எது உண்மை….? ஊடக விவாதங்களா ..அல்லது இந்த கடிதமா…?


நாளுக்கு நாள் விவாத மேடை என்கிற பெயரில் இந்த
செய்தி ஊடகங்கள் செய்யும் கொடுமை தாங்க முடியவில்லை.

பேசுவதற்கு வேறு அரசியல் செய்திகள் ஏதுமில்லை
என்பதால், “கொரோனா நிலவரம்” ஒன்றே அவர்களது
தினசரி விவாதப் பொருளாக இருக்கிறது. இவர்களது
விவாதங்களை வைத்து எந்த விஷயத்தையும்
உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை; எல்லாமே
biassed ஆக, ஒருதரப்பாக இருக்கிறது.

இடையில் சுய-விளம்பரப்பித்து கொண்ட
நாடக நடிகர் வரதராஜன் போன்றவர்களின் வீடியோ வேறு…

விவாதத்தில் கலந்துகொள்ளும் பலரும், கொரோனா
பரவல் அதிகமாவதற்கு காரணங்களை கண்டுபிடிப்பதிலும்
அரசின் சிகிச்சை முறை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து
குறைகளைக் கூறுவதிலுமே ஈடுபட்டிருக்கிறார்கள்.
சில “மூத்த” பத்திரிகையாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் –
உதாரணமாக ராதாகிருஷ்ணன் போன்றவர்கள், தொடர்ந்து
எரிச்சலூட்டும் விதத்திலேயே பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் எனது தளத்திற்கு வரப்பெற்ற ஒரு
கடிதத்தைப் பார்த்தேன்….

அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்குச்
சென்று, உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்ற ஒரு
குடும்பத்தின் சார்பாக எழுதப்பட்டிருக்கிறது. வாசக
நண்பர்களின் பார்வைக்காக – அந்த கடிதத்தை கீழே
பதிப்பிக்கிறேன்….

———————————–

தமிழகத்தில் …..அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும்
கொரோனா சிகிச்சை குறித்த ஒரு அனுபவ ரிப்போர்ட்.

இதை படித்த பின் தேவையற்ற பயத்தை விட்டுவிட்டு ..
உரிய நேரத்தில் தயங்காமல் …அரசு மருத்துவமனைகளை
அணுகவும் .

நண்பரின் நண்பருடைய குடும்பம் . வைரஸ் தொற்று
ஏற்பட்டு..அரசு மருத்துவமனையில் 7 நாட்கள் உள்நோயாளியாக

இருந்து சிகிச்சை பெற்று ..வீடு திரும்பிய அனுபவம் குறித்து
அளித்த அனுபவத்தின் தொகுப்பு :

அண்ணா நகரில் வசிக்கிற.. அம்மா, அப்பா, மகன், மருமகள்,
மகள் என்று 5 பேர் கொண்ட குடும்பம்.

கடந்த மே மாதம் 24 ம் தேதி ..சாப்பிட்ட உணவின் சுவை

உணரமுடியவில்லை என்கிறார் தந்தை. அதையடுத்து
இரண்டு நாட்களுக்கு கடுமையான தலைவலியால்
அவதிப்படுகிறார். அடுத்த நாளில்…தாய்க்கு ..காய்ச்சல் வருகிறது.

மூன்று நாட்களுக்கு காய்ச்சல் தொடரும் நிலையில்…மகளுக்கும்
காய்ச்சல் ஏற்படுகிறது.

இதையடுத்து ..தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று
சந்தேகித்தாலும்…அரசு மருத்துவமனையில் எப்படி இருக்குமோ…

என்கிற தயக்கத்துடன் … தனியார் மருத்துவமனைக்கு
செல்கிறார்கள்.
அங்கு 4500 ரூபாய்க்கு ..COVID test எடுப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால்…ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதால் …
உள்நோயாளிகளுக்கு மட்டுமே காய்ச்சல் இருக்கிறது எனில்..
COVID டெஸ்ட் செய்வதாகவும், புறநோயாளிகளுக்கு காய்ச்சல்
இல்லாமல் இருந்தால் மட்டுமே test எடுப்பதாகவும்
சொல்கிறார்கள்.

