….
….
….
” மாலைப்பொழுதின் மயக்கத்திலே..”
இயற்றியவர் – கவிஞர் கண்ணதாசன்
படம் – பாக்கியலக்ஷ்மி –
பாடியவர் – பி.சுசீலா –
இசை -விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இளையராஜா பலமுறை கூறி இருக்கிறார்…
13-14 வயது பருவத்தில்,
தான் பண்ணைப்புரம் கிராமத்தில்,
தன் எதிர்காலத்தை
நினைத்து பிரமித்திருந்தபோது –
இந்தக் கனவு வரிகள் தான் தன்னை
ஆட்கொண்டன, மீண்டும் மீண்டும்
சிந்திக்கத் தூண்டின – என்று….
-கிட்டத்தட்ட அதே வயதில்,
இதே நினைவுகளுடன், இதே வார்த்தைகளுடனும்,
நானும் குழம்பித் திகைத்திருந்தது உண்டு….
தெளிவான எதிர்காலம் இல்லாத –
வசதியான வாழ்வில் இல்லாத –
பல இளைஞர்களுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும்…
கண்ணதாசனின் அற்புதமான வரிகள் –
” இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம் –
தெளிவும் அடையாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர் காலம்..”
….
—–
.
———————————————————————————————————————————
.
மிக அருமையான பாடல்.
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.
.
இன்று ஜூன் 24 MSV , கண்ணதாசன் பிறந்தநாள் .
நண்ப மெய்ப்பொருள்,
இதை நீங்கள் சொல்ல வேண்டும்
என்பதற்காகத்தான்,
இருவரும் இணைந்த இந்தப் பாடலை
பதிந்து விட்டு நான் அதைப்பற்றி
சொல்லாமல் விட்டு விட்டேன்… 🙂 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்