….
….
….
….
பிபிசி செய்தித் தளத்தில் வெளியான
ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகள் –
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன்
ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை
எதிர்த்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்
புதன்கிழமையன்று போராட்டங்கள் நடைபெற்றன.
மேற்கு வங்கத்தின் ஒரு முக்கிய தொழில்துறை
நகரமான சிலிகுரியில் உள்ள பிரபலமான ஹாங்காங்
சந்தையின் பெயரை மாற்றிவிடலாம் என உள்ளூர்
வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
குஜராத்தின் அகமதாபாத் நகரத்திலும் சீன எதிர்ப்பு நிலை
இருந்தது. சமூக ஊடகங்களில் பெருகிய முறையில்
வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சீன நிறுவனத்தின்
தொலைக்காட்சியை பொதுமக்கள் போட்டு உடைப்பதைக்
காணலாம்.
டெல்லியில், அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு
‘இந்தியப் பொருட்கள் எங்கள் பெருமை’ என்ற புதிய
பிரச்சாரத்தைத் தொடங்கியது. அதோடு, சீனப்
பொருட்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டாம் என்று
திரைப்பட நட்சத்திரங்களுக்கும் வேண்டுகோள்
விடுக்கப்பட்டுள்ளது.
செய்தி நிறுவன ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி,
சீன மொபைல் நிறுவனமான ஒப்போ புதன்கிழமையன்று
இந்தியாவில் ஆன்லைனில் வெளியிடவிருந்த பொருள்
அறிமுக திட்டத்தை ரத்து செய்தது.
இந்தியாவின் –
சமையலறைகள் மற்றும்
படுக்கையறைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள்,
ஏர் கண்டிஷனிங் இயந்திரங்கள்,
மொபைல் போன்கள் மற்றும்
டிஜிட்டல் வாலெட்டுகள் என அனைத்துவிதமான
பொருட்களிலும் சீனா எங்கோ, ஏதோ ஒரு
வடிவத்தில் உள்ளது.
“புதிதாக ஒன்று வேண்டும், அது மலிவானதாகவும்
இருக்க வேண்டும், பார்ப்பதற்கு அழகானதாகவும்
இருக்கவேண்டும்” என்று வாடிக்கையாளர்கள்
விரும்பும்போது, இவை அனைத்திற்கும் வணிகர்களிடம்
இருக்கும் ஒரே தெரிவு சீனப் பொருட்கள் மட்டுமே.
எனவே, டெல்லியின் சதர் பஜார் அல்லது மேற்கு
வங்காளத்தின் சிலிகுரியின் ஹாங்காங் சந்தை என
எதுவாக இருந்தாலும், அவை அனைத்துமே சீனப்
பொருட்களால் நிரம்பியிருக்கின்றன.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும்
பத்து ஸ்மார்ட்போன்களில்,
சீன ஸ்மார்ட்போன்களான ஒப்போ, சியோமி போன்ற
பிராண்டுகள் எட்டு என்ற விகிதத்தில் இருப்பது
நிதர்சனமான உண்மை.
இதுபோன்ற சூழ்நிலையில், 4 ஜி-க்கு
சீன சாதனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு
பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல்
உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசின் ஆதாரங்களை
மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்களில் செய்தி…..
இந்தியாவில் சீனாவின் முதலீடு எவ்வளவு என்பதை
அறிந்து கொள்ளுங்கள். சீனா இந்தியாவில் அந்நிய
நேரடி முதலீடாக ஆறு பில்லியனுக்கும் அதிகமாக
முதலீடு செய்துள்ளது,
மும்பையைச் சேர்ந்த வெளிநாட்டு விவகார
சிந்தனைக் குழுவான கேட்வே ஹவுஸ், இ-காமர்ஸ்,
ஃபிண்டெக், மீடியா / சமூக ஊடகங்கள், தளவாடங்கள்
போன்ற சேவைகளில் சீனா முதலீடு செய்யும்
75 இந்திய நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளது.