வெளியில் டெஸ்ட் செய்து கொள்வதற்கு
prescription கொடுக்காத நிலையில் …வேறு ஒரு தெரிந்த
மருத்துவரிடம் அதனை பெற்று ..
COVID டெஸ்ட் எடுப்பதற்கு metropolis-ஐ அணுகுகிறார்.
மே 31-ம் தேதி ..தாய்க்கு மட்டும் முதலில் டெஸ்ட்
செய்கிறார்கள். மறுநாளே.. ஜூன் 1 ம் தேதி ..e mail-ல்
COVID-Detected என்று தொற்றை உறுதி செய்து ரிப்போர்ட் வருகிறது.

இதற்கிடையில் தந்தைக்கும்
காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து…..குடும்பத்தினர் அனைவரும் test எடுக்க
முடிவு செய்து ..ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு
ஜூன் 2 ம் தேதி செல்கிறார்கள்.
அங்கு ..COVID-க்கான சிறப்பு பகுதியாக மாற்றப்பட்டிருக்கும்
block-ன் முகப்பிலேயே ..4, 5 receptionists இருக்கிறார்கள்.
பெயர், முகவரி, வயது, போன் நம்பர் அனைத்தையும்
கொண்ட அனுமதி சீட்டை அளிக்கிறார்கள்.

இதனை எடுத்துக் கொண்டு மருத்துவரை சந்திக்கிறார்கள்.
தாய்க்கு ..எக்ஸ் ரே & ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.
[ இதில்..எக்ஸ் ரே க்கு மட்டும் 50 ரூ பீஸ்.]

குடும்பத்தினர் அனைவருக்கும் swab sample எடுக்கப்படுகிறது.
தாய் ..சர்க்கரை நோய் உள்ளவர் என்பதால்..அவரை மட்டும்
மருத்துவமனையில் அனுமதிக்க சொல்கிறார்கள்.

தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மட்டுமே
ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஒதுக்கப்பட்டிருப்பதால்…
அண்ணா நகரில் உள்ள அரசு peripheral மருத்துவமனையில்
உள்நோயாளியாக இடம் ஒதுக்கப்படுகிறது.

தந்தை ,மகன், மகள், மகன், மருமகள் என்ற குடுமபத்தினரை
home quarantine-ல் இருக்கும்படி அறிவுறுத்தி வீட்டிற்கு
அனுப்புகிறார்கள்.
சம்பந்தப்பட்ட அரசு பணியாளர்கள் …பலமுறை போன்
செய்து வீட்டில் self quarantine செய்துகொள்வதன் விதிகள்
பற்றி மீண்டும் மீண்டும் விளக்கி சொல்கிறார்கள். வீட்டு
வாசலில் home quarantine செய்யப்பட்டிருக்கும் விபரத்தையும்
நோட்டீஸாக ஒட்டி செல்கிறார்கள்.

அரசு மருத்துவமனை சிகிச்சை & உணவு விபரங்கள் :

80 படுக்கைகள் கொண்ட ward-ல் தாய் அனுமதிக்கப்படுகிறார்.

விழித்திருக்கும் நேரம் முழுவதும் முகமூடி அணிந்திருக்க
வேண்டும் என்று உள்நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது .

ஒவ்வொரு நேரத்திற்கான உணவும் சரவண பவன், A2B,
தலப்பாக்கட்டி என்று ஹோட்டல்களில் இருந்து
தருவிக்கப்பட்ட சிக்கன் பிரியாணி, சிக்கன் 65 உட்பட
பலவகை உணவு வழங்கப்படுகிறது.

காலை 6 மணி – கப சுர குடிநீர்
7 மணி – காலை உணவு
11 மணி -பால்
1 மணி – மதிய உணவு
5 மணி – பால் + ஸ்னாக்ஸ்
7 மணி – இரவு உணவு

மருந்தாக….பாராசிட்டமால்,
விட்டமின்ஸ், ஆன்டி பையாட்டிக்ஸ் வழங்கப்படுகிறது.

