…
…
….
நெஞ்சில் உரம் இன்றி,
நேர்மைத்திறன் இன்றி,
வஞ்சகம் செய்வாரடி …..
…
…
…
வந்து சென்ற நினைவுகள் இன்னமும் மனதில்
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றன –
இங்கே வந்து ஊஞ்சலாடியதும்,
உண்டு மகிழ்ந்ததும் –
சிரித்துப்பேசியதும் – அத்தனையும் வேடமா…?
…..
…..
சீனப் பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவோம்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை –
வாங்குவதை உடனடியாக நிறுத்துவோம்.
அவையின்றி நாம் செத்து விட மாட்டோம்.
நமக்காக எல்லையில் செத்துக் கொண்டிருக்கும்
நமது ராணுவ வீரர்களுக்காக
நாம் உடனடியாகச் செய்யவேண்டிய
மரியாதை அது…
ஒன்று திரள்வோம் –
வஞ்சனை செய்வோரை விரட்டியடிப்போம்.
அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும்,
எத்தகைய முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்…
ஆனால், மக்களாகிய நாம் இப்போதே உடனடியாகவே –
ஒரு முடிவை எடுத்தாக வேண்டும்…
“சீனப் பொருட்களை பகிஷ்கரிப்போம்…”
இது நமது முதல் அடியாக இருக்கட்டும்.
.
————————————————————————————————————————————
YES. Let’s BOYCOTT Chinese Goods totally.
Let us Start a Worldwide Move for boycotting
Chinese Goods.
Their Military Might can’t win in a
Commercial fight.
சார் in practical, சீன பொருட்கள் இல்லாம நம்மளால நிஜமாவே ஒன்னும் பண்ண முடியாது. லாக்டவுன் காலத்தில சீனாவில் இருந்து பொருட்கள் வரலைன்னு தயாரிப்பை நிறுத்தின தொழிற்சாலைகள் அதிகம். நம்ம டிவிஎஸ் ஒரு உதாரணம். செய்தி எக்கனாமிக் டைம்ஸ்ல வந்ததிருந்தது. இப்படி இருக்கிற நிலைமைல எப்படி சீன பொருட்களை நிறுத்த முடியும் சார் ?
மேக் இந்த இந்தியான்னு ஒரு அருமையான திட்டம் கொண்டு வந்தாங்க. அதை முழுமூச்சா கடைபிடிச்சு அதற்கான வழிமுறைகள் செஞ்சிருந்தா இப்போ எவ்வளோனாலும் பேசலாம். இப்பக்கூட நிஜமாவே இதை செய்யணும்னா சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை இந்திய அரசு நிறுத்தட்டும், எங்க வீட்டில இருந்த சைனீஸ் கம்பெனி பொருட்கள் எல்லாத்தையும் சினிமாவில காட்டுற மாதிரி நானே ரோட்டுல வந்து உடைக்குறேன்.
எழில்,
நான் வேறு கோணத்தில் இதைப் பார்க்கிறேன்.
ஒருவேளை யுத்தம் வந்து, சீன இறக்குமதி
நிறுத்தப்பட்டால், இந்த ஸ்பேர் பார்ட்சை
சீனாவிலிருந்து எதிர்பார்த்திருக்கும் கம்பெனிகள்
என்ன செய்யும்…?
தானாகவே, ஒரு மாற்றை கண்டுபிடிக்கும்
அல்லவா…?
அதை இப்போதே செய்யட்டுமே.
என்ன ஒரு 6 மாதம், ஒரு வருடம்
உற்பத்தி நின்று போகும்… நிற்கட்டுமே…!
நமக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் அல்லவா…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நிஜமாவே நல்ல செய்திதான்.. சீனப்பொருட்களின் விலைக்கு நம்மால் கொடுக்கவைக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் அதற்குரிய ஏற்பாடுகள் இங்க செய்யப்படுமா என்பதே கேள்வி?
