் கத்துக் கொடுப்பதெல்லாம் இயலாத காரியம். சீனா பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாவும் பெரும் சவால். போர் என்று வந்தால் இந்தியாவிற்கு விழும் அடி தாங்க முடியாதது. இதுதான் உண்மை. சீனா அமெரிக்காவை விட பெரிய ராணுவத்தை கட்டமைக்கும் முயற்சியில் உள்ளது. 2049 -ல் உலகின் வலிமையான, தொழில்நுட்பத்தில் சிறந்த ராணுவம் அவர்களிடம் இருக்கும் என்ற நோக்கில் அது செயல்படுகிறது. சீனாவுடன் போர் 1962 -யை விட மோசமாகத்தான் இருக்கும். மேலும் சீனாவிற்கு இந்தியா போன்ற ஏழை நாட்டு வியாபாரம் பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு அமெரிக்க ஐரோப்பிய மார்க்கெட் இருக்கும் வரை இந்தியாவை மதிக்க போவதில்லை. இந்த உண்மை தெரிவதால்தான் மோடி அடக்கி வாசிக்கிறார்.
சீனப் பொருட்களை புறக்கணிக்கும் நிலையில் எந்த நாடும் இல்லை. சீனாவுடன் முறுக்கிக் கொண்ட டிரம்ப் அமெரிக்க வியாபாரிகளின் எதிர்ப்பினை பார்த்து வாலை சுருட்டிக் கொண்டுவிட்டார். ஏனெனில் இந்தப் பொருட்களை தீடிரென உற்பத்தி செய்ய ஆரம்பிப்பது கடினம், மேலும் அவர்களைப் போல் குறைந்த விலையில் உற்பத்தி செய்ய யாராலும் முடியாது. இந்தியாவிலும் இதே நிலைதான். இது சீனாவிற்கு தெரியும் அதனால்தான் ஆடுகிறார்கள்.
இதை மாற்ற அமெரிக்க கம்பனிகளின் உற்பத்தி ஆலைகள் இங்கு அமைக்கப்பட வேண்டும். அந்நிய நாடுகளில் இருந்து பல தொழில்நுட்பங்கள் இங்கு வந்து சேர்க்க வேண்டும். சீனர்கள் தினமும் 10 -16 மணிநேரம், வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்வார்கள். சுற்றுப்புற சூழல் என்றெல்லாம் போராட்டம் செய்ய மாட்டார்கள். இதையெல்லாம் நாம் செய்ய தயாராக இருக்கிறோமா என யோசிக்க வேண்டும். அப்படியே செய்தாலும் தன்னிறைவு பெற பத்தாண்டுகளாவது ஆகும்,
ஆனால் சீன பொருட்களை மட்டுமல்ல, மற்ற எல்லா நாட்டுப் பொருட்களையும் விட்டு, மாற்றாக இந்தியப் பொருட்கள் கிடைக்கும் பட்சத்தில் நம் நாட்டு பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும். அப்பதான் நம்நாட்டு பொருளாதாரம் சிறிது மேம்பட உதவும்.
கார்த்திக்,
நான் இந்த கருத்துடன் உடன்படுகிறேன்.
நாம் சிக்குவது நமது ஆசையால் தான்.
நமது சொந்த பலவீனங்களால் தான்.
சீனப் பொருட்கள் இல்லாமல் நம்மால்
நிச்சயம் ஜீவித்திருக்க முடியும்.
ஆனால் அதற்கான மனோநிலை இங்கே
நிறைய பேரிடம் இல்லை;
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Ram
நிறைய பேர் உங்களைப் போல
நினைத்துக் கொண்டிருக்கும் வரை
எதுவும் உருப்படியாக நடக்கப்போவதில்லை.
தன்னம்பிக்கையோ, முயற்சியோ இல்லாதவர்கள்
தான் இப்படி பேசிக்கொண்டிருப்பார்கள்.
அந்நியத் துணியை பகிஷ்கரிக்க காந்திஜி
போராடியபோதும் உங்களைப் போன்றவர்கள்
இப்படித்தான் நினைத்தார்கள் – பிரிட்டிஷ்
பொருட்கள் இல்லாமல் நம்மால் ஜீவித்திருக்க
முடியுமா என்று. 7’0-clock blade இல்லாமல்
நம்மால் இருக்கவே முடியாது என்று
நினைத்தவர்கள் கூட உண்டு.
நிறுத்தி தான் பாருங்களேன்.. என்ன செத்தா
போய் விடுவோம்..? Alternative தானாகவே
உருவாகும்.