இதற்கிடையில் ஜூன் 4 ம் தேதி…தந்தைக்கும், மருமகளுக்கும்
தொற்று இருப்பதாகவும், மகனுக்கும்,மகளுக்கும் தொற்று
இல்லை எனவும் தெரியவருகிறது.

இதில் தந்தையின் வயது காரணமாக ..அவரை மட்டும்
மருத்துவமனையில் அனுமதிக்க சொல்கிறார் மருத்துவர்.
பெரியார் நகர் அரசு peripheral மருத்துவமனையில் படுக்கை
ஒதுக்கப்படுகிறது.

இங்கு வசதிகள், அண்ணாநகர் மருத்துவமனையை விட
கூடுதலாகவே இருக்கிறது.

7 நாட்கள் கழித்து தாயும், தந்தையும் நலம் பெற்று வீடு
திரும்பிவிட்டனர்.

தாய் அனுமதிக்கப்பட்டிருந்த ஏறத்தாழ 80 படுக்கைகள்
கொண்ட அந்த வார்டில் ..வெளிப்பட்ட உணர்வுகள் குறித்து
இப்படியாக சொல்கிறார் :

சிலர் இறந்த உறவினர்கள் குறித்து தங்கள் துக்கத்தை
பகிர்ந்து கொண்டனர்.

வார்டில் இருந்த ..கழிவறைக்கு செல்வதற்கு கூட முடியாத
நிலையில்…உடையோடு சிறுநீர் கழித்து விடும் ஒரு
முதிய பெண்மணிக்கு ..அன்றாடம் உடை மாற்றுவது ,
உணவு ஊட்டி விடுவது , கழிவறை அழைத்து செல்வது
என்று சகல உதவிகளையும் செய்திருக்கிறார்…அதே
வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த இன்னொரு மத்திய
வயது பெண்மணி !

வார்டில் இருந்த ஒருவருக்கு பிறந்த நாள் வர வார்டில்
இருந்த உள்நோயாளிகள் அனைவரும் இணைந்து
கொண்டாடியது..

வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவிக்கு அவருடைய
கணவர் போன் செய்து.. ‘எப்படிம்மா இருக்க ?’ என்று
அக்கறையுடன் கேட்க …அதற்கு .. ”அத வெளியில் போகாதே
என்று சொல்லும்போது கேட்காமல் போய்விட்டு வந்து தொற்றை
பரப்பி விட்டு .. …இப்போது அக்கறையாக இருப்பது போல
கேட்கிறியா ! …அடிவாங்காம போய்டு” என்கிற மனைவியின்
பதில் ..

டிஸ்சார்ஜ் செய்யப்படும் உள்நோயாளிகள் …வார்டில்
ஏற்படுத்திக் கொண்ட புது நண்பர்களுக்கு ஸ்னாக்ஸ்,
தண்ணீர் பாட்டில் என்று வாங்கி கொடுத்து விட்டு
செல்வது…என்று …

அரசு மருத்துவமனையின் வைரஸ் தொற்றுக்கான
சிறப்பு வார்டில் உள்நோயாளியாக ஒருவாரம் இருந்த
அனுபவம் ..புது நண்பர்களை ஏற்படுத்துவதாகவும்,
பயப்பட தேவையற்ற அனுபவமாகவும் இருந்தது என்கிறது
இக்குடும்பம்.

7 நாட்கள் சிகிச்சைக்கும், உணவுக்கும் , படுக்கை
இன்ன பிற வசதிகளுக்கும் …அரசு மருத்துவமனைக்கு
அவர்கள் செலுத்திய கட்டணம்…ஆரம்பத்தில்
எக்ஸ் ரே- க்கு செலுத்திய கட்டணமான 50ரூ மட்டுமே !