ஒன்னு மூலப்பொருட்டுகளை, புதியவன் சார் கூறுவது போல், தைவானோ இல்லை வேற ஒரு நாட்டில் இருந்தோ இறக்குமதி செய்ய மாற வேண்டும். இல்லையெனில் எது தேவையோ அதை இங்கேயே தயாரிக்க முயல வேண்டும். இதை அறிந்து ஆராய்ந்து செய்ய தகுதியான நிபுணர்கள் தேவை. அவர்கள் கூறுவதை காத்து கொடுத்துக்கிடக்கும் அதிகாரிகள் தேவை. இதற்க்கு மேல் வெறும் வாய்ச்சவடாலாக இல்லாமல் உடனே நிறுவ அமைச்சர்கள் தேவை. இதற்க்கெல்லாம் மேலே இவர்கள் எல்லாம் இணக்கமாக வேலை செய்ய வேண்டும்? இது சாத்தியமா சார்?
.
எழில்,
இந்திய விடுதலை கோரி
காந்திஜி நடத்திய போராட்டங்களில்
முக்கியமான ஒன்று ‘அந்நியத் துணி
பகிஷ்கரிப்புப் போராட்டம்.’
“இங்கிலாந்தின் மான்செஸ்டரிலும்,
லங்காஷயரிலும் தயாராகி இந்தியாவில்
இறக்குமதி செய்யப்படும் ஆங்கிலேயர்களின்
ஆடைகளைப் புறக்கணிக்க வேண்டும்.
சுதேசி ஆடைகளைத்தான் நம் மக்கள்
அணிய வேண்டும்..”. என்று இந்த
இயக்கம் வெகுவேகமாகப் பரவியது.
கப்பலோட்டிய தமிழன் படத்தில் கூட
இந்தக் காட்சியை பார்த்திருப்பீர்களே…
…
…
அந்நியத் துணியை கொளுத்துவதால் மட்டும்
சுதந்திரம் வந்து விடுமா என்று அப்போதும்
சிலருக்கு சந்தேகம் இருக்கத்தான் செய்தது.
இவையெல்லாம் உணர்வுகளைத் தூண்டச்
செய்யும் முயற்சிகள். இந்த உணர்வுகள்,
செயலாகப் பரிணமிக்கும். இறுதியில் –
அந்நிய நாட்டினரை நாம் நம்பி இருப்பது
தவிர்க்கப்படும்…
உடனடியாக பலன் தரவில்லையென்றாலும்
கூட, நீண்ட கால பயன் கருதி இத்தகைய
முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டியது
அவசியம்.
எல்லாவற்றையும் கொண்டு வந்து
வீதியில் போட்டு உடையுங்கள் என்று நான்
சொல்லவில்லை.
சீனப் பொருட்களை தவிர்க்க முயற்சி தேவை
முதலில் அதைத் துவங்குவோம் என்று தான்
சொல்கிறேன்.
அவரவர் அளவில் எது முடியுமோ –
அதைச் செய்வோம் முதலில்…
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
சார், கண்டிப்பாக செய்யணும்னு தான் நானும் சொல்றேன். ஆனால் நடைமுறையில் தவிர்ப்பது மிகவும் சிக்கலானது.
இப்பொழுது நாம் எந்த சீனப்பொருட்களையும் வாங்கக்கூடாது என்று நினைத்தால் உடனடியாக (கவனிக்கவும்) பாதிக்கப்படப்போவது சீனா அல்ல. நம் அருகிலுள்ள கடைக்காரர்கள் மட்டுமே. கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் தேங்கும். ஆனால் தொலைநோக்குப்பார்வையில் கண்டிப்பாக சாத்தியப்படும். இரண்டாவது, நாம் சுதந்திர போராட்டத்தின் போது இருந்த நிலைமை வேறு. நாம் முழுவதுமாக சுதேசி பொருட்கள் மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருந்தோம். இப்பொழுது அப்படி இல்லையே.
நான் கூறுவது வெறும் தற்போது நடக்கும் பிரச்சனைகளுக்காக இல்லாமல், நிரந்தரத் தீர்வாக அமையவேண்டும்.
எழில்,
// இப்பொழுது நாம் எந்த சீனப்பொருட்களையும்
வாங்கக்கூடாது என்று நினைத்தால் உடனடியாக
(கவனிக்கவும்) பாதிக்கப்படப்போவது சீனா அல்ல.
நம் அருகிலுள்ள கடைக்காரர்கள் மட்டுமே.
கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் தேங்கும்.//
கடைக்காரரிடம் சீனப்பொருட்கள் தேங்கி விடுமே
என்பது தான் உங்கள் கவலையா ?
தேங்கினால், அதை எப்படி மலிவு விலையில்
டிஸ்கவுண்ட் போட்டு விற்பது என்று கடைக்காரருக்கு
தெரியாதா ?
மாறாக, மக்கள் சீனப்பொருட்களை வாங்காமல்,
தேங்க விட்டால், அடுத்த முறை அவர் அவற்றை
தருவிக்கவோ, விற்கவோ முயற்சிக்க மாட்டார்
அல்லவா ?
உங்கள் கேள்வியை திருப்பிப் போட வேண்டும்…..
நம்மால் என்ன செய்ய முடியும் என்று நீங்கள்
கேட்கிறீர்கள்.
மாறாக, நம்மால் எதை எதை எல்லாம்
செய்ய முடியும் என்று யோசிக்கப் பாருங்கள்.
இப்போது சீனப்பொருட்கள் இல்லாவிட்டால்
ஒன்றும் ஓடாது என்கிறீர்களே – நாளை போர் வந்து
அவனே நிறுத்தி விட்டால் என்ன செய்வீர்கள்…?
அப்போது (திருதிருவென்று) விழிப்பதை விட இப்போதே
விழித்துக் கொள்வது நல்லதில்லையா ?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
60களில் சூ என் லாய் ஹிந்தி சீனி சீனி பாய் பாய் என்று சொல்லிவிட்டு
நேரு மாமாவுக்கு ஆப்பு வைத்தார். ஜீ ஜின் பிங் மகாபலிபுரத்தில்
இளநீர் குடித்து விட்டு கொரோனவை அவிழ்த்து விட்டு விட்டு லடாக்கில்
ஊடுருவ விட்டு ஆழம் பார்க்கிறார். நாம் சீன பொருட்களை வாங்குவதை
நிறுத்தினாலே போதும் . அவர்கள் கொட்டத்தை அடக்க முடியும் .
ஒரு சிலை செய்யக்கூட நமக்கு வக்கில்லை
என்று தெரிந்துகொண்டதாலே தானே
சீனன் போடுகிறான் இவ்வளவு ஆட்டம் ?
கே.எம்.சார் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்.
சீனப்பொருட்கள் இல்லாமல் நாம் செத்து விட மாட்டோம்.
கொஞ்ச நாட்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை;
முற்றிலுமாக அவர்களை புறக்கணிப்போம்.
உலகம் முழுதும் இந்த கொள்கையை பரப்புவோம்.
நண்பர்கள் பார்வைக்கு நினைவுபடுத்த
விரும்புகிறேன்:
2989 கோடி, 597 அடி உயர சர்தார் படேல் சிலை – தயாரிப்பது சீனா – வாழ்க ” மேக் இன் இந்தியா ” திட்டம்…!!!
https://vimarisanam.wordpress.com/2015/10/21/2989-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-597-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%87/
1. சீனப் பொருட்கள் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. நாம் அவ்வளவு தூரம் அந்தப் பொருட்களுக்கு அடிமை ஆகிவிட்டோம். அங்கு இங்கு எனாதபடி எங்கும் சீனப் பொருட்களின் ஆதிக்கம். இதற்கு சீனாவைக் குறை சொல்லுவதைவிட, நம்மைத்தான் நாம் குறை சொல்லிக்கணும். நம் மெண்டாலிட்டி, 10 ரூபாய் அதிகம் கொடுத்து தினமும் நமக்காக காய்கறி கொண்டுவந்து விற்கும் தள்ளுவண்டிக்காரர்களைவிட, இன்னும் கொஞ்சம் நடந்தால் அந்த 10 ரூபாயை சேமிக்கலாமே என்ற எண்ணம். துடைப்பக்கட்டைக்குக்கூட நாம் சீனாவைச் சார்ந்திருக்கிறோம். குழந்தை