NECESSITY IS THE MOTHER OF INVENTION…
——————
இவ்வளவு பேசுகிறீர்களே –
நாளைக்கு சைனாக்காரன், நம்மை
பொருளாதார சீர்கேட்டில் சிக்க வைக்க
வேண்டுமென்று தானாகவே –
இந்தியாவிற்கான அனைத்து ஏற்றுமதியையும்
நிறுத்தி விட்டால் – என்ன செய்வீர்கள்…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//என்ன செத்தா போய் விடுவோம்..? Alternative தானாகவே உருவாகும்.//
ஒரு விதத்தில் நீங்கள் சொல்வதும் சரியானதுதான் கா.மை. சார். இப்போ லாக்டவுனில் எப்படி வீட்டில் இருக்கிறோம், வீட்டில் இருந்தே வேலை பார்க்கிறார்கள். இந்த அவசியம், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும். உதாரணமா,
1. எந்த பெரிய கம்பெனியும் பெரிய பெரிய ஆபீஸ்கள், அதையொட்டிய செலவினங்கள் (செக்யூரிட்டி, வேலைபார்ப்பவர்களுக்கு கேண்டீன் போன்றவை, பேருந்துகள் அல்லது பெட்ரோல் அலவன்ஸ்) போன்ற எதையும் 70% அளவிற்குக் குறைத்துவிடும்.
2. வீட்டிலிருந்தே வேலை செய்யணும். முழுமையாக கவனம் இல்லையென்றால் வேலை போய்விடும்.
3. எல்லோரும் பந்தாவிற்கு/அவசியத்திற்கு வண்டி வைத்திருக்கவேண்டாம்.
இதுபோல் பல உத்திகள் உருவாகும். அதேபோல, சீனப்பொருட்கள் கிடையாது என்று ஆகிவிட்டால், அதற்கேற்ற வழிமுறைகள் உருவாகிவிடும்.
முதலில் தாங்கள் துவங்கலாமே… நீங்கள் தற்போது உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் கம்யூட்டரோ அல்லது செல்போனோ சீனத் தயாரிப்பாகத்தான் இருக்கும், சீன கம்பனியாக வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம் (சோனி, ஆப்பிள் என எதுவாக இருப்பினும்) .அதற்கு நீங்கள் போடும் மின்சாரம் சீன செப்பு ஒயர் மூலமாகத்தான் வருகிறது.மின்சாரத்தை தயாரிக்க சீன கருவிகள் இந்தியாவில் உபயோகப்படுகிறது. ஆக இவற்றையெல்லாம் எப்படி தவிர்ப்பது என கூறுங்களேன், நானும் நிச்சயம் செய்கிறேன்.
https://www.ilivesimply.org/
முடிந்த வரை முயல்வோம் Ram Sir.
சரியாகச் சொன்னீர்கள் கார்த்திக்.
that is the spirit…
நான் சொல்ல வருவது அதைத்தான்…
எங்கெல்லாம் முடியுமோ
அங்கெல்லாம் தவிர்க்க முயற்சிப்போமே…
சொந்தக் காலில் நிற்க atleast முழு
ஈடுபாட்டுடன் முயற்சிப்போமே.
உடனடியாக பலன் கிடைக்காவிட்டாலும்,
நாளை, நாளை மறுநாள் என்று
எதிர்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக
இது சாத்தியமாகும் அல்லவா…!
ராம் – ஏற்றுக் கொள்வீர்கள் என்று
நம்புகிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ராம்…. இப்போ நாம் வாங்கிவிட்டவைகளைத் தூக்கிப்போட வேண்டாம். பெரிய பிராண்டுகள், பல்வேறு நாடுகளில் தன் தொழிற்சாலைகளை வைத்துள்ளது. முன்பு ஸோனி ஸ்டீரியோ ரெகார்டர், ஜப்பான் மேக் 100 ரூ என்றால் மலேஷியன் மேக் சிறிது குறைந்த விலையில் கிடைக்கும். அதனால் சைனா ஃபேக்டரியில் தயார் செய்ததைத் தவிர்த்து பிற தேசங்களில் தயாரிப்பதை வாங்கமுடியும்.
கன்ஸ்யூமரின் மூடு தெரிந்துவிட்டீல் ஆட்டமேட்டிக்காக தொழிலதிபர்களும் மாறுவார்கள். நான் என்னைப் பொறுத்தவரையில் முடிந்தவரை நம் நாட்டு பொருட்களை வாங்க விழைகிறேன்.
வாங்கின கணிணியை உடையுங்கள், செல்போனைத் தூர எறியுங்கள் என்றெல்லாம் எழுதுவது, செனா வாரியலை வைத்து கூட்டிய பாத்ரூமில் குப்பையைப் போடுங்கள், சைனா நூடுல்சை ஒரு வருடத்துக்கு முன்னால் சாப்பிட்டீர்களா, வயிற்றில் ஒரு பகுதியை எடுத்துவிடுங்கள் என விதண்டாவாதம் செய்வதற்கு ஒப்பாகும்.
