இந்தியாவில் சீனாவின் ஆதிக்கம்….!!!இந்திய மார்க்கெட் முழுவதும் சீனப் பொருட்களால்
நிரம்பிக்கிடக்கின்றன…

இந்தியா முழுவதும் உள்ள துறைமுகங்களில் -அவை
கண்டெயினர் கண்டெயினராக வந்து இறங்குகின்றன.
கடைக்காரர்கள் அவற்றை போட்டி போட்டுக்கொண்டு
விற்கிறார்கள். கடைகள் பூராவும் அவற்றால்
நிரப்புகிறார்கள்.

கிச்சன் பொருட்களிலிருந்து, ஸ்டேஷனரியிலிருந்து,
கொசு அடிக்கும் மட்டையிலிருந்து, குடை, கத்தரிக்கோல்
வரை எதையும் சீன மார்க்கெட் விட்டு வைக்கவில்லை.

நம் கடைக்காரர்கள் … பேராசைக்காரர்கள்.
அதிகம் கமிஷன் கிடைக்கிறது –
ரொப்புகிறார்கள்… விற்கிறார்கள்.

நம் மக்களும் அவற்றை போட்டி போட்டுக் கொண்டு
வாங்குகிறார்கள்… முக்கியமான
காரணம் – விலைமலிவு…
சுதேசி உணர்வு- இயக்கம் – தூங்கிக் கொண்டிருக்கிறது.

அதிசயமாக – இப்போது திடீரென்று வர்த்தகர்களுக்கு
ஞானம் பிறந்திருக்கிறது.

சீனப் பொருட்களை புறம் தள்ளுங்கள் என்கிற கோரிக்கை
அவர்களிடமிருந்தே பிறந்திருக்கிறது.

இதனை சாத்தியப்படுத்தும் முயற்சியில்…
அகில இந்திய வர்த்தகர்கள் / வியாபாரிகள் கூட்டமைப்பு
CAIT..ஜூன் 10 முதல் .. ‘Boycott China’ என்கிற விழிப்புணர்வு
நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறது.

– முதல் படியாக…சீன பொருட்களில் சுமார் 3000 பொருட்களை
..பட்டியலிட்டு அவற்றுக்கு மாற்றான
இந்திய பொருட்களை அடையாளப்படுத்துகிறது ..CAIT .

மேலும்…51 வகை பொருட்களை பட்டியலிட்டு..
இந்தியாவில் அப்பொருட்களுக்கான தயாரிப்பில்
சிறு குறு தொழில் நிறுவனங்கள் முனைப்பாக
ஈடுபடவேண்டும் என்றும் CAIT கூறி இருக்கிறது.

இது நாள் வரை, பலமுறை
நாம் கரடியாக கத்தியிருக்கிறோம்.
யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

முதல் முறையாக, கொஞ்சம் வலுவான முயற்சிகள்
துவங்குகின்றன என்கிற செய்தி ஆறுதலையும்,
மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

இந்த முயற்சிகள் தொடரவும், வெற்றி பெறவும்
வேண்டுவோம்.

இது குறித்த பத்திரிகைச் செய்திகள் கீழே –

—————————————–

NEW DELHI: Traders’ body CAIT on Wednesday launched a campaign
to boycott Chinese goods with an aim to reduce India’s imports
of products manufactured in the country by USD 13 billion
by December 2021.

The Confederation of All India Traders (CAIT) has prepared
a list of 3,000 items which are currently imported from China
and easily replaceable by Indian manufactured goods.

The campaign call by CAIT, which claims to represent
7 crore traders and 40,000 trade associations, comes amid
border tensions between India and China.

“The campaign titled ‘Indian Goods – Our Pride’

aims to achieve reduction in imports of Chinese manufactured
goods by Rs 1 lakh crore (about USD 13 billion) by December 2021,
” CAIT said.

Addressing a virtual press conference, CAIT Secretary General
Praveen Khandelwal said there are four types of imports from
China to India —

finished goods, raw materials, spare parts
and technology products.

In the first phase, the traders’ body has decided to boycott
imports of finished goods from China, he said. India’s imports
from China stand at about USD 70 billion at present.

Taking forward our campaign to promote Indian manufactured goods
and reduce consumption of Chinese finished goods, we have
prepared a list of some categories we should focus on.
Let us all actively participate in this national movement.
#Indiangoodsourpride #भारतीयसामानहमाराअभिमान

.
——————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to இந்தியாவில் சீனாவின் ஆதிக்கம்….!!!

 1. Raghuraman சொல்கிறார்:

  Sir, I read somewhere even the stickers, caps T shirts with captions “Boycott China” also imported from China. Not sure how true it is.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   ரகுராமன்,

   நீங்கள் கூறும் செய்தி உண்மையாகவே
   இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை… 🙂

   எதையும் வியாபாரமாகப் பார்க்கிறது சீனா….

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  எதையும் வியாபாரமாகப் பார்க்கிறது சீனா
  உண்மை – அதற்காக என்ன செய்ய வேண்டுமோ
  அதை அக்கறையோடு செய்கிறார்கள் .

  சீனா உள்ள மக்கட்தொகைக்கு ஏற்ப வேலை
  வாய்ப்புகளை உருவாக்க பாடுபடுகிறது

  ஜனநாயகம் என கூறிக்கொள்ளும் அரசு மக்களை
  பற்றி கவலை கொள்ளும் .
  கம்யூனிச அரசு தேர்தலை சந்திப்பது இல்லை .
  எனவே மக்களை பற்றி அலட்டிக் கொள்வதில்லை .

  ஆனால் நடப்பது வேறு மாதிரி இருக்கிறது .
  கம்யூனிச அரசு மக்களை பற்றி அக்கறை கொள்கிறது .

  மொபைல் போன் , லாப் டாப் . மற்றும் உள்ள சகல
  மின்னணு சாதனங்கள் உற்பத்தி சீனாவில் மட்டுமே !

  அங்கு உள்ள ஒரு Foxconn ஆலையில் 50000 பேர்
  வேலை செய்கிறார்கள் . பாக்ஸ்கான் சிடி என்றே பெயர் .

  சீனா விற்கும் விலையும் ,இந்தியாவில் ராமேட்ரியல்
  ஆகும் செலவும் ஒன்று ! இது எப்படி என்று கேட்டால்
  சீனாவில் அது மாதிரி உட்கட்டமைப்பு .
  சீனாவில் பெருமளவில் உற்பத்தி செய்கிறார்கள் .

  சீன பொருட்கள் விற்பனை செய்வது இந்தியர்கள் தாம் .

  இன்னும் ஒரு உதாரணம் .
  பிளாட்பாரத்தில் சல்மான் கான் போஸ்டர் விற்கிறார்கள் .
  இவை சீனாவில் செய்தது – சீனாவில் ஆர்டர் போட்டு
  இறக்குமதி செய்வது எல்லாம் இந்தியர்களே !

  CAIT என்பது சும்மா பேப்பரில் விளம்பரம் செய்ய மட்டுமே .
  சீன பொருட்கள் இல்லாமல் இந்தியாவில் வியாபாரம் படுத்து விடும் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.