…
…
…
…
…
…….
லடாக்கில் உள்ள “லே” நகரத்திலிருந்து –
கிடைக்கின்ற செய்தி, பின்னணிகளைப் பார்க்கும்போது –
தற்போதைய சீன தாக்குதல்
வெறும் பயமுறுத்தும் முயற்சியே…
இப்போதைக்கு பெரிய அளவிலான போருக்கு சீனா
தயாராக இல்லை என்றே தோன்றுகிறது.
எதாவது லோக்கல் அளவில் தாக்குதல்களை நடத்தி,
கொஞ்சம் நிலத்தை கைவசப்படுத்தி வைத்துக்கொண்டு,
அதை வைத்தே இந்திய அரசை அவமானப்படுத்தலாம்,
மிரட்டலாமென்று சீனா நினைக்கிறது போல் தான்
தோன்றுகிறது. பல நாடுகளின் செய்தி நிறுவனங்களும்
இதே போன்ற கருத்தைத்தான் வெளியிடுகின்றன.
சீனாவின் இந்த நிலையே –
இந்திய அரசு துணிந்து எதிர் நடவடிக்கையில் இறங்க
சரியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
சீன அரசின் இந்த மனோ நிலை காரணமாக –
ஒருவேளை எல்லையில் சண்டை துவங்கினாலும் –
எந்த நிலையிலும், ஒரு வாரத்திற்கும் மேலாக,
சண்டை நீடிக்க வாய்ப்பு இல்லை;
சீனா நினைப்பதற்கு நேர்மாறாக,
நமது எல்லைகளை வலுப்படுத்தவும், இழந்ததை மீட்கவும் –
நாம் முழு அளவிலான போருக்கும் தயாராகவே
இருக்கிறோம் என்று காட்ட –
எல்லையில், சீனத் தரப்பு பலவீனமாக இருக்கும்
சில இடங்களில் இந்தியப்படை முன்னேறி, சில சதுர
கி.மீ. நிலத்தையாவது தன் வசப்படுத்திக் கொண்டால் –
அருணாசல் பிரதேசம், சிக்கிம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
காஷ்மீர் என்று தொடர்ந்து தொந்திரவு கொடுக்கும்
சீனாவுடன் –
எதிர்காலத்தில் பேச்சு வார்த்தை நடக்கும்போது
நாம் பேரம் பேசும் அளவிற்கு பலமாக இருப்போம்.
நம் போர்த்திறன் அதனை நிரூபிக்கும்….
1962-ல் இருந்த இந்தியாவிற்கும், 2020-ல் உள்ள
இந்தியாவிற்குமான வித்தியாசத்தை சீனா
பெரிய விலை கொடுத்து உணரும்.
உலக அளவில், பெரும்பாலான நாடுகளில்,
சீனாவிற்கு எதிரான மனோ நிலைதான் நிலவுகிறது.
ஜப்பான், சீனாவுடனான தனது எல்லைப்
பிரச்சினைகள் காரணமாக மிகுந்த கடுப்பில் இருக்கிறது.
தொழில் நுணுக்கங்கள், சாட்டிலைட் தகவல்கள்
ஆகியவற்றைத் தர அமெரிக்கா ஏற்கெனவே
முனைப்பாக இருக்கிறது.
பல வெளிநாட்டு செய்திக் கட்டுரைகளை,
காணொளிகளைப் பார்த்தேன். வாய்ப்பு கிடைக்கும்போது
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.
நம்மால், உலக ரவுடி (ROGUE ) சீனாவிற்கு ஒரு பாடம்
கற்றுக் கொடுக்க முடிந்தால், உலக அளவில்
இந்தியாவிற்கு மிகப்பெரிய மரியாதை உருவாகும்.
நான் இங்கே இவற்றைப்பற்றி எல்லாம் எழுதுவது
வெறும் கருத்து மற்றும்
தகவல் பரிமாற்றங்களுக்காகத் தான்.
இந்திய அரசுக்கு தெரியாத விஷயம் இல்லை;
அதனிடம் அனைத்து தகவல்களும் இருக்கின்றன..
சீனா winter துவக்கம் வரை இழுத்தடிக்கப் பார்க்கும்.
அது தான் அவர்களுக்கு வசதியான நேரம்.
ஆனால், நமக்கு -இதுவே மிகச்சிறந்த தருணம்.
மோடிஜி அரசு துணிந்து இறங்கி அடிக்க வேண்டும்…
எதிர்க்கட்சிகளின் கேள்விகள், விவாதங்கள் எல்லாம் –
போர் துவங்கும் வரை தான். போர் என்று
வந்துவிட்டால் –
இந்திய மக்கள் அனைவரும் அரசின் பின்னால்,
ராணுவத்தின் பின்னால் – ஒருமனதாக ஒன்று திரண்டு
நிற்பார்கள் என்பதில், யாருக்கும் எந்தவித சந்தேகமும்
தேவை இல்லை.