ஒரு வாத்த்திற்குக் கேட்கிறேன்… பீட்சா வாரம் ஒருமுறை சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் (மெக்டொனால்ட்ஸ், கே எஃப் சி போன்று) இந்த ஊரடங்கு காலத்தில் என்ன செய்தார்கள்? செத்துவிட்டார்களா? இது வேண்டாம் என நாம் நினைத்தால் நம்மால் அவை இல்லாமல் இன்னும் நன்றாகவே வாழ முடியும். அதற்கு சில காம்ப்ரமைஸ்கள் தேவை. (நாங்க POS France, England, USA தயாரிப்புகளுக்குப் பதில் தாய்வானிலிருந்து வாங்கிக்கொண்டிருந்தோம், (40% விலை குறைவு என்பதால்) Even USA brandsம், தாய்வானில் தங்கள் காம்பவன்ன்ட்சை தயாரித்து வாங்கிக் கொள்வார்கள்.)
கண்டிப்பாக சார், எனது முதல் பின்னூட்டத்தை மீண்டும் படித்துப் பாருங்கள் சார். இதையேதான் சொல்லியிருக்கிறேன். தற்போதைக்கு முடியாது, ஆனால் இப்போதிருந்து முயன்றால் முடியும்.
அதேபோல் புதியவன் சொல்லியிருப்பது போல முடிந்தவரை இந்தியப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்… பேஸ்ட்டிலிருந்து ஆரம்பித்து முடிந்தவரை எவ்வளவு முடியுமே அனைத்திலும் இந்தியப் பொருட்களை பயன்படுத்த முயல்வோம். நாளைக்கு எவன் சீனாவைப் போல் மாறி நமக்கு ஆப்படிப்பான் என யாருக்கு தெரியும்?
சீனா எல்லையில் தகராறு செய்ய வேண்டும் என முனைப்புடன்
உள்ளது .
சீனாவின் பலம் என்பது ராணுவ தளவாடங்களுக்கு யாரையும்
எதிர்பார்த்து இல்லை .
போர் விமானம் , ராணுவ டேங்க் , பீரங்கி , துப்பாக்கி எல்லாம்
சொந்த கைச்சரக்கு .
இந்தியா எல்லாவற்றையும் அந்நிய செலாவணி மூலமே
பெற முடியும் . அப்புறம் அந்நியர்கள் சொல்வதையும்
கேட்டாக வேண்டும் .
மருந்துப் பொருட்கள் சீனாவில் இருந்துதான் வர வேண்டும் .
குறைந்தது இந்த இரண்டிலாவது சுய சார்பு அவசியம் .
ராம வீரப்பன் சொன்னது போல ” காலத்தின் கட்டாயம் “
அய்யா புதியவன் அவர்களே
நான் சொன்னது தற்போதைய நிலைமையை. நீங்கள் 90 க்கு போய்விட்டீர்கள். ஏன், நூறு வருடங்களுக்கு munnaal
மின்சாரம் இல்லாமல் தான் வாழ்ந்தார்கள். இப்பொழுது நீங்கள் வாழ்ந்துபார்க்க வேண்டியதுதானே. மார்வாடிகள் வியாபாரிகள் எதைவேண்டுமானாலும் விற்பார்கள். ரெம்ப சரி. கொஞ்சம் மோடி கிட்ட சொல்லி சீன பொருளுக்கு தடைதான் போட சொல்லுங்க
ளேன். திருப்பூர் காரரிடம் கொஞ்சம் கேட்டு பாருங்கள் எவ்வளவு பொருள்கள் சீனாவில் இருந்து இறக்குமதி ஆகிறது என்று
KM sir
தன்னம்பிக்கையோ முயற்சியோ தனி மனிதன் செய்வதால் ஒன்றும் நடக்காது. அதை தலைமை செய்ய வேண்டும். தலைமைக்கே தன்னம்பிக்கையோ முயற்சியோ இல்லாதபோது , நீங்களோ நானோ பொங்கி ஒன்றும் நடக்கப்போவது இல்லை. பீகார் தேர்தலில் வேண்டுமானால் BJP கூட்டணி வெற்றி பெறலாம் .
மகாத்மா காந்திதான் அந்நிய துணியை நிராகரிக்க சொல்லி போராடினாரே தவிர எங்கோ உங்களை என்னை மாதிரி ஆட்கள் சொல்லி வெற்றிபெறவில்லை. இப்பொழுதும் அதிகார தலைமைதான் முயற்சி செய்யவேண்டுமே தவிர நீங்களோ நானோ இல்லை. நமது கடமை அவர்கள் முயற்சிக்கு ஆதரவு கொடுப்பது
அய்யா,
இதற்காகதான் Make In India போன்ற திட்டங்கள் முன்னெடுக்க பட்டன .அவைகளையும் அதீத காழ்புணர்ச்சியினால் கிண்டல் செய்தது யாரோ?
இப்பொழுது சீன பொருட்களை அரசாங்கம் தடை செய்ய வேண்டும், மார்வாடி ஊழல் என்று கூவுவதன் அர்த்தம் என்ன?
சர்வதேச வர்த்தக சட்டங்களின் படி , நாம் அந்நிய பொருட்கள் இறக்குமதியை நேரடியாக தடை செய்ய இயலாது , என்பது பாமரனும் அறிவான்.
திருந்த வேண்டியது நாம் தான்.இதை அரசாங்கம் நேரடியாக செய்ய இயலாது.