பீதியூட்டும் செய்திகளை, எதிர்மறை செய்திகளை
விடுத்து…உண்மையான களநிலவரத்தை தெரிந்து
கொள்வது ..பேரிடர் காலத்தில் நமக்கு நாமே செய்து
கொள்கிற நன்மை.

ஊடகங்கள் இத்தகைய செய்திகளை மக்களுக்கு
அதிகம் கொண்டுசெல்ல வேண்டும்.

——————————————

இங்கே எனக்கு ஒரு நியாயமான கேள்வி எழுகிறது.

தொலைக்காட்சி ஊடகங்களில் பயங்கரமாகவும்,
மோசமாகவும் சித்தரிக்கப்படுகிற அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெறும் ஒரு நோயாளியின்
அனுபவம் இவ்வளவு சிறப்பானதாகவா இருக்கிறது…?

இதே கேள்வி இதைப்படிக்கும் நண்பர்கள் எல்லாரது
மனதிலும் நிச்சயம் எழும்….

உண்மையான நிலை என்ன…?

இந்த தளத்தைப் படிக்கும் வாசக நண்பர்கள் யாருக்காவது
இதுகுறித்த மேல் விவரங்கள், உண்மையான தகவல்கள்
தெரிந்திருக்குமேயானால், அவர்கள் அதை பின்னூட்டம்
மூலம் தெரிவிக்க முடியுமேயானால், அது எல்லாருக்குமே
உதவியாக இருக்கும்.

.
———————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to எது உண்மை….? ஊடக விவாதங்களா ..அல்லது இந்த கடிதமா…?

 1. புவியரசு சொல்கிறார்:

  இந்த மாதிரி சமயங்களில் வதந்திகளை பரப்புபவர்கள்
  கயவர்கள்; கேடு கெட்ட மனிதர்கள்.
  இப்போது கூட நியூஸ்-7 தொலைக்காட்சியில் ஒரு
  விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.
  அறிவில்லாதமுண்டமொன்று பத்திரிகையாளர்
  என்று டைட்டில் போட்டுக்கொண்டு உளறிக்கொண்டு
  இருக்கிறது. கருணாநிதி என்கிற பெயருடன் டாக்டர்
  ஒருவர் காலெஜ் லெக்சரர் இங்கும் லெக்சர்
  அடித்துக் கொண்டிருக்கிறார்.
  இறப்புகளின் எண்ணிக்கையை அரசு மறைக்கிறது
  என்பது குற்றச்சாட்டு. மயானங்களில் கொரோனா
  சாவுகள் சாதாரண சாவு என்று பதிவு செய்யப்படுகின்றனவாம்.
  இந்த படித்த முட்டாள்களுக்கு தெரியாதா –
  எவராவது கொரோனா வந்து வீட்டிலேயே இறந்து போனால்,
  பக்கத்து வீட்டுக்காரர் கூட பார்த்துக் கொண்டிருக்க மாட்டாரென்று ?
  உடனடியாக அவர்களே கார்பரேஷனுக்கு தகவல்
  சொல்லி விட மாட்டார்களா ? தொற்று பரவி விடுமென்ற
  பயம் அவர்களுக்கு இருக்காதா ? ஒருவர் எப்படி
  இறந்து போனார் என்பதை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கூட
  தெரியாமல் மறைக்க முடியுமா ?

  மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான்
  இருக்கிறார்கள். அமைதியாக இருப்பதால், நினைத்ததை
  எல்லாம் சொல்லலாமென்றூ நினைப்பவர்கள் தான்
  முட்டாள்கள்.

 2. Gopi சொல்கிறார்:

  மண்டையில் எதுவுமே இல்லாத இன்னொரு
  திமுக வியாபாரிகள் சங்கத் தலைவர்,
  விக்கிரமாதித்தராம் -இன்று
  பத்திரிக்கையாளர்களிடம் சொல்கிறார் –
  “மீண்டும் 15 நாட்களுக்கு லாக் டவுன் அறிவித்தால்,
  வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்கத்தயார் ” என்று.