விளையாட்டுப்பொருட்கள், பிளாஸ்டிக் சாமான்கள், டிரவுசர், செருப்பு, you wont believe, சைனா கேரட், இஞ்சி, சேப்பங்கிழங்கு, பழவகைகள் என்று நிறைய பொருட்கள் மார்க்கெட்டை ஆக்கிரமிக்கின்றன. இந்த இந்த பார்கோடுகள் (சைனா தயாரிப்பு) உள்ள பொருட்களை விற்றாலே அந்தக் கடைகளை பகிஷ்கரிப்பது என்ற நிலைக்கு நாம் முன்னெடுத்துச் சென்றால்தான் அந்த அவேர்னெஸைக் கொண்டுவர முடியும். இதனை அரசாங்கம் செய்ய இயலாது. இண்டர்நேஷனல் சட்டங்கள் அதைத் தடுக்கின்றன. சில பல கண் துடைப்புகளை அரசாங்கம் செய்தாகவேண்டிய கட்டாயம். ஜப்பானில்கூட, அரசாங்கம், மக்களிடம், வெளிநாட்டுப் பொருட்களை வாங்குங்கள் என்று கேட்டுக்கொள்கிறது, விளம்பரங்கள் தருகிறது, ஆனால் மக்கள் சுதேசிப் பொருட்களையே வாங்குகிறார்கள். (சுதேசிப் பொருட்கள், வெளிநாட்டுப் பொருட்களைப்போல இல்லை என்று சொல்வது பம்மாத்து. நாம் சுதேசிப் பொருட்களை ஆதரிக்க ஆதரிக்க அதன் தரம் உயர்ந்தாகவேண்டும். அரசாங்க மருத்துவமனை, பள்ளி கல்லூரிகளுக்கும் இது பொருந்தும். எல்லாரும் அரசாங்கப் பள்ளி கல்லூரி, மருத்துவமனைக்குச் சென்றால், அரசாங்கம் அவற்றை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் நேரும்)
2. மொபைல் செயலி – டிக்டாக், போன்ற பல செயலிகளினால் இந்தியா பல கோடிக்கணக்கான ரூபாய்களை ஒவ்வொரு நாளும் இழக்கிறது. இது சீன ஆயுதத் தயாரிப்புகளுக்குப் போகிறது. இந்த போதையை விட்டு நாம் என்று வெளியில் வரப்போகிறோம்? டிக்டாக் போன்ற செயலியை உபயோகிக்கும் ஒவ்வொருவரும் தேசத்துரோகத்திற்குத் துணைபோகிறோம் என்ற எண்ணம் நமக்கு வந்தாலே அதுவே பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
3. பொதுவாக, இந்தியப் பொருட்களை விட்டுவிட்டு, வெளிநாட்டுப் பொருட்களுக்கு ஆசைப்படுவதை நாம் நிறுத்தினாலே அது பல நல்ல விளைவுகளை உண்டாக்கும். காதியில் வாங்குவது, கேஎஃப்சி/மெக்/பிட்சா போன்ற எந்த வெளிநாட்டு உணவையும் (பிராண்டுகளையும்) நாம் உபயோகிப்பதில்லை, அமெரிக்கன் கார்ன் சம்பந்தப்பட்டவைகளை வாங்குவதில்லை, சோப், ஷேவிங் க்ரீம், பெர்ஃப்யூம், பவுடர் என்று பல்வேறு பொருட்களிலும், இந்தியத் தயாரிப்புகள் இருந்தால் அவைகளை மட்டுமே வாங்குவது என்றெல்லாம் நாம் ஆரம்பித்தால், அதுவே நம் வளர்ச்சிக்கு அடிகோலும்.
சீனாவுக்கு, ஏதோ ஒரு காரணத்திற்கு, இந்தியாவின் கவனத்தைத் திசை திருப்பவும், அவர்களை அழுத்தத்துக்கு உள்ளாக்கவும் தேவை இருக்கு. அதனால்தான் அவர்கள் அப்படி நடந்துகொள்கிறார்கள்.
டி.வி.எஸ். மட்டுமல்ல, மற்ற கம்பெனிகளும் சீனாவின் பொருட்களை விட்டுவிட்டு, தாய்வானிலிருந்து பொருட்கள் வாங்கலாம். சீனப் பொருட்களை விட அவை தரமானவை. நான் அப்படித்தான் ஹார்ட்வேர்களை தாய்வானிலிருந்து தருவித்துக்கொண்டிருந்தேன்.