…
…
…
சிவாஜி, வாணிஸ்ரீ நடித்த சூப்பர் ஹிட் தமிழ்ப்படம்
“வசந்த மாளிகை” இது செப்டம்பர், 1972-ல் வெளிவந்தது.
1972-ல் செல்போன், வீடியோ எல்லாம்
வரவில்லை; எனவே ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடப்பதை
இப்போதெல்லாம் செய்வது போல், சுலபமாக எடுத்து
வெளியிடும் வழக்கம் இல்லை;
எடுத்தால், அதையும், டைரக்டர் அனுமதியுடன்,
அதே படப்பிடிப்பாளர்கள் தான் எடுக்க வேண்டும்.
அது அவ்வளவு லேசில் நடக்காது.
யூ-ட்யூபில் சிவாஜி-வாணிஸ்ரீ கலந்து
கொள்ளும் ஒரு நிமிட நீளத்திற்கான வசந்த மாளிகை
க்ளைமேக்ஸ் ஷூட்டிங் சீன் ஒன்று வெளிவந்திருக்கிறது….
…….
…….
இது எப்படி சாத்தியமானது என்று கொஞ்சம் தோண்டியதில்,
நாகேஸ்வர ராவ், வாணிஸ்ரீ நடித்து மார்ச், 1973-ல் வெளிவந்த
“பங்காரு பாபு” என்கிற தெலுங்குப் படத்தில், வாணிஸ்ரீ ஒரு
நடிகை பாத்திரத்தில் நடிக்கிறார்.அதில் ஒரு உத்தியாக,
அப்போது வாணிஸ்ரீ நடித்து, வெள்ளி விழா தாண்டியும்
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த வசந்த மாளிகை க்ளைமேக்ஸ்
சீன் ஒரு காட்சியாக சேர்க்கப்பட்டிருக்கிறது. தொழில் தெரிந்த
புத்திசாலிகள்…!!!
என்ன இருந்தாலும் நம்ம ஆட்கள் விடுவார்களா…?
பங்காரு பாபு’விலிருந்து பிய்த்து எடுத்து சிவாஜி சீனை
மட்டும் தனி வீடியோவாக வெளியிட்டு விட்டார்கள்… 🙂 🙂
.
—————————————————————————————————————————-