  இந்த முண்டமும், அதன் கூட்டாளிகளும்
  கொள்ளையடிக்க, அரசு மீண்டும் லாக்டவுன்
  அறிவிக்க வேண்டுமா ?
  மக்கள் மீண்டும் வேலையின்றி வாட வேண்டுமா ?
  பட்டினிகள் அதிகரிக்க வேண்டுமா ?
  இவர் யார் லாக்டவுனுக்கு ஆலோசனை
  சொல்வதற்கு ? எதற்காக மீண்டும் லாக்டவுன் ?
  நாடு முன்னேறும் வழியைப் பார்க்காமல்
  இவர்கள் முன்னேறும் வழியைப் பார்க்கிறார்கள்.
  முன்னேற்றக் காரர்கள் அல்லவா ?
  மறைமுகமாக மக்களைத் தூண்டி
  விடப்பார்க்கிறார்கள்.
  100% சுயநலவாதிகள்.

 3. புதியவன் சொல்கிறார்:

  ஊடக விவாதங்கள் நம் நேரத்தை வீணடிப்பவை. ஒரு போதும் உண்மையைச் சொல்ல மாட்டார்கள். அவரவர் கட்சிப்படி இந்த விவாதங்கள் நடத்தப்படுகின்றன. நெறியாளரும், தங்கள் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள விவாதத்தை திசைதிருப்பும் வேலையைச் செய்கின்றனர். இதற்கு விதிவிலக்கு என்று நான் யாரையும் பார்க்கவில்லை. (முன்பு இருந்த பாண்டே தவிர)

  தமிழக அரசு இந்த விஷயத்தில் சிறப்பாகச் செயல்படுவதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. நாகரீகமாகவும் செயல்படுகிறது. சிறிய நெகடிவ் செய்திகளும் தேர்தல் நெருங்குகின்ற சமயத்தில் கட்சியைப் பாதிக்கும் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கிறது.

  பொதுமக்களுக்குத்தான் நோய்த்தொற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் அக்கறை இருக்கவேணும். அரசு சொல்லும் வழிகாட்டுதல்படி நடக்கவேண்டும். மாஸ்க் அணியாமல், சோஷியல் டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் செய்யாமல், தொற்று இருந்தால் அதைத் தெரிவிக்காமல் இருந்தால், அது சமூகத்தைப் பாதிக்கும் என்பதை மறக்கக்கூடாது.

 4. tamilmani சொல்கிறார்:

  புதிய தலைமுறை, நியூஸ் 7, நியூஸ் 18, சன் நியூஸ் , சத்யம் டிவி .
  தந்தி டிவி சானல்கள் கருத்தாய்வு என்ற பெயரில் நான்கு
  அல்லது ஐந்து நபர்களை பங்கு பெற வைக்கின்றன. இவர்களின்
  பெரும்பாலான அஜெண்டா மோடி அல்லது பிஜேபி எதிர்ப்பு, அதிமுக
  ஆட்சியை குறை சொல்வது மட்டுமே. பல சமயங்களில் நெறியாளரே
  மத்திய, மாநில அரசுகளின் எதிர்ப்பாளராக இருப்பார் .
  பிஜேபி அல்லது அதிமுக பிரமுகர்களுக்கு நேரமே வழங்கப்பட மாட்டாது.
  அவர்கள் பேசும்போது நெறியாளரே எதிர்க்கேள்வி கேட்டு அவர்கள் பேச விடாமல் செய்து விடுவார். twitter poll என்று ஒன்று நடத்தப்படும். அதன் ரிசல்ட் எப்போதுமே அரசுகளுக்கு எதிராக இருக்கும்.
  பெரும்பாலும் மக்களை பயமுறுத்தும் செய்திகள் scroll ஆகி கொண்டு இருக்கும்.பாலிமர் டிவி மட்டுமே நடுநிலை வகித்து சரியான தகவல்களை அளிக்கிறது. மேலே சொன்ன அத்தனை சானல்களும் குப்பை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.