காட்டுமிராண்டிகளிடமா ஒப்பந்தம் …? காந்திஜி கூட ஏற்க மாட்டாரே…எல்லையில் நடந்த கைகலப்பில், சீன காட்டுமிராண்டிகள்
இந்திய வீரர்களை கொலை செய்ய பயன்படுத்திய
ஆயுதம் இது என்று பிபிசி வெளியிட்டுள்ள ஒரு தகவல்
கூறுகிறது …..

…………………………..

…………………………..

ஆணிகள் பொருத்தப்பட்ட இரும்பு
உலக்கை போன்ற – இத்தகைய ஆயுதங்களுடன் –
கொலை முயற்சியில் ஈடுபடும்
சீன காட்டுமிராண்டிகளுக்கு எதிராக,

துப்பாக்கியை தூக்கக்கூடாது என்று
நமது வீரர்களுக்கு 1996 மற்றும் 2005-ஆம்
வருடத்திய உடன்படிக்கையை சுட்டிக்காட்டி
கொடுக்கப்பட்டிருக்கும் உத்திரவு மிகுந்த
மனவேதனையை அளிக்கிறது.

……………..

……………..

எதிரிகள் இரும்பு உலக்கைகளுடன் தாக்கும்போது,
நம் வீரர்கள் வெறும் கைகளுடன் அதை எதிர்த்து
தற்காத்துக் கொள்ள வேண்டுமா….?
என்ன கொடூரம் இது… ?

இரண்டு பேரும் மதித்து நடந்தால் தானே
உடன்படிக்கை….?
எதிர்த்தரப்பு ஏற்காதபோது, நம் வீரர்கள் ஏன்
அநாவசியமாக உயிரை இழக்க வேண்டும்…?

தங்களைக் கொலைசெய்ய முயற்சிக்கும்
சீன காட்டுமிராண்டிகளுக்கு எதிராக
ஆயுதத்தை பயன்படுத்தக்கூடாது என்கிற –

இந்த உத்திரவு உடனடியாக வாபஸ்
பெறப்பட வேண்டும்.

போர் நடந்துகொண்டிருக்கும்போதா – அஹிம்சாவாதம்…?
மஹாத்மா காந்தி கூட ஏற்க மாட்டாரே இதை…

.
——————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to காட்டுமிராண்டிகளிடமா ஒப்பந்தம் …? காந்திஜி கூட ஏற்க மாட்டாரே…

 1. புவியரசு சொல்கிறார்:

  அமைச்சர் கூறுவது புரியவில்லை;
  fire arms இருந்தது. ஆனால் they did not use
  because of 1996 & 2005 agreements என்று
  கூறுகிறாரா ?
  அப்படியானால், கையில் துப்பாக்கிகள்
  இருந்தும் பயன்படுத்தவில்லையா ?
  பயன்படுத்தக்கூடாது என்று
  தடுக்கப்பட்டிருக்கிறார்களா ?
  ஆம் என்றால் இது கொடுமையிலும் கொடுமை.

 2. M.Subramanian சொல்கிறார்:

  சீன செல்போன்களை, டிவி, ஏசி, ப்ரிட்ஜ்
  போன்ற விலையுயர்ந்த சாதனங்களை
  வாங்குவதை மட்டுமாவது மக்கள்
  உடனடியாக நிறுத்த வேண்டும்.
  இவையெல்லாவற்றிற்கும் மாற்றாக
  இதர பிராண்டுகள் மார்க்கெட்டில்
  இருக்கின்றன.
  நமது பொருளாதாரம் தற்காலிகமாக
  படுத்தாலும் பரவாயில்லை. நீண்டகால
  பயன் கருதி நாம் இதை அவசியம்
  செய்ய வேண்டும்.

 3. comman-man சொல்கிறார்:

  i think, its very first time people are hearing these kind of news.these kind of news are very famous since long time ..they wont use guns..
  both of the army will attack each other with pelting stones.woods, rods etc.its most common.
  one of our army official, has broken china superior official nose during these encounter also.
  the only thing , that we can pray is not for WAR… we cannot afford it…

 4. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  சீனா அக்ஸாய் சின் என்ற இடத்தை 1962ல் ஆக்கிரமிப்பு
  செய்தது . சீனா – இந்தியா யுத்தத்தில் நாம் படுதோல்வி !

  இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை .
  இதனை ஒட்டியே துப்பாக்கி எடுத்து சண்டை
  போடுவதில்லை என்ற ஒப்பந்தம் 1975 ல் வந்தது

  இந்தியா – திபெத் எல்லை மக்மஹோன் என்ற
  ஆங்கில அதிகாரி பெயரில் சொல்லப்படுகிறது .

  இந்த உடன்படிக்கை அப்போதைய ஆங்கில அரசும் ,
  திபெத் அரசும் செய்து கொண்டன .
  இதை சீனா ஒப்பு கொள்வதில்லை .
  திபெத் சீனாவின் பகுதி என்றே கூறி வருகின்றது .

  போன வருடம் 370 சட்டம் செல்லாததாக ஆனது .
  பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அப்போது
  பேசும் போது சொன்னது :
  பாக் காஷ்மீரையும் , அக்ஸாய் சின்னையும் இணைப்போம் .

  அமித் ஷா சொன்னதின் விளைவை இப்போது பார்க்கிறோம் .
  என்ன நடந்தது என்பது பற்றி இன்னும் மௌனமே காக்கபடுகிறது

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.