இந்தியாவின் 30 யூனிகார்ன்களில் 18 இல் சீனாவில்
பெரும் பங்கு உள்ளது என்று அதன் சமீபத்திய
அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
ஒரு பில்லியன் டாலர் மதிப்புடைய தனியார்
தொடக்க நிறுவனத்தை யூனிகார்ன் என்று
அழைக்கிறோம். தொழில்நுட்பத் துறையில் சீனா
முதலீடு செய்திருக்கும் விதமானது, அந்நாடு
இந்தியாவின் மீது தனது வலுவான கட்டுப்பாட்டைக்
கொண்டுள்ளது என்பதை காட்டுவதாக அந்த
அறிக்கை கூறுகிறது.
எடுத்துக்காட்டாக, பைட் டான்ஸ் என்பது டிக்டாக்கின்
மூல நிறுவனமாகும், இது சீனாவைச் சேர்ந்தது.
யூடியூபுடன் ஒப்பிடும்போது இது இந்தியாவில்
மிகவும் பிரபலமானது.
சீன முதலீடு குறித்து இந்திய அரசு எச்சரிக்கையை
வெளியிடும் வகையில், சமீபத்தில் தனது புதிய
அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்.டி.ஐ) கொள்கையை
ஒத்திவைத்தது.
இந்தியாவுடன் நில எல்லைகளைக் கொண்டுள்ள
நாடுகளிடம் இருந்து பெறப்படும் அனைத்து
முதலீடுகளுக்கும் அரசின் முன் ஒப்புதல் தேவை
என்று கூறியது.
வணிகத்தில் சீனாவுக்கு அதிக நன்மைகள் –
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான
வர்த்தகம் அதிகரித்துள்ள விதம் குறிப்பிடத்தக்கது.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது 2000ஆம்
ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம்
மூன்று பில்லியன் டாலர்கள் மட்டுமே.
இது 2008 இல் 51.8 பில்லியன் டாலராக அதிகரித்தது.
கடந்த பத்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும்
இடையில் வணிகம் ஏற்றம் பெற்றுள்ளது. ஆனால்,
இரு நாடுகளின் வர்த்தகமும் சமமாக இருக்கிறது
என்று புரிந்துக் கொள்ள வேண்டாம்.
2018 ஆம் ஆண்டில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும்
இடையிலான வர்த்தகம் 95.54 பில்லியன் டாலர்,
ஆனால் அதில் இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களின்
மதிப்பு 18.84 பில்லியன் டாலர்கள் (மட்டுமே) என்று
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வலைத்தளத்தில்
காணப்படும் தரவுகள் தெரிவிக்கின்றன.
இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம்
என்னவென்றால், நாம் பிற நாடுகளுக்கு விற்கும்
மருந்துகள் போன்ற பல பொருட்களுக்கு, சீனாவிலிருந்து
மூலப்பொருட்களையும் வாங்குகிறோம்.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான
வர்த்தகத்தில் சமநிலை இல்லாததும் உண்மைதான்.
இந்தியா, சீனாவிடம் மிகப்பெரிய
வர்த்தக பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
அதாவது, சீனாவுக்கு விற்கும் பொருட்களை விட
இந்தியா, அந்த நாட்டிடம் இருந்து
அதிக பொருட்களை வாங்குகிறது.
2018 ஆம் ஆண்டில், இந்திய-சீன வர்த்தக பற்றாக்குறை
57.86 பில்லியன் டாலர்களாக இருந்தது.
…
…
….
.
———————————————————————————————————————————-
காட்டுமிராண்டிகள் –
மிக மோசமான தாக்குதல்
மிக மோசமான ஆயுதங்களை கொண்டு
இந்திய வீரர்களை சீன வீரர்கள் தாக்கினார்கள்.
முழுக்க முழுக்க கம்பிகள், குச்சிகள்,
இரும்பு ராடுகள், கற்களை வைத்து
தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். கட்டிடம்
கட்டும் இரும்பு கம்பியில் முற்களை வைத்து
வெல்டிங் செய்து இருக்கிறார்கள்.