——————————————————————–
லடாக் தரை நிலவரம் குறித்து –
பிபிசி காணொளி ஒன்றை பார்த்தேன்.
வித்தியாசமான இந்த பிரதேசத்தைப் பார்க்க
இந்த காணொளி – நமக்கு ஒரு வாய்ப்பு.
…..
…..
.
—————————————————————————————————————————–
1962 இது தான் நடந்தது . சீனா தாக்காது என இந்தியா நினைத்தது .
சீனா யுத்தத்தை விரும்பாது என உளவுத்துறை சொன்னது .
நமது ராணுவம் போதிய ஆயத்தம் இல்லாமல் பெரும் தோல்வி அடைந்தது .
நேரு அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் இறக்கும் வரை மீளவில்லை .
இந்தி சீனி நட்பு என்று சூ என் லாய் சொன்னதெல்லாம் வெறும் கதை .
சீனா மெக்மோகன் எல்லையை என்றும் ஒப்புக்கொள்ளவில்லை .
சீனாவை பொறுத்த வரையில் அது ஆங்கில அரசுக்கும் , திபெத்க்கும்
ஏற்பட்ட ஒன்று .
திபெத் சீனாவின் ஒரு பகுதி என்பதனால் திபெத்க்கு அந்த
அதிகாரம் இல்லை . மேலும் ஆங்கிலேயர் என்றோ சொன்னதை
இன்று அவர்கள் ஏன் ஏற்க வேண்டும் ?
இந்தியாவுடன் எல்லை ஒப்புதல் செய்ய சீனா தயாராக இல்லை .
கடந்த எழுபது வருடங்களாக வெறும் பேச்சு வார்த்தை மட்டுமே
நடந்து வருகின்றது .
சீனா கேட்கும் எல்லையை தர இந்தியா தயார் இல்லை .
உ -ம் NEFA என்ற அருணாச்சல் முழுவதும் சீனா கேட்கிறது .
சீனாவை வழிக்கு கொண்டுவர
செய்தி வலைத்தளங்களில்
பல வாசகர்கள் தெரிவித்துள்ள
கருத்துகளின் தொகுப்பு –
சீனாவை ஒடுக்க சீனா அத்துமீறி கட்டுப்பாட்டில்
வைத்து இருக்கும் திபெத்தில் இந்தியா
கவனம் செலுத்தி, சீனத்திற்கு தொந்திரவு
கொடுக்க வேண்டும்.
அதேபோல் சீனா ஆக்கிரமித்து இருக்கும்
ஹாங்காங், மற்றும் வியட்நாம் பகுதிகளிலும்
இதேபோல் செய்ய வேண்டும்.
சீனா தென் சீன கடல்
எல்லையில் வியட்நாம், பிலிப்பைன்ஸ்,
சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளை
கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு ஆதரவாக மாற்ற
வேண்டும்.
அதேபோல் சீனாவிற்கு எதிராக மோதலில்
இருக்கும் ஜப்பான், அமெரிக்கா, ஐக்கிய
அரபு நாடுகள், ஆஸ்திரேலியா, பிரிட்டன்
ஆகிய நாடுகளை சீனாவிற்கு எதிராக
முழு அளவில் திருப்ப வேண்டும்.
சீனாவின் பொருட்களை மொத்தமாக
புறக்கணிக்க வேண்டும். சீனாவின்
பொருட்களை இறக்குமதி செய்ய கூடாது.
சீனாவின் செயலிகளை பயன்படுத்துவதை
உடனடியாக நிறுத்த வேண்டும்..
சீனாவிற்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கலாம்.
இதனால் அவர்கள் பொருளாதாரம் பாதிக்கும்.
நாம் இனி இந்திய மூலப் பொருட்களை
பயன்படுத்த வேண்டும். முதலில் உள்நாட்டு
உற்பத்தியை பெருக்க வேண்டும்.
உற்பத்தியை அதிகபடுத்திகொண்டு சீன
இறக்குமதியை படி படியாக குறைக்க
வேண்டும்.
உளவியல் உத்தி உளவியல் போர் தொடுப்பதே
சீனாவின் வேலை. அவர்களையும் நாம்
உளவியல் மூலமாகவே எதிர்கொள்ள
வேண்டும். அதாவது இந்திய எல்லையில்
இந்தியாவும் படை பலத்தை அதிக படுத்தி
பின்பு தான் பேச்சு வார்த்தையை தொடங்க
வேண்டும்.
சீனா ஏற்றுமதி செய்யும் சில உயர் தொழில்நுட்ப
தயாரிப்புகள் மேம்பாடு பொருட்களை,
நாம் வசப்படுத்தி, நாமும் அவற்றை தயாரிக்க
ஆரம்பித்து உலக அளவில் export செய்ய வேண்டும்.
இதற்கு சில காலம் கூட ஆகலாம்.
ஆனாலும், நீண்ட காலத்தில் இது மிகுந்த பயனை
அளிக்கும்.