கூரான முற்கள் போல இந்த ஆயுதங்களை
உருவாக்கி உள்ளனர். இதை வைத்து தாக்குதல்
நடத்தி உள்ளனர்.
அடையாளம் தெரியவில்லை
இந்த தாக்குதலில் பலியான 20 வீரர்களின்
சிலரின் முகங்கள் சிதைக்கப்பட்டு இருக்கிறது.
சிலரின் கன்னங்கள் கிழிக்கப்பட்டுள்ளது.
பலரின் முகம் அடையாளமே காண
முடியாத அளவிற்கு சிதைக்கப்பட்டு உள்ளது.
இந்திய ராணுவ வீரர்கள் 77 பேர் இதில்
மோசமாக காயம் அடைந்தனர். இவர்களுக்கு
இன்னும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் உடல்நிலை இன்னும் சரியாகவில்லை.
https://tamil.oneindia.com/news/india/china-standoff-with-india-some-soldiers-bodies-were-mutilated-on-the-indian-side-388780.html
நேரடியாகத் தெரியும் சீனப் பொருட்களை வாங்குவதில்லை என்று அனைவரும் முடிவெடுக்கவேண்டும். நம் நாட்டில் தயாரிக்கப்பட்டாலும், அதில் உள்ள பாகங்கள் வெளிநாட்டில், குறிப்பாக சீனாவிடமிருந்து வந்தால், அதைப்பற்றி இப்போது நாம் கவலைப்படக்கூடாது. நேரடி சீனப் பொருட்களை விலக்க ஆரம்பித்தாலே, இந்த நிறுவனங்கள் மாற்று உபகரணங்கள் தேடி மற்ற நாடுகளுக்குச் செல்லும்.
சீனாவின் ஹார்ட்வேர், பிளாஸ்டிக், மர பொருட்கள் போன்றவை சந்தையின் விலையில் மிகக் குறைவான விலையில் விற்கப்படுபவை. இது பற்றி உங்களுக்கு ஒரு செய்தியை மெயில் மூலம் அனுப்ப முயற்சிக்கிறேன்.
டிக் டாக், ஹலோ போன்ற பல சீன அப்ளிகேஷன் என்ன என்ன என்பதை உணர்ந்து, அவற்றை உபயோகிப்பது தேசத்துரோகம் என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும். ஆன்லைன் வர்த்தகம் இந்திய நிறுவனங்களிடம் மட்டும் நாம் மேற்கொள்ளவேண்டும். இப்படித்தான் படிப்படியாக ஆரம்பிக்கவேண்டும்.
YES புதியவன்,
நீங்கள் இங்கே சொல்வதை
நான் அப்படியே ஏற்கிறேன்.
வழிமொழிகிறேன்.
இந்தியர் ஒவ்வொருவரும்,
இந்திய வியாபாரிகள் ஒவ்வொருவரும்
இதை மனதில் இருத்திக்கொண்டு
செயல்பட வேண்டும்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சர்
ராம்தாஸ் அத்வாலே சீனாவின் தாக்குதல்
குறித்து அளித்த பேட்டியில்,
‘உணவகங்கள் சீன உணவுகளுக்கு தடை
விதிக்க வேண்டும். மக்களும் சீன உணவுகள்
சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறேன். சீன பொருட்களை
மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
சீன ராணுவம் இந்திய வீரர்கள் மீது தாக்குதல்
நடத்தி 20 பேரை கொன்றுள்ளது. சீனா
நம்மை அவமதித்து விட்டது. எனவே,
நாம் அனைவரும் சீன உணவுகளை
புறக்கணிக்க வேண்டும். அனைத்து
மாநில அரசுகளும் சீன உணவகங்கள்,
ஓட்டல்களுக்கு தடை விதிக்க வேண்டும்.’
என்று கூறியுள்ளார்.
https://www.ndtv.com/tamil/boycott-chinese-food-says-union-minister-ramdas-athwale-who-shouted-go-corona-2248334?pfrom=